Thursday, December 12, 2013

அந்தணர்கள் (பிராமணர்கள்,ஐயர்,ஐயங்கார்) எப்படி இருக்க வேண்டும் ? இப்படித்தான் இருத்தல் அவசியம் !!வள்ளுவன் தந்த வடிவமைப்பு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.     



அதிகாரம்:- நீத்தார் பெருமை.                 



குறள் எண் :-  3௦.                                             



அந்தணர் என்போர் அறவோர்மற்                                              றெவ்வுயிர்க்கும் 


செந்தண்மை பூண்டொழுக லான்...... 



வள்ளுவர் தரும் விளக்கம் :-           



எல்லா உயிர்களிடத்திலும் 



செம்மையான அருளை(உயிர் வதம் 



போன்ற இழி செயல்கள் எதுவும் 



செய்திடாமல்)



மேற்கொண்டு ஒழுகுவதால் 



(நடப்பதால்) அறவோரே (இத்தகைய 



நல்ல குணம் கொண்டவரே) 



அந்தணர் எனப்படுவோர் ஆவர்.           




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



மண்டக் காய்ச்சி :-  ஏலே !! 



கண்டங்கறுப்பா! இங்கன வால!!       



கண்டங்:- என்ன வோய் !! எதுக்கு 



ஒய் என்ன கூப்பிடுதீறு ?                                           



மண்ட:- ஏலே !! என்னால 



ரொம்பத்தான் பிகு பண்ணிகிடுதீறு !! 



எங்கலே கிளம்பிட்டீய !!                             



கண்டங்:- அண்ணே !! நான் ஒன்னு 



சொல்லுதேன் !! சத்தியமா அத நீறு 



யார்ட்டேயும் சொல்லிப்புடாதீரும் !! 



மண்ட:- ஏலே !! அப்ப நீ இம்மா 



நாளும் அண்ணனைப் பத்தி 



அம்புட்டுத்தான் 



தெரிஞ்சிக்க்கிட்டியாலே !! ஏலே!! 



என்னாலே !! நாம்பாட்டுக்கு 



பேசிக்கிட்டே கிடக்கேன். 



எங்கலே!! அங்கன பிராக்கு பாக்க !!



புண்ணாக்கு!!                     



கண்டங்:- அண்ணாத்தே !! இப்பநான் 



உம்மகிட்ட சொல்லுத விசயத்தை 



ரகசியமா வச்சிக்கிடுங்க !! நம்ம 



ஈஸ்வரன் ஐயர் இருக்காரே அவரு 



என்னாண்ட 1௦௦ ரூவா கொடுத்து 



நம்ம பாய் கடையிலே 1/2 பிளேட் 



மட்டன் பிரியாணியும் ஆம்லேட்டும் 



வாங்கியாரச் சொன்னாக. அத 



வாங்கத்தான்  நான் இப்ப போயிட்டு 



இருக்கேன் அண்ணாத்தே !!                 



மண்டக்காய்ச்சி:-ஏலே நிசமாத்தான் 



சொல்லுதியாலே !! இப்பத்தான்லே 



தெரியுது ஏண்டா மட்டன் விலையும் 



முட்டை விலையும் எகிறிப்போச்சு 



அப்டீன்னு !! ஐய்யரே சாப்பிட்டா 



 ஏன்லே விலை ஏறாது ? ஐய்யருக 



காய்கறிதானேலே சாப்ப்ட்டுக்கிட்டு 



கிடந்தாக இம்புட்டு நாளா !! உம் !! 



எல்லாம் கலி காலம் !! 



கெட்டுக்கிடக்குலே !! எந்த 



உசுருக்கும் கெடுதல் பண்ணாம அத 



கொல்லாம இருக்கவகதான்லே 



 ஐயர்னு நம்ம ஐயா வள்ளுவரு 



சொல்லிருக்காரு. அத இந்த 



ஐயனுங்க மாத்திக் கெடுத்துப் 



புட்டானுகளே !! நான் இன்னாத்த 



சொல்லலே !! சரி !! சனியங்கள 



விட்டுத் தொலை!! நீ போய் ஈஸ்வர 



ஐயர் கேட்டதை வாங்கியாந்து 



அவரு தலைலே போட்டு அழு!! 



எனக்கு சோலி கிடக்கு நிறைய.நான் 



வரட்டால. நீ கோளாறா 



போய்ட்டுவால !!                                         



கண்டங்கறுப்பு :-சரி!அண்ணாத்தே !! 



நானும் போயிட்டு வாருதேன்.                     



(நமது நாட்டு நடப்பு விளக்கம் 



இத்துடன் நிறைவு பெறுகிறது)             



அன்பர்களே !! நான் ஏதோ 



பிராமணர்களுக்கு விரோதி 



போலவும் அதனால்தான் 



இதுபோன்ற கருத்துக்களைகட்டுரை 



வடிவாக அமைத்துத் தந்து கொண்டு 



இருக்கிறேன் என்று என்னை யாரும் 



தவறாக எடைபோட்டு விடக் 



கூடாது. நான் பிராமணர்களுக்கோ 



அல்லது அவர்களது 



கொள்கைகள்,கோட்பாடுகள், 



இவைகளுக்கு என்றுமே எதிரியோ 



அல்ல்லது எதிர் கருத்துக் 



கொண்டவனோ அல்ல. நான் 



எதிர்ப்பது " பிராமணீயம் " என்னும் 



அந்த  ஆதிக்க சாதிவெறிக் 



கொள்கை,கோட்பாடு,தாங்கள்தான் 



உயர்ந்த ஜாதி,மற்றெல்லோரும் 



தாழ்ந்த,பிற்படுத்தப்பட்ட,மிகவும் 



பிற்படுத்தப்பட்ட ஜாதி என்ற 



இறுமாப்பு உணர்வுகளோடு 



பூணுலை முதுகிலே இழுத்துப் 



பிடித்து இரு கைகளாலும் சொரிந்து 



கொண்டு இருக்கும் அந்த 



தீவிரவாதிகளுக்கு இன்றல்ல, 



நேற்றல்ல, எந்நாளும் 



எதிர்ப்பாளன்தான், என்ற உயரிய 



கருத்தினை, நான் இந்த இடத்தில் 



பதிவு செய்துவிட்டு, மீண்டும் நாம் 



அனைவரும் வேறு ஒரு குறள் 



விளக்கத்தில் நாளையதினம் 



உங்கள் எல்லோரையும் 



சந்திக்கிறேன். 



அதுவரை உங்களிடம் இருந்து அன்பு 



வணக்கம் கூறி விடை பெறுவது, 



உங்கள் அன்புத் தமிழ் பேசும் உடன் 



பிறப்பு மதுரை T.R. பாலு.  

No comments:

Post a Comment