Thursday, July 24, 2014

காதல் எனும் நோய்க்கு காதலிதான் மருந்து !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  புணர்ச்சி மகிழ்தல்.


குறள் எண் :-  1108.



பிணிக்கு மருந்து பிரமன் அணியிழை 

தன்நோய்க்குத் தானே மருந்து... ... ... ... 


விளக்கம் :-  பிற நோய்க்கு மருந்து 


மற்றொன்றாகும்.  அணிகலன்களை 


அணிந்து வலம்  வந்த, இவளால் வந்த 



நோயான காம நோய்க்கு இவளேதான் 


மருந்தாகும். வான்புகழ் வள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.


நமது  நாட்டு நடப்பு விளக்கம் :- 


ஆல்பர்ட் :-  என்னடா சலீம். நானும் உன்னை 


ஒரு மாசமா கவனிச்சுக்கிட்டுத்தான் வரேன்.


சரியா சாப்பிடுவது இல்லை. தூங்குவதும் 


இல்லை. எப்பப்பாத்தாலும் எதையோ 


ஒன்னைப் பறிகொடுத்த மாதிரி விரக்தியான 


பார்வை. என் உடம்புக்கு என்னடா ஆச்சு ?


வாடா. இன்னைக்கு போயி டாக்டர்கிட்டே 


காண்பிச்சு, என்ன, எதுன்னு கேட்போம்.


வர்ரியாடா ?


சலீம் :-  (லேசாகப் புன்னகை செய்கிறான் )


டேய் ஆல்பர்ட். என் நோய்க்கு மருந்து தர 


இந்த நகரம் இல்ல, உலகத்துலே எந்த 



டாக்டராலேயும் முடியாதுடா. சொன்னாப் 


புரிஞ்சுக்கடா.


ஆல்பர்ட் :-  அதென்னடா அப்படி சொல்லிட்டே.


நம்ம ஊரிலே இல்லாத டாக்டரா. இல்ல நம்ம 


மாநிலத் தலைநகர் சென்னையிலே இல்லாத


சிறப்பு மருத்துவரா ?  டேய். நீ என்னடா உளறுறே.



சலீம் ;-  ஆமாடா. நான் உளறத்தான் செய்றேன்.


என் உதடுகள் எப்ப்பப்பாத்தாலும் உமா..உமா..


உமான்னுதாண்டா உளறிகிட்டே இருக்கு.


நானும் எவ்வளவோ கட்டுப்படுத்திப் பாக்குறேன்.

முடியலைடா. அதான் எனக்கு பசி இல்லை,


தூக்கம் இல்ல. எதுவுமே இல்லாமல் நான் 


எதையோ பறிகொடுத்தவன் மாதிரி இருக்க 


காரணமே அந்த உமா தாண்டா. ஆல்பர்ட்.


நீ உண்மையிலேயே எனக்கு, என்னோட 


நோய்க்கு மருந்து தரணும்னு நினைச்சா 


நீ எப்படியாவது நம்ம எதிர்வீட்டு உமாவைச் 


சந்திச்சு இந்தமாதிரி உன் காதலன் சலீம் 


உன் நினைவாகவே இப்படி பித்துப்பிடிச்சுப் 


போயி இருக்கான்னு சொல்லிட்டு, அவளை 



எப்படியாவது நான் சந்திக்க  நீ ஏற்பாடு 


செய்டா. என்னோட நோய்க்கு அவதான்,


அவமட்டும்தாண்டா மருந்து. என்னடா 


ஆல்பர்ட். செய்வியா ? அவளை நான் இப்பவே 


சந்திக்க ஏற்பாடு செய்வியாடா ? சொல்றா ?


ஆல்பர்ட் :- சந்திக்க..... ஏற்பாடு.... உம்......நான்.....


என்னடா சலீம்....கடைசியிலே இப்படி என்னை 


உன் நண்பனை.....மாமா ஆக்கிட்டியே.


சலீம் :-  டேய் என்னை மன்னிச்சுக்கோடா 

நான் அந்த அர்த்தத்துலே சொல்லலே. என் 


நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோடா.


ஆல்பர்ட் :- சலீம். எனக்கு இப்ப புரிஞ்சுபோச்சி.


உன்னோடை இந்த காதல் நோயை தீர்க்குற 


சக்தி, உன் காதலி உமாகிட்டே தான் இருக்கு.


அவதானேடா உன் நோய்க்கு மூல காரணம்.


இப்ப அவளைசந்திச்சு பேசினேன்னுவச்சுக்க.


அவளேதான் அவளாலேவந்த இந்த காதல் 


நோய்க்கு மருந்தா மாறி உன்னைய மனசு 


சந்தோசப் படுத்துவாடா. நான் இப்பவே 


கிளம்புறேன்.  திருவள்ளுவர்கூட இதே மாதிரி 


மருந்தைத்தாண்டா சொல்லி இய்ருக்கார்.


நான் திரும்பி வரும்வரைக்கும், நம்ம மதுரை 


T.R. பாலு சார் கொடுத்திருக்குற திருக்குறளும்  


நமது நாட்டு நடப்பு விளக்கத்தையும் படிச்சுகிட்டு 


இரு. அரை நொடியிலே நான் உமாவோட 


வந்துடறேன். என்ன வரட்டா ?


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment