Friday, January 31, 2014

பிரிவதை எண்ணிக் கண்கள் கலங்கும் காதலி---திருவள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்  :- புலவி நுணுக்கம்.               



குறள் எண் :- 1325.                                           



இம்மைப் பிறப்பில் பிரியலாம்               

                                                    என்றேனால் 


கண்ணிறை நீர்கொண் டனன்... .. ... ... 



விளக்கம் :-  இந்தப் பிறவியில் நாம் 



பிரியமாட்டோம் என்று என் 



காதலியிடம் சொன்னேன். அவள் 



கன்னங்களில் அப்போதும் கண்ணீர் 



வழிந்துகொண்டு இருந்தது.ஏன் ? 



அப்படி எனில் இனிவரும் பிறவியில் 



நாம் பிரிந்திடுவோமா ? என்றுஅவள் 



எண்ணியதால்.  இஃது வள்ளுவர் 



நமக்கு அருளிய குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                               




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



ரங்கன் நமது கதையின் நாயகன். 



அவனது அன்புக் காதலியின் பெயர் 



பத்மாவதி.  இவர்கள் இருவரும் 



உயிருக்கு உயிராக காதலித்து 



திருமணத்திற்காக காத்திருப்போர் 



பட்டியலில் உள்ளார்கள். அப்படி 



இருக்கும்போது ரங்கன் தனது 



தொழில் விஷயமாக தாய்லாந்து 



நாட்டிற்கு மாற்றல் ஆகிச் 



செல்கிறான். திரும்பிவர சுமார் 



மூன்று ஆண்டுகள் ஆகிவிடுமாம். 



இவன் இந்த விஷயத்தை 



தனது காதலியிடம் சொல்கிறான். 



இதைக் கேள்வியுற்ற அவளது 



செவிகள் இந்தச்செய்தியை அவளது 



மூளைக்கு அனுப்பி அது அவளது 



கண்களுக்கு அச்செய்தியை அனுப்பி 



வைக்கிறது. உடனே 



எங்கிருந்துதான் கங்கையில் 



இருந்து வெள்ளம் வருமோ 



தெரியாது அதுபோலவே 



கன்னியில் கண்களில் இருந்து 



கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 



காதலியின் கன்னங்களில் வழிந்து 



ஓடிடும் கண்ணீரை தனது கை 



விரல்களால் துடைத்தபடியே 



காதலன் ரங்கன் கேட்கிறான். ஏன் 



பத்மா ? நான் அப்படியே போய் 



விடுவேனோ என்று எண்ணியா நீ 



கண்ணீரை வடிக்கிறாய் ? ரங்கன் 



கேட்ட கேள்விக்கு காதலி பத்மா 



சொன்ன பதில் இதுதான்:-  இல்லை 



அத்தான் (ஏன் இவனுக்கு அத்தான் 



என்று பெயர் வந்தது என்றால் 



கல்யாணத்திற்கு பிறகு 



குடும்பத்திற்கு எப்போதெல்லாம் 



பண நெருக்கடி வருகின்றதோ 



அப்போதெல்லாம் மனைவியின் 



அம்மா வீட்டில் போட்ட ஒவ்வொரு 



நகைகளையும் அவ்வப்போது அத்து 



அத்து மார்வாடி கடையினில் அடகு 



வைப்பவன் இவன் என்பதனாலோ 



இவனுக்கு " அத்தான்" என்ற பெயர் 



வழங்கலாயிற்று. ஆகையாலோ 



 (அத்துப்போடுபவன்=அத்தான்)இந்த 



பெயர் வந்ததோ தெரியவில்லை.) 



எனக்கு அப்படி ஒரு எண்ணம் 



நெஞ்சினில் இல்லை. நீங்கள் 



போவதோ தாய்லாந்து நாட்டிற்கு. 



அங்கே காய்களை விடவும் மிகவும் 



மலிவாக கன்னிகளே 



கிடைக்குமாம். 



என் தோழியர்கள் சொல்லி நான் 



கேள்விப்பட்டு இருக்கிறேன். 



ஒருவேளை தாங்கள் மனம்தடுமாறி 



வேறு யார் மீதும் உங்கள் காதல் 



இடம் பெயர்ந்து விடுமோ என்று 



எண்ணிய அச்சத்தினால் ஏற்பட்ட 



மிச்சம் இங்கே கன்னங்களில் 



கண்ணீராக வழிந்து ஓடிக்கொண்டு 



உள்ளது என்று சொன்னாளாம்.  



உடனே காதலன்:-அடி போடி மண்டு. 



என் உள்ளம் என்னும் அறைதனில் 



இருப்பது உனையன்றி வேறுஎவரும் 



இல்லை. உன் ஒருத்தியைத் தவிர 



என் இதயக் கதவுகள் வேறு எந்த 



ரம்பா,ஊர்வசி, மேனகை, இம்மூவர் 



அழகும் சேர்ந்து ஒருத்தி வந்தாலும் 



திறக்காது. இதை நீ நம்பு. இது உன் 



இதயக் காதலன் விடும் அம்பு. 



இதுதான் சுத்தத் தமிழ்ப் பண்பு 



என்று பகர்ந்தானாம் ரங்கன். உடனே 



காதலி நெஞ்சம் பூரிப்படைந்து 



காதலனை இறுகக் கட்டித் தழுவிக் 



கொண்டனளாம். இது எனது 



கற்பனை வானில் நான் சிறகடித்து 



பறந்துகொண்டு இருந்தபோது 



உதயமான சிறுகதை. மீண்டும் 



நாளை நாம் சந்திப்போமா ?                   



நன்றி !! வணக்கம் !!                                   




அன்புடன் மதுரை T.R.பாலு.

Sunday, January 26, 2014

நெருப்பிற்கு நடுவினிலேகூட தூங்கிடமுடியும் !! ஆனால் வறுமையோடு தூங்கிட முடியுமா ? மனிதனால் ?






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்  :-  நல்குரவு.                               



குறள் எண்:- 1௦49.                                           



நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்             

                                                       நிரப்பினுள் 


யாதொன்றும் கண்பாடு அரிது... ... ... ...




விளக்கம் :-  ஒருவன் நெருப்பிற்கு 



நடுவினில் இருந்துகூட தூங்கிட 



இயலும். ஆனால் வறுமை 



நிலையில் எவ்வகையாலும் 



கண்மூடித் தூங்கிடவே முடியாது. 



அது அரிது. இது திருவள்ளுவர் 



நமக்கு அருளிய குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                                   



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-      



இந்த வறுமை நிலையைப் பற்றி 



விளக்கி நாட்டு நடப்பு விளக்கம் 



எழுதிடத் தேவை இல்லை என்றே 



நான் கருதுகின்றேன். ஏன் என்றால் 



இந்த வறுமை நிலையினில்தான் 



நமது நாட்டு மக்கள் 1௦௦க்கு 9௦ 



விழுக்காடுகளுக்கு மேல் தினமும் 



அனுபவித்துத்தான் வருகிறார்கள். 



எனவே தனியாக எழுதிடத் தேவை 



இல்லை என்பதே எனது கருத்து.

Thursday, January 23, 2014

அன்புக் காதலியின் பெருமைதனை உலகுக்கு உணர்த்துவது எப்படி ?இதோ வழிகாட்டிட வான்புகழ் வள்ளுவர் இருக்கும்போது ஜெகத்தினில் நமக்கு இனி பயமேது ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்:-நலம் புனைந்துரைத்தல். 



குறள் எண்:- 1111.                                           



நன்னீரை  வாழி அனிச்சமே                     

                                                      நின்னினும் 


மென்னீரள் யாம்வீழ் பவள்... ... ... ... ... 



விளக்கம்:- அனிச்சப்பூவே !! நல்ல 



மென்மைத்தன்மையைப் பெற்று 



இருக்கிறாய்.  யாம் விரும்பும் காதலி 



உன்னைவிடவும் மெல்லிய தன்மை 



உடையவள். இது வான்புகழ் 



வள்ளுவர் தரும் குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                                     




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



நெருக்கடி மிகுந்த சென்னை நகரின் 



குறுகல் நிறைந்த சந்து ஒன்றின் 



எட்டாவது வீட்டின் மூன்றாவது 



மாடியில் (மொட்டை  மாடி) 



