Sunday, August 24, 2014

சொற்களை நல்ல முறையில் பயன்படுத்தி பெருமை கொள்பவர்கள் சிலரே !! வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :- சொல் வன்மை.


குறள் எண் :- 649.



பலசொல்லக் காமுறுவர் மன்றமா ஈந்த

சிலசொற்கள் தேற்றா தவர்... ... ... ... ...



விளக்கம் :-  குற்றம் அற்றவையாகிய சில

சொற்களைச் சொல்லிடத் தெரியாதவர்

பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க

விரும்புவர். இது வள்ளுவர் நமக்கு அருளிச்

சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ராமசாமி :-  ஏண்ணே ரெங்கசாமி அண்ணே

என்னாண்ணே நான் பாட்டுக்கு கத்திட்டே

இருக்கேன். என்னடா தம்பின்னு ஒரு

வார்த்தையிலே கூட கேக்க மாட்டேங்கறே ?


ரெங்கசாமி :- தம்பி ராமசாமி நான் பல

யோசனையிலே இருக்கவண்டா. என்னைய

என்னா உன்னமாதிரி வெடிப்பயன்னு

நினைச்சுக்கினியா ?  போடா என் பிஸ்கோத்து.

ராம :- அட இங்க பார்ரா எப்படி அண்ணனுக்கு

சுர்ருன்னு கோவம் பொத்துக்கிட்டு வருது.

அண்ணே நம்ம தலைவர் கலைஞர் எந்த

மேடையின்னாலும் சும்மா அருவியிலே

இருந்து தண்ணி கொட்டுறமாதிரி எப்படி

பேசி அசத்துறாரு ?  ஆனா அவர் மாதிரி

வேற யாராலும் மேடைப்பேச்சு இந்த

அளவுக்கு பேசி ஸ்=ஜெவித்ததா எந்த

வரலாறும் இல்லையே ? ஏண்ணே

பெசத்தேரியாதது மட்டும் இல்லை

எழுதி வச்சுக்கிட்டு இல்ல படிக்கிறாங்க.

இதுக்கு என்ன காரணம்னு சொல்லுங்க

அண்ணே.

ரெங்க:-  தம்பி ஒரு நாளைக்கு எத்தனேயோ

விசயங்க எத்தனையோ தலைப்புங்க அந்த

அத்தனை விசயங்களையும் சும்மா ஆதார

பூர்வமாக எடுத்துச் சொல்லி, அப்பப்ப

விளக்கிப் பெசுரதுலே நம்ம கலைஞருக்கு

ஈடு இணை கலைஞர்தான். அவராலே தமிழ்

மொழி பெருமை பெருது.

சில பேர் எழுதி வைச்சு படிக்கிறாங்கன்னு

சொன்னா அவ்வளவுதான் அவங்ககிட்டே

நாம எதிர்பார்க்க முடியும். நான் யாரைச்

சொல்லுதேன்னு உனக்குப்புரியும்னு

நினைக்கிறேன் தம்பி.  அதாலே நான்

இப்ப என்ன சொல்றேன்னா தமிழ் சொற்களை

நல்ல முறையில் பயன்படுத்தி பெருமை

கோவது சிலரே என்று வள்ளுவர் சொன்னது

உண்மையிலேயே சரியானதுதான்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் மதுரை T.R. பாலு.




No comments:

Post a Comment