Wednesday, December 4, 2013

எதையும் எல்லோராலும் இலேசாகச் சொல்லிவிடலாம். ஆனால் ? சொல்லியபடியே செய்து முடித்திட சொன்னவரால் முடியுமா என்ன ?--நடப்பு நாட்டு விஷயத்தை அந்தக் காலத்திலேயே வள்ளுவர் எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காரு பார்த்தீர்களா நேயர்களே !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  வினைத்திட்பம்.



குறள் எண் :-  664.





சொல்லுதல் யார்க்கும் எளிய                 

                                                        அரியவாம் 


சொல்லிய வண்ணம் செயல்... ... ... ...   




வள்ளுவர் தரும் விளக்கம்:-                 



இந்தச் செயலை இப்படி செய்யலாம். 



அப்படிச் செய்யலாம். செய்து 



முடிக்கலாம். என்றெல்லாம் 



சொல்லுவது யாருக்கும் எளிதான 



ஒன்று.  ஆனால் அப்படி 



சொல்லியபடி செய்து முடிப்பது 



என்பது அரியவாம். (மிகவும் 



அதிசயமானதாம்/அல்லது 



நிறைவேற்றிட இயலாத கஷ்டம் 



நிறைந்து என்றும் அர்த்தம் 



கொள்ளலாம்)                                               





நமது நாட்டு நடப்பு விளக்கம் :-               



(  இந்த கட்டுரையில் குறிப்பிடும் 



சம்பவங்கள், நிகழ்வுகள், கதா 



பாத்திரங்கள், இவை யாவையுமே 



கட்டுரையின் ஆசிரியர் அதிகாலை 



அவர் கண்ட கனவிலும் அதனால் 



உதித்திட்ட கற்பனையினாலும் 



எழுதப்பட்டதேயன்றி, வேறு எந்தத் 



தனிப்பட்ட நபரையோ, அல்லது 



இயக்கத்தையோ குறித்து எழுதப் 



பட்டது அல்ல.)



அது  இந்த உலகத்திலுள்ள ஐந்து 



கண்டங்களுள் மூன்று எழுத்து 



உள்ள ஒரு கண்டம். அந்தக் 



கண்டத்தில் உள்ள ஒரு நான்கு 



எழுத்துக் கொண்ட ஒரு தீபகற்ப 



நாடுதான் இந்தக் கற்பனைக்கதை 



நடைபெற்றத்தாகச் சொல்லப்படும் 


நாடு. அந்த நாட்டினில் உள்ள ஒரு 



ஐந்து எழுத்துள்ள ஒருமாநிலம்தான் 



அது.  தொன்மையான மொழிகளுள் 



ஒன்று அவர்கள் அனைவரும் 



பேசிடும் மொழியாகும். இந்தக் கதை 



நடைபெற்றதாகச் சொல்லப்படும் 



ஆண்டு இன்றிலிருந்து ஏறத்தாழ 



1,௦௦2 ஆண்டுகளுக்கு முன்புஉள்ளது. 



அதாவது 1௦11ம் ஆண்டு. அப்போது 



நடை பெற்ற ஒரு பொதுத்தேர்தலில் 



அதுவரையில் ஆட்சிசெய்து 



கொண்டு இருந்த ஒரு நல்ல/அறிவு 



உள்ள/சிந்தித்து செயல்படும்ஆற்றல் 



உள்ள/உண்மைத்  திறமையான 



தலைமைக்குச் சொந்தக்காரர் தான் 



அகவை 9௦ நெருங்கிக்கொண்டு 



இருந்தாலும் மக்கள் பணி 



ஆற்றிடவேண்டும் என்ற 



உண்மையான, தூய்மை நிறைந்த, 



பொதுமக்களுக்கு செய்திடும் 



சேவையே அந்த இறைவனுக்குச் 



செய்திடும் சேவை  என்ற 



கொள்கையைக் கொண்டு 



பணியாற்றிடும் திரு மு.அன்புநிதி 



அவர்கள் தலைமையைக் கொண்டு 



அவரை முதல்வர் நாற்காலியில் 



வைத்து அழகுபார்த்திட்ட அதே 



ஸ்ரீமான் பொது ஜனம், அவர் ஆட்சி 



செய்திட்ட கடைசி ஆண்டில் அந்த 



மாநிலத்தில் கடும் மின் 



பற்றாக்குறை ஏற்பட்டதினால் 



அங்கே மின்வெட்டு அமல் படுத்திட 



வேண்டிய கட்டாயம்  



திரு மு.அன்புநிதி அவர்களுக்கு 



ஏற்பட்டது. அவரைப்போல ஒரு 



சிறந்த நிர்வாகியை, 



திறமைசாலியை,நீங்கள் 



மாநிலத்தில் உள்ள எந்த அரசியல் 



கட்சியிலும் பார்த்திடவே முடியாது. 



அப்படி இருந்த போதிலும் இந்த 



2மணிநேர 3மணி நேர மின்வெட்டின் 



காரணமாக, மக்கள் அவர்மேல் 



வெறுப்பு அடைந்தனர். இது இவர் 



பொதுத்தேர்தலில் பெற்ற 



தோல்விக்கு 2௦ விழுக்காடுகள் 



காரணம் ஆகும். அப்படி என்றால் 



மீதி உள்ள 80 விழுக்காடுகளுக்கு 



யார் காரணம் என்றுதானே 



அன்பர்களே கேட்கின்றீர்கள் ?. அந்த 



எண்பது விழுக்காடுகளுக்கு 



உண்டான தோல்விக்கான 



காரணங்கள் 4 பகுதிகளாக 



கீழ்கண்டவாறு உங்களின்கனிவான 



கவனத்திற்கு நான் பிரித்துத் 



தருகிறேன்.                                                       



1)  நகரத்தில் உள்ள படித்த மக்களை 



ஏமாற்றும் விதமாக அவர்களுக்கு 



இலவச மிக்சி,கிரைண்டர், 



மின்விசிறி என்று நடைமுறைக்கு 



சற்றும் ஒவ்வாத வாக்குறுதிகளை   



வாரி வழங்கி அவர்களது 



பொன்னான வாக்குகளைகைப்பற்றி 



அவர்களுக்கு, வாக்களித்த 



மக்களுக்கு பட்டை நாமம் போட்டது.



(இந்தத் திட்டத்தை மக்களுக்கு 



தேர்தல் நேர வாக்குறுதிகளாக தந்து 



நாமத்தைப் போட்டவரும் அந்த 



நாமத்தைப்போடும் ஜாதிப் பிரிவைச் 



சேர்ந்தவர்தான்.)  




2) படிப்பறிவு ஏதும் இல்லாத கிராம 



மக்களை ஏமாற்றும் விதமாக 



அவர்களுக்கு இலவச ஆடுகள், 



மாடுகள் வழங்கிடுவோம் என்று 



பொய் சொல்லி மக்களை ஏமாற்றி 



அவர்களது விலைமதிப்பு இல்லாத 



வாக்கு வங்கியைக் கைப்பற்றி கபட 



நாடகம் அரங்கேற்றியது.                         




3) அந்த மாநிலத்தில் ஒரு நடிகர் 



(இவர் தன்னை அந்த மாநிலத்தில் 



மிகவும் பிரசித்தி பெற்ற அந்தக் 



காலத்து நடிகர் ஒருவர் அவர் 



பெயரைச் சுருக்கமாக  L.G.R. என்று 



அழைப்பார்கள். அவர் நல்ல சிவந்த 



மேனி. அவர் பெயரைத் தன்னுடன் 



இணைத்துக்கொண்டு தன்னை ஒரு 



கருப்பு L.G.R. என்று தன்னைத்தானே 



பிரபலப் படுத்திகொண்ட நடிகர் 



அவர் பெயர் K. அஜய்காந்த். இவரது 



வாக்குகள் தான் வெற்றி, 



தோல்வியை, நிர்ணயித்திடும் 



ஆற்றல் படைத்ததாக இருந்தது. 



அவரை நயவஞ்சகமாகத் தங்கள் 



கூட்டணியில் இடம்பெறச் செய்து 



வெற்றிபெற்ற பின்னர் அவருக்கும் 



பட்டை நாமம் போட்டு அவரை 



சந்திக்கு இழுத்து, சகட்டுமேனிக்கு 



பொய் வழக்குகளைப் போட்டு 



இழுத்து அடித்து, அவர் பெயரை 



நாறடித்து, அவர்கட்சியைச் சேர்ந்த 7 



சட்டமன்ற உறுப்பினர்களை 



விலைக்குவாங்கி பிற்காலத்தில் 



இவர் செய்த உதவிக்கு நல்லதொரு 



பிரதிப் பிரயோஜனம் செய்து அழகு 



பார்த்த ஒரு கட்சியின் தலைமை. 



அந்த நயவஞ்சகம் நிறைந்த 



கட்சியுடந்தான் தேர்தல் கூட்டு 



வைத்துக்கொண்டார் கருப்புநிற 



L.G.R. திரு K. அஜய்காந்த் அவர்கள்.



இவர் கூட்டு வைத்துகொண்ட 



கட்சித் தலைமையை அந்தக் கட்சித் 



தொண்டர்கள் எல்லோரும் அப்பா 



திரு J. ஜெயந்தன் என்றே அவரை 



அழைத்திட  வேண்டுமாம்.



"அப்பா "என்றுதான் அழைத்திட 



வேண்டுமாம். இது அவர்கள் இட்ட 



ஆணை.( ஏண்டா...உங்களுக்கு 



எல்லாம் விவஸ்த்தை என்பதே  



கிடையாதாடா ? யாருக்கு யாரடா 



அப்பா) இவரோடு எதிர்கட்சியைச் 



 சேர்ந்த தலைவர் மாண்புமிகு அப்பா 



(திருவாளர் J ஜெயந்தன் அவர்கள்) 



ஏற்படுத்திக் கொண்ட தேர்தல்கூட்டு 



உண்மைத்தலைவர் திரு அன்புநிதி 



தோற்றதற்கு மிக முக்கியமான 



காரணங்களுள் இதுவும் ஒன்று.                                              




 4) கடுமையான் மின்வெட்டு (அப்படி 



ஒன்றும் அதிக நேர மின்வெட்டு 



ஒன்றும் கிடையாதுங்க. 2 மணி 



நேரம் முதல் 3 மணி நேரம்தாங்க) 



இந்த முக்கியத்துவம் வாய்ந்த 



விஷயத்தை எதிர் கட்சித் தலைமை 



தங்களுக்குச் சாதகமாகப் பயன் 



படுத்திக்கொண்டதுதான் தலைவர் 



திரு மு. அன்புநிதி அவர்கள் 1௦11ம் 



ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற 



தேர்தலில் தோல்வியுற்றதற்கு 



மிகமிக  முக்கியமான காரணம் 



ஆகும்.திரு J. ஜெயந்தன் இந்த 



மின்வெட்டுப் பிரச்சனையில் 



மக்களை எப்படிஎல்லாம் இளிச்ச 



வாயர்களாக ஆக்கினார் என்பதை 



இப்போது நாம் பார்ப்போமா ?               



(இந்த இடம்தான் நான் உங்களுக்கு 



மேலே குறிப்பிட்ட குறளுக்கு, அதன் 



விளக்கத்திற்கு மிகப் பொருத்தமான 



செயல்பாடு இப்போது இங்கே அது 



மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது )   



தங்கள் கட்சியின் தேர்தல் 



அறிக்கையில் மாண்புமிகு அப்பா 



திரு J. ஜெயந்தன் என்ன சொல்லி 



இருந்தார் என்றால் :-                                   



பொது மக்களே !! நீங்கள் 



அனைவரும் எங்கள் கட்சியின் 



சின்னமான " பரட்டைத் தலையில் " 



வாக்களித்து எங்களுக்கு அமோக 



வெற்றி அளித்தீர்கள் என்று 



சொன்னால், உங்களது பொன்னான 



வாக்குகளைப் பெற்று நாங்கள் 



ஆட்சிக்கு வந்தால், ஆட்சிப் 



பொறுப்பேற்று 3  மாதங்களுக்கு 



உள்ளாகவே இந்த மாநிலத்தில் 



அமலில் உள்ள கடும் மின்வெட்டை 



அறவே நீக்கி, இந்த மாநிலத்தை 



மின்வெட்டே இல்லாத மாநிலமாக 




ஆக்குவதுடன், 6 மாதங்களுக்குள் 



இந்த மாநிலத்தை மின்மிகு 



மாநிலமாக மாற்றிக்காட்டுகிறேன் 



பார் என்று அப்பா J. ஜெயந்தன் தந்த 



வாக்குறுதியை அப்படியே உண்மை 



என்று நம்பி வாக்களித்திட்டஸ்ரீமான் 



பொதுஜனம் அதன் பிறகு 



அனுபவிச்ச கொடுமை, அல்ல.. 



அல்ல ... அதன் பெயர் மகா 



கொடுமை பாருங்கள் தோழர்களே !! 



வெறும் 3 மணிநேர 



மின்வெட்டின்மீது வெறுப்பு 



அடைந்து அதனால் மட்டுமே 



ஏமாந்துபோயி அப்பா திரு J. 



ஜெயந்தன் வாக்குகளை அள்ளிவீசி 



இந்தப் புண்ணியவாளரை 



அரியாசனத்திலே அமரவைத்து 



அழகு மிகுந்து  பார்த்து  சேவித்த 



மக்கள் இப்போது எத்தனைநேர மின் 



வெட்டினை சுமக்கிறார்கள் 



தெரியுமா ? நேயர்களே !! எறத்தாழ 



1௦ மணி நேரம் முதல் 14--22மணிநேர 



மின்வெட்டினை  வாக்களித்த 



மக்களுக்கு பட்டை நாமம் சாத்தி 



அழகு பார்த்து  திரு அப்பா J 



ஜெயந்தன் வாழ்ந்தார். பிறகு ஒரு 



நாள் இந்த மண்ணைவிட்டு 



மறைந்தார். 



அன்பர்களே !! இத்துடன் கதையும் 



கருத்தும் விளக்கமும் நிறைவு 



பெறுகிறது. பின் நாளில் 



மேலேசொன்ன குறள் 



விளக்கத்திற்கு இணையாக ஒரு 



சம்பவம் ஒரு மாநிலத்தில் நிகழும் 



என்பதை எவ்வளவு உண்மையாக 



திருவள்ளுவர் அப்போதே எழுதி 



உள்ளார். இதனாலேயே அவர் 



தெய்வப் புலவர் என்று அழைக்கப் 



பட்டாரோ என்னவோ எனக்குத் 



தெரிய வில்லை.

No comments:

Post a Comment