வரிசையாகப் படுத்து உறங்கிக் 



கொண்டு இருக்கும் 5 நண்பர்களின் 



ஒட்டு மொத்தக் கூட்டணிஇதுதான்:- 



ராமு, கோபு,கண்ணன், ரங்கன், 



மற்றும் பாலன் ஆகியோர். இதில் 



கண்ணன் தனது வீட்டின் மொட்டை 



மாடியைத்தான் நண்பர்களுக்கு மிக 



சொற்பமான வாடகைக்கு 



தந்திருந்தான். கண்ணனின் தங்கை 



பெயர் கல்யாணி. பார்ப்பதற்கு 



ரதிதேவியின் தங்கையோ, 



ரவிவர்மா வரைந்த ஓவியமோ 



என்று பார்ப்போர் வியக்கும் 



வண்ணம் அழகு என்றால் அழகு 



அப்படி ஒரு அழகு. இவளை பாலன் 



தனதுமனதாரக் காதலித்தான். இதை 



ஓரளவிற்கு கல்யாணியும் அறிந்து 



இருந்தாள். ஒரு நாள் என்றும் 



வழக்கத்தில் இல்லாமல் பாலன் 



மதியம் 2.45 க்கு எல்லாம் வேலை 



முடித்துவிட்டு வீட்டிற்கு 



வந்துவிட்டான்.  கல்யாணி காயப் 



போட்டு இருந்த துணிமணிகளை 



எடுத்து மடித்து வைத்துக்கொண்டு 



இருந்தாள். பாலன் தனது பின்பக்கம் 



வந்து நிற்பதை அவள் 



அறியவில்லை. எல்லாத் 



துணிகளையும் மடித்து 



முடித்தவுடன் படக் என்று 



திரும்பினாள் கல்யாணி.நங் என்று 



பாலனின் நெற்றியோடு தனது 



நெற்றியை மோதியதால் அவள் 



நெற்றி வீங்கிவிட்டதோடு அவள் 



நல்ல வெள்ளை நிறம் அல்லவா 



அப்படியே அந்த நெற்றிப் பகுதி 



சிவந்து விட்டது. அவளது கொடி 



இடையில் தனது இரு கரங்களையும் 



படற விட்ட பாலன், அவளை இறுக 



அணைத்தான். அவளோ 



சிணுங்கினாள். ஏங்க..யாராவது... 



பாத்துடப்போறாங்க...கொஞ்சம் 



கையை எடுக்கிறீங்களா என்று 



சொல்லியபடியே சிணுங்கினாள் 



அந்த சிருங்காரி. நாணத்தால் 



அவளது கன்னங்களும் சிவந்தன. 



(இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் 



அன்பர்களே இதுபோன்ற உவமைக் 



கதைகளில்தான் இப்போது எல்லாம் 



உங்களால் பார்த்து படித்து 



உணர்ந்திட முடியும், கற்பனைக்கண் 



ஓட்டத்தில். நிஜத்தில், அதற்கு 



வாய்ப்பே என்றும் இல்லை. ஏன் 



என்றால் இந்தக் காலப் பெண்கள் 



யாருக்கு முதலில் கொடி இடை 



இருக்கிறது? நாணம் எவளுக்கு முக 



பாவனையில் வருகின்றது?)உடனே 



பாலன் கல்யாணியிடம் 



சொல்கிறான்:-   கண்ணே!!                       



கல்யாணி:- அன்பே !!                                 



பாலன்:- உன்னைப்போல ஒரு 



பெண்ணை இவ்வுலகில் கண்ணால் 



கண்டதில்லை. உன் இளமை, 



பேரழகு இதுபோல் வேறு எங்கும் 



நான் பார்த்ததில்லை.                             



கல்யாணி:- அதுதான் நான் 



இருக்கேனே. அப்புறம் வேறு யாரை 



நீங்க பார்க்கணும். நான் என்ன 



அவ்வளவா மென்மையாகவா , 



வெண்மையாகவா  இருக்கேன்?         



(பொதுவாக இந்தப் பெண்களிடம் 



உள்ள குணமே என்னவென்றால் 



அடுத்தவங்க தங்களைப்பார்த்து 



பாராட்டனும், அந்த பாராட்டை 



தங்களது காதால் கேட்கணும்)         



பாலன்:- ஆமா கல்யாணி. நம்ம 



வான்புகழ் வள்ளுவர் உன்னைய 



மாதிரி ஒரு பொண்ணை மனதில் 



கற்பனைபண்ணித்தான் இந்தக் 



கட்டுரையில் உள்ள 



திருக்குறளையே எழுதியிருக்கார் 



என்றால் பாத்துக்கோயேன்.               



 கல்யாணி:- சரி சரி அம்மா 



தேடுவாங்க. நான் வாரேன். என்று 



சொல்லியபடியே தனது இடையைச் 



சுற்றியிருந்த பாலனின் கரங்களில் 



இருந்து தன்னை விடுவித்துக்



கொண்டு காதலி கிளம்பிவிட்டாள். 



காதலனின் " உள்ளம் "   கண்ணீர் 



வடித்திட.   



****************************************               

நன்றி !! வணக்கம் !!                                 


அன்புடன். மதுரை T.R.பாலு.

Monday, January 20, 2014

துன்பம் வந்தால் கலங்கிட வேண்டாம் !! சிரியுங்கள்!! அதுதான் சிறந்த ஆயுதம் !! வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.



குறள் எண் :- 631.                                             



அதிகாரம்  :-  இடுக்கண் அழியாமை. 




இடுக்கண் வருங்கால் நகுக அதனை 



அடுத்தூர்வது அஃதொப்பது இல்... ... ...

 


விளக்கம்:-                                                     



துன்பம் வரும்போது அதற்காகக் 



கலங்காமல் நகுதல் (சிரித்திட) 



வேண்டும். அந்தத் துன்பத்தை 



நெருங்கி எதிர்த்து வெல்லக்கூடிய 



ஆயுதம் அதைப்போன்றது வேறு 



எதுவும் இல்லை. இது வள்ளுவர் 



தரும் குறளும் அதன் விளக்கமும் 



ஆகும்.                                                                 




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



அது 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் 



தேதி. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் 



பாராளுமன்றத் தேர்தலுக்கும் 



சேர்த்து இரண்டு கட்டங்களாகத் 



தேர்தல் நடைபெற்றது. (மே மாதம் 



2௦ம் தேதி முதல்கட்டமும் அதே மே 



மாதம் 23ம் தேதி இரண்டாம் 



கட்டமுமாக )  இரண்டாவது கட்டத் 



தேர்தல் பிரச்சாரத்திற்காக மறைந்த 



பாரதப் பிரதமர் அன்னை 



இந்திராகாந்தியின் இளைய மகன் 



ராஜீவ்காந்தி பல்லாயிரம்கோடிகள் 



தன்னுடன் எடுத்துவருகிறார் 



தமிழகத் தேர்தல் பிரச்சாரத்திற்கு., 



சென்னையை அடுத்துள்ள இடமாம் 



ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்திற்கு. 



இங்கே வைத்து இவருடைய 



கதையை முடிக்கப்போகின்றார்கள் 



என்கின்ற தகவல் முன்கூட்டியே 



தெரிந்துகொண்டவர்கள் தமிழக 



அரசியல் வானில் வலம் வரும் 



நால்வர்.  அவர்கள் யார் ? யார் ?அந்த 



நால்வரில் மூன்று பேர் ஆண்கள். 



இவர்களுள் இரண்டு பேர்கள் அந்தக் 



காங்கிரஸ் கட்சியின் தலைமைப் 



பொறுப்பில் இருப்பவர்கள். ஒருவர் 



பெயரில் கருமை நிறத்தைக் 



கொண்ட மூத்தவர். இன்னொருவர் 



இவரும் நிறம் கருப்பு. பெயரோ 



வாழைஇலையின் பெயரில் பாதியும் 



பாடிவரும் குயிலில் பெயர்தனில் 



பாதிப்பெயரும்  உடையவர்கள் 



ஆவார்கள்.



மீதி உள்ள ஒருவர் பேயின் உருவில் 



உள்ள ஒரு ஆண் இனத்திற்கு 



மாற்றானவர். அந்த பிரகஸ்பதியை 



பெண் என்று அழைப்பதற்கு என 



பேனா முனைகூட எழுதிட 



மறுக்கின்றது. அவருக்கு இந்த 



ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட 



தினத்திற்கு முந்தியநாள் இரவு 



தர்மபுரியில் தேர்தல் 



பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த அவர் 



மறுநாள் ஸ்ரீபெரும்புதூரில் 



நடைபெற உள்ள இந்த தேர்தல் 



நிதியளிப்புக் கூட்டத்தில் 



ராஜீவ்காந்தியுடன் கலந்துகொண்டு 



அந்த மேடையில் உரைநிகழ்த்தும் 



ஏற்பாடு  இருந்தது. ஆனால் இந்த 



ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கதையை 



முடிக்க இருக்கும் தகவல் இவருக்கு 



முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு 



விட்ட காரணத்தினால், அந்தக் 



கூட்டத்திற்கு செல்லாமல் இவர் 



தர்மபுரியிலேயே தங்கிவிட்ட கதை 



நாடறியும்.நல்லவர்கள்அறிவார்கள்.



ராஜீவ் தன்னுடன் கொண்டுவந்தபல 



ஆயிரம் கோடிகள் பணத்தைத் 



தின்று ஏப்பம் விட்டவர்கள் யார் 



என்பதை இந்த நாடு அறியும். அந்த 



நல்லவர்கள் வாழ்க.  



எந்த ஒரு விசைக்கும் அதே அளவு 



சக்தி உள்ள எதிர் விசை உண்டு. 



இதுதான் நியூட்டன் விதியாகும். 



கிட்டத்தட்ட ராஜீவ்காந்தியின் 



கதையையும் நாம் இதற்கு 



ஒப்பாகவே சொல்லிடலாம். எப்படி 



என்றால் இவரது தாயார் அன்னை 



இந்திராகாந்தி வன்முறை 



வெறித்தாக்குதலுக்கு ஆளாகி 



மரணத்தைத் தழுவினார். அப்போது 



விமான ஓட்டியாகப் பணி புரிந்த 



இவர் விபத்து போலவே இந்த 



நாட்டின் பிரதம மந்திரியாக 



ஆக்கப்பட்டார். நியுட்டனின் 



தத்துவம் இங்கே விளையாடுது 



அன்பர்களே. தாயார் 



வன்முறைவெறித்தாக்குதலுக்கு 



ஆளானதினால் பிரதமர் பதவியின் 



மீது ஒட்டிக்கொண்ட இவரும் அதே 



வன்முறைவெறிக்கு ஆளாகி 



மரணத்தைத் தழுவினார் என்பது 



இந்தியத் திருநாட்டின் வரலாறு. 



இந்தத் தேர்தலில் ராஜீவ்காந்தியின் 



மரணத்தால் அனுதாப அலையைத் 



தங்கள் வசம் தக்கவைத்துக் 



கொண்டதினால் MGR கட்சி அமோக 



வெற்றி பெற்று ஆட்சியைப் 



பிடித்தது. அப்போதும் கலைஞர் 



இந்தத் துன்பத்தை தனது 



இளநகையால் (புன்னகையால்) 



வென்றார். 1991-1996 ஐந்து 



ஆண்டுகளும் தலைவர் கலைஞர் 



அவர்கள் புன்னகையினால் அந்த 



துன்பத்தை வென்றார்.1996 பொதுத் 



தேர்தலில் வெற்றியும் பெற்றார். 



ஆட்சியைப் பிடித்தார். 



 எந்தவிதமான பழிவாங்கும் 



நடவடிக்கையையும் இவர் 



மேற்கொள்ளவில்லை. தமிழகம் 



சுகமானதொரு ஐந்துஆண்டுகால 



ஆட்சியை கடந்தது.மீண்டும் 2௦௦1 



பொதுத் தேர்தல் வந்தது. கலைஞர் 



தோல்வியைத் தழுவினார். 



கலங்கிட வில்லை. புன்னகை 



புரிந்தார். இவரைத் தழுவிட வந்த 



துன்பம்தான்  உடைந்து சிதறித் தூள் 



தூள் ஆனது. 2௦௦1-2௦௦6 ஐந்து ஆண்டு 



காலம் முடிவுற்றது. 2௦௦6ம் ஆண்டு 



நடைபெற்ற பொதுத் தேர்தலில் 



மீண்டும் கலைஞர் எழுச்சியுடன் 



வெற்றி பெற்றார். சிறந்த முறையில் 



ஆட்சி செம்மையாகவும் சீராகவும் 



நடந்தேறியது. 2௦11ம் ஆண்டுபொதுத் 



தேர்தல் வந்தது. மீண்டும் கலைஞர் 



தோல்வி பெற்றார். இப்போதும் 



தலைவர் இந்தத் துன்பத்தைக்கண்டு 



கலங்கிடவே இல்லை. சிரித்தார். 



புனகைத்தார். துன்பம்தான் துன்பம் 



அடைந்தது. மீண்டும் 2௦16 ஓஅல்லது 



அதற்கு முன்பாகவோ தமிழ்நாடு 



சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் 



அப்ப்போதும் தலைவர் இதே 



புன்னகை தவழ்ந்திடும் 



முகப்பொலிவுடன் முதல்வராக 



ஆவார் இது காலத்தின் கட்டாயம். 



தமிழ் அன்னையின் விருப்பம் 



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



அத்தனை தமிழர்களின் எண்ணமும் 



அஃதே. மீண்டும் எமது அடுத்த குறள் 



விளக்கத்தில் நாம் அனைவரும் 



சந்தித்து மகிழ்வோம்.                           



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன். மதுரை T.R. பாலு.