Thursday, November 13, 2014

வேண்டாம் உனக்கு விலைமாதர்கள் ஆசை !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண்:-  920.



இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்


திருநீக்கப் பட்டார் தொடர்பு... ... ... 



விளக்கம் :-   இரண்டுவிதமான மனத்தினை 


உடைய விலைமாதர்கள், மயக்கம் தரும் 


கள்ளும், சூதாட்டமும், திருமகளால் அறவே 


நீக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தொடர்பு 


உடைய செயலாகும். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும். இனியாகிலும் இந்த 


கருத்தை நாம் அனைவரும் அவரவர் வாழ்வில் 


கடைபிடிப்போமாக.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


கங்காராவ் :-  யோவ் ரங்காராவ், எங்கயா நம்ம 


சுப்பாராவ் ஆளையே காணோம். இந்த ஊரையே  


விட்டு ஓடிட்டதா இல்ல சொல்றாங்க. அது 


நிஜமா?


ரங்காராவ் :-  அட...ஆமாய்யா. என்ன எப்ப பாரு, 


அந்த மனுசன், நம்ம ஊரு விபச்சாரிமக விபச்சாரி  


விமலாவோட மடியிலேயே படுத்துக்கிடந்து 


அவனோட அப்பா இவனுக்காக கஷ்டப்பட்டு 


சேத்து வச்சிருந்த சொத்துலே பாதிக்குமேலே 


மவன் காலி பண்ணிட்டான். இது போதாதுன்னு 


பய எப்ப பாத்தாலும் டாஸ்மாக் கடையே 


கதின்னு கிடந்து காலையிலே 10 மணிக்குகுடிக்க 


ஆரம்பிச்சான்னுசொன்னா ராத்திரி கடையை 


மூடுறவரைக்கும் 10 மணி வரைக்கும் 


பன்னிரண்டு மணிநேரம் குடிச்சான் 


அதுலே ஒரு கால்வாசிப் பணம் காலி. இந்த 


நிலையிலே லாட்டரி சீட்டு வேற, மனுசன் 


வாங்கி வாங்கி பத்து சாக்கு மூட்டை நிறைய 


சேத்தான். மீதி கால்வாசி பணமும் அவுட்டு. பய 


கையிலே காசு இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டா  


விமலா. விடுவாளா இவனை உள்ளே. 


போடான்னு வெளியே தள்ளி கதவை 


சாத்திட்டா. இப்ப காலியான பையோட 


மவன் எந்த ஊருக்கு போயிருக்கானோ, 


எங்க போயி மவன் பிச்சை எடுக்கானோ 


தெரியலை. அட...காலங்காத்தாலே எதுக்குஅந்த 


வெட்டிப்பயலைப் பத்தி பேச்சு.


எனக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு.நான் வாரேன்.



இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் சந்திப்போம். பிறகு நாம் 


அமர்ந்து சிந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா.பாலு.



( மதுரை T.R. பாலு ).

No comments:

Post a Comment