Sunday, July 6, 2014

கற்பு நெறியிலிருந்து வழுவாமல் மனைவிகளைப் பாதுகாப்பது எப்படி ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  வாழ்க்கைத் துணைநலம்.


குறள் எண் :-  57.



சிறைகாக்குங்  காப்புஎவன்  செய்யும்  மகளிர் 


நிறைகாக்கும் காப்பே தலை... ... ...



விளக்கம் :-  மகளிரை சிறையில் வைத்து காவல் 

காக்கும் முறை என்ன செய்யும் ?  அவர்கள் 


(மகளிர்) நிறைவு என்னும் மனதோடு, தங்களைத் 



தாங்களே கற்புநெறியால் காத்துக்கொள்ளும் 


காவலே தலை சிறந்த காவலாகும். இது 


வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



நளாயினி :-  என்ன அகலிகை !! எப்படி இருக்கே !!


ஆஸ்பத்திரியிலிருந்து உன் வீட்டுக்காரரை 


கூட்டியாந்தாச்சா ? இப்ப அவருக்கு உடல்நிலை 


எப்படி இருக்குடி உம்....உன்னைநினைச்சாத்தான் 


ஒரே பாவமா இருக்கு. இப்படியா சின்ன வயசிலே 



உன்னோட வீட்டுக்காரருக்கு அடி படக்கூடாத 


இடத்துலே அடிபட்டு ஆண்மையை இழந்து இப்ப 


தவிக்கணும். நல்ல வேலை உனக்கு ஆண் 


ஒண்ணு, பெண் ஒண்ணு ரெண்டு குழந்தைகள் 


இருந்ததாலே நீ கொஞ்சம் தப்பிச்சே. 


இல்லாங்காட்டி இந்த ஆண்மை 


இழந்த மனுசனை வச்சு நீ எப்படித்தான் காலம் 


கழிப்பியோ ?


அகலிகை :- சரி என்னக்கா செய்றது. எல்லாம் 


விதி செய்த சதி. அவரோட வாழ்ந்த அந்த 


இளமைக்காலநாட்களை, மனசுலே எண்ணி 


அசைபோட்டுகிட்டே எனது காலத்தைக் 


கழிச்சுடனும். வேற என்ன பண்ண 


முடியும் ? சொல்லு நளாயினி.


நளாயினி :-  அகலிகை காலம் ரொம்பவே 


கெட்டுக்கிடக்கு.  காமாந்தகாரங்க நிறைஞ்ச 


உலகமடி.ரொம்ப ஜாக்கிரதையா இருந்துக்க. 


எப்ப உனக்கு என்ன ஆபத்தோ, என்னைக் 


கூப்பிடு. நான் உடனே வந்துடுறேன்.


அகலிகை :-  தேவையில்லை நளாயினி. 


எங்கிட்டேதான் கற்புநெறி என்னும் நெருப்பு 


இருக்கே. எந்த புழுவோ, இல்ல பூச்சி பட்டையோ 


வந்தாலும் தானாவே பொசுங்கிடும்.  அதாலே 


அந்தக் கவலை உனக்கு வேண்டாம். சரி நான் 


வாரேன்.

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! நமது நாட்டு நடப்பு 


விளக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது.மீண்டும் 


சந்திப்போம் !!


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment