Sunday, November 30, 2014

காலம் அறிந்து கொக்கு போல செயல்படுங்கள் !! வள்ளுவர் காட்டிய வழி இதுவே !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  காலம் அறிதல்.


குறள்  எண் :-  490.



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 

குத்தொக்க சீர்த்த இடத்து... ... ... ... ... 



விளக்கம் :-  காலம் வாய்க்காத பொழுது 


காத்திருந்து, காலம் வருகின்றபோது தனது 


இரையினைக் கொத்தும் கொக்குபோல 


செயலாற்றுதல் நன்று. இது வள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



கல்ராயன் :- என்னங்க தம்பி காத்தவராயா 


உங்களை நம்ம தெருப்பக்கம் பாத்து ரெண்டு 


வாரம் ஆகுதே ? எங்க போயிருந்தீங்க தம்பி ?


காத்தவராயன் :- இல்ல அண்ணே. என் தம்பி 


சென்றாயனுக்கு போன வாரம் கல்யாணம் 


அதான் கல்றாயன்மலைக்குப் போயிருந்தேன்.


அங்கே உள்ள மலைக் கோவிலில்தான் எனது 


தம்பிக்கு கல்யாணம்.


கல்ராயன்:- பொண்ணுக்கு எந்த ஊரு தம்பி.


காத்த :- சேலத்துக்குப் பக்கத்தாலே ஒரு சின்ன 


கிராமம். சோத்துப்பட்டி. அங்கனதான் அந்த 


ஊரு நாட்டாமை நல்லசிவம் பிள்ளையோட 


கடைசி மகள் நந்தினிக்கும் என் தம்பி தங்க 


முத்துக்கும் கண்ணாலம். அதான் உங்களை 


நான் பாக்க முடியலே.


கல்:- ஏண்டா ? உன்னோட  கூடப்பிறந்த தம்பிக்கு 


கண்ணாலம்.எங்ககிட்டே கூட உன்னாலே 


சொல்ல முடியலே.ஏன். நாங்க வந்தா அந்தக் 


கன்னாலவீட்டு சோறு அம்புட்டையும் நாங்க 


திண்டுபுடுவோம்னு கூப்பிடலயடா தம்பி ?


காத்த:- அதில்ல அண்ணே. சுருக்கமாத்தான் 


கண்ணாலம் செஞ்சோம். அப்ப்புறம்....வேற..


என்னண்ணே விசேஷம் இந்த ரெண்டு மூணு 


வாரத்திலே நம்ம நாட்டிலே ?


கல்:- அத்த ஏண்டா தம்பி கேக்குறே ? நம்ம 


ஊரே கெட்டுட்டுக்கிடக்குடா. வீரையன் பயல 


அவன் பொண்டாட்டி, தலை தனி முண்டம் தனி 


அப்படீன்னுல்லே வெட்டிக் கொன்னுபோட்டா.


எதுக்குண்டு கேட்டீண்டா அவன் வண்ணாத்தி 


வள்ளிமயிலோட வச்சிருந்த கள்ளத்தொடர்பு 


அவன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு போச்சு.


சொல்லி, சொல்லி பாத்திருக்கா பய ஒன்னும் 


திருந்துற பாடு இல்லை. எடுத்தா கொடுவாளை.


போட்டா ஒரே போடு. அம்புட்டுத்தான் சோலி 


முடிஞ்சுபோச்சு. 


காத் :-  என்னே உங்களுக்கு சேதி தெரியுமா.


நம்ம தல கலைஞர் சும்மா கம்னு குந்திக்குனு 


இருக்காரே. ஏன் அப்டி கீறாரு ?


கல் :- அட...மடப்பய மவனே...அவரு எல்லாம் 


காரனமாத்தாண்டா தம்பி பேசாம கீறாரு. இந்த 


அம்மாளைப்  பொருத்தவரைக்கும் அதோட 


அரசியல் வாழ்க்கை, கிட்டத்தட்ட அஸ்த்தமனம் 


ஆனா மாதிரித்தானே. அதாலே எப்பவும் தேர்தல் 


வரலாம். அதுக்கு திட்டம் தீட்டிக்கினு கம்னு 


கீறாரு அப்டீன்னு நான் நினைக்கிறேன். நம்ம 


வள்ளுவரு சொன்ன மாதிரி கொக்கு எப்படி 


காத்துக்கிட்டு இருந்து பெரிய மீன்வரப்ப 


கபால்னு கவ்வுதோ அந்தமாதிரி தேர்தல்வர்றப்ப 


கப்புன்னுபோட்டி போட்டு 234 தொகுதியிலே ஒரு 


190 தொகுதிய கைப்பத்தி ஜெவிச்சுரனும் 


அப்படீன்னு கங்கணம் கட்டிக்கினு 


இருக்கார்னு நினைக்கேன். சரி. நான் வாறன்.


நேரமாச்சு.



அன்பர்களே !!



இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா. பாலு.



( மதுரை TR. பாலு.)

Friday, November 28, 2014

ஊக்கம் உள்ளவன் யாரைப்போல இருப்பான் ? இது வள்ளுவர் காட்டிய வழி!!











தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  காலம் அறிதல்.



குறள் எண் :-  486.



ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
 

தாக்கற்குப் பேருந் தகைத்து... ... ... 




விளக்கம்  :-   எதிர்த்துப் போர்புரியும்ஆட்டுக்கிடா 


பின் வாங்கிப் பிறகு தாக்குவதுபோல ஊக்கம் 


உள்ள ஒருவன் காலம் அமையும் வரையிலும் 


அமைதியாகக் காத்திருந்து, பின்னர் முழு 


பலத்தையும் கொண்டு தனது எதிரியைத் தாக்கி 


அழிப்பான்.  இது வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



நல்லசாமி :-  என்னடா !! தம்பி !!கண்ணுச்சாமி. 


நாட்டு நடப்பு,  அரசியல் நிலைமை 


என்ன சொல்லுது ?


கண்ணுச்சாமி:-  என்னத்தைச் சொல்ல. அந்த 


அம்மா அது பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் 


வரைக்கும் போயி ஜாமீன் வாங்கிக்கிட்டு வந்து 


தோட்டத்துலே ஜம்னு குந்திகிட்டு, நம்மதண்ணீர் 


செல்வத்தை முதல் அமைச்சராக ஆக்கிக்கிட்டு 


பின்னாலே இருந்துகிட்டு பினாமி ஆட்சியை 


நடந்திட்டு இருக்கு. பாவம் நம்ம தண்ணீர் 


செல்வம். பொட்டிப்பாம்பா அடங்கி இருக்காரு.


நல்ல :- அது சரி தம்பி. நம்ம பெருசு அன்புநிதி 


அவர் ஏன்னா செஞ்சுக்கினு இருக்காரு ? அத்த 


பத்தி விளக்கமா சொல்றா தம்பி. உக்கும்....


கண்ணு:- அவர் என்ன செய்வாரு பாவம். மகன் 


இளைய தளபதி ஆஸ்டினை விட்டு தமிழ்நாடு 


பூராவும் கூட்டம் நடத்திக்கினு கட்சியைக் 


காப்பாத்திக்கினு இருக்காரு.


எப்படா 2016 வரும், ஆட்சியைப் புடிச்சு 


அரியணைமேலே குந்தலாம்னு குறள் மேலே 


சொன்னதுபோல அந்த போராடும் ஆட்டுக்கிடா 


போல அமைதியா குந்திக்கினு இருக்காருப்பா.



நல்ல :- சரியாச் சொன்னடா தம்பி. நிச்சயம் அவர் 


நம்ம தலைவர் அன்புநிதி வெற்றிபெற்று இந்த 


நாட்டுக்கு அவர் மீண்டும், மீண்ட முதல்வரா 


வரோணும்னு சொல்லி அம்புட்டு ஜனங்களும் 


காத்துக்கினு கீறாங்க என்ன நான் சொல்றது ? .


கண்ணு :-  சரிங்க அண்ணே . நேரமாச்சு. எனக்கு 


அப்பாலே நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. 


நாம கொஞ்சம் விளக்கமா, விலாவரியா 



பேசுவோம் அண்ணே . 



 அட..என்ன..நான்..சொல்றது ? 



நல்ல :- OK. நாளைக்கு பார்ப்போம்தம்பி.




நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

Saturday, November 22, 2014

மது அருந்துதலைப்பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் ?






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  கள் உண்ணாமை.


குறள் எண் :-  926.


துஞ்சிவார் செத்தாரின் வேறல்லர் எங்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்... ... ...



விளக்கம்:-  உறக்கத்தில் இருக்கும் ஒருவர் 


அந்த நேரத்தில் செத்தவரே ஆவர்.அதேபோல 


கள் உண்டவனும் அந்த நேரத்தில் நஞ்சை 


உண்டவனே ஆவான்.  இது வான்புகழ்


வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற நல்லதோர் 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


சுந்தரலிங்கம்:-  ஏண்ணே, ராமலிங்க அண்ணே 


நம்ம ஆதிலிங்கம் என்ன, எப்ப பாத்தாலும் 


டாஸ்மாக் கடையே கதின்னு கிடக்கான்.


அவனை திருத்த அவங்க அப்பா எம்புட்டோ 


படாத பாடு பட்டாரு. அவனை ஒன்னும் 


திருத்தவே முடியலையே.


ராமலிங்கம் :-  ஆமாங்க தம்பி. ஆதிலிங்கம் 


இருக்கானே அவன் மதுவுக்கு வாழ்நாள் 


அடிமையாக ஆகிவிட்டான். அவனை எப்படி 


திருத்த ? ரெண்டு மாசம் ஆயிருச்சு. நான் 


அவன்கிட்டே பேசி. என்னத்தைச் சொல்ல 


இந்தக் கொடுமையை. நாள் முழுசும் தண்ணி 


எழுப்புனா எந்திரிக்கவே மாட்டேங்குதான்.


செத்த பிணம்போல கிடக்கான் பயபுள்ள.


சுந்தரலிங்கம்:-  அண்ணே இது ஒன்னும் 


புதுசு இல்ல. தண்ணியைப் போட்டவன் 


எல்லோரும் செத்தவனுகதான் அப்படீன்னு 


வள்ளுவரே சொல்லியிருக்காரு இல்ல.


அதால நாம் இனிமே அந்த ஆதிலிங்கத்தோட


பழக்க வழக்கம் இல்லாம இருக்க 


வேண்டியதுதான்.அட... என்ன நான் சொல்றது.


ராமலிங்கம் :-  நீ சொல்றதுதான் சரி தம்பி.



அன்பர்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. 



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன் திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

Tuesday, November 18, 2014

சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான ஒன்று !! அவ்வாறு செய்வது என்பது மிகவும் அரிதானது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  வினைத்திட்பம்.


குறள் எண் :-  664.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 


சொல்லிய வண்ணம் செயல்... ... ... 



விளக்கம் :-  இந்த விஷயத்தை நான் இவ்வாறு 


செய்து முடித்திடுவேன் என்று வாயால் 


சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான 


செயல் ஆனால் அப்படி சொல்லியபடி அந்தச் 


செயலை செய்து முடிப்பது என்பது மிகவும் 


அரிதான ஒன்று.  இது திருவள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



பூங்காவனம் :-  ஏண்டா தம்பி புஷ்பவனம் என்ன 


உன்னைய இரண்டு நாளே ஆளையே காணோம்.


எங்க தம்பி போயி இருந்தீங்க ? சொல்லுங்க 


தம்பி சொல்லுங்க ?


புஷ்பவனம் :-  இல்ல அண்ணே நம்ம ஊரிலே 


ரெண்டு நாளா கரண்ட்டே கிடையாது. போயி 


கரண்ட்டு ஆபீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கப் 


போயிருந்தேன். 


பூங்கா :-  அவங்க என்ன சொன்னாங்க ?


புஷ்ப:-   என்னத்தை சொல்வாங்க. கரண்ட் 


வந்தாத்தானே தம்பி நாங்க தர முடியும். நாங்க 


என்ன எங்க வீட்டுக்கா கொண்டு போயிட்டோம் 


அப்படீங்கிறாங்க.


பூங்கா :-  அவங்க மேலேயும் குத்தம் சொல்ல 


முடியாது. மேலே சர்க்காரு சரி இல்லையே தம்பி.


பூராவும் பினாமி அரசாங்கம் இல்ல இப்ப நம்ம 


தமிழ்நாட்டை ஆண்டுக்கிட்டு இருக்கு. தேர்தல் 


நேரத்துலே 2011 என்ன சொன்னாங்க இந்த 


அண்ணா தி.மு.க. காரங்கன்னா நாங்க ஆட்சிக்கு 


வந்தா 3 மாசத்துலே மின்பற்றாக்குறைய அறவே 


நீக்கிடுவோம்.


அது மட்டும் இல்ல, மின் பற்றாக்குறை இல்லாத 


மாநிலமாக ஆக்குவதோடு, மின்மிகுமாநிலமாக 


தமிழகத்தை மாற்றுவோம்என்றுசொல்லித்தான் 


ஒட்டு வாங்கி செவிச்சாங்க. ஆனா நடப்பு அப்படி 


இல்லையே.எல்லாம் நம்ம தலை விதி. 


யாரையும் குத்தம் குறை சொல்லி பயன்இல்லை.


சரி தம்பி. எனக்கு நேரம் ஆச்சு. நாளைக்கு 


மீதியை பேசுவோம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா. பாலு 


( மதுரை T.R. பாலு )


Monday, November 17, 2014

பண்பற்றவர்களின் நட்பு ஒருவருக்கு எத்தகைய பலனைத்தரும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  தீ நட்பு.


குறள் எண் :-  810.                                            



பழகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 


பெருகவிர் குன்றும் இனிது ... ... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  பழகுவார் போன்ற ஆர்வத்தைக் 


கொண்டிருந்தாலும், பன்பற்றவர்களிடம் நாம் 


கொள்ளும் நட்பானது, வளர்வதை விடவும் நாம் 


அழிவதே இனிமையானது. இது வான்புகழ் 


வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                                                 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-                                       


வீரப்பா :- என்னடா தம்பி பாலப்பா, நம்ம அக்கா 


விஜயலட்சுமியை இரண்டு மாசத்துக்கும் மேலா 


காணவே காணோம். எங்க போச்சு அக்கா ? உம்.. 


ஒன்னும் புரியலையே.


பாலப்பா :- அண்ணே உங்களுக்கு விசயமே 


தெரியாது போல இருக்கு. நீங்க என்ன 


செய்தித்தாளேபடிக்கிறது இல்லையா அண்ணே? 


அக்கா விஜயலட்சுமி தனது உண்மையான 


உண்மை வருமானத்தை மறைத்து, உண்மை 


வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த 


வழக்கில், மங்களூரு சிறப்பு நீதி மன்ற நீதிபதி 


சைக்கோ சி.பன்கா அவர்களால் தகுந்த 


ஆதாரங்களால் நாலு வருஷம் சிறைத் 


தண்டனையும் 200 கோடி அமெரிக்க டாலர் 


அபராதத்தொகையும் இந்த அபராதத்


தொகையைக் கட்டத்தவறினால், மேலும் 


ஓராண்டு சிறைத்தண்டனையும் என்ற தீர்ப்பின் 


அடிப்படையில் 21 நாள் சிறைவாசம் அனுபவிச்சு 


அதன் பிறகு, உயர்நீதி மன்றம் போயி, அங்கே 


ஜாமீன் தள்ளுபடி ஆகி, அதுக்கப்புறம், உச்ச நீதி 


மன்றம் போயி அங்கன ஜாமீன் வாங்கிட்டு வந்து 


இப்ப தோட்டத்திலே படுகடுப்பாக ஓய்வு 


எடுத்துக்கிட்டு இருக்காக எனும் செய்தி 


உங்களுக்குத் தெரியாதா ?                                           


வீரப்பா :- தெரியாதுடா தம்பி. தெரிஞ்சா உன்ட்ட 


நான் இதைப்பத்தி கேப்பேனா. எல்லாத்துக்கும் 


காரணம் அவங்க உயிர்த்தோழி புஷ்கலாதான். 


பெரியவங்க, அக்காவுக்கு வேண்டியவங்கஎன்று 


எத்தனையோ பேர் படிச்சுப் படிச்சு சொல்லியும் 


கேக்காம அந்த புஷ்கலாவோட வச்சுக்கிட்டு 


இருந்த நட்பு எங்க கொண்டு போயி நம்ம 


அக்காவை தள்ளியிருக்கு பாத்தியாடா தம்பி !!   


பாலப்பா :-  ஆம் ரொம்ப கரீட்டா சொன்ன 


அண்ணே. நம்ம திருவள்ளுவர்கூட 


அதையேதானே சொல்லியிருக்காரு, நம்ம 


மதுரை TR பாலு ஐயா மேலே குறிப்பிட்டு 


இருக்குற திருக்குறள் மூலமா. கேக்கலையே 


நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் 


உரிய அன்பு அக்கா ஜெயலக்ஷ்மி. கேட்டிருந்தா 


இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா. இப்பப் 


பாரு சட்டமன்ற உறுப்பினர் பதவியும் போயி, 


முதலமைச்சர் அப்படீங்கிற அந்தஸ்தும் போயி 


சாதாரண ஆளா உக்காந்திருக்காங்க.   எல்லாம் 


செய்த பாவமும், வினையும்தான் காரணம். 


ஆண்டவன் விருப்பப்படிதான் இங்கே எல்லாம் 


நடக்குது அப்ப்படீங்கிறதுக்கு இத்த விடவும் 


வேற எதுனாச்சும் உதாரணம் வேணுமா என்ன ?



இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது அன்பர்களே !! மீண்டும் அடுத்த 


பதிவினில் நாம் அனைவரும் சந்திப்போம். 


அதன்பிறகு சிந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!                                                         



அன்புடன் திருமலை. இரா. பாலு.                                  



( மதுரை T.R. பாலு )

Thursday, November 13, 2014

வேண்டாம் உனக்கு விலைமாதர்கள் ஆசை !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண்:-  920.



இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்


திருநீக்கப் பட்டார் தொடர்பு... ... ... 



விளக்கம் :-   இரண்டுவிதமான மனத்தினை 


உடைய விலைமாதர்கள், மயக்கம் தரும் 


கள்ளும், சூதாட்டமும், திருமகளால் அறவே 


நீக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தொடர்பு 


உடைய செயலாகும். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும். இனியாகிலும் இந்த 


கருத்தை நாம் அனைவரும் அவரவர் வாழ்வில் 


கடைபிடிப்போமாக.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


கங்காராவ் :-  யோவ் ரங்காராவ், எங்கயா நம்ம 


சுப்பாராவ் ஆளையே காணோம். இந்த ஊரையே  


விட்டு ஓடிட்டதா இல்ல சொல்றாங்க. அது 


நிஜமா?


ரங்காராவ் :-  அட...ஆமாய்யா. என்ன எப்ப பாரு, 


அந்த மனுசன், நம்ம ஊரு விபச்சாரிமக விபச்சாரி  


விமலாவோட மடியிலேயே படுத்துக்கிடந்து 


அவனோட அப்பா இவனுக்காக கஷ்டப்பட்டு 


சேத்து வச்சிருந்த சொத்துலே பாதிக்குமேலே 


மவன் காலி பண்ணிட்டான். இது போதாதுன்னு 


பய எப்ப பாத்தாலும் டாஸ்மாக் கடையே 


கதின்னு கிடந்து காலையிலே 10 மணிக்குகுடிக்க 


ஆரம்பிச்சான்னுசொன்னா ராத்திரி கடையை 


மூடுறவரைக்கும் 10 மணி வரைக்கும் 


பன்னிரண்டு மணிநேரம் குடிச்சான் 


அதுலே ஒரு கால்வாசிப் பணம் காலி. இந்த 


நிலையிலே லாட்டரி சீட்டு வேற, மனுசன் 


வாங்கி வாங்கி பத்து சாக்கு மூட்டை நிறைய 


சேத்தான். மீதி கால்வாசி பணமும் அவுட்டு. பய 


கையிலே காசு இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டா  


விமலா. விடுவாளா இவனை உள்ளே. 


போடான்னு வெளியே தள்ளி கதவை 


சாத்திட்டா. இப்ப காலியான பையோட 


மவன் எந்த ஊருக்கு போயிருக்கானோ, 


எங்க போயி மவன் பிச்சை எடுக்கானோ 


தெரியலை. அட...காலங்காத்தாலே எதுக்குஅந்த 


வெட்டிப்பயலைப் பத்தி பேச்சு.


எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு.நான் வாரேன்.



இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் சந்திப்போம். பிறகு நாம் 


அமர்ந்து சிந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா.பாலு.



( மதுரை T.R. பாலு ).

Wednesday, November 12, 2014

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால் எவ்வகைத் துன்பங்கள் நமக்கு நேர்ந்திடும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  பெரியாரைப் பிழையாமை.


குறள் எண் :-  892.


பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் 

பேரா இடும்பைத் தரும்... ... ...


விளக்கம் :-  வயதில் அனுபவத்தில் மூத்த


பெரியவர்களை மதிக்காமல் அவர்களைத்


தூக்கி எறிந்து நடந்தால், அப்பெரியவர்களால்   


நமக்கு நீங்கிடாத துன்பம் வந்துசேரும். இது 


வள்ளுவர் நமக்கு அளித்த குறளும் அதன் 


விளக்கமும் ஆகும். எனவே நாம் இனிமேலாவது 


பெரியவர்களை மதித்து நடந்திடுவோம்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


பொன்னுச்சாமி :- ஏண்டா, தம்பி கண்ணுச்சாமி 


எங்கேடா உன்னை ரெண்டு நாளா ஆளையே 


காணோம். எங்கே போய்த் தொலைஞ்சே ?


கண்ணுச்சாமி :-  இல்லை அண்ணே நம்ம 


அம்மா...இல்ல..அம்மா..


பொன்னு:- என்னடா ஆச்சு உங்க அம்மாவுக்கு ?


கண்ணு:- அம்மான்னா என்னைப் பெத்த 


அம்மா இல்லண்ணே 


பொன்னு:- அப்பா உன்ன வளத்த அம்மான்னு 


சொல்லு. அப்படித்தானே.


கண்ணு :- அண்ணே போங்கண்ணே காமெடி


கீமெடி பண்ணாதீங்க. நம்ம முன்னாள் 


முதல்வர் அந்த அம்மாவைச் சொன்னேன்.


பொன்னு:- ஏண்டா உனக்கு வெக்கமா இல்லை.


உம்..உன்னைய பத்து மாசம் இடுப்பிலேயே 


சுமந்து உன்னையபெத்து, வளர்த்து,ஆளாக்கி,


சீராட்டி, பாலூட்டி ஒரு மனுசனா இந்த 


நாட்டுக்கு அர்ப்பணித்த ஒரு அன்புத் 


தெய்வத்தை யாரோ ஒரு முன்னாள் சினிமா 


நடிகைக்கு இணை வைச்சு அம்மான்னு 


கூப்பிடுறாயே.உன்னைய அந்தத் தெய்வம் 


நிச்சயமா மதிக்கவே மதிக்காதுடா. உனக்கு 


நிச்சயம் நரகம்தான் கிடைக்கும்.


உம்..சொல்லு..சொல்லு..அவங்களுக்கு என்ன ?


கண்ணு :- இல்ல அண்ணே அவங்க தண்டனைய


நீக்கி அவங்களை நிரபராதின்னு அறிவிக்கணும்


அப்படின்னு சாலை மறியல் போராட்டத்துக்குப் 


போயிருந்தேன். அதான் ரெண்டுநாளா வரலை 


இந்தப் பக்கம்.


பொன்னு:-  ஏண்டா நிரபராதின்னு நிரூபிக்க நீ 


எதுக்குடா சாலையைப் போயி மறிச்சு எல்லோர் 


மாதிரியும் போராட்டம் பண்றே. நேரே 


நீதிமன்றத்துக்கு இல்லை போயிருக்கனும். 


போடா மடப்பயலே.டேய் தம்பி அந்தபொம்பளை 


முந்தி நம்ம தல கலைஞருக்கு செஞ்ச 


கொடுமைக்குத்தான் இப்ப தண்டனைய 


அனுபவிக்க ஜெயிலுக்கு போயிருக்கு 


அப்படின்னுதான் எல்லோரும் பேசிக்குறாங்க.


இதுதெரியாம எண்டா ஆட்டு மனதைக் கூட்டம் 


மாதிரி இப்படி அலையுரே. தம்பி நாம 


நம்மளோட வாழ்க்கையிலே பெரியவங்களை, 


அனுபவம் மிக்க ஆன்றோர்களை, மிகச்சிறந்த 


பழுத்த அரசியல் வாதிகளை 


மதிக்கனும்டா.அவங்க கால்ல விழுந்து 


கும்பிட்டு வணங்கினா உனக்கு சொல்றேன் 


நிச்சயம் நாம் வாழ்க்கையில் 


உயரத்துக்குப்போகலாம். இப்பவும் ஒன்னும் 


கெட்டுப்போகலே. அந்த பொம்பள கொஞ்சம் 


விட்டுக்கொடுத்து, கௌரவம் பார்க்காம, தல 


கிட்டே போயி என்னைய மன்னிச்சுருங்க. நான் 


உங்களுக்கு எவ்வளவோ கெடுதல் 


பண்ணியிருக்கேன். நீங்கதான் இனிமே 


என்னையக் காப்பாத்தணும் அப்படீன்னு ஒரு 


வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை சொன்னா 


போதும்டா.நம்ம  தலைவர் நிச்சயம் மன்னிச்சி 


அந்த பொம்பளைய காப்பாத்துறதுக்கு தன்னால 


ஆன எல்லா உதவியும் செய்வாருடா. அதாலே 


நான் என்னசொல்றேன்னா நீயாவது 


பெரியவங்களை மதிக்காம துச்சமா தூக்கி 


எறிந்து பேசாம் மதிச்சு நடந்துக்கோ. உனக்குப் 


புண்ணியம் கிடைக்கும். அப்படி 


இல்லன்னுசொன்னா  உனக்கு அந்தப் 


பெரியவங்களாலே பெரும் துன்பங்கள் மட்டுமே 


உனக்கு வந்து சேரும். அம்புட்டுத்தான் நான் 


இப்ப சொல்றேன். கேட்டா கேட்டுக்க. 


இல்லாங்காட்டி வுட்டுருடா நான் வாறன்.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.


( மதுரை TR பாலு.

Monday, November 3, 2014

எவரது நட்பினை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!










தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  கூடாநட்பு.


குறள் எண் :-  829.



மிகச்செய்து தம்எள்ளு வாரை நகைச்செய்து 


நட்பினுள் சாப்புல்லற் பாற்று... ... ... 



விளக்கம் :-  முகத்தில் நண்பர் போலக்காட்டி,


உள்ளத்தில் தம்மை இகழ்பவராக தாமும் 


அவர் மகிழுமாறு செய்து அவரது நட்பினைச் 


சிறிதுசிறிதாகக் குறைத்துக் கொள்ளவேண்டும்.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ரெங்கையா :-   ஏண்ணே நம்ம ராமையா இப்ப 


எல்லாம் அவனோட நெருங்கிய நண்பர் 


சோமையாகூட பழகுவதை எதற்காக சுத்தமா 


நிறுத்திட்டாராம் ?


சுப்பையா  :-  அண்ணே உனக்கு சேதிதெரியாது 


போல.அதான் இப்படி கேக்கீரு. ஒருநாளைக்கு 


நம்ம ராமையாவைப்பத்தி டீக்கடை ராமுகிட்ட 


சோமையாவை கெட்டகெட்ட வார்த்ததைகளால 


கேவலமா திட்டியிருக்கான். இவன் அவன்கிட்டே 


கைமாத்து கேட்டிருக்கான். அவன் தரமாட்டேன் 


அப்படீன்னு சொன்னதாலே. இந்த விஷயத்தை 


ராமையாகிட்டே தேக்கடி ராமு போட்டுக் 


கொடுத்துட்டான். அதாலே போன மாசத்துலே 


இருந்து அவன் இவன்கிட்டே பேசுறதை சுத்தமா 


நிருத்திட்டானாம். இது எப்படி இருக்கு ? நாம 


சொன்னப்ப எல்லாம் அவனுக்கு இவனைப்பத்தி 


தெரியல.இப்பத்தான் அவனைப்பத்தி இவனுக்கு 


தெரிஞ்சிருக்கு. பெரிய பத்தவைக்கிற கிராக்கி 


அப்படீன்னு. இப்ப தெரிஞ்சுக்கிட்டான்.



அதானாலேதான் அவனோட பழகுறதை 


நிப்பாட்டிட்டான்.


இதற்கும் நம்ம வள்ளுவர் ஒரு குறள் 


எழுதியிருக்காரு அண்ணே வேணும்னா மேலே 


குறிப்பிட்டு இருக்காரு நம்ம மதுரை 


பாலு ஐயா. படிச்சுத் தெரிஞ்சுக்குங்க. நான் 


வாறன்.




நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா. பாலு.


(மதுரை T.R. பாலு.)