Sunday, December 28, 2014

நல்லது செய்யாவிட்டாலும் தீமையை செய்யாமல் இருப்பதே நல்லது. வள்ளுவர் கருத்து !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :- பிறனில் விழையாமை.


குறள் எண் :-  150.



அறன்வரையான் அல்ல செயினும்                                                                                                       பிறன்வரையான்


பெண்மை நயவாமை நன்று... ... ... ... ... ... ...



விளக்கம் :-  ஒருவர் அறத்தினைச் செய்யாமல்


பாவங்களையே செய்தாலும் பிறருக்கு 


உரியவரின்மனைவியை விரும்பாமல்இருப்பதே 


நல்லது. இதுவான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற குறளும்அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



கங்காதரன் :-  என்ன தம்பி சுதாகரா, இப்ப நம்ம


பரணிதரன் அவன் வீட்டுலே வாடகைக்கு குடி


இருக்கிற கேரளா நாட்டு பெண் குட்டி சுகந்தியை


கணக்கு பண்ற வேலைய விட்டுட்டானாமில்ல.


உனக்கு சேதி தெரியுமா.


சுதாகரன் :- என்ன அண்ணே சொல்றீங்க. எனக்கு


இந்தவிசயமேதெரியாதே.விவரமாச்சொல்லுங்க


கங்காதரன் :-  ஆமாண்டா தம்பி, நேத்து அவனை


நான் கடைத்தெருவிலே வச்சுப்பார்த்தேன்.அவன்


நம்ம மதுரை பாலு சார் எழுதின தினம் ஒரு 


குறள்விளக்கத்தைப் படிச்சானாம். 


திருந்திட்டானாம்.எங்கையோ நல்லா இருந்தாச் 


சரிதான் போ.சரி தம்பி. நான் வாறன்.



நன்றி !!   விளக்கம் !!



அன்புடன். திருமலை இரா.பாலு.



(மதுரை T.R. பாலு.)

Thursday, December 18, 2014

காலம் அறிந்து நாம் செயல்பட்டால் உலகையே வெல்லலாம் !! வள்ளுவர் காட்டிய வழி !!










தினம் ஒரு திருக்குறள்.




அதிகாரம்  :-  காலம் அறிதல்.



குறள் எண் :-  484.



ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் 

கருதி இடத்தாற் செயின்... ... ... ... ...



விளக்கம் :-   ஏற்ற காலத்தை அறிந்து 


ஏற்ற இடத்தில் ஒரு செயலை  நாம் 


செய்தால்,  இந்த உலகத்தையே பெற 


நினைத்தாலும் பெற்று விடலாம்.  இது 


வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.



( மதுரை T.R. பாலு )

Tuesday, December 9, 2014

அரசன் மற்றும் அரசியிடம் இருக்கும் மந்திரிகள் எப்படி இருக்க வேண்டும் !! வள்ளுவர் காட்டிய வழி!!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  மன்னரைச் சேர்ந்தொழுகல்.



குறள் :- 691.



அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.. ... ... ... ... 



விளக்கம் :-  மாறுபட்ட கருத்துடைய 


மன்னருடன்/அரசருடன் தொடர்பு 


உடையவர்கள் மிகவும் விலகாமலும் 


மிகவும் நெருங்காமலும் குளிர்காய்பவர் 


போல நடந்து கொள்ள வேண்டும். இது


வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாமும் அவர் சொன்ன வழிப்படியே நடப்போம்.

நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை T.R. பாலு ) 

Sunday, December 7, 2014

சிற்றறிவு எதனை நமக்கு உண்டாக்கித் தரும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  நிலையாமை.



குறள் எண் :-  331.



நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை... ... ... ... ... 



விளக்கம் :-  நிலையில்லாதவைகளை 


நிலையானவை என்று எண்ணி மயங்கும் 


புல்லறிவு உடையவராக இருத்தல்,வாழ்வில்


இழிந்த நிலையே ஆகும். இது வள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ரங்கசாமி :-  அண்ணே !! ராமசாமி அண்ணே !!

எங்க அண்ணே போயிட்டு வரீங்க ?


ராமசாமி :-   தம்பி, நம்ம ஊருலேயே பெரிய 


பணக்காரர் சண்முகம் செட்டியாரு, நேத்து 


செத்துப்போயிட்டாருல்ல. அதான் அவரோட 


இறுதி ஊர்வலத்துலே கலந்துகிட்டு,


மயானக் கரை வரைக்கும் போயிட்டு 


வீட்டுக்குபோய் குளிச்சிட்டு வாறன் தம்பி.



