Tuesday, December 17, 2013

ஆட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளோர்கள் தமது அகங்கார உணர்வினை கைவிட்டு விட்டு திருந்திட வேண்டும் !! திருவள்ளுவர் காட்டிய அரசின் நெறிமுறைகள் !!







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு !!




            தினம் ஒரு திருக்குறள் !!                         


அதிகாரம்   :-கொடுங்கோன்மை           


குறள் எண் :- 56௦.                                             


ஆபயன் குன்றும் அறுதொழிலோர்       

                                                   நூல்மறப்பர்   


காவலன் காவான் எனின்... ... ... ... ... ... 





வள்ளுவர் விளக்கம் :-    நாட்டை 



காக்கும் பணியில் உள்ள ஓர் 



தலைவன், வகுக்கப்பட்டமுறைப்படி 



அந்த நாட்டைக் காத்திடத் 



தவறுவானேயானால், அந்த 



நாட்டினில் பசுக்கள் பால் 



தருதலாகிய பயன் என்பது 



குறைந்துவிடும். அந்தணரும் 



அறவழி உரைத்திடும் நூல்களை 



கற்று அதன்வழி நடந்திட மறப்பர். 



இது ஒரு கொடுங்கோன்மைத்தனம் 



நிறைந்திட்ட ஒரு நாட்டின் காவலன் 



(தலைவன்) அராஜக ஆட்சி 



நடத்திடும்போது அந்த நாட்டினில் 



நிகழ்ந்திடக்கூடிய சம்பவங்களே 



ஆகும்.                                                               




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-     



அன்பர்களே !!  இன்றைக்கு 



நாட்டினில் என்னென்ன 



நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது 



என்பதனை நாம் அறிவோம். காலை 



செய்தித் தாளை பிரித்துப் 



படித்திடும்போது நாட்டு நடப்பு 



செய்திகளை விடவும் அதிகமாக 



அந்த தினசரி செய்திகள் அடங்கிய 



தாளில், கொலை,கொள்ளை, 



கற்பழிப்பு என்று இந்த அக்கிரம, 



அநியாயச் செய்திகள் இல்லாத 



நாளே இல்லை எனலாம். 



எனவேநான்வேறு தனியாக 



என்னத்தைச்



சொல்லவேண்டி கிடக்குது. உங்கள் 



அனைவருக்கும் தெரியும்.    வேற 



என்னத்தை தனியாகப் போயி 



எழுதுறது. மீண்டும் நாளை நாம் 



அனைவரும் சந்திப்போம். 



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment