Friday, December 27, 2013

குடியால் மயங்கியவனுக்கு சமூகத்தில் என்ன மரியாதை கிடைக்கும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்   :- கள்ளுண்ணாமை. 



குறள் எண் :- 927.                                             



உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர்       

                                             எஞ்ஞான்றும் 


கள்ளொற்றிக் கண்சாய் பவர்... ... ...   



விளக்கம் :-  கள்ளை (மதுவை) 



மறைந்திருந்து குடித்து அறிவு 



மயங்குபவர், உள்ளூரில் 



வாழ்கின்றவரால் உள்ளான 



செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் 



சிரிக்கப்படுவர். இது வள்ளுவர் 



நமக்கு அருளிய திருக்குறளும் 



அதன் விளக்கமும் ஆகும்.                     




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-               



மாலை மயங்குகின்ற நேரம். 



சிந்தாமணி எனும் அழகிய 



சிற்றூர்.அங்கே மாலை நேரத்தில் 



ஊரில் உள்ள மலர்ச் சோலைகள் 



நிரம்பிய பூங்காவில் அந்த ஊரின் 



பெரிய மனிதர்கள், படித்தவர்கள், 



பண்பாளர்கள்,வசதிபடைத்தவர்கள், 



வசதி ஏதும் இல்லாத வறுமைக் 



கோட்டுக்குக் கீழ் வாழ்ந்திடும் ஏழை 



எளிய மக்கள், பாட்டாளிகள், 



விவசாயிகள், தொழிலாளிகள், 



எந்தவித உடல் உழைப்பும் 



செய்யாமல் பூங்காவிற்கு வரும் 



பெண்களை (வயது வித்தியாசம் 



எதுவும் இல்லாமல்) நோட்டம்விடும் 



சோம்பேறிகள், எவன் அசந்து 



இருக்கிறான், அவனது 



கைப்பொருளை அபகரிக்கும் 



நோக்கத்துடன் அங்கே 



குழுமியிருக்கும் திருடர்கள், 



தாய்மார்கள், தந்தைமார்கள், பருவ 



வயதைக் கடந்து பார்வையினாலே 



தூண்டில் போட்டு பட்டினும் 



மென்மையான இளம் பெண்களை 



கவர்ந்திடும் எண்ணத்துடன் கூடி 



இருக்கும் இளம் வாலிபர்கள், 



சின்னஞ்சிரார்கள், என அந்த 



கிராமத்தில் உள்ள அத்தனை பிரிவு 



மக்களும் அங்கே கூட்டம்கூட்டமாக 



வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர். 





அப்போது அந்த ஊர் பஞ்சாயத்து 



தலைவர் கங்குசாமியும்,அவருக்குத் 



தாளம் தப்பாமல் போடும் தங்கச் 



சாமியும் அந்தப் பூங்காவிற்குள் 



நுழைந்தனர்.  பெரிய மனிதர்கள், 



படித்தவர்கள்,பண்பாளர்கள் 



அமர்ந்திருக்கும் மேடையைக் 



கடந்து இவர்கள் இருவரும் 



(கங்குசாமியும் தங்கச் சாமியும்) 



சென்ற பிறகு அந்தக் கூட்டத்தில் 



உள்ள இருவர் பேசிடும் 



உரையாடலை இப்போது 



பார்ப்போமா நேயர்களே !!                   




இடியாப்பம்:-  அடேய் !! ஊத்தாப்பம் !! 



உனைய எங்கெல்லாம்ல தேடுறது. 



எங்கல தொலஞ்சு போன !!                 



ஊத்தப்பம்:- எல !! இடியாப்பம் !! 



நானும் உனக்கு பலவாட்டி 



சொல்ட்டேன். இந்தமாரி பத்துபேர் 



முன்னாலே என்ய பேருசொல்லிக் 



கூப்பிடாதலேன்னு ? ஏலே? 



உனக்கு அறிவே கிடையாதாலே ? 



நான் செஞ்ச கருமம்? 



அம்புட்டும்!!இன்னொருவாட்டி 



கூப்புடு !! பிறவு பாத்துக்கிடுதேன் !!



உன்னய.ஆமா!!                                           



இடியா:-   ஏல !! என்னலே !! 



ரொம்பத்தான் கோவிக்கே!! சரி 



உனக்கு புது விஷயம் தெரியுமாலே !!



ஊத்தா:-  அப்டி என்னாலே புது 



விஷயம் !! சொல்லுல !!                           



இடியா:-  நம்ம தலைவர் கங்குச்சாமி 



அவரோட கடைசி மவன் 



சாம்பிராணி இருக்கானே !! அவன் 



நேத்து என்னா சென்ஜான்னு 



தெரியுமால உனக்கு ?                             



ஊத்தா:-  என்னால செஞ்சான் ? அட 



சட்டுபுட்டுன்னு சொல்லுல !!                 



இடியா:- புல்லா ஊத்திட்டு வீதிலே 



மல்லாந்து கிடக்காம் பாத்துக்கல !! 



ஊத்தா:-  ஏல !! வீதில மல்லாந்து 



கிடக்குற அளவுக்குன்னா..? மவன் 



எம்புட்டுல குடிச்சிருப்பான்?                   



இடியா:- நான் கேட்டுப்புட்டேன்ல 



அவன் கைத்தடி கைலாசம் பயகிட்ட. 



அவன் சொன்னான் ஒரு ஆப்பும் ஓரு 



குவாட்டரும்மொத்தம்முக்காலுக்கு 



மேலேன்னா, ஏல இது மனுஷன் 



குடிக்கிறகுடியால?குடலுஎன்னாவும்                                   


ஊத்தா:-  பாவம்ல நம்ம தல 



கங்குசாமி. புள்ள இல்ல புள்ள 



இல்லன்னு இவன  தவங்கிடந்து 



பெத்தாருல்ல,  அதான் மவன் 



தவங்கிடக்கிற முனிவர் மாதிரி 



இப்படி ஒரேடியா ஊத்திகிட்டே 



தவங்கிடக்கான் போலுக்கு !! ஏல 



ஊரே சிரிப்பா சிரிச்சு கிடக்குலே 



நம்ம சாம்பிராணி பயல பாத்து.           



(இவர்கள் இருவர் மட்டுமல்ல 



அன்பர்களே !! அந்த பூங்காவில் 



உள்ள அனைவரும் சிரிப்பாய்சிரித்து 



பேசுகின்றனர் இந்தக் குடிகாரனை 



நினைத்து. இந்த அவமானம் 



எதனால் வந்தது ? எல்லாம் இந்த 



மதுவினால் தானே ? தேவையாஐயா 



இந்தப் பழக்கம் ? விட்டுடுங்க!! தயவு 



செஞ்சு விட்டுடுங்க !! உங்கள்ல 



யாராச்சும் இந்த குடிப்பழக்கத்தை 



வச்சுருந்தீங்கன்னா !! ஆமா 



அம்புட்டுத்தான்நான்சொல்லுவேன்!!



அப்புறம்...உங்க இஷ்டம்..



(நமது நாட்டு நடப்பு விளக்கம் 



இத்துடன் முடிவடைகிறது 



அன்பர்களே )                                                  



நன்றி !! வணக்கம் !!                                 



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment