Monday, August 25, 2014

மதுவுக்கு இல்லாத மயக்கம் மங்கையிடம் மட்டுமே உண்டு !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  புணர்ச்சி விதும்பல்.


குறள் எண் :-  1281.


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 

கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு... ... ...


விளக்கம் :-  நினைத்தாலே மனதினில் 


இனிக்கச்செய்திடுவதும் (களிப்புறச் 


செய்தல்) காணும்போது மகிழ்ச்சி 


அடைந்திடச் செய்வதும் மதுவுக்கு 


கிடையாது. காமம் மிகுந்த கண்கள் 


உடைய மங்கையிடம் மட்டுமே உண்டு.


இது திருவள்ளுவர் நமக்குத் திருக்குறளில் 


காமத்துப்பாலில் அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-


கனகா :- என்னடி தேவிகா என்னைக்கும் 


இல்லாத புத்துணர்ச்சி இன்னைக்கு உன்னோட 


முகத்தில் காணப்படறது. என்ன ஊரிலிருந்து 


உன் ஆத்துக்காரர் வந்துட்டாரா என்ன ?


சொல்லுடி சீக்கிரமா. 


தேவிகா :- நேத்து ராத்திரி அவர் ஆத்துக்கு 


வந்து சேரச்சே மணி 2 இருக்கும்.நல்ல வேளை. 


பசங்க எல்லோம் நன்னா உறங்கிண்டிருந்தார்டி.



கனகா :-  உம்...உம்...அப்பறம்...சொல்லுடி..


நேக்கே இப்படி உணர்ச்சியைக் கிளறினா 


நோக்கு எப்படி இருந்திருக்கும்....


தேவிகா :-  இருடி அதான் சொல்லின்டிருக்


கேனோல்லியோ. அவர் வரதுக்கு முன்னாடியே 


மனசாலே அவரை நினைச்சுண்டே நான் 


படுத்துண்டிருந்தேன். அப்பவே நேக்கு கல்கண்டு 


சாப்பிட்டா மாதிரி உள்ளமெல்லாம் தித்ததுடி.


அவர் வந்து ஆத்துக்கதவை தட்டினச்சே 


நேக்கு நாடி நரம்பெல்லாம் ஆடிப்போயிடுத்துடி 


அப்படி ஜிவ்வுன்னு மனசுலே ஒரு புது ரத்த 


வெள்ளோட்டம் போனா மாதிரி அப்படி ஒரு 


சந்தோஷம்,மகிழ்ச்சிஎன்னோட மனசுக்குள்ளாற 


ஒடித்துடி.



கனகா :-  உம்..உம்.. அப்பறம்....அப்பறம்...


சொல்லுடி நேக்கு படபடன்னு வர்றது.


தேவிகா :-  அப்புறம் என்னைக் கட்டி அணைத்து


இழுத்து கன்னத்துலே சப்ன்னு ஒரு முத்தம் 


தந்துட்டு என்னோட சேலையின் மேலாடைய 


விலக்குறச்சே...அப்படியே நான் சொர்க்கம் 


போனா மாதிரி உள்ளத்துக்குள்ளே ஒரே 


புத்துணர்வு. அவர் அமெரிக்காவுலே பார்லே 


உக்காந்துட்டு நன்னா தண்ணியடிக்கிறச்சே கூட 


இவ்வளவு சுகமும் மகிழ்ச்சியும் அடைந்ததே 


இல்லையாம்  பாத்தியாடி. 



கனகா :-   அடியே...நில்லு...நில்லு...இன்னைக்கு 


நம்ம மதுரை TR பாலு சார் தந்திருக்குற 


தினம் ஒரு திருக்குறள் அதுலே கூட நாம இப்ப 


பேசிண்டிருக்குற விஷயந்தாண்டி போட்டிருக்கு. 


கார்த்தாலே நான் படிச்சுட்டுத்தாண்டி உன்னோட 


வீட்டுக்கு வந்தேன்.உண்மையிலேயே நம்ம 


மதுரை TR. பாலு சார் அவர் எல்லாம் தெரிஞ்ச 


நல்லவர்தாண்டி. சரி !! சரி !! அப்புறமா என்ன 


நடந்ததுன்னு சொல்லுடி.


தேவிகா :- அதுக்கப்புறம் நடந்ததை நான் 


சொன்னா நான் ஒரு மக்கு.  கேட்டா நீ ஒரு அசடு. 


சரிநான் வரேன்.நீ போயிஉன்ஆத்துக்காரருக்கு 


காபி ஆத்திக் கொடுடி.



கனகா :- என்னடி நம்ம ஏவிஎம்மின் படமான 


உயர்ந்த மனிதன் படத்துலே நம்ம சௌகார் 


ஜானகி மாமி  பேசுற டயலாக்கை 


என்னாண்டையே காப்பி அடிக்கிறியாடி அசடு. 


யாருக்கு. அவருக்கு. காபியா. காலங்கார்த்தாலே 


அது என்ன காபியா சாப்பிடும். அதும் 


இன்னைக்கு ஞாயிற்றுக்க்கிழமையோன்னோ 


அது காலங்காத்தாலேயே டாஸ்மாக் சரக்கை 


வாங்கி வச்சுண்டு நாலு ரவுண்டு போட்டுண்டு 


பிறண்டு பிறண்டு படுத்துன்டிருக்குடி. இப்ப நான் 

அவராண்ட போயி நின்னேன்னு வச்சுக்கு 


அவ்வளவுதான் என்ன கந்தல் கந்தலா 


ஆக்கிடுவார் மனுஷன். இல்ல நார் நாரா 


கிழிச்சிடும் ஜடம். சரிடி நானும் கோவிலுக்கு 


போயிட்டு வரேன். என் ஆத்துக்காரருக்கு 


நல்ல புத்தியக்கொடு பெருமாளேன்னு 


போயி வேண்டிண்டு வந்துடுறேன். ஒ கே  பை. 


சீரியோ.


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. மீண்டும் சந்திப்போம். 


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை TR. பாலு.

No comments:

Post a Comment