Tuesday, December 24, 2013

தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவர்களைப்பற்றி வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 




             தினம் ஒரு திருக்குறள் .                   


அதிகாரம்  :-  புல்லறிவாண்மை.       


குறள் எண்:-  844.                                             



வெண்மை எனப்படுவது யாதெனின் 

                                                            ஒண்மை 


உடையம்யாம் என்னும் செருக்கு... ... 



வள்ளுவர் தரும் விளக்கம் :-               



புல்லறிவு என்று சொல்லப்படுவது 



எதுஎன்றால்"யாம்அறிவுடையோம்"



என்று ஒருவர்/ஒருத்தி 



தன்னைத்தானே  மெச்சிக்கொண்டு 



மதித்துக் கொள்ளும் செருக்காகும். 



இது வான் புகழ் வள்ளுவர் நமக்கு 



அருளிய குறளும் அதன்விளக்கமும் 



ஆகும்.                                                                 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-             


(இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் 


சம்பவம்,விளக்கங்கள்,பெயர்கள், 


இவை அனைத்துமே கட்டுரை 


ஆசிரியரின் கனவினில் கண்ட 


கற்பனையில் உதித்ததே தவிர, 


வேறு எந்தத் தனி மனிதரையோ, 


அல்லது இயக்கத்தையோ, 


குறிப்பிடுவன அல்ல என்பதை 


உறுதி படத் தெரிவித்துக் 


கொள்கிறோம்)                                             




உலகத்தில் உள்ள ஐந்து 



கண்டங்களுள் மூன்றெழுத்து 



உடைய ஒரு கண்டத்தில் நான்கு 



எழுத்துக் கொண்ட ஒரு நாட்டினில் 



நடைபெறும் நிகழ்ச்சி இது.( இங்கே 



எனது நள்ளிரவு தூக்கத்தில் நான் 



கண்ட நல்லதொரு கனவினை, 



அதை கற்பனைப் புறாவாக 



வடிவமைத்து அதை, அந்தப் 



புறாவை, என் கற்பனை வானத்தில் 



சிறகடிக்க பறக்கவிட்டு உலா 



வந்ததொரு நிகழ்வினை கதையாக 



வடிவமைத்து உங்கள் முன் 



பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன். 



குறைகள், குற்றங்கள் ஏதும் 



(நிச்சயம் இருக்காது, எனது 



சிற்றறிவுக்கு எட்டியவரை)நிச்சயம் 



இருக்காது, ஒருவேளை இருந்தால், 



அதனை மன்னித்து, நல்ல 



விஷயங்கள், குணங்கள், 



இவைகளை மட்டிலுமே ஏற்றுக் 



கொள்ளும்படி, மண்டியிட்டு, 



தண்டியிட்டுக்கேட்டுக்கொள்கிறேன் 



என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!     



அந்த நான்கு எழுத்து நாடு ஒரு 



தீபகற்ப நாடு. அந்த நாட்டின் 



தென்கடைக்கோடியில் உள்ள ஒரு 



ஐந்து எழுத்துக்களைக் கொண்ட 



ஒரு மாநிலம் அது. அதில் ஆட்சி 



புரிந்துகொண்ட இருப்பவர், 



விதிவசத்தால், சிலபல 



இலவசங்களை தேர்தல் நேரத்தில் 



அறிவித்தவரும், ஒரு அரசியல் 



என்றால் அது என்ன? அதில் அந்த 



அரசியலில் எப்படி சாதுரியத்தோடு 



செயல் பட எண்டும் என்ற 



நுண்ணறிவு ஒரு சிறு கடுகு அளவு 



கூட அறிந்திடாத, தெரிந்திடாத, 



புரிந்திடாத,அதிர்ஷ்டவசமாக 



இலவசத்துக்கு ஆசைப்பட்டு ஏமாந்த 



பொது மக்கள் தந்த ஓட்டுக்களின்  



ஆதரவு கிடைத்ததினாலும்,மேலும் 



ஓரளவிற்கு அரசியல் செல்வாக்கு 



பெற்ற ஒரு கருப்பு L.G.R. என்று 



தன்னைத்தானே எண்ணிக்கொண்டு 



செயல்பட்ட ஒரு திரைப்பட 



நடிகர் கட்சியின் கணிசமான 



வாக்குகளைப் பெற்றதினாலும்  



மட்டிலுமே ஆட்சிக் கட்டிலில் 



அமர்ந்த ஒரு கொடிய நஞ்சு உள்ளம் 



படைத்த, கெட்ட நெஞ்சம் 



உடையவரும் அந்தக் கட்சியின் 



நிரந்தர பொதுச் செயலாளர்  என்று 



தன்னைத்தாமே அறிமுகம் செய்து 



கொண்டவரும் ஆன ஒரு புரட்டு 



அரசியல்வாதியின் கதை இது. 



இவருக்கு வந்துங்க ஒரு கெட்ட 



பழக்கம் உண்டுங்க அதுஎன்னான்னு 



கேட்டுக்கிட்டீங்கன்னா, இவருக்கும் 



புரட்சி அப்படீங்கற வார்த்தைக்கும் 



எந்தவிதமான சம்பந்தமும் 



உண்மையிலேயே கிடையவே 



கிடையாதுங்க. ஆனா 



தன்னைத்தானே " புரட்சித் திலகம் " 



அப்டீன்னுதான் தன்னை 



எல்லோரும் கூப்பிடனும், 



கட்சிக்காரங்க,  மத்தவங்க,



சுவரொட்டியில் அச்சிடனும் 



அப்படீன்ன்னே பிரியப்படும் 



மனோபாவம் கொண்டவர்தாங்க 



இவரு. பாருங்க இவரு பெயரு 



என்னான்னு கேட்டீங்கன்னா 



J.K. வெற்றித்தாமரைச் செல்வன். 



கழுதைக்குப் பெயருகல்யாணியாம். 



அந்த மாதிரிதான் இவரு பெயரும். 



ஒரு இழவும் தெரியாதுங்க 



அரசியலைப் பத்தி. தெரிஞ்சது 



எல்லாம் தனக்கு முந்தி ஆட்சிலே 



இருந்த அந்தப் பெரியவரை, 



அவரோட கட்சியைச்சேர்ந்தவங்கள் 



இவங்க மீது பொய் வழக்கு போடத் 



தெரியும், மத்தபடி பழிவாங்கரொம்ப 



நல்லாவே தெரியுமுங்க இவருக்கு. 



ஒருத்தர் தமக்கு செஞ்ச நன்றிய,



இவருக்கு நல்லது செஞ்சவரு 



இருக்காரே, அவரு, எத்தனை 



ஜென்மம் எடுத்தாலும், மறக்கவே 



மாட்டாருங்க.அவர்செஞ்ச நன்றிக்கு 



பதில் நன்றி செய்யலேன்னு 



வச்சுக்குங்க. பாருங்க இவருக்கு 



தூக்கமே வராதுங்க. அப்படி ஒரு 



நல்ல குணம்ங்க இவருக்கு. இந்தா 



இப்பக் கூடப் பாருங்களேன்.தன்னை 



ஆட்சிகட்டிலில் அமரவைத்திட 



பெரும் உதவி செஞ்ச அந்த கருப்பு 



L.G.R. என்று அழைக்கப்படும் அந்த 



நடிகர் கட்சியோட வாக்குகளைப் 



பெற்றதினால் மட்டுமே. அவருக்கு 



இவர் எப்படி எல்லாம் திரும்ப பதில் 



நன்றியும் மரியாதையையும் எப்படி 



எல்லாம் திருப்பி செஞ்சிருக்கார் 



அப்படீங்கறத நீங்களே பாருங்க.   



அந்த நடிகர் மீது ஏராளமான , 



நீதிமன்ற  அவமதிப்பு வழக்குகள், 



பொய் வழக்குகள், பழிவாங்கிடும் 



செயல் நடவடிக்கைகள், மாதம் 



முப்பது நாளும் நீதிமன்ற 



படிக்கட்டுகளை ஏற,இறங்க 



வைத்து அவரது கால்களுக்கு 



நல்லதொரு நடைப் பயிற்சி 



தந்தவரும் நமது வெற்றித் தாமரைச் 



செல்வர் மட்டுமே.அது மட்டும்அல்ல 



இவரது கட்சியைச் சேர்ந்த ஏழுஎட்டு 



மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு 



அவர்களது " தேவைகள் " என்ன 



என்பதனை அறிந்து அவர்களுக்கு 



எலும்புத் துண்டுகளை வீசி 



எறிந்ததினால் இன்றுவரை 



அதுங்களும் தங்களது வாலை 



ஆட்டிக்கொண்டு விசுவாசம் 



காட்டிடும் இவருக்கு, எப்படிப் 



பாத்தீங்களா நன்றிக்கு பதில் நன்றி 



சொல்லும் விதம். இவருக்கு இவரது 



கட்சியின் விசிவாசிகள் தந்த பட்டம்   



"புரட்சித் திலகம் " என்னும் பட்டம். 



சத்தியமா நான் சொல்றேங்க நம்ம 



வெற்றித் தாமரைச் செல்வனுக்கும் 



புரட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் 



உண்மையிலேயே கிடையவே 



கிடையாதுங்க.  நாலு வார்த்தை 



சொந்த தாய்மொழியில் மைக் 



முன்னால் சொந்தமாக பேசுற துப்பு 



கிடையாதுங்க. யாராச்சும் 



சம்பளத்துக்கு வந்தவன் எழுதித் 



தர்றதை அப்படியே வாந்தி



எடுக்கும் பழக்கம் ரொம்பவே 



இவரிடம் உண்டுங்க. இப்படிப் 



பட்டவங்க எதிர்காலத்துல நிச்சயம் 



இந்த நாட்டிலே உருவாவாங்க, 



வருவாங்க, என்பதை எப்படி 



முன்கூட்டியே தெரிந்து 



கொண்டவர்தாங்க நம்ம வான் புகழ் 



வள்ளுவப் பெருந்தகை. அதனால 



தான் இப்படி மேலே சொன்ன மாதிரி 



ஒரு குறளைப் படிச்சு வச்சிருக்காரு 



நம்ம வள்ளுவர். சரிங்க, மீண்டும் 



எனது அடுத்த குறள் விளக்கத்துலே 



உங்களை நான் சந்திக்கிறேன்.         



நன்றி !! வணக்கம் !!                                 



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment