Monday, December 30, 2013

அறம் எனப்படுவது எது ? திருவள்ளுவர் தரும் ஒரு விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்   :-  அறன்வலியுறுத்தல்.     



குறள்  எண்:-35.                                             



அழுக்காறு அவாவெகுளி                         

                         இன்னாச்சொல் நான்கும் 


இழுக்கா இயன்றது அறம்... ... ... ... ... ... 



வள்ளுவர் தரும் விளக்கம் :-               



பொறாமை, ஆசை, சினம், 



கடுஞ்சொல், ஆகிய இந்த நான்கு 



குற்றங்களுக்கும் 



இடங்கொடுக்காமல் அவற்றைக் 



கடிந்து(மறந்து)ஒழுகியதே(நடப்பதே



அறம் எனப்படுவதாகும். இது வான் 



புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிய 



திருக்குறளும் அதன் விளக்கமும் 



ஆகும்.                                                                 



 நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



(இந்தக் கட்டுரையில் இடம் பெறும் 



பெயர்கள்,சம்பவங்கள்,குறியீடுகள், 



இவை எல்லாம் கற்பனையே அன்றி, 



வேறு தனிப்பட்ட எவரையுமோ 



அல்லது இயக்கத்தையோ பற்றிக் 



குறிப்பிடுவது அல்ல.)                               



அது  உலகத்தின் மிகப் 



பழமையானதொரு செம்மொழி 



பேசிடும் மாநிலம். அங்கே சுமார் 



முப்பது மாதங்களுக்கு முன்பு 



நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 



பொய்யான வாக்குறுதிகளை அள்ளி 



வீசி ஒரு கருப்பு நடிகரின் 



அனுதாபத்தைப் பெற்று அவரது 



வாக்குகளின் உதவியால் ஒரு கட்சி 



ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பு 



நடைபெற்ற நல்லதொரு ஆட்சியை 



மக்கள் மறந்தனர். இந்த 



இலவசங்களுக்கு ஆசைப் பட்டு, 



தங்களது பொன்னான வாக்குகளை



இந்த இப்போதைய ஆளும் கட்சிக்கு 



அளித்ததினால் அந்த மாநில 



மக்கள் படும் துன்பத்திற்கும் 



துயரத்திற்கும் அளவு என்பதே 



கிடையாது. முழுக்க முழுக்க 



பொறாமை, ஆசை, சினம், 



கடுஞ்சொல் இவைகளை மட்டுமே 



தங்களது அன்றாட நிகழ்வுகளில் 



கலந்து அள்ளித் தெளித்துக் 



கொண்டு 



இருக்கும் ஒரு கெடுமதியாளன்தான் 



தற்போது நடப்பு ஆட்சிகட்டிலில் 



அமர்ந்து இருக்கும் தலைமைப் 



பீடத்தில் உள்ளவர் பெயர்தான் 



வெற்றித் தாமரைச் செல்வன். 



பழிவாங்கும் குணம்தான் 



இவனனிந்து இருக்கும் உடைகள். 



பொறாமைதான் இவனது மூளை 



முழுவதும் நிறைந்திருக்கும் 



எண்ணங்கள். ஆசை, இவனுக்கு 



அளவு என்பதே கிடையாது. பேசுவது 



அனைத்தும் கடும் சொற்கள் தான். 



முன்பு ஆண்ட கட்சியின் தலைவர் 



திரு மு.அன்புநிதி. மிகவும் அரசியல் 



திறமை உடையவர். நல்லவர். மிக 



மிக வல்லவர். இவரை தற்போது 



பதவியில் உள்ள வெற்றித் 



தாமரைச் 



செல்வன் இவரது பெயரைச் 



சொல்லித்தான் அழைப்பது 



வழக்கம். ஏய் !! அன்புநிதி என்றே 



அழைத்து பழகியவன் இவன். 



 ஆனால் இதற்கு நேர்மாறான 



குணம் 



கொண்டவர் அன்புநிதி. இன்றளவும் 



அய்யா திரு வெற்றித் தாமரைச் 



செல்வர் அவர்களே என்றுதான் 



மரியாதையோடு அழைப்பார். 



இந்தனைக்கும் இவருக்கு வயது 9௦ 



ஆனால் இவரது அரசியல் 



அனுபவத்தின் வயது கூட 



இருக்காது 



வெற்றிக்கு. அவருக்கு அடுத்தமாதம் 



வந்தால் 66 வயது துவங்கிடும். 



இப்படி பொறாமை, ஆசை, 



சினம்,கோபம், கடுஞ்சொல் பேசிடும் 



குணம், பழிவாங்கும் எண்ணம் 



கொண்ட மனிதர்கள், வெற்றித் 



தாமரைச் செல்வனைப்போல 



எதிர்காலத்தில் மனிதர்கள் 



வருவார்கள் என்றே வள்ளுவப் 



பெருந்தகை இதுபோல குறளை 



இயற்றி இருக்கிறார் என்று 



சொன்னால் அது ஒன்றும் மிகைப் 



படுத்தப்பட்ட சொல் அல்ல. 



இப்படிப்பட்ட கொடுங்கோல் 



ஆட்சியாளர்கள் ஆளும் 



மாநிலத்தில், அரசவையில், அறம் 



எங்கே இருக்கப்போகிறது ? 



ஒருபொழுதும் இருக்காது. 



இறைவன்தான் அந்த மாநில 



மக்களைக் காப்பாற்ற வேண்டும். 



இத்துடன் நமது நாட்டு நடப்பு 



விளக்கம் நிறைவு பெறுகிறது. 



நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன். மதுரை T.R.பாலு. 

Sunday, December 29, 2013

கல்வியின் சிறப்பு !! --வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 




தினம் ஒரு திருக்குறள்.                         



அதிகாரம்  :-   கல்லாமை.



குறள் எண்:-   41௦.                                         



விலங்கொடு மக்கள் அனையர்             

                                         இலங்குநூல் 


கற்றாரோடு ஏனை யவர்... ... ... ...           



வள்ளுவர் தரும் விளக்கம் :-                   



அறிவு விளங்குவதற்குக் 



காரணமான நூல்களைக் 



கற்றவரோடு ஒப்பிடுகையில் 



கல்லாதவர், மக்களோடு 



விலங்குகளுக்கு உள்ள அளவு 



அவ்வளவு வேற்றுமை உடையவர் 



ஆவர். இது திருவள்ளுவர் நமக்கு 



அருளிய குறளும் அதன்விளக்கமும் 



ஆகும்.                                                                   



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-             



சங்கையா :-  டேய் !! தங்கையா !! 



உன்ன எங்கெல்லாம்டா தேடறது ? 



எங்கடா தொலஞ்சு போனே ?               



தங்கையா :-  அடேய் !! சங்கையா !! 



வந்து நம்ம ஆளும் கட்சி ஆதரவு 



M.L.A. அருள்பாண்டியன் இருக்காரே!!



சங்:- யாரடா இந்த காசுக்காக கட்சி 



மாறின கபோதியாடா?நம்ம 



அஜைகாந்த் கட்சிலே நின்னு 



ஜெவிச்சுட்டு இப்ப நம்ம " அப்பா "



கட்சிலே போயி காசுக்கு ...... 



திங்கப்போனவன்தானடா அந்தக் 



கபோதி அருள்பாண்டியன் ?                     



தங்க:-  டே தம்பி !! அரசியல்ல 



இதெல்லாம் சாதாரணமப்பா !! தம்பி 



நாமெல்லாம் அரசியல்ல முழுநேரப் 



பணியிலே ஈடுபட்டு இருக்கிறதுக்கு 



முக்கிய காரணம் என்னான்றே !! 



மக்களுக்கு உழைக்கிறதுக்கா ? 



இல்ல..இல்ல.. இல்லவே 



இல்ல.....நாம பிழைக்கிறதுக்குடா !! 



இத்த நீ முதல்ல 



புரிஞ்சுக்க..இதைத்தான் நம்ம 



அருள்பாண்டியன் செஞ்சிருக்காரு !! 




தெரியுதா ? அது எப்டிடா தப்பாகும் ?   



சங்:-  சரி !! அத்த விடுறா. நீ இப்ப 



எங்கே போனேன்னு கேட்டேன்ல. 



அதுக்கு இன்னும் பதில் சொல்லவே 



இல்ல..                                                              



தங்:- இல்லடா..நம்ம அப்பா 



ஆட்சியிலே இலவச மிக்சி,விசிறி, 



கிரைண்டர், தரோம்ல...                             



சங்:-  எது..இந்த ஒவ்வொரு ரேசன் 



கார்டுக்கும் கொடுக்குறதாடா?       



தங்:-    டே!! தம்பி !! நீல்லாம் 



அரசியல்ல உருப்படவே மாட்டடா !! 



சங்:- டே என்னடா சொல்றே?                 



தங்:-  ஆமாடா தம்பி ஏண்டா இந்த 



பொசகெட்ட பொதுமக்களுக்கு 




தர்ரதுக்காடா நம்ம அப்பா தேர்தல் 



நேரத்திலே வாக்குறுதி தந்து இந்த 



இளிச்சவா ஜனங்க கிட்டே ஒட்டு 



வாங்கி நாம ஜெவிச்சிருக்கோம் ?       



சங்:-  அடப்பாவி !! என்னடா 



சொல்றே ? ஏழைகளுக்கு 



இல்லையாடா ? இந்த இலவசப் 



பொருள்கள் ?                                                 



தங்:-  போடா மடையா நீ அரசியல்ல 



சத்தியமா சொல்றேண்டா 



உருப்புடவே போறதில்ல.  டே இந்த 



இலவசப் பொருட்கள் அத்தனையும் 



எங்க கட்சிக்காரங்களுக்கு 



அவங்களுக்கு வேணும் என்று 



இருக்கிறவங்களுக்கு   ஒசியாத் 



தர்றதுகுத்தானேடா  மக்கள் 



வரிப்பணத்துலே நாம் ஆட்டயை 



போடுறோம். இது உனக்குத் 



தெரியாதாடா ?  மடையா !!                   



சங்:-  டே பாவம்டா நமக்கு 



ஒட்டுப்போட்ட ஜனங்க. ஏமாத்தக் 



கூடாதுடா. இந்த மிக்சி,விசிறி, 



கிரைண்டர், இதெல்லாம் அந்தஏழை 



மக்களுக்குத் தரலேன்னா அடுத்த 



தேர்தல்ல எப்டிடா நமக்கு ஒட்டு 



போடுவாங்க?நம்மளை மறந்துற 



மாட்டாங்களாடா ? சொல்லுடா ?         



தங்:- போடா FOOL  இந்த முட்டா 



ஜனங்க கிட்ட ஒட்டு வாங்கி 



ஜெயிக்ரதோடஜனங்களை நாம 



மறந்துறனும்டா இல்லன்னுவச்சுக்க 



அடுத்த தேர்தல்ல ஜனங்க நம்மள 



மறந்துருவாங்கடா.  ஆனானப் பட்ட 



பலநூல்கள்  கற்று, பலகாவியங்கள் 



படைத்த நல்ல அறிஞரின் வழிவந்த 



கலைஞரைப்போல்முத்தமிழுக்கும் 



சொந்தக்காரர் அந்த முதுபெரும் 



தலைவரையே அவர் இந்த 



நாட்டுக்கு செஞ்ச நல்ல 



பலதிட்டங்கள், மேல்பாலங்கள், 



 மக்களுக்கு பலன்தரும் நல்ல 



புதுபுது திட்டங்களை அவர் 



அறிவித்ததோடு நின்று 



விடாமல்,நம்ம தலைவரைப் போல, 



அவை அத்தனையையும் அமல் 



படுத்தி இந்த ஜனங்களுக்கு 



எவ்வளவு நன்மைகள் செஞ்சாரு !! 



அப்படிப்பட்ட அந்த நல்லவரையே 



மறந்துதானே இந்த முட்டாள் 



ஜனங்க எங்க கட்சி அறிவித்த இந்த 



இலவசங்களை அடைய அதற்கு 



ஆசைப்பட்டுத்தானே நம்ம கட்சிக்கு 



ஒட்டு போட்டு ஜெயிக்கவச்சு நம்ம 



தலைவர் திரு  வெற்றித் தாமரைச் 



செல்வனை இந்த மாநிலத்தின் 



முதல்வரா தேர்ந்தேடுத்து 



இருக்காங்கடா ? சங்கையா !! 



சந்தேகமே இல்லாமல் 



நம்ம தலைவர் வெற்றித் தாமரைச் 



செல்வன் ஆங்கிலப் பள்ளியிலே 



படித்து பட்டம் பலபெற்று, ஐந்து 



மொழி பேசிடும் ஆற்றல் 



உடையவரா இருக்கலாம். ஆனால் 



அரசியல் பாடத்திலே இவர் பூஜ்ஜியர் 



தானே. இப்ப அரசியலுக்கு 



தேவையானது பட்டப் படிப்புஅல்ல 



அரசியலுக்குத் தேவையான படிப்பு, 



இலக்கணம் எதுன்னு கேட்டீன்னா 



சாதுரியம், புத்திசாலித்தனம், எந்த 



ஒரு விஷயத்தையும் அணுகிடும் 



முறையிலே எதிர்காலத்தைப் 



பற்றிய சிந்தனையோடு 



செயல்படுகின்ற ஆற்றல்,வல்லமை, 



இதெல்லாம் நம்ம முன்னாள் 



முதல்வர் திரு அன்புநிதி அவர்கள் 



கிட்டேதானே இருக்கு. அந்த 



படிப்புலே முன்னாள் முதல்வர் திரு 



அன்பு நிதியை மக்கள் என்றும் நம்ம 



தலைவர் இந்நாள் முதல்வர் 



திரு.வெற்றித்தாமரைச் செல்வனை 



விலங்கு என்றும் திருவள்ளுவரே 



மேலே சொன்ன குறள் தந்த 



விளக்கத்தின்படி சான்றிதழ் 



கொடுத்து இருக்கிறதைநீ 



படிடா முதல்லே. எனக்கு நிறைய 



வேலை இருக்கு. நம்ம வட்டார 



மந்திரிகிட்டே இந்த வார   நம்ம 



பகுதிக்கான வசூல்தொகை 75 



லட்சத்தை நான் கொண்டுபோயி 



கொடுக்கனும்டா. நான் வரட்டா.   



சங்:-  வராதடா. அப்படியே 



போயிருடா. உம் மூஞ்சிலே 



முழிச்சாலே எதுவும் விளங்காதுடா. 



போடி போ !! இன்னும் 2.1/2 வருஷம் 



தானே உங்க ஆட்டம் எல்லாம். 



அதுக்கு அப்பறம் நான் பாடுற பாட்டு 



உங்களையும் உங்க கட்சியையும் 



பாத்து பாடுற பாட்டே இதுதாண்டா. 




" கும்மாளம் போட்டதெல்லாம்             

      அடங்கியதா "? நீங்க !!                           

    கும்மாளம் போட்டதெல்லாம்             

       அடங்கியதா ? உங்க !!                           

    கொட்டமெல்லாம் தன்னாலே           

      ஒடுங்கியதா ?                                           



அப்படீன்னு பாட்டு பாடுவேன். அப்ப 



நீ வந்தா போதும்டா. போ..போ..போ... 



நமது நாட்டு நடப்பு விளக்கம் 



இத்துடன் நிறைவு பெறுகின்றது. 



மீண்டும் அடுத்த குறள்விளக்கத்தில் 



உங்கள் அனைவரையும் 



சந்திக்கிறேன்.



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன். மதுரை T.R. பாலு.

Friday, December 27, 2013

குடியால் மயங்கியவனுக்கு சமூகத்தில் என்ன மரியாதை கிடைக்கும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்   :- கள்ளுண்ணாமை. 



குறள் எண் :- 927.                                             



உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்       

                                             எஞ்ஞான்றும் 


கள்ளொற்றிக் கண்சாய் பவர்... ... ...   



விளக்கம் :-  கள்ளை (மதுவை) 



மறைந்திருந்து குடித்து அறிவு 



மயங்குபவர், உள்ளூரில் 



வாழ்கின்றவரால் உள்ளான 



செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் 



சிரிக்கப்படுவர். இது வள்ளுவர் 



நமக்கு அருளிய திருக்குறளும் 



அதன் விளக்கமும் ஆகும்.                     




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-               



மாலை மயங்குகின்ற நேரம். 



சிந்தாமணி எனும் அழகிய 



சிற்றூர்.அங்கே மாலை நேரத்தில் 



ஊரில் உள்ள மலர்ச் சோலைகள் 



நிரம்பிய பூங்காவில் அந்த ஊரின் 



பெரிய மனிதர்கள், படித்தவர்கள், 



பண்பாளர்கள்,வசதிபடைத்தவர்கள், 



வசதி ஏதும் இல்லாத வறுமைக் 



கோட்டுக்குக் கீழ் வாழ்ந்திடும் ஏழை 



எளிய மக்கள், பாட்டாளிகள், 



விவசாயிகள், தொழிலாளிகள், 



எந்தவித உடல் உழைப்பும் 



செய்யாமல் பூங்காவிற்கு வரும் 



பெண்களை (வயது வித்தியாசம் 



எதுவும் இல்லாமல்) நோட்டம்விடும் 



சோம்பேறிகள், எவன் அசந்து 



இருக்கிறான், அவனது 



கைப்பொருளை அபகரிக்கும் 



நோக்கத்துடன் அங்கே 



குழுமியிருக்கும் திருடர்கள், 



தாய்மார்கள், தந்தைமார்கள், பருவ 



வயதைக் கடந்து பார்வையினாலே 



தூண்டில் போட்டு பட்டினும் 



மென்மையான இளம் பெண்களை 



கவர்ந்திடும் எண்ணத்துடன் கூடி 



இருக்கும் இளம் வாலிபர்கள், 



சின்னஞ்சிரார்கள், என அந்த 



கிராமத்தில் உள்ள அத்தனை பிரிவு 



மக்களும் அங்கே கூட்டம்கூட்டமாக 



வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர். 





அப்போது அந்த ஊர் பஞ்சாயத்து 



தலைவர் கங்குசாமியும்,அவருக்குத் 



தாளம் தப்பாமல் போடும் தங்கச் 



சாமியும் அந்தப் பூங்காவிற்குள் 



நுழைந்தனர்.  பெரிய மனிதர்கள், 



படித்தவர்கள்,பண்பாளர்கள் 



அமர்ந்திருக்கும் மேடையைக் 



கடந்து இவர்கள் இருவரும் 



(கங்குசாமியும் தங்கச் சாமியும்) 



சென்ற பிறகு அந்தக் கூட்டத்தில் 



உள்ள இருவர் பேசிடும் 



உரையாடலை இப்போது 



பார்ப்போமா நேயர்களே !!                   




இடியாப்பம்:-  அடேய் !! ஊத்தாப்பம் !! 



உனைய எங்கெல்லாம்ல தேடுறது. 



