Thursday, July 3, 2014

விலைமாதர்கள் நம்மிடம் விரும்புவது எதை ?--வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  வரைவின்மகளிர்.



குறள் எண் :-  911.




அன்பின் விழையார் பொருள்விழையும் 

                                                                           ஆய்தொடியார்


இன்சொல் இழுக்குத் தரும்... ... ... ... ... ... 




விளக்கம் :- அன்பினால் நமை விரும்பாமல், 


நம்மிடம் உள்ள பொருள் காரணமாக, நம்மை 


விரும்புகின்ற பொதுமகளிர் (விலைமகளிர்) 


பேசுகின்ற இனியசொல்,ஒருவனுக்கு துன்பத்தைத் 


தரும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


(இரண்டு விலைமாதர்கள் பேசுகிறார்கள் )



அனுசூயா :-  ஏண்டி திரௌபதை நம்ம சிங்கபுரம் 



ஜமீன்தார்ஜம்புலிங்கம்வந்தால்அவர்கிட்டே மட்டும் 


சிரிச்சு,சிரிச்சு பேசுறே !! மத்தபடி யார் வந்தாலும் நீ 


ஏன்அவங்ககிட்டேஉம்முன்னுமுகத்தை 


வச்சுண்டுறே. ஏண்டி அப்படி இருக்கே ?


திரௌபதை :-   அனுசூயா !! உன் கேள்வி என்னவோ 


நியாயமானதே.சிங்கபுரம்ஜமீன்தார்ஜம்புலிங்கம் 


ஒவ்வொருதரம்என்ட்டேவரும்போதும்பெரியபணம் 


ரூ.1௦,௦௦௦-௦௦ ல்ல தர்றார். வேற எந்தப்பய அம்புட்டு 


பணம்தர்ரானுவ?எல்லாப்பயகளும் கஞ்சப் 


பிசினாரிங்கதானே ?.அதுதாண்டி அனுசூயா 


காரணம்.


அனுசூயா :-   அப்ப நம்மள மாதிரி பொது மகளிர்கள் 


அல்லாருமே வர்ரவனுகள்ட்டே சிரிச்சு பேசி,


அன்பாக இருக்கிறமாதிரி நடிக்கிறது எல்லாமே 


அவனுககிட்டே இருக்கிற பணத்துக்குத்தானேடி.


அந்த மடப்பயலுக என்ன நம்மளைத் தொட்டுத் 


தாலியா கட்டிருக்கானுங்க ? என்ன நான் சொல்றது ?


சரிதானே திரௌபதை ?


திரௌபதை :மிகச்சரியாசொன்னடி.நமக்குத்தேவை 


அவனுகஇல்லை.அவனுகட்டேஉள்ள பணந்தாண்டி.


சரி எனக்கு இப்ப சோழபுரம் ஜமீன்தார் 


சொக்கலிங்கம் பேசினார். பதினோரு மணிக்கு 


வில்வண்டி வச்சு அவரும் அவரோட உயிர் நண்பர் 


நாராயணனும் வாராங்களாம். நான் போயி 


நல்லா உடம்பைத் தேச்சு குளிச்சுட்டு வரணும். 


******************************************************




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! நமது நாட்டு நடப்பு 


விளக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது.



மீண்டும் அடுத்த குறள் விளக்கத்திற்கு உள்ள 


நமது நாட்டு நடப்பு விளக்கத்தில் நாம் சந்திப்போம்.


அதுவரையில் உங்கள் அனைவரிடமும் அன்பு 


வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.



அன்பன். மதுரை T.R. பாலு.


பின்குறிப்பு :-   எனது மற்றுமொரு 


வலைத்தளமான மிகவும் நல்ல பல, 


வாழ்க்கைக்குத் தேவையான பல 


கருத்துக்கள் பொதிந்துள்ள அந்த 


வலைதளத்தை நீங்கள் கீழ்க்கண்ட 


பதிவிற்குள் சென்று படித்துப்பார்த்து 


பயன்பெறுக என்று உங்கள் 


அனைவரையும் அன்புடன் 


வேண்டிவிரும்பிக் கேட்டுக் 


கொண்டு விடைபெறுகின்றேன்.     


www strictlyadultsonly.blogspot.in 


 நன்றி !! வணக்கம் !!                                       


அன்புடன். மதுரை T.R. பாலு.


" பாலுவின் உள்மன எண்ணங்கள் " 


       www strictlyadultsonly.blogspot.in         

No comments:

Post a Comment