Sunday, July 6, 2014







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-   காலம் அறிதல்.


குறள் எண் :-  485.



காலம் கருதி இருப்பர் கலங்காது 

ஞாலம் கருது பவர்... ... ...



விளக்கம் :-  உலகத்தையே வெற்றி 


பெற வேண்டும், என்று எண்ணுபவர் 


அதற்கு என உரிய காலம் வரும்வரை 


பொறுமையுடன் காத்து இருப்பர். இது 


வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



ஆளவந்தார் :-  வாய்யா பரந்தாமா !! எந்தா


சுகம்தன்னே !! 


பரந்தாமன் :-  யோவ் ஆளவந்தாரு என்னையா 


பாஷை பேசுறே. தமிழ்லே பேசித்தொலையும்.



ஆளவந்தார் :-  ஆமாண்டாப்பா வந்துட்டாரு 


பெரிய தமிழ்ப் புலவரு. சவுக்கியமான்னு தானே 


கேட்டேன். உமக்கு புரியலையாங்கானும்.



பர:-  ஐயா ஆளவந்தாரே !! நீறு மத்த ஆள்கிட்டே


என்ன பாஷை வேணும்னா பெசிக்கிடும். ஆனா 


என்கிட்டே மட்டும் கொஞ்சம் தமிழ் பேசும்.


ஆள:-  சரி. நாட்டு நடப்பு என்ன சொல்லுது. நம்ம 


தமிழ் இனத்தலைவர் கலைஞர் என்ன செய்றாரு.


கம்ன்னு இருக்காரு. ஒண்ணுமே புரியலையே 


பாராளுமன்றத் தேர்தல்லே சுத்தமா ஒரு சீட்கூட 


இல்லாம செஞ்சுபுட்டானுகளே இந்தப் பாவி 


ஜனங்க.உம்..


பர:-  ஆளவந்தாரு எல்லாம் பணம்யா. பணம்.


ஒரு ஓட்டுக்கு 5௦௦ ரூபான்னா என்ன சும்மாவா ?


எல்லா ஜனங்களும் கஞ்சுபோயி கிடக்காணுக.


அப்புறம்காசைவாங்கிட்டு ரெட்டைஇலையிலே 


குத்தாமலா இருப்பான். அதான் ஜெயிசுட்டானுக.


போதாகுறைக்குஇந்தத்தேர்தல்கமிஷன்அவனுக 


கூட இல்ல இந்த மேடம்கிட்டே காசைவாங்கிட்டு 


அடிமையாபோனாணுக.வாயைத்தொறக்கலியே.

என்ன செய்யறது. எல்லாம் நம்ம தலைஎழுத்து.


எதை எதை அனுபவிக்கனுமோ, அதை எல்லாம் 


அனுபவிச்சுத்தானே ஆகணும்.


ஆள:- யோவ். நீ என்ன லூசாய்யா. நான் என்ன 


கேக்கிறேன். நீ என்ன சொல்லுறே. கலைஞர் 


ஏன் இப்படி மவுனமா இருக்காருன்னுதானே 


கேட்டேன். அதுக்கு பதில் சொல்லுய்யா.


பர:-  யோவ். ஆளவந்தாரு. நீ ஒரு விவரம் 

புரியாத ஜென்மம்யா. தலைவர் கம்ன்னு


இருக்கார்னே சொன்னா அதுக்கு ஒரு அர்த்தம் 


உண்டுய்யா.


ஆள:- என்ன அர்த்தம்யா புரியாமத்தானே நான் 


உம்மகிட்டே கேக்கேன்.விவரமாசொல்லுமையா.


பர :- ஆளவந்தாரு, தலைவர்கலைஞர்இன்னிக்கு 


நேத்தாயா அரசியல் பண்றாரு. 


பொதுவாழ்க்கைலே 6௦ வருஷத்துக்குமேலே 


உழைச்சவரு. அவருக்குத் தெரியாததா என்ன. 


அவரோட மவுனத்துக்கு என்ன காரணம்னு 


கேட்டீன்னா, தமிழ்நாட்டிலே மீண்டும் தி.மு.க.


ஆட்சியை பிடிக்கணும். 2௦16ல் நடக்க உள்ள 


சட்டமன்ற தேர்தல்ல தி.மு.க. பலத்தை 


காட்டனும். அதுக்கு என்ன செய்றது. அப்படீன்னு 


யோசிச்சுகிட்டுத்தான் இருக்காருயா. 


அவருக்காகவே திருவள்ளுவர் ஒரு 


குறள் எழுதியிருக்கார். இந்தக் கட்டுரையிலே 


மேலே இருக்கு. படி.உனக்கே புரியும். 


ஆள:-   அட..ஆமாப்பா. இப்பத்தான் புரியுது. 


தலைவர் கலைஞரோட மவுனத்துக்கு என்ன 


காரணம்னு. சரி பரந்தாமா வீட்டிலே ரேஷன் 


கடைக்கு போகச்சொன்னானுக. நான் வரட்டா.


பர :- என்னையுந்தாய்யா. நானும் அங்கனதான் 


போறேன் வா...பேசிட்டே போவோம்.



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



நமது  நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment