Sunday, November 30, 2014

காலம் அறிந்து கொக்கு போல செயல்படுங்கள் !! வள்ளுவர் காட்டிய வழி இதுவே !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  காலம் அறிதல்.


குறள்  எண் :-  490.



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 

குத்தொக்க சீர்த்த இடத்து... ... ... ... ... 



விளக்கம் :-  காலம் வாய்க்காத பொழுது 


காத்திருந்து, காலம் வருகின்றபோது தனது 


இரையினைக் கொத்தும் கொக்குபோல 


செயலாற்றுதல் நன்று. இது வள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



கல்ராயன் :- என்னங்க தம்பி காத்தவராயா 


உங்களை நம்ம தெருப்பக்கம் பாத்து ரெண்டு 


வாரம் ஆகுதே ? எங்க போயிருந்தீங்க தம்பி ?


காத்தவராயன் :- இல்ல அண்ணே. என் தம்பி 


சென்றாயனுக்கு போன வாரம் கல்யாணம் 


அதான் கல்றாயன்மலைக்குப் போயிருந்தேன்.


அங்கே உள்ள மலைக் கோவிலில்தான் எனது 


தம்பிக்கு கல்யாணம்.


கல்ராயன்:- பொண்ணுக்கு எந்த ஊரு தம்பி.


காத்த :- சேலத்துக்குப் பக்கத்தாலே ஒரு சின்ன 


கிராமம். சோத்துப்பட்டி. அங்கனதான் அந்த 


ஊரு நாட்டாமை நல்லசிவம் பிள்ளையோட 


கடைசி மகள் நந்தினிக்கும் என் தம்பி தங்க 


முத்துக்கும் கண்ணாலம். அதான் உங்களை 


நான் பாக்க முடியலே.


கல்:- ஏண்டா ? உன்னோட  கூடப்பிறந்த தம்பிக்கு 


கண்ணாலம்.எங்ககிட்டே கூட உன்னாலே 


சொல்ல முடியலே.ஏன். நாங்க வந்தா அந்தக் 


கன்னாலவீட்டு சோறு அம்புட்டையும் நாங்க 


திண்டுபுடுவோம்னு கூப்பிடலயடா தம்பி ?


காத்த:- அதில்ல அண்ணே. சுருக்கமாத்தான் 


கண்ணாலம் செஞ்சோம். அப்ப்புறம்....வேற..


என்னண்ணே விசேஷம் இந்த ரெண்டு மூணு 


வாரத்திலே நம்ம நாட்டிலே ?


கல்:- அத்த ஏண்டா தம்பி கேக்குறே ? நம்ம 


ஊரே கெட்டுட்டுக்கிடக்குடா. வீரையன் பயல 


அவன் பொண்டாட்டி, தலை தனி முண்டம் தனி 


அப்படீன்னுல்லே வெட்டிக் கொன்னுபோட்டா.


எதுக்குண்டு கேட்டீண்டா அவன் வண்ணாத்தி 


வள்ளிமயிலோட வச்சிருந்த கள்ளத்தொடர்பு 


அவன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு போச்சு.


சொல்லி, சொல்லி பாத்திருக்கா பய ஒன்னும் 


திருந்துற பாடு இல்லை. எடுத்தா கொடுவாளை.


போட்டா ஒரே போடு. அம்புட்டுத்தான் சோலி 


முடிஞ்சுபோச்சு. 


காத் :-  என்னே உங்களுக்கு சேதி தெரியுமா.


நம்ம தல கலைஞர் சும்மா கம்னு குந்திக்குனு 


இருக்காரே. ஏன் அப்டி கீறாரு ?


கல் :- அட...மடப்பய மவனே...அவரு எல்லாம் 


காரனமாத்தாண்டா தம்பி பேசாம கீறாரு. இந்த 


அம்மாளைப்  பொருத்தவரைக்கும் அதோட 


அரசியல் வாழ்க்கை, கிட்டத்தட்ட அஸ்த்தமனம் 


ஆனா மாதிரித்தானே. அதாலே எப்பவும் தேர்தல் 


வரலாம். அதுக்கு திட்டம் தீட்டிக்கினு கம்னு 


கீறாரு அப்டீன்னு நான் நினைக்கிறேன். நம்ம 


வள்ளுவரு சொன்ன மாதிரி கொக்கு எப்படி 


காத்துக்கிட்டு இருந்து பெரிய மீன்வரப்ப 


கபால்னு கவ்வுதோ அந்தமாதிரி தேர்தல்வர்றப்ப 


கப்புன்னுபோட்டி போட்டு 234 தொகுதியிலே ஒரு 


190 தொகுதிய கைப்பத்தி ஜெவிச்சுரனும் 


அப்படீன்னு கங்கணம் கட்டிக்கினு 


இருக்கார்னு நினைக்கேன். சரி. நான் வாறன்.


நேரமாச்சு.



அன்பர்களே !!



இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா. பாலு.



( மதுரை TR. பாலு.)

No comments:

Post a Comment