Sunday, January 26, 2014

நெருப்பிற்கு நடுவினிலேகூட தூங்கிடமுடியும் !! ஆனால் வறுமையோடு தூங்கிட முடியுமா ? மனிதனால் ?






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்  :-  நல்குரவு.                               



குறள் எண்:- 1௦49.                                           



நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்             

                                                       நிரப்பினுள் 


யாதொன்றும் கண்பாடு அரிது... ... ... ...




விளக்கம் :-  ஒருவன் நெருப்பிற்கு 



நடுவினில் இருந்துகூட தூங்கிட 



இயலும். ஆனால் வறுமை 



நிலையில் எவ்வகையாலும் 



கண்மூடித் தூங்கிடவே முடியாது. 



அது அரிது. இது திருவள்ளுவர் 



நமக்கு அருளிய குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                                   



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-      



இந்த வறுமை நிலையைப் பற்றி 



விளக்கி நாட்டு நடப்பு விளக்கம் 



எழுதிடத் தேவை இல்லை என்றே 



நான் கருதுகின்றேன். ஏன் என்றால் 



இந்த வறுமை நிலையினில்தான் 



நமது நாட்டு மக்கள் 1௦௦க்கு 9௦ 



விழுக்காடுகளுக்கு மேல் தினமும் 



அனுபவித்துத்தான் வருகிறார்கள். 



எனவே தனியாக எழுதிடத் தேவை 



இல்லை என்பதே எனது கருத்து.

No comments:

Post a Comment