Saturday, November 1, 2014

அறிஞர்கள் சொல்லிய அறிவுரையைக் கேட்பது நமது கடமை என்கிறார் திருவள்ளுவர் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண் :-   918.





ஆயும் அறிவினர்  அல்லார்க்கு அணங்கென்ப 


மாய மகளிர் முயக்கு... ... ... 




விளக்கம் :-  வஞ்சக எண்ணத்தினை மட்டுமே 


தங்கள் நெஞ்சினில் கொண்டுள்ள விலைமகளிர்


சேர்க்கையானது, ஆராய்ந்து ஆய்ந்திடும் அறிவு 


அற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்கக் 


கூடியது என்பார்கள் அறிஞர் பெருமக்கள்.


இது திருவள்ளுவர் நமக்காக அருளிச் சென்ற 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


இதனை நாமும் நமது வாழ்க்கையில் 



இனிமேலாவது கடைப்பிடிப்போமாக.                     



நன்றி !!  வணக்கம் !!                                                       



அன்புடன். திருமலை.இரா.பாலு.                                     


(மதுரை T.R. பாலு)

No comments:

Post a Comment