Sunday, July 20, 2014

பார்க்காதே !! பார்க்காதே !! அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்க்காதே !! வள்ளுவர் காட்டும் வழி!!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்    :-பிறனில் விழையாமை.



குறள் எண்  :-  148.




பிறன்மனை நோக்காத பேராண்மை 

                                                                            சான்றோர்க்கு 


அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு... ... ...



விளக்கம் :-பிறர்மனைவியை விரும்பி பார்க்காத 


பெரிய ஆண்மைத்தனம் சான்றோர்க்கு, அறம் 


மட்டும் அல்ல, அது  நிறைந்த பெரிய 


ஒழுக்கமாகும்.  இக்கருத்து வான்புகழ் வள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


பங்குபெறுவோர்கள்:- (ராம், முருகன், கணேசன், 


தேவேந்திரன்,மற்றும் சலீம் ஆகியோர்)


சலீம் :-   என்னடா மச்சி தேவேந்திரா  , நாம 


நேத்து நம்ம நண்பன் கவுதமோட கல்யாண 


வரவேற்புக்கு போயிட்டு வந்ததிலே இருந்து 


ஏண்டா என்னமோ போலவே இருக்கே.


தேவேந்திரன் :-  ஒன்னும் இல்லடா. கவுதமோட 


மனைவி கவுசல்யா எவ்வளவு பியூட்டியா 


இருக்கா. உம்.. கட்டினா;;;அவளைப்போல ஒரு 


பொம்பளைய கட்டணும்டா...இல்லாங்காட்டி 


வாழ்க்கை பூராவும் பிரம்மச்சாரியாகவே நாம 


வாழ்ந்து அவளை நினைச்சே செத்துறலாம்டா.


சலீம் :- டேய் !! கணேசா. என்னடா உன்னோட 


உயிர் நண்பன் இப்படிப் பேசுறான். நீ சும்மா 


பாத்துட்டே இருக்கே ?


கணேசன் :- என்னைய என்னடா செய்யச்


சொல்றே. அவனோட பேரு, அவனை இப்படிப் 


பேசச்சொல்லுது. எல்லாம் கலிகாலம்.


கலிமுத்திடிடுச்சுடா அம்பி வேற ஒண்ணுமில்ல.



முருகன் :-   டேய் !! விடுறா. அவன் மனசுல 


உள்ளதை ஒப்பனா சொல்லிட்டான். நாம 


எல்லாம் மனசுக்குள்ளே அமுக்கி வச்சு 


இருக்கோம்.விஷயம் அம்புட்டுத்தான்.


ராம் :-  தேவேந்திரன் என்ன பேசுறீங்க. கவுதம் 


நம்ம நண்பன்டா. நமக்கெல்லாம் சீனியர் குரூப் 


அவன் மனைவியைப் போயி...நீ இப்படில்லாம் 


பேசுறது கேக்கறதுக்கே அருவருப்பா இருக்கு.


திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்கார் 


தெரியுமா உனக்கு. பேராண்மை உள்ளவர்கள் 


என்ன செய்வார்கள் என்றால் பிறர் மனைவியை 


விரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்று. 


நாமளும் அவர் சொன்ன குறள் படி 


வாழ்ந்திடுவோம் என்று இனிமேல் 


உறுதி மேற்கொள்வோமா ?


எல்லோரும் ஒரே உரத்த குரலில் :-   சத்தியமா 


இனிமே நாம யாரும் பிறர் மனைவியை விரும்பி 


பார்க்கவே மாட்டோம். இது அன்னை 


மீது,அன்னைத் தமிழ் மீது சத்தியம்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது. 


நன்றி !!  வணக்கம் !!


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment