Friday, August 8, 2014

அடுத்தவன் மனைவிமீது ஆசை கொள்பவனிடம் இருந்து நீங்கிடாத குற்றங்கள் எவை ?எவை? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :- பிறனில் விழையாமை.


குறள் எண் :-  146.



பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 

இகவாவாம் இல்லிறப்பான் கண்... ... ... 



விளக்கம் :-  பிறர் மனைவி மீது முறை

தவறி நடந்தால், பகை,பாவம்,அச்சம்,

பழி, என்னும் நான்கு குற்றங்களும் 

அவனை விட்டு ஒருபோதும் நீங்காது.

இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற                         

குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


சுந்தர் :-  ஏண்டாப்பா கணேசா நம்ம 

விக்னேசை என்னடா ஒரு வாரமா 

இந்தப்பக்கமே காணலை. எங்கே 

தொலஞ்சு போய்ட்டான். ஒருவேளை 

வெளியூர் கிளியூர் போயிட்டானா ? 


கணேசன் :-  யப்பா சுந்தரு உனக்கு

விசயமே தெரியாதா ?

சுந்தர்:- சொன்னாத்தானேடா தெரியும். 

என்னா விசயம்னு. சொல்லுங்கடா 

முருகன் :- டேய் சுந்தர் அவன் குடி 

இருக்கிற வீடு இருக்குல்லே.

சுந்தர் :-  ஆமா இருக்கு அதுக்கு என்ன 

இப்போ.

முருகன் :-  போனவெள்ளிக்கிழமை இந்தப்பய 

பேங்க்ல பெர்சனல் லோன் கேட்டுருக்கான்.

அவங்க மத்தியானம் நாலு மணிக்கு வரச் 

சொல்லிருக்கா. அதனாலே ஆபீசுக்கு  லீவு 

போட்டவன், மதியம் ஒரு 12 மணிக்கு மாடிலே 

இருந்து கீழே எட்டிப்பார்த்திருக்கான்.  அங்கே 

அந்த வீட்டுக்காரர் மனைவி மல்லிகா இல்ல 

மல்லிகா , அவ எண்ணை தேச்சு குளிச்சிட்டு 

இருந்திருக்கா.நல்ல தள தளன்னு பெங்களூர் 

தக்காளிப்பழம் போல இருப்பள். நீயும் 

பார்த்திருக்கோல்லியோ.இவன் என்ன 

செஞ்சிருக்கான், அவளை இவன் 

எட்டிப்பாத்திருக்கான். அவள், உம்.. இவன் 

கெட்டநேரம். உடம்புலே பொட்டுத்துணி கூட 

இல்லாம நிறைஞ்ச நிர்வாணமா குளிச்சிக்கிட்டு 


இருந்திருக்கா. இத்த பாத்திருக்கான்.

இவன் பாக்கறதை அவள் அதாண்டா மல்லிகா 

பாத்துட்டடள்.தன்னோட வீட்டுக்காரன் 

விருமாண்டி வந்தவுடன் 

அவள் போட்டுக்கொடுத்துட்டாள். அவன்தான் 

பெரிய ரவுடியாச்சே இவன போட்டு நல்ல செம 

உதை விட்டதுலே  கை,, கால் உடஞ்சுபோயி

இப்ப நம்ம ரமணா கிளினிக்ல படுத்துண்டு 

இருக்கான். ரெண்டு பல்லுகூட உடைஞ்சு 

போச்சுன்னு பேசிக்கிறாள்.விஷயம் 

போதுமோ இல்ல இன்னும் வேணுமோ ?

கணேசன் :-  ஊரிலேஇவனுக்குத்தான்இவனோட 

பொண்டாட்டி இருக்காளே அவளை இங்கே 

கூட்டியாந்து வச்சுக்கற வேண்டியதுதானே ?

ஏண்டா இப்படி ஊர் வம்பை எல்லாம் இவன் 

இப்படி விலைகொடுத்து வாங்குறானோ 

எனக்குத் தெரியலை. இப்ப தேவையா இது ?

திருவள்ளுவர் சும்மாவாடா சொல்லிருக்காரு.

சுந்தர் :- இன்னாட சொல்லிருக்காரு ?

கணேசன் :- நம்ம மதுரை TR பாலு சார் 

இன்னைக்கு எழுதிருக்குற தினம் ஒரு 

திருக்குறள் படிச்சுப்பார் உனக்கே என்னன்னு 

தெரிய வரும்.

முருகன். யாரு சுந்தரையா படிக்கச் சொல்றே 

அவனுக்கு சிட்டியிலே இருக்குற டாஸ்மாக் 

பாரை  தினம் பாக்குறதுக்கே நேரம் பத்தாது 

இவனைப்போயி படிக்கச் சொல்றியே உனக்கு

கொஞ்சனாச்சும் அறிவு இருக்காடா. ஆனா 

நான் படிச்சேண்டா. சூப்பர். ஆனா ஏன்தான் 

நம்ம பாலு சாரு இப்படிகுறளா பாத்து 

அர்த்தம் எழுதுறாரோ எனக்கு அதாண்டா 

புரியலை.

கணேசன் :-  டேய் நம்ம பாலு சாரை விட்டா 

நமக்கு இந்த மாதிரி குறளை எடுத்து அதோட 

அர்த்தத்தை சொல்றதுக்கு வேற யாருடா 

இந்த சென்னை பட்டணத்திலே இருக்கா ?            

அதுவும் நமது நாட்டு நடப்பு விளக்கத்தோட?

சரி. சரி. எனக்கு நேரம் ஆச்சு மணி இப்பவே 

9.3௦ ஆயிருச்சு. நான் போயி சரக்கையும் 

ராத்திரி சாப்பாட்டையும் வாங்கணும். 

மழை வேற வர்ற மாதிரி இருக்கு. நாம 

எல்லோரும் நாளைக்கு சந்திப்போம்டா.


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

நமது நட்டு நடப்ப விளக்கம் இத்துடன் 

நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை 

சந்திப்போம். 

நன்றி !! வணக்கம் !! 


அன்புடன் மதுரை TR பாலு.


No comments:

Post a Comment