Monday, November 3, 2014

எவரது நட்பினை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!










தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  கூடாநட்பு.


குறள் எண் :-  829.



மிகச்செய்து தம்எள்ளு வாரை நகைச்செய்து 


நட்பினுள் சாப்புல்லற் பாற்று... ... ... 



விளக்கம் :-  முகத்தில் நண்பர் போலக்காட்டி,


உள்ளத்தில் தம்மை இகழ்பவராக தாமும் 


அவர் மகிழுமாறு செய்து அவரது நட்பினைச் 


சிறிதுசிறிதாகக் குறைத்துக் கொள்ளவேண்டும்.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ரெங்கையா :-   ஏண்ணே நம்ம ராமையா இப்ப 


எல்லாம் அவனோட நெருங்கிய நண்பர் 


சோமையாகூட பழகுவதை எதற்காக சுத்தமா 


நிறுத்திட்டாராம் ?


சுப்பையா  :-  அண்ணே உனக்கு சேதிதெரியாது 


போல.அதான் இப்படி கேக்கீரு. ஒருநாளைக்கு 


நம்ம ராமையாவைப்பத்தி டீக்கடை ராமுகிட்ட 


சோமையாவை கெட்டகெட்ட வார்த்ததைகளால 


கேவலமா திட்டியிருக்கான். இவன் அவன்கிட்டே 


கைமாத்து கேட்டிருக்கான். அவன் தரமாட்டேன் 


அப்படீன்னு சொன்னதாலே. இந்த விஷயத்தை 


ராமையாகிட்டே தேக்கடி ராமு போட்டுக் 


கொடுத்துட்டான். அதாலே போன மாசத்துலே 


இருந்து அவன் இவன்கிட்டே பேசுறதை சுத்தமா 


நிருத்திட்டானாம். இது எப்படி இருக்கு ? நாம 


சொன்னப்ப எல்லாம் அவனுக்கு இவனைப்பத்தி 


தெரியல.இப்பத்தான் அவனைப்பத்தி இவனுக்கு 


தெரிஞ்சிருக்கு. பெரிய பத்தவைக்கிற கிராக்கி 


அப்படீன்னு. இப்ப தெரிஞ்சுக்கிட்டான்.



அதானாலேதான் அவனோட பழகுறதை 


நிப்பாட்டிட்டான்.


இதற்கும் நம்ம வள்ளுவர் ஒரு குறள் 


எழுதியிருக்காரு அண்ணே வேணும்னா மேலே 


குறிப்பிட்டு இருக்காரு நம்ம மதுரை 


பாலு ஐயா. படிச்சுத் தெரிஞ்சுக்குங்க. நான் 


வாறன்.




நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா. பாலு.


(மதுரை T.R. பாலு.)  

No comments:

Post a Comment