Monday, August 18, 2014

வளையல் அணிந்த பெண்ணிடம் என்னென்ன புலன்கள் உள்ளன ? !! திருவள்ளுவர் தரும் விளக்கம்








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்    :-  புணர்ச்சி மகிழ்தல்.



குறள் எண் :-   11௦1.


கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் 

                                                                               ஐம்புலனும் 

ஒண்டோடி கண்ணே உள... ... ...


விளக்கம் :-  கண்டும், கேட்டும், உண்டும், 


முகர்ந்தும் உற்றும் அறிகின்ற  ஐந்து 


புலன்களுமாகிய இந்த இன்பங்கள் அனைத்தும் 


ஒளிபொருந்திய வளையல் அணிந்த 


இவளிடத்தில் உள்ளன.  இது வான்புகழ் 


திருவள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ராமு:-  ஏண்டா நானும் ரொம்ப நாளாவே 


கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். நம்ம 


பாலுப்பயல் ஏண்டா ஒருமாதிரி பிரமை 


பிடிச்ச மாதிரியே இருக்கான். உம்....


ஒன்னும் புரிய மாட்டேங்குதுடா.



கந்தன் :- அண்ணே !! உனக்கு விசயமே 


தெரியாது போல இருக்கு  அவன் நம்ம 


அக்ரகாரத்துலே இருக்காரே அச்சுதானந்த 


அய்யர், அவரோட பேத்தி பிரேமலதா மேல் 


ரொம்பவே பிரேமையோடு இருக்கான்டா.


ஏண்டா அவ தாத்தாகிட்டே போயி நான் 


இந்த மாதிரி உங்க பேத்தியை விரும்புறேன்.


எனக்கு கல்யாணம் செஞ்சு தாரீயளா அப்டீன்னு 


கேளுடான்னு எத்தனை வாட்டி சொல்றது.அவன் 


இந்த லோகத்துலே இல்லடா. அதோ அவன் 


நம்ம பாலுப்பயல், அவனே வந்துட்டான். நாம 


இனிமே அவன்கிட்டே கேப்போமாடா.


ராமு :- டேய் பாலு என்னாடா ஏண்டா இப்படி 


இருக்கே. கிறுக்கு பிடிச்சமாதிரி ?


பாலு :-  ஆமாண்ணே நீங்க சொல்றது சரிதான்.


நான் உண்மையிலேயே கிறுக்கு பிடிச்சுத்தான் 


இருக்கேன். பிரேமலதா கிறுக்கு. அண்ணே அவ 


பொண்ணே இல்லைண்ணே.


ராமு :- என்னாது ? பொண்ணே இல்லையா ? 


அப்பநீ எட்டுக்கும் பத்துக்கும் நடுவிலே 


இருக்கிரதையாடா லவ் பண்ணினே? என்னடா 


நடக்குறது எல்லாமே ஒரே அநியாயமா இருக்கு? 


கொஞ்சம் விவரமா சொல்லுடா பாலுத்தம்பி.


பாலு :- ஆமாண்ணே என்னைக்கு அவளை நான் 


போன புள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு 


பாவாடை தாவணி,இரட்டை சடை, அன்ன நடை, 


மின்னல் இடை, இவை அனைத்தோடும் 


பாத்தேனோ, அன்னைக்கே முடிவு 


பண்ணிட்டேன். இவதான் என்னோட வாழ்க்கைத்


துணைவி அப்படீன்னு. நாங்க ரெண்டு பெரும் 


இந்த ஊரிலே சுத்தாத இடம் கிடையாது.போகாத 


பூங்கா கிடையாது. பாக்காத சினிமா கிடையாது. 


அண்ணே அவ என்னோட இருந்தா, என்னோட 


ஐம்புலன்களுமே செயல் இழந்து போயிருது 


அண்ணே. அவள்தான், அவ மட்டும்தான் 


அண்ணே எனக்கு ஐம்புலன்களும்.பாக்குறது,


கேக்கிறது, உண்ணுறது,உணர்ச்சியாகிறது, 


முகர்வது,ஆகிய இந்த ஐம்புலன்களுமே எனக்கு 


அவ தாண்ணே. இத எந்தக் கோவிலிலும் வந்து 


நான் சத்தியம் செய்யத் தயார்தான் அண்ணே.


ராமு :- நீ செய்ய வேண்டிய சத்தியம், கோவிலில் 


இல்லையடா மகனே. அவளோட தத்தாகிட்டே.


நாளைக்கு வெள்ளிக்கிழமை. நீ என்ன செய்யறே.


உங்க அம்மா,அப்பா, மாமா, அத்தை, சித்தி, 


மற்றும் சித்தப்பாகூட போயி அவளைப் 


பொண்ணு கேக்குற.இவளை, உங்க பேத்தி 


பிரேமலதாவை நான் என் உயிருக்கும் மேலாக 


காதலிக்கிறேன். நீங்க அவளை எனக்கு 


கல்யாணம் செஞ்சு தந்தீங்கன்ன நான் அவளை 


என்னோட வாழ்நாள் முழுசும் கண்கலங்கிடாம 


நல்லவிதமா பாத்துக்கிறேன். எங்களுக்கு 


கல்யாணம் பண்ணி வையுங்க தாத்தா  !! 


அப்படீன்னு அவளோட தாத்தாகிட்டே 


போயி சத்தியம் செய்யுடா. அவரும் சரின்னுதான் 


சொல்லப்போறார். இதிலே என்னடா உனக்கு 


சந்தேகம்.


பாலு :- இல்லண்ணே. நான் என்ன ஜாதி. அவள் 


என்ன ஜாதி. அவ தாத்தா சம்மதிப்பாரா?


ராமு :- தம்பி  இத்த காதலிக்குறதுக்கு முந்தி நீ 


அவ, ரெண்டுபேரும் யோசிச்சு இருந்தீங்கன்னா 


OK தான். இல்லையே. இப்ப என்ன செய்யுறது.


நான்சொன்னமாதிரி போயி பொண்ணு கேளுடா.


தாத்தா சரின்னுதான் சொல்லப்போறாரு. நீ 


என்னைக்கு உன்னோட ஐம்புலன்களையும் 


அவளாண்ட பாத்துட்டியோ, அங்கனையே 


அவளுக்கும் உனக்கும் கல்யாணத்தை நாங்க 


ஒண்ணாச் சேர்ந்து முடிச்சு வச்சிருக்கணும்.


சரி,  பரவாயில்லே தம்பி. இப்பம் போயி 


கேளு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும்.


அட என்ன தம்பிங்களா நான் சொல்றது.


தம்பிமார்கள் :- ஆமா....நம்ம ராமு அண்ணே 


நீங்கள் சொல்றதுதான் சரி. எங்க ஒட்டு 


உங்களுக்குத்தான்.

************************************************************************************************************


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை T.R.பாலு.











No comments:

Post a Comment