Saturday, December 21, 2013

பெண்களின் தனிச் சிறப்பான " குறிப்பறியும் " குணத்தினைப் பற்றி திருவள்ளுவர் தரும் விளக்கம் !!--உங்களின் கனிவான கவனத்திற்கு !!





உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                           



அதிகாரம்    :- குறிப்பறிதல்.                     



குறள் எண்  :-  1௦94.                                         


யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்                     

                                                                          நோக்காக்கால் 


தான்னோக்கி மெல்ல நகும்... ... ... ... ... ... ... ... ... ... ...... 



வள்ளுவர் தரும் விளக்கம் :-                   



நான் பார்க்கும்போது அவள் 



நிலத்தைப் பார்ப்பாள். நான் 



பார்க்காதபோது அவள் என்னைப் 



பார்த்து மெல்ல தனக்குள் 



மகிழ்வாள். இது வள்ளுவர் தரும் 



குறளும் அதன் விளக்கமும்ஆகும். 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-             



சுரேஷ் :-  டேய் !! மாப்பிள்ளே !! 



பிரகாசு !! என்னடா இது ஒரே 



அதிசயமா இருக்குது.எப்பப் 



பாத்தாலும் இஞ்சி தின்ன குரங்கு 



மாதிரி மூஞ்சிய வச்சிருப்பே. 



இன்னைக்கு என்னடான்னா 



சந்தோசம் தாண்டவமாடிட்டிருக்கு. 



சொல்றா மாப்ளே இன்னா விஷயம். 



பிரகாசு :-  (கொஞ்சம் நாணம் கலந்த 



வெக்கத்துடன்) (இந்தக்கால 



பெண்களிடம் காணவே முடியாதது) 



இன்னைக்கு நான் அவளைப் 



பாத்தேண்டா மச்சான் !!                             



சுரே:-யாரடா ?( கொஞ்சம் ஏமாற்றம் 



கலந்த வருத்தத்துடன்) (எல்லா 



ஆம்பளைகளுக்கும் இது போன்ற 



சூழ்நிலையில் வரக்கூடியது)     



பிர:-  அதான்டா !! எங்க மாடி வீட்டு 



மஞ்சுளா தாண்டா !!                                   



சுரே:- இன்னாடா மாப்ளே என் தலல 



இப்டி காலங்காத்தாலே கல்லை 



தூக்கி போடுற ? டே நான்தானடா 



அவள கணக்கு பண்ணிட்டிருந்தேன். 



உனக்கு எப்படிறா செட் ஆச்சு ?           



 பிர :-  இல்லடா இன்னைக்கு 



காலைல எங்க வீட்டு மொட்ட 



மாடிக்கு போனேனா அங்க ...                 



சுரே:- சொல்றா..சொல்றா...அங்க 



அவளை என்னாடா செஞ்ச....எனக்கு 



கேக்ரதுக்கே ரொம்ப மனசு கஷ்டமா 



இருக்குடா?                                                     



பிர:- டே மச்சான் உனக்கு ஏண்டா 



மனக்கஷ்டம் வரணும். மஞ்சு என்ன 



உனக்கு அக்காவா ? இல்ல 



தங்கச்சியா ?                                                     



சுரே :- அப்டி இருந்தாக்கூட 



பரவால்லயேடா மாப்ளே . எனக்கு 



சந்தோசம்தானே நீ எனக்கு 



உண்மையிலேயே மச்சானா 



வரதுக்கு !! டே !! நானும் அவ மேல 



ஆசை வச்சவந்தானடா !!                         



பிர :- This is too late yaaa !! மச்சிமுதல்ல 



மொட்ட மாடில நடந்தது என்னன்னு 



கேள்றா என் டுபுக்கு (?)                               



சுரே:- சொல்லித்தொலடா !!



(கடுப்புடன்)                                                     



 பிர:-  இல்லடா மச்சி !! என்பேண்டை 



காஞ்சுருச்சான்னு பாக்கப் 



போனேனா அப்ப......                                     



சுரே:- டே இன்னா கலாய்க்கிறையா? 



மூஞ்சிய பேத்துருவேன்பாத்துக்க..   



பிர:- டே இந்த பாத்தியா கேவலம் 



afterall ஒரு பொம்பள மேட்டர் நம்ம 



நட்பை உடச்சுருமா என்ன ? ஏண்டா 



நீ இப்படி கடுப்பாகிற ?                     



 சுரே:- (சிரமப்பட்டு சிரிப்பை 



மூஞ்சிலே வரவச்சுக்கிட்டு) அதுக்கு 



இல்லடா மாப்ளே ! சொல்றத 



சட்டுபுட்னு சொல்றா !! நீ இன்னா 



திருவிளையாடல் 



படத்துக்கா பழையபடி கதை,வசனம் 



எழுதவாடா போறே !!சொல்றா. நீ !! 



அதுக்காக வேண்டி சொன்னேன் !! 



 படக்குன்னு சொல்றா ?



 பிர  :-  துணி எடுக்க நான்போனேனா 



அப்ப மஞ்சு மிளகாய் வத்தல் காயப் 



போட்டிட்ருந்தா அப்ப நான்அவகிட்ட 



நைசா பக்கத்துல போயி நின்னேன். 



நான் நிக்றது தெரியாம அவ படக்னு 



நிமிந்தா பாரு !! நான் அப்படியே 



அசந்து போயிட்டேண்டா மச்சி. ஏன் 



அசந்தேன்னு கேக்க மாட்டயாடா.       



சுரே:-(சொல்லிதொலைடாமுண்டம் 



மனசுக்குள்)  சொல்றா மாப்ளே !!       



பிர:-  அவ, நான் அவகிட்டவருவேன், 



நிப்பேன்னு அவ எதிர்பார்க்கவே 



இல்லையா ? திடுதிப்னு என்ன 



பாத்தத்தாலேபயந்துபோயி அப்டியே 



என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாடா 



மச்சி !! அப்பறம் என்ன 



நடந்துச்சுன்னு கேக்க மாட்டியாடா? 



சுரே:-  உஸ்..உஸ்...(பெருமூச்சு 



விட்டபடியே)  சொல்லித் தொலடா 



சாமி.                                                                     



பிர:-  அப்பறம்..என்ன 



..நினைச்சாளோ தெரியல்லை 



அப்படியே என்ன விட்டுட்டு 



தரையைப் பாத்துட்டே நின்னுட்டு 



இருந்தா.. உடனே ..நான் சரி நம்மள 



பாக்றதுக்குத்தான் வெக்கப் 



படுறாளோன்னு நினைச்சுட்டு 



வானத்தைப் பாத்தேன்டா. ஆனாஎன் 



கடைக்கண்ணாலே அவ யாரைப் 



பாக்குறான்னு பாத்தேன்டா.                   



சுரே:-  உம்.. பிரவு...சொல்றா..           



பிர :-  நான் அவள 



பாக்கலேன்ன்றதை 



கன்பம்(CONFIRM) 



பண்ணிட்டு என்னைப் பாத்து லேசா 



சிரிச்சாடா.  ஆமாடா !! சுரேசுஇதுக்கு 



இன்னாடா  அர்த்தம்ன்னு  சொல்றா.. 



சொல்றா.. ப்ளீஸ்றா...                                 



சுரே:- ஏண்டா..என்னா..லந்து கிந்து 



பண்றீயா ? நானே மஞ்சு எனக்கு 



இல்ல்லன்னு சும்மா 



கொந்தளிச்சுப்போய் கிடக்கேன். நீ 



என்னடானா தாடி தீ பத்தி 



எரியிறப்போ பீடிக்கு நெருப்பு 



இருக்கான்னு கேட்டானாம். அந்தக் 



கதையா இருக்குடா.  டே..பிரகாசு 



எனக்கு இப்பத்தாண்ட ஞாபகம் 



வருது. இன்னைக்கு காலையிலே 



நம்ம மதுரை TR பாலு சார் 



இன்னைக்கு குறள் விளக்கம்ஒன்னு 



கொடுத்திருந்தார்டா. அதுல வர்ற 



குறள் படிதாண்டா இன்னைக்கு உன் 



லைப்ல நடந்திருக்குடா. அதனால நீ 



யாருக்காவது நன்றிசொல்லனுன்னு 



நினைச்சா நம்ம மதுரை TR.பாலு 



சாருக்கு நன்றி சொல்லு. நான் 



கிளம்புறேன்                 



பிர :-  எங்கேடா போறே !!                       



சுரே :- டே மாப்ளே உனக்கு 



யோகமடா லைப்ல நீ செட்டில் 



ஆயிட்டே .நானும் என் 



வாழ்க்கையை பாக்கணும்ல. 



அதனால மாடி வீடு மஞ்சுளா கை 



விட்டுட்டான்னா நாங்க என்ன 



செத்தா போயிருவோம். எனக்கு 



அடுத்த வீட்டு அனிதா இருக்காடா. 



போயி அவள கணக்கு பண்ணப் 



போறேண்டா.பை !! டாடா !!சீரியோ!! 



நன்றி !! வணக்கம் !!                               



அன்புடன். மதுரை TR. பாலு.                           

No comments:

Post a Comment