Sunday, July 27, 2014

உலகின் நிலையாமையைப் பற்றி வள்ளுவர் கூறிச்சென்ற கருத்துக்கள் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-   நிலையாமை.



குறள் எண் :-  336.



நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 


பெருமை உடைத்து இவ்வுலகு... ... ... ...



விளக்கம் :-  நேற்று இருந்த ஒருவன், இன்று 


இல்லாமல் இறந்து போனான் என்று 


சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை 


உடையது இவ்வுலகம்.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

காத்தவராயன் :- ஏண்டாநாட்றாயாஉனக்குசேதி 


தெரியுமா ?


நாட்றாயன் :-  அண்ணே விஷயம் என்னான்னு 


சொன்னாதானேஅண்ணேதெரியும்.சொல்லுங்க.


காத்தவராயன் :-  நம்ம ஊரு பஞ்சாயத்து 


தலைவர் பரமசிவம் இல்ல, பரமசிவம் அவரு.....


நாட்றாயன்:அவருக்கென்ன அண்ணே !!


பரலோகம் போயிட்டாரா ?


காத்தவராயன் :- அட...எப்படி தம்பி இவ்வளவு


கரீட்டாசொல்லுதே. உனக்கு முன்னாடியே சேதி 


தெரியுமா ?


நாட்றாயன் :-  அண்ணே நீ வாயத்திறந்தாஒன்னு 


இழவு சேதி சொல்லுவே இல்லாங்காட்டி 


எங்கனாச்சும் தீ பிடிச்சுடுச்சு. இவன் அவனக் 


குத்திப்புட்டான். அவன் இவன கொன்னுபுட்டான் 


5 பேர் ஒரு பொம்பளைய  கற்பழிச்சுட்டாய்ங்க. 


இப்படித்தானே அண்ணே,ன், உங்க  வாயிலே 


இருந்து இன்னையவரைக்கும் மலர்ந்திருக்கீங்க. 


அட...என்ன...சொல்றது ? சரிதானே ?


காத்தவராயன் :-   என் தம்பி அறிவுக்கொழுந்து, நீ 


வந்து சொல்லுதப்போ தப்பாவாடா இருக்கும் 


என் குலக்கொழுந்தே என்ன உலகமடா இது ஒரு 


நிலை இல்லாததா இல்ல இருக்கு.


நாட்றாயன் :- அட ஆமாண்ணே !நீசொல்லுறதை 


நம்ம வள்ளுவரு இல்ல வள்ளுவரு அவரு 


சொல்லிருக்காருப்பா நம்ம மதுரை TR பாலுஐயா 


இன்னைக்கு எழுதி இருக்காரு.


நேத்தைக்கு உசுரோட இருந்தவன் இன்னைக்கு 


செத்துப் போயிட்டானுங்கிற பெருமை இந்த 


உலகத்து உண்டுன்னு சொல்ரிகாருபா. இப்பம் 


உதாரணத்துக்கு உன்னையே எடுத்துக்கமே. 


காத்தவராயன் :- என்னாது ? என்னய்யா ? 


வேணாண்ட தம்பி உன் விளையாட்டுக்கு நான் 


வரலடா. என்னைய வுட்டுருடா.


நாட்ராயன் :-  அண்ணே இன்னைக்கு நீ உசுரோட 


இருக்க. நாளைக்கு இதே மாதிரி இருப்பன்னு 


இன்னா நிச்சயம். அட...என்ன...நான்...சொல்றது ?



காத்தவராயன் :- அட உம் மூஞ்சிமேலே என் 


கைய வைக்க.உன் வாயிலே வசம்ப 


வச்சுத்தாண்டா தேய்க்கணும். போடா 


போயி வாயைக் கழுவுடா. நீ ஒரு கருநாக்கு 


காரப்பய.எனக்கு பயமா இருக்குடா.நாளைக்கு 


நான் உசுரோட இருப்பேனா இல்ல 


செத்துருவேனான்னு 
 

நாட்றாயன் :- அட வுடுண்ணே யாருக்குத்தான் 


இந்த துனியா (உலகம்)நிச்சயம். 


கிறிஸ்த்துவங்களோட கல்லறைத் தோட்டத்து 


வாசகம் நீ படிச்சுறுக்கீயா ? அதுல இன்னா 


சொல்றான்னா



" இறந்தாரை என்றும் 


      மறந்தாரில்லை !!

 இன்று உனக்கு !!  நாளை எனக்கு !! "



காத்தவராயன் :- அத்த விடுறா தம்பி. நான் 


கிளம்புறேன்.நாளைக்கு புழைச்சுகிடந்தா நாம 


சந்திப்போம்.



நாட்றாயன்:-  ஆவட்டும்அண்ணே.பாத்து


போங்கண்ணே !!


இத்துடன் தினம் ஒரு திருக்குறள் நிறைவு 


பெறுகிறது.


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment