Tuesday, July 8, 2014

அன்பு உள்ளவர்கள் எதனை விரும்புவார்கள் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-  அன்புடைமை.


குறள் எண்  :-  72.




அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 


என்பும் உரியர் பிறர்க்கு... .. ... 




விளக்கம்  :-   அன்பு இல்லாதவர்கள் அனைத்துப் 


பொருட்களும் தமக்கே உரிடதென  சொந்தம் 


கொண்டாடிடுவர்.  அன்புடையவரோ தனது 


உடம்பையும் பிறர்க்கு உரிமையானதாக ஆக்கி 


மகிழ்ந்திடுவர். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



சீனாதானா :- ஏன்யா பானாகினா. சிங்கப்பூர் 


போயிட்டு வந்தீரே, எனக்கு என்னய்யா 


வாங்கியாந்தீறு ?


பானாகினா:-  யோவ் சீனாதானா உமக்கு 


என்னய்யா வேணும். அதோ அந்த இரண்டு சூட் 


கேசுகளிலும் எல்லா வெளிநாட்டுப் 


பொருட்களும் இருக்கு. எது வேணுமோ 


எடுத்துக்குடுமய்யா. இப்ப உமக்கு 


சந்தோசம்தானே.


சீனாதானா :- ரொம்ப சந்தோசம்யா பானாகினா. 


ரொம்ப மனசு மகிழ்ச்சியாக்கீது நயினா.


சுனாபானா :-  யோவ். பானாகினா. சிங்கப்பூர் 


போயிட்டு வந்தீரே எனக்கு என்னய்யா 


வாங்கியாந்தீறு.


பானாகினா:-  யோவ். சுனாபானா கொஞ்ச 


நேரத்துக்கு முந்தி வந்தீரா. இப்பத்தான் அம்புட்டு 


சாமான்களையும் நம்ம சீனாதானாக்குகொடுத்து 


விட்டேன். உமக்கு தர இப்ப என்னோட 


உடம்புதான் இருக்கு. அதை நீருவிரும்பி 


ஏத்துக்கிட்டீர்ணா அதை விட சந்தோஷம் 


எனக்கு வேற இல்லை நயினா.



நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் நாளை சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment