Friday, November 28, 2014

ஊக்கம் உள்ளவன் யாரைப்போல இருப்பான் ? இது வள்ளுவர் காட்டிய வழி!!











தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  காலம் அறிதல்.



குறள் எண் :-  486.



ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
 

தாக்கற்குப் பேருந் தகைத்து... ... ... 




விளக்கம்  :-   எதிர்த்துப் போர்புரியும்ஆட்டுக்கிடா 


பின் வாங்கிப் பிறகு தாக்குவதுபோல ஊக்கம் 


உள்ள ஒருவன் காலம் அமையும் வரையிலும் 


அமைதியாகக் காத்திருந்து, பின்னர் முழு 


பலத்தையும் கொண்டு தனது எதிரியைத் தாக்கி 


அழிப்பான்.  இது வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



நல்லசாமி :-  என்னடா !! தம்பி !!கண்ணுச்சாமி. 


நாட்டு நடப்பு,  அரசியல் நிலைமை 


என்ன சொல்லுது ?


கண்ணுச்சாமி:-  என்னத்தைச் சொல்ல. அந்த 


அம்மா அது பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் 


வரைக்கும் போயி ஜாமீன் வாங்கிக்கிட்டு வந்து 


தோட்டத்துலே ஜம்னு குந்திகிட்டு, நம்மதண்ணீர் 


செல்வத்தை முதல் அமைச்சராக ஆக்கிக்கிட்டு 


பின்னாலே இருந்துகிட்டு பினாமி ஆட்சியை 


நடந்திட்டு இருக்கு. பாவம் நம்ம தண்ணீர் 


செல்வம். பொட்டிப்பாம்பா அடங்கி இருக்காரு.


நல்ல :- அது சரி தம்பி. நம்ம பெருசு அன்புநிதி 


அவர் ஏன்னா செஞ்சுக்கினு இருக்காரு ? அத்த 


பத்தி விளக்கமா சொல்றா தம்பி. உக்கும்....


கண்ணு:- அவர் என்ன செய்வாரு பாவம். மகன் 


இளைய தளபதி ஆஸ்டினை விட்டு தமிழ்நாடு 


பூராவும் கூட்டம் நடத்திக்கினு கட்சியைக் 


காப்பாத்திக்கினு இருக்காரு.


எப்படா 2016 வரும், ஆட்சியைப் புடிச்சு 


அரியணைமேலே குந்தலாம்னு குறள் மேலே 


சொன்னதுபோல அந்த போராடும் ஆட்டுக்கிடா 


போல அமைதியா குந்திக்கினு இருக்காருப்பா.



நல்ல :- சரியாச் சொன்னடா தம்பி. நிச்சயம் அவர் 


நம்ம தலைவர் அன்புநிதி வெற்றிபெற்று இந்த 


நாட்டுக்கு அவர் மீண்டும், மீண்ட முதல்வரா 


வரோணும்னு சொல்லி அம்புட்டு ஜனங்களும் 


காத்துக்கினு கீறாங்க என்ன நான் சொல்றது ? .


கண்ணு :-  சரிங்க அண்ணே . நேரமாச்சு. எனக்கு 


அப்பாலே நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. 


நாம கொஞ்சம் விளக்கமா, விலாவரியா 



பேசுவோம் அண்ணே . 



 அட..என்ன..நான்..சொல்றது ? 



நல்ல :- OK. நாளைக்கு பார்ப்போம்தம்பி.




நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

No comments:

Post a Comment