Sunday, May 25, 2014

நல்ல பண்பு இல்லாத மனைவியை உடைய கணவனின் நிலைமை எப்படி இருக்கும் ?--திருவள்ளுவர் தரும் உண்மை நிலைமை !!








தினம் ஒரு திருக்குறள் !!



அதிகாரம்  :-  வாழ்க்கைத் துணைநலம்.


குறள் எண் :-  59.



புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை 

                                                                    இகழ்வார்முன் 

ஏறுபோல் பீடு நடை ... ... ... ... ... ...



விளக்கம்  :-   புகழைக் காக்க விரும்பும் 


(கற்புநெறி காத்து நடந்து ஒருவனுக்கு ஒருத்தி 


என்னும் நிலையை ஏற்று செயல்படநினைத்தல்) 


மனைவி இல்லாத கணவருக்கு, தன்னை 


இகழ்ந்து பேசிடும் பகைவர்கள் முன் 


காளைபோல நடக்கும் பெருமித நடை என்பது 


இல்லை.இது திருவள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற காலத்தால் அழியாத குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


வெள்ளையம்மாள் :-  ஏண்டி !! செல்லத்தாயி.


ஆத்துக்கு  ஒண்ணு மண்ணாத்தானே வந்தோம். 


ஒண்ணா சேந்தேபோவோம். 


ஆமா !! உனக்கு சேதி தெரியுமா செல்லத்தாயி ?


செல்லத்தாயி :- என்ன வெள்ளையம்மாக்கா ? 


நீ சொன்னாத்தானே தெரியும். விவரத்தைச் 


சொல்லுக்கா !!


வெள்ளை:-  நம்ம மங்களம் இருக்காளே 


மங்களம், அதாண்டி அஹ்ரஹாரத்துக்கு   புதுசா 


வாக்கப்பட்டு வந்திருக்காளே, அதாண்டி நம்ம 


கோயில் மணி அய்யரோடமகன்புருஷோத்தமன் 


பொண்டாட்டி அவளைப்பத்தி கிசுகிசு தெரியுமா ? 


உனக்கு எங்கடிதெரியப்போவுது. நீதான் வீட்டை 


விட்டு வெளிய வர்றதே இல்லையே. 


அடியேய் !! அவ வேலை பாக்குற ஆபீசுலே 


மானேசர் மகாதேவன் அவளை..அவளை...


செல்லத்தாயி:- அட.. வெக்கத்தை விட்டு 


வெளிப்படையா சொல்லு வெள்ளையம்மாக்கா.


வெள்ளை :- அட.. இவ ஒருத்தி. எனக்கு ஏண்டி 


வெக்கம். வேலையை பண்ணுறவளே நல்ல 


சிலைமாதிரி வெளியே வலம்வர்றா.அவவேலை 


பாக்குற கம்பெனி மானேசர் மகாதேவன் 


மங்களத்தை "வச்சிருக்கானாம்டி ".ஹி..ஹி..ஹி..



செல்லத்தாயி:- வச்சிருக்கானா !! அப்படீன்னா ?


வெள்ளை :- அட போடி கூறுகெட்டகுப்பாயி.அந்த 


மகாதேவன் மங்களத்தை சின்ன வீடாகவே 


வச்சிருக்காண்டி.


செல்லத்தாயி:- இது என்னக்கா கொடுமை.


வெள்ளை :- அடியேய். கொடுமையே 


இனிமேத்தான்டி இருக்கு. மங்களம் 


மகாதேவனை மட்டும் இல்லடி ஆபீசுலே பியூன் 


பரமசிவசித்துலே இருந்து டெஸ்பாச் 


கிளார்க் டேனியல்ல ஆரம்பிச்சு காஷியர் 


கனகசுப்பு வரைக்கும் எல்லோரோடயும் 


அவளுக்குத் கள்ளத்தொடர்பு இருக்காம்டி. 


ஒவ்வொருத்தரோட அவ இருக்கா பாரு 


மங்களம்,வாராவாரம்சனிக்கிழமைஇங்கேருந்து 


மகாபலிபுரம் போயி நல்லா குடிச்சு கும்மாளம் 


போட்டு முடிச்சுட்டு ஞாற்றுக்கிழமை 


ராவுக்குத்தான் வீட்டுக்குத் திரும்புறாளாம்னா 


பாத்துக்க.  இந்த விஷயம் கேள்விப்பட்டு 


அவ புருசன் புருஷோத்தமன் முந்தா நேத்து 


விசத்தைக் குடிச்சு ஆஸ்பத்ரியிலே சேத்து 


நேத்துத்தான் வீட்டுக்குக் கூட்டியாந்துருக்காங்க. 


ஆனா மங்களம்  இத்த பத்தி எல்லாம்கவலையே 


படலையாம். சிவத்த, அழகான 


பொண்டாட்டிதான் வேணும்னு வானத்துக்கும் 


பூமிக்கும் குதிச்சானே புருஷோத்தமன், அவனை 


ஆண்டவன் நல்லா பழி வாங்கிட்டார்டி. 


செல்லத்தாயி:- யக்கா அவன்..அவன்தான். 


புருஷோத்தமன் இங்க வரான்க்கா.


வெள்ளை :-  வரட்டும் உம்.. தொட்டுத்தாலி 


கட்டுன பொண்டாட்டியை உருப்படியா 


கட்டுக்கோப்பா வச்சுக் காப்பாத்த முடியாத 


பொண்டுகனுக்கு எல்லாம் எதுக்குடி 


செல்லத்தாயி வெள்ளை வேட்டியும் சட்டையும் ? 


உம்.. அம்புட்டையும் அவுத்துபோட்டுட்டு 


அம்மணக் குண்டியா புளிய மரத்துலே தொங்க 


வேண்டியதுதானே. வீதியிலே என்ன 


வெக்கங்கங்கெட்டவனுக்கு எல்லாம் 


நடை வேண்டிகிடக்கு ? 


அட..என்ன நான் சொல்றது சரிதானே 


செல்லத்தாயி !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


பார்த்தீர்களா !! புருஷோத்தமன் படும்பாடு.இவன் 


கருப்பு.இவன் எதற்கு சிவப்பான 


பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டான்?


தனக்கு இளையது தாரம் அப்படீன்னு நம்ம 


முன்னோர்கள் அர்த்தம் இல்லாமலா 


சொல்லியிருக்காங்க ? 


இளையதுன்னு சொன்னா, வயசுலே மட்டும் 


இல்ல, அழகுலே,நிறத்துலே,படிப்புலே, 


அந்தஸ்த்துலே, ஆஸ்தியிலே, இப்படி 


எல்லாத்துலேயும் ஆத்துக்காரியா வாரவஒருபடி 


கம்மியா இருந்தாத்தான் அவ பொண்டாட்டியா 


இருப்பா. இல்லாங்காட்டி கதை கந்தல்தான் 


அப்டீங்கிரதை நம்ம திருவள்ளுவர் 


இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலேயே 


எப்படி அழகாச் சொல்லியிருக்கார் பார்த்தீர்களா 


நேயர்களே. அதாலே நான்என்னசொல்றேன்னா, 


மனைவியைத் தேடுகிற இளைஞர்களே !! 


உங்களுக்கு இளையதா தேடுங்கன்னு 


கேட்டுக்கிட்டு கட்டுரையை, நமது நாட்டு நடப்பு 


விளக்கத்தை நான் இத்தோட நிறைவு 


செய்கிறேன்.



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R. பாலு.

சிறந்த மனைவி என்பவள் எப்படி இருந்திட வேண்டும் ? திருவள்ளுவர் கூறும் அறிவுரை !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  வாழ்க்கைத் துணைநலம்.

குறள் எண் :-  51


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் 

                                                                         கொண்டான் 

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை... ... ... ... ... ... ...


விளக்கம் :- 


குடும்பத்திற்கு ஏற்றபண்புடையவளாகவும் 


கணவனது வருவாய் அறிந்து வாழ்க்கை 


நடத்துபவளாகவும்இருப்பவளே சிறந்த மனைவி 


ஆவாள். இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.


நமது நட்டு நடப்பு விளக்கம் :-


போக்குவரத்து நெரிசலின்தாயாகவிளங்கிவரும் 


மாநிலத் தலைநகர் சென்னையில் வசித்துவரும் 


ஒருசிறியகுடும்பத்தைப்பற்றியசெய்தித்தொகுப்பு 


இப்போதுநீங்கள்நேரலையில்காணபோகிறீர்கள்.


திருஞானம் :- ( இவர் ஒருபட்டமேற்படிப்புமுடித்து 


சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி 


ஒன்றினில் ஆங்கிலத்துறைவிரிவுரையாளராகப் 


பணிபுரியும்நல்ல மனிதர். இவரதுமனைவிபெயர் 


வடிவுக்கரசி.  வீட்டினை நிர்வகிக்கு மனைவி. 


நல்லமாதரசி.கற்புக்கரசி.சென்னை மாநகரில் 


இதுபோல பெண், லட்சத்தில் ஒன்றுதான் 


நாம் காண இயலும்.)



திருஞானம் :-  வடிவு..வடிவு.. எங்கம்மா 


போயிட்டே ?


வடிவு:- இதோ வந்துட்டேங்க. என்னங்க ?


திரு:-  நமக்குக் கல்யாணம் நடந்து இன்றோடு 


மூன்று மாதம் முடிவடைந்துவிட்டது.  கொஞ்சம் 


தாமதமான திருமணம்தான்நம்இருவருக்கும்.


எனக்கு நாற்பது உனக்கு 36. உம்... என்னோட 


மூணு தங்கைகளையும் கரைசேர்த்ததற்குப் 


பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வேன் 


என்ற எனது வைராக்கியத்தால் வந்தது 


இந்தத் தாமதித்த திருமணம். வாங்குற சம்பளம் 


அதில் பாதிக்குமேல் தங்கைகளின் திருமணக் 


கடனுக்கும் வட்டிக்கும் கட்டவே சரியாப் 


போயிருது. மீதியை வச்சுத்தான் நாம இந்த 


சென்னையில் வாழ்ந்திட வேண்டியுள்ளது. 


இன்னைக்குதேதி21.என்னோட மோட்டார்


சைக்கிளுக்கு இன்னைக்கு சாலைவரியும் 


இன்சூரன்ஸ் பணமும் கட்டியாக வேண்டும். 


என்கிட்டே பணம் எதுவும் இல்லை. உன்ட்ட 


எதாவது பணம் நீ சேர்த்து வச்சு இருக்கியா 


வடிவு. கேக்கவே எனக்கு சங்கடமாகத்தான் 


இருக்கு. நானே உனக்கு அளந்து அளந்துதான் 


பணம் தாரேன் குடும்பச் செலவுக்கு.


அப்படி இருக்கும்போது உன்கிட்டே எப்படி பணம் 


இருக்க முடியும். பேசாம வண்டிய வித்துவிட 


வேண்டியதுதான்.


வடிவு :- ஏங்க..நீங்க இப்படி பிரிச்சுப் பேசுறீங்க.


நீங்க வேற, நான் வேறா ? என்ட்ட கேக்காமல் 


வேறு யார்கிட்டே நீங்க கேப்பீங்க. ஆமா இந்த 


ரெண்டுக்கும் சேத்து எவ்வளவு தேவைப்படும் ?


திரு:- ஒரு நாலாயிரம் ரூபாய் இருந்தா அதுவே


போதும் வடிவு. ஆமா..உன்கிட்டே ஏது அவ்வளவு 


பணம் ?.


வடிவு :- நீங்க கொடுக்கிற பணத்துலே கொஞ்சம் 


கொஞ்சமா சேத்துவச்சிருக்கேங்க. இந்தாங்க 


5,௦௦௦ ரூபாய். இப்பதைக்கு இத வச்சு செலவு 


பண்ணுங்க. வர்ற 1௦ம் தேதி சீட்டுப்பணம்எனக்கு 


1௦,௦௦௦ வரும் அத வச்சு சிக்கனமா செலவு செய்து 


நாம சந்தோஷமா குடும்பம் நடத்துவோமாங்க.


என்னங்க..நான் பாட்டுக்குப் பேசிட்டே 


இருக்கேன்.


திரு :- வடிவு. என்ன பேசச் சொல்லுறே என்னால 


என்ன பேச முடியும் ? எல்லாம் நான் செய்த பூர்வ 


புண்ணியம்தான் நீ எனக்கு இல்லத்தரசியாவந்து 


சேர்ந்தது. திருவள்ளுவர் சொன்ன மாதிரி நீ ஒரு 


சிறந்த மனைவியே.அதில் சந்தேகமே இல்லை.


முதல்லஉன்கையகொடு.அதைக்காலாநினைச்சு 


நான் கும்பிட்டுக்கிறேன்.


வடிவு : -ஏங்க.. பெரிய பெரிய வார்த்தை எல்லாம் 


பேசிகிட்டு. சீக்கிரம் ஆபீஸ் போயிட்டு வாங்க. 


நாளைசனிக்கிழமை நாம் வரதராஜப்பெருமாள் 


சந்நிதானம் போயி அவரை சேவிச்சுட்டு வந்தா 


எப்போதும் நம்ம குடும்பம் செழிப்பாகவே 


இருக்கும்.என்னங்க. நான் சொல்றது சரியா ?



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. மீண்டும் அடுத்த பதிவினில் நாம் 


சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை T.R. பாலு,

Wednesday, May 21, 2014

நாட்டின் இரக்கமற்ற அரசனின் ஆட்சியில் குடிமக்களின் நிலைமை இதுதான் !! வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.


குறள் எண் :-  557.



துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றற்றே வேந்தன் 


அளியின்மை வாழும் உயிர்க்கு... ... ... 



விளக்கம் :-   வான்மழை இல்லையெனில் 


உயிர்கள் அடையும் துன்பம் எவ்வளவோ, 


அவ்வளவு துன்பத்தைநெஞ்சினில் 


சிறிதும் இரக்கம் அற்ற அரசனது நாட்டினில் 


உள்ள மக்கள் அடைவார்கள். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :- 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


வள்ளுவப் பெருந்தகைக்கு, தெய்வப்புலவர் 


என்று ஒரு பெயர் உண்டு. 


ஏன்,எதற்காக, இந்தப்பட்டம் அவருக்கு 


வழங்கப்பட்டது என்று நான் பலமுறை 


எனக்குள்ளாகவேயோசித்துப் பார்த்தது உண்டு. 


மேற்சொன்ன குறளைப்படித்து அதன் 


அர்த்தத்தைபுரிந்துகொண்டபின்புதான் அவருக்கு 


வழங்கப்பட்ட அந்த பட்டம் உண்மையிலேயே 


ஏற்புடையது என்று நான் அறிந்து கொண்டேன். 


எப்படி என்றால், இன்றைக்கு ஈராயிரம் 


ஆண்டுகட்கு முன்பாகவே நமது வந்தாரை 


வாழவைக்கும் தாயகத்தில் இப்படி ஒரு 


அரசாங்கம் ஏற்படும், பணத்தால் அனைத்து 


சமூகத்தினரின் வாயை அடைத்துவிடமுடியும் 


என்று ஆணவமும்,திமிரும்,கொழுப்பும், 


பெரியவர்களை எதிர்த்து, உதாசீனப்படுத்தி, 


மதிக்காமல், அவர்களை நக்கலும், கிண்டலும், 


நையாண்டியும் செய்து, தன்னிடம், பணபலம்,


படைபலம், காவல்துறையின் மேலான 


ஒத்துழைப்பு, தலையாட்டி பிழைப்பு நடத்தும் 


அரசு அலுவலர்களும், ஊழியர்களும், அடிமை 


மந்திரிகளும், பணத்தை வாயில் ஓட்டினால், 


ஊமைகளாகவே மாறிவிடும் பொதுஜனம் 


என்று இராஜாங்க சேவை செய்திடும் ஒரு 


அரக்கியின் கொடையின் கீழ் ஆளப்படும் இந்த 


நாடு என்பதை முன் கூட்டியே அறிந்து 


செயல்பட்டு அதற்காக, ஒரு குறளும் 


எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளாறே, 


இந்தப்பெருமை ஒன்று போதுமே அவருக்கு 


"  தெய்வப்  புலவர் " என்னும்  பட்டம் 


கொடுத்ததற்கு.  


நன்றி !! வணக்கம் !!


அன்புடன், 


இந்த நாட்டின் பாவப்பட்ட பொதுஜனங்கள்.


Monday, May 19, 2014

காதுகளால் கேட்கும் திறனே உலகின் மிகப்பெரிய செல்வமாகும் !! வள்ளுவரின் பார்வையில் !!









தினம் ஓரு திருக்குறள் .


அதிகாரம் :-  கேள்வி.

குறள் எண் :-  911.


செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் 

                                                                                அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந்  தலை ... ... ... ...



விளக்கம் :-


செல்வங்களில்செல்வமாவது,காதால்


கேட்டறியும் கேள்விச் செல்வமே 


ஆகும்.அச்செல்வமே,எல்லாச் செல்வங்களிலும் 


முதன்மையானது. இதுதிருவள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற திருக்குறளும்அதன்விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


பூஞ்சோலை. பெயருக்கு ஏற்றபடி பூக்களும், 


பூவின் மலராத மொட்டுக்களும், நிறைந்துள்ள 


ஒரு ஊர் அது. அங்கு  உள்ள எல்லா செடி, 


கொடிகள் எல்லாமே  பூத்துக்குலுங்குகின்ற 


கிராமம் அது. அங்குள்ள கிராம நூலக மன்றம்.  


நேரம் பகல்  11 மணி.


கிராம மக்கள் அமைதியாக, நூல்கள், 


செய்தித்தாள்முதலியவற்றைப் 


படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.


குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்கும் என்று 


சொன்னால்பார்த்துக்கொள்ளுங்கள்.  அப்போது 


அங்கு வந்து சேர்ந்தனர் அந்த ஊர் பஞ்சாயத்துத் 


தலைவர் புண்ணியகோடி முதலியாரின் இரண்டு 


மகன்கள். ஒருவன் பெயர் பூங்காவனம், மற்று 


ஒருவன் பெயர் புஷ்பவனம். பள்ளிக் கடைசி 


வகுப்புவரைபடித்துஉள்ளனர்.அவர்கள்இருவரும் 


நூலகத்தினுள்நுழைகின்றனர்.அப்போது 


நூலகத்தில் வாசித்துக்கொண்டு இருந்தவர்கள் 


வாய் முணுமுணுக்கிறது. உம்..இனி..நாம படிச்சா 


மாதிரித்தான். அவர்கள் இருவருமே பிறவிச் 


செவிடர்கள்.


பூங்காவனம் :-  ஹ..ஹ..ஹா..ஹா.. (சத்தம் 


போட்டுசிரித்தபடியே)  ஏண்டா தம்பி 


புஷ்பவனம்..எல்லோர்வாயிலும் 


கொழுக்கட்டையாடா வச்சிருக்கானுவ.


கொஞ்சம் கெட்டுச் சொல்றா.                                          


புஷ்பவனம் :- என்ன அண்ணே சொன்னே சரியா 


காதுலே விழலே. கொள்ளிக்கட்டையா 


சொன்னே ?


பொதுநபர்:- உக்கும். விளங்கினமாதிரித்தான்.   


பூங்காவனம் :-  தம்பி.. என்னடா நாம்பாட்டுக்கு 


பேசிட்டே இருக்கேன் நீ ஒண்ணுமே பதில் பேச 


மாட்டேன்னுரே. என்னடா அண்ணே மேலே 


எதுனாச்சும் கோவமாடா ?சொல்றா என் 


பாசக்காரத் தம்பி.                                                                   


புஷ்பவனம் :- இல்ல அண்ணே நீ ஒரு செவிடு 


இல்ல அதான் நாம் பேசுறது எதுமே உன்காதுலே 


விழமாட்டேங்குது.                                                               


பூங்காவனம் :- பாவம்டா தம்பி உன்னையச் 


சொல்லி என்ன செய்ய. நீயோ ஒரு பிறவிச் 


செவிடு. சரி அத்த விடுறா. மணி இப்ப 11.1/2ஆச்சு. 


இன்னைக்கு ஆத்தா என்ன சாப்பாடுன்னு 


சொல்லுச்சா ?


புஷ்பவனம் :- யாரை அண்ணே கேக்குறே ? 


அத்தையைப் பத்தியா ? அவங்க 


நாளைக்குத்தானே சேலத்துலே இருந்து நம்ம 


ஊருக்கு வாராதா அப்பாட்டே போன்லே 


சொல்லுச்சு.                                                                         


பூங்காவனம் :- உன்னைய நினைச்சா எனக்கு 


ரொம்பவே கஷ்டமாத்தான் இருக்குதுடா தம்பி. நீ 


செவிடா இருக்கதாலே நான் என்ன 


சொன்னாலும் உனக்கு புரிய மாட்டேங்குதுடா 


தம்பி.                                                                                               


புஷ்பவனம் :-  புட்டு வேணுமா அண்ணே. நம்ம 


ஆத்தாட்டே சொல்லி சாயங்காலமா செய்யச் 


சொல்லி நாம சாப்புடுவோமா அண்ணே ? 


சொல்லு அண்ணே !! சாப்புடுவோமாண்ணே ?                 

(அப்போது வீட்டில் இவர்கள் இருவரும் 


இல்லாததை பார்த்துட்டு இவனுகளோட அப்பா 


புண்ணியகோடி முதலியாரும் ஆத்தா 


அமுதாவும் நூலகத்துக்கு வந்து சேர்கின்றனர். 


அங்கே புள்ளைங்க ரெண்டுபேரும் 


இருக்கிறதைப் பாத்துட்டு மன நிம்மதி  


அடைகின்றனர்.                                                                                   

புண்ணியகோடி :- ஏண்டி அமுதா. அங்கே 


பாத்தியாடி நாம பெத்துப்போட்ட முத்து 


ரத்தினங்கள் ரெண்டு பேரும் எப்படி பொறுப்பா 


இங்க படிக்க வந்துருக்கானுவ.                                         


அமுதா :-  பருப்பு வடையா ? உம.. போறப்ப நாம் 


வாங்கிக்கலாங்க.                                                               


புண்ணிய:-போலீசு எதுக்குடி நம்ம புள்ளைகளை 


புடிப்பானுங்க. பாவம்டி  அவனுக. வா அமுதா 


சீக்கிரமா அவனுகளை நாம வூட்டுக்கு கூட்டிட்டு 


போயிருவோம்.                                                                     


ஸ்ரீமான் பொதுஜனம்:- அடச்சை...குடும்பமே 


செவுட்டுக் குடும்பம்டா சாமி. இவனுக பேசுற 


பேச்சை இன்னும் கொஞ்சநேரம் நாம 


கேட்டோம்னு வச்சுக்குங்க. அப்புறம் நாமளும் 


செவிடா போயிற வேண்டியதுதான். வாங்க 


அண்ணே பரந்தாமண்ணே சீக்கிரமா இந்த 


இடத்தை வுட்டுட்டு நாம் கிளம்பிறனும். 


இல்லாங்காட்டி இந்த செவிட்டுக் குடும்பத்தைப் 


போல நாமளும் செவிடாயிருவோம் அண்ணே.  


ஆளை விடுங்கடா சாமிகளா !!


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!                                   


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. மீண்டும் அடுத்த பதிவினில் நாம் 


அனைவரும் சந்திப்போம்.                                         


 நன்றி !! வணக்கம் !!                                                         


அன்புடன் மதுரை T.R. பாலு.

Friday, May 16, 2014

பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செய்த செயல்களே காரணம் !! வள்ளுவர் கூறிய கருத்து !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  தெரிந்து தெளிதல்.


குறள் எண் :-  5௦5.



பெருமைக்க்சும் எனைச் சிறுமைக்கும் தத்தம் 

கருமமே கட்டளைக் கல்... ... ... 



விளக்கம்  :-   ஒரு மனிதனது பெருமைக்கும் 


சிறுமைக்கும் உரை கல்லாகஇருப்பதுஅவனவன் 


செய்துவந்த காரியங்களே ஆகும். இதுவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் 


திரு மு. கருணாநிதி அவர்களின் 


இன்றைய நிலைமைக்கு அவர் கடந்த 


காலங்களில் செய்த தவறான காரியங்களே 


காரணங்களே ஆகும்.  திரு மு.க.அழகிரி 


அவர்களுக்கு, அவரின் தகுதிக்கு சிறிதும் 


ஒவ்வாத பதவியான தென்மண்டல அமைப்புச் 


செயலாளர் என்ற புதிதாக பதவி ஒன்றினை 


உருவாக்கி வைத்து, அதனை அன்னாருக்குத் 


தாரை வார்த்தது. அவரைப்பற்றி வந்த அனைத்து 


குற்றச் சாட்டுக்களையும் ஒன்றினைக்கூட 


விசாரிக்காமல் புறம் தள்ளியது. தனது 


சொல்லை தளபதியார் ஏற்காமல் தானே 


செயல் பட்டது, தேவை இல்லாமல் திருமதி 


கனிமொழி அவர்களை அரசியலில் 


ஈடுபடுத்தியது, இதுபோல இன்னும் 


பலபல விஷயங்கள், எழுதிட ஏடு போதாது. 


இவைகள்தான் இன்றையதினம் தி.மு.க. 


வரலாறு காணாத தோல்வியைச் 


சந்தித்ததற்கான மூல காரணங்கள் ஆகும். 


விதை விதைத்தவன் தானே விளைந்த பயிரை 


அறுக்க வேண்டும். 


வினை விதைத்தவன் தானே வினையை 


அனுபவிக்கவேண்டும்.



கண்ணை மறைத்து என்ன விதை போட்டாலும் 


போட்ட விதை என்ன வென்று மரம் வளர்ந்து 


காட்டாதோ ?


கண்ணை மறைத்து என்ன காரியத்தைச் 


செய்தாலும் காலக்கணக்களவன் காட்டி வைக்க 


மாட்டானோ ?


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை T.R. பாலு.

Thursday, May 15, 2014

பணத்தின் பெருமையைப் பற்றி வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  பொருள் செயல்வகை.



குறள் எண் :-  751.



பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்


பொருளல்லது இல்லை பொருள்... ... ...



விளக்கம் :-    சமூகத்தில் ஒரு பொருளாக 


மதிக்கத் தகாதவரையும் ஒரு பொருளாக 


மதிக்கச் செய்யும் பொருள், இந்தபொருளைத் 


தவிர சிறந்த பொருள் இவ்வுலகத்தில் எதுவும் 


இல்லை.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


சோணைச்சாமி:-  எண்டா கருப்புச்சாமி..ஆமா 


நம்ம சிங்காரம் செட்டி இருக்கானே  அவன் 


சிங்கப்பூர் போயிருந்தானே வந்துட்டானா.


கருப்புச்சாமி :-  ஆமா.. நான் தெரியாமத்தான் 


கேக்கிறேன். செட்டியாரை நேரிலே பாக்குற 


போது, ஐயாங்குறே, முதலாளிங்குறே, இப்ப


என்னடான்னா, அவன்,இவன் அப்டீன்னு ஏக 


வசனத்துலேபேசுறே.என்னாகாலங்கத்தாலேயே 


டாஸ்மாக் போயிட்டு வந்துட்டியா அண்ணே.


சோணை:-  அட போடா முட்டாப்பயலே. எவன்


கிட்டே பணம் இருக்கு அங்கே போயி 


ஊத்துறதுக்கு. அந்த செட்டிப்பயலுக்கு 


நான் மருவதை தர்றது எல்லாம் எதுக்குன்னு 


உனக்குத் தெரியாதுலே. அதான் இப்படி பேசுறே. 


எல்லாம்பணம்டா..பணம்..அந்தப் பணம்தாண்டா 


இம்புட்டு மதிப்பும் மருவாதியும் ஒரு 



மனுசனுக்குத் தருது. தெரிஞ்சுக்கலே. 



கருப்பு:-  ஆமாஅண்ணேஇப்பதெரிஞ்சுக்கிட்டேன்.


ஒண்ணுக்கும் உதவாத பயலையும், மதித்துஇந்த 


சமுதாயம் மருவாதை தருதுன்னு சொன்னா அது


இந்த பணம் ஒண்ணுக்குத்தான் அப்படீன்னு 


இன்னைக்கு தினம் ஒரு திருக்குறள் பதிவுலே 


வள்ளுவர் சொல்லி இருக்கார்னு நம்ம மதுரை 


T.R. பாலு சார் எழுதி இருக்கிறதை படிச்சுட்டு 


வந்தேன் அண்ணே. சரி எனக்கு நேரம் ஆச்சு. 


போயிட்டு வாரேன்.



நன்றி !! வணக்கம் !!

******************************************************


அன்பர்களே !!


நமது தினம் ஒரு திருக்குறள் பதிவிலே இன்று 


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது.


மீண்டும் அடுத்த பதிவினில் சந்திப்போம்.