எங்கல தொலஞ்சு போன !!                 



ஊத்தப்பம்:- எல !! இடியாப்பம் !! 



நானும் உனக்கு பலவாட்டி 



சொல்ட்டேன். இந்தமாரி பத்துபேர் 



முன்னாலே என்ய பேருசொல்லிக் 



கூப்பிடாதலேன்னு ? ஏலே? 



உனக்கு அறிவே கிடையாதாலே ? 



நான் செஞ்ச கருமம்? 



அம்புட்டும்!!இன்னொருவாட்டி 



கூப்புடு !! பிறவு பாத்துக்கிடுதேன் !!



உன்னய.ஆமா!!                                           



இடியா:-   ஏல !! என்னலே !! 



ரொம்பத்தான் கோவிக்கே!! சரி 



உனக்கு புது விஷயம் தெரியுமாலே !!



ஊத்தா:-  அப்டி என்னாலே புது 



விஷயம் !! சொல்லுல !!                           



இடியா:-  நம்ம தலைவர் கங்குச்சாமி 



அவரோட கடைசி மவன் 



சாம்பிராணி இருக்கானே !! அவன் 



நேத்து என்னா சென்ஜான்னு 



தெரியுமால உனக்கு ?                             



ஊத்தா:-  என்னால செஞ்சான் ? அட 



சட்டுபுட்டுன்னு சொல்லுல !!                 



இடியா:- புல்லா ஊத்திட்டு வீதிலே 



மல்லாந்து கிடக்காம் பாத்துக்கல !! 



ஊத்தா:-  ஏல !! வீதில மல்லாந்து 



கிடக்குற அளவுக்குன்னா..? மவன் 



எம்புட்டுல குடிச்சிருப்பான்?                   



இடியா:- நான் கேட்டுப்புட்டேன்ல 



அவன் கைத்தடி கைலாசம் பயகிட்ட. 



அவன் சொன்னான் ஒரு ஆப்பும் ஓரு 



குவாட்டரும்மொத்தம்முக்காலுக்கு 



மேலேன்னா, ஏல இது மனுஷன் 



குடிக்கிறகுடியால?குடலுஎன்னாவும்                                   


ஊத்தா:-  பாவம்ல நம்ம தல 



கங்குசாமி. புள்ள இல்ல புள்ள 



இல்லன்னு இவன  தவங்கிடந்து 



பெத்தாருல்ல,  அதான் மவன் 



தவங்கிடக்கிற முனிவர் மாதிரி 



இப்படி ஒரேடியா ஊத்திகிட்டே 



தவங்கிடக்கான் போலுக்கு !! ஏல 



ஊரே சிரிப்பா சிரிச்சு கிடக்குலே 



நம்ம சாம்பிராணி பயல பாத்து.           



(இவர்கள் இருவர் மட்டுமல்ல 



அன்பர்களே !! அந்த பூங்காவில் 



உள்ள அனைவரும் சிரிப்பாய்சிரித்து 



பேசுகின்றனர் இந்தக் குடிகாரனை 



நினைத்து. இந்த அவமானம் 



எதனால் வந்தது ? எல்லாம் இந்த 



மதுவினால் தானே ? தேவையாஐயா 



இந்தப் பழக்கம் ? விட்டுடுங்க!! தயவு 



செஞ்சு விட்டுடுங்க !! உங்கள்ல 



யாராச்சும் இந்த குடிப்பழக்கத்தை 



வச்சுருந்தீங்கன்னா !! ஆமா 



அம்புட்டுத்தான்நான்சொல்லுவேன்!!



அப்புறம்...உங்க இஷ்டம்..



(நமது நாட்டு நடப்பு விளக்கம் 



இத்துடன் முடிவடைகிறது 



அன்பர்களே )                                                  



நன்றி !! வணக்கம் !!                                 



அன்புடன் மதுரை T.R. பாலு.