ரங்க :-  ஏண்ணே !! சண்முகம் செட்டி, அவர் 


வாழ்நாளிலே எக்கச்சக்கமா சொத்து சேத்து


வச்சிருந்தாரே ? அவருக்கு வாரிசுகூட 


இல்லையே. வட்டி மூலமா கோடிகோடியா 


ரொக்கப் பணம், அடகுக் கடையிலே ஏராளமான 


நகை நட்டு இதெல்லாம் என்ன செஞ்சாரு ?


ராமசாமி :-   அவரு நேத்து வரைக்கும் தன்னாலே 


சேத்து வச்சிருந்த ரொக்கம்,நகை,வீடு,நிலம் 


இது எல்லாம் நிலையானது என எண்ணிக்கிட்டு 


இருந்தாரு. டாக்டர் நேத்து சாயங்காலம் வந்து 


நாளைக்கு செத்துருவீங்க அப்படீன்னு 


சொன்னதுக்கு பிறகுதான் உணர்ந்தாரு. 


அதாலே அவர் சொத்து அத்தனையையும்  


தலைவர் கலைஞர் அனாதைக்குழந்தைகள் 


இல்லத்திற்கு எழுதி வச்சிட்டு ராத்திரி மண்டைய


போட்டுட்டாரு. இதுதான் உலகின் நிலைமை 


தம்பி.சிற்றறிவு உள்ளவங்களுக்குத்தான் இது 


சம்பந்தமாக இழிவு ஏற்படும்னு திருவள்ளுவரே 


சொல்லிச் சென்றுள்ளார்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் . திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு ) 


Wednesday, December 3, 2014

எது நமக்கு துன்பத்தினை / கேட்டினைத் தர வல்லது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!



தினம் ஒரு திருக்குறள்.




அதிகாரம்  :- தெரிந்து தெளிதல்.



குறள் எண் :-  510.



தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 

தீரா இடும்பைத் தரும் ... ... ... ... 



விளக்கம் :-  ஒருவனை/ஓருத்தியை ஆராய்ந்து 


பார்க்காமல்தெளிவடைந்துமுடிவுக்குவருவதும், 


ஆராய்ந்துதெளிந்தஒருவனைசந்தேகப்படுவதும் 


ஆகியஇவைஇரண்டுமேநீங்கிடாததுன்பத்தினை 


தர வல்லது.இதுதிருவள்ளுவர்நமக்கெல்லாம் 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



ராமையா :- என்ன தம்பி சோமையா எப்படி கீறே ?


சோமையா :- நான் நல்லாத்தான்பா கீறேன். 


நீங்க எப்படி அண்ணே கீறே ?


ராமையா :-  போன 2௦11 ம் ஆண்டு நடந்த நம்ம 


மாநில சட்டமன்றத் தேர்தல்லே நாம 


எல்லோரும் கொஞ்சம்கூட ஆராய்ந்துபார்க்காம 


அந்த பொம்பள கைமேலே ஆட்சியைக் 


கொடுத்து நாடாள விட்டதால் இப்ப நாம் 


எல்லோரும் எம்புட்டு கஷ்டத்தையும் 


அவதியையும், துன்பத்தையும் சந்திச்சுக்கிட்டு 


வர்றோம் பாத்தியாடா தம்பி 


சோம:-  அண்ணே நீ சொல்றது கரீட்டு அதே 


போலவே நம்ம தல பெருசை எல்லாந்தெரிஞ்ச 


அந்த உத்தமரை, சத்திய சீலரை, சந்தேகம் 


பட்டுகிட்டு, அவரோட கட்சிக்கு ஓட்டுப்போடாம, 


இந்த பொம்பளைய நம்பி நாம எல்லாம் 


வாக்களிச்சதுக்கு, நல்லா நம்மளோட வாயிலே 


நுரைதள்ளி சாவடிக்கிராய்ங்கடா 


அப்படீன்னுதான் ஊரே பேசிக்குது.


ராம :- இத்த பத்தித்தான் நம்ம வள்ளுவரு 


ரெண்டாயிரம்வருசத்துக்கு முன்னாடியே 


சொல்லிட்டுப் போயிட்டாரு.அத்த படிக்கிற 


அறிவு நம்ம அல்லாத்துக்கும் இல்லாத 


ஒரே ஒரு காரணத்தாலேதான் அந்த கேடுகேட்ட 


பொம்பளே ஆளவந்து இப்ப நாம எல்லோரும் 


அழுதுக்க்கினுகீறோம். அதாலே நான் இன்னா 


சொல்றேன்னு கேட்டாசெஞ்ச தப்பு அல்லாம் 


போதும். இனிவரும் 2016 சட்ட மன்றத்தேர்தல்லே 


நம்ம பெருசுக்கும், தளபதிக்கும் நம்மளோட 


பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி 


இந்த தமிழ்நாட்டை, தொய்வுலே இருந்து நம்ம 


தல மீட்டெடுத்து நிமிர்ந்துவாழவழிதரோனும்னு 


நான் இப்ப உங்க எல்லோர்ட்டேயும் வேண்டிக் 


கேட்டுக்கொள்கிறேன். நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை TR. பாலு )


Sunday, November 30, 2014

காலம் அறிந்து கொக்கு போல செயல்படுங்கள் !! வள்ளுவர் காட்டிய வழி இதுவே !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  காலம் அறிதல்.


குறள்  எண் :-  490.



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 

குத்தொக்க சீர்த்த இடத்து... ... ... ... ... 



விளக்கம் :-  காலம் வாய்க்காத பொழுது 


காத்திருந்து, காலம் வருகின்றபோது தனது 


இரையினைக் கொத்தும் கொக்குபோல 


செயலாற்றுதல் நன்று. இது வள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



கல்ராயன் :- என்னங்க தம்பி காத்தவராயா 


உங்களை நம்ம தெருப்பக்கம் பாத்து ரெண்டு 


வாரம் ஆகுதே ? எங்க போயிருந்தீங்க தம்பி ?


காத்தவராயன் :- இல்ல அண்ணே. என் தம்பி 


சென்றாயனுக்கு போன வாரம் கல்யாணம் 


அதான் கல்றாயன்மலைக்குப் போயிருந்தேன்.


அங்கே உள்ள மலைக் கோவிலில்தான் எனது 


தம்பிக்கு கல்யாணம்.


கல்ராயன்:- பொண்ணுக்கு எந்த ஊரு தம்பி.


காத்த :- சேலத்துக்குப் பக்கத்தாலே ஒரு சின்ன 


கிராமம். சோத்துப்பட்டி. அங்கனதான் அந்த 


ஊரு நாட்டாமை நல்லசிவம் பிள்ளையோட 


கடைசி மகள் நந்தினிக்கும் என் தம்பி தங்க 


முத்துக்கும் கண்ணாலம். அதான் உங்களை 


நான் பாக்க முடியலே.


கல்:- ஏண்டா ? உன்னோட  கூடப்பிறந்த தம்பிக்கு 


கண்ணாலம்.எங்ககிட்டே கூட உன்னாலே 


சொல்ல முடியலே.ஏன். நாங்க வந்தா அந்தக் 


கன்னாலவீட்டு சோறு அம்புட்டையும் நாங்க 


திண்டுபுடுவோம்னு கூப்பிடலயடா தம்பி ?


காத்த:- அதில்ல அண்ணே. சுருக்கமாத்தான் 


கண்ணாலம் செஞ்சோம். அப்ப்புறம்....வேற..


என்னண்ணே விசேஷம் இந்த ரெண்டு மூணு 


வாரத்திலே நம்ம நாட்டிலே ?


கல்:- அத்த ஏண்டா தம்பி கேக்குறே ? நம்ம 


ஊரே கெட்டுட்டுக்கிடக்குடா. வீரையன் பயல 


அவன் பொண்டாட்டி, தலை தனி முண்டம் தனி 


அப்படீன்னுல்லே வெட்டிக் கொன்னுபோட்டா.


எதுக்குண்டு கேட்டீண்டா அவன் வண்ணாத்தி 


வள்ளிமயிலோட வச்சிருந்த கள்ளத்தொடர்பு 


அவன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு போச்சு.


சொல்லி, சொல்லி பாத்திருக்கா பய ஒன்னும் 


திருந்துற பாடு இல்லை. எடுத்தா கொடுவாளை.


போட்டா ஒரே போடு. அம்புட்டுத்தான் சோலி 


முடிஞ்சுபோச்சு. 


காத் :-  என்னே உங்களுக்கு சேதி தெரியுமா.


நம்ம தல கலைஞர் சும்மா கம்னு குந்திக்குனு 


இருக்காரே. ஏன் அப்டி கீறாரு ?


கல் :- அட...மடப்பய மவனே...அவரு எல்லாம் 


காரனமாத்தாண்டா தம்பி பேசாம கீறாரு. இந்த 


அம்மாளைப்  பொருத்தவரைக்கும் அதோட 


அரசியல் வாழ்க்கை, கிட்டத்தட்ட அஸ்த்தமனம் 


ஆனா மாதிரித்தானே. அதாலே எப்பவும் தேர்தல் 


வரலாம். அதுக்கு திட்டம் தீட்டிக்கினு கம்னு 


கீறாரு அப்டீன்னு நான் நினைக்கிறேன். நம்ம 


வள்ளுவரு சொன்ன மாதிரி கொக்கு எப்படி 


காத்துக்கிட்டு இருந்து பெரிய மீன்வரப்ப 


கபால்னு கவ்வுதோ அந்தமாதிரி தேர்தல்வர்றப்ப 


கப்புன்னுபோட்டி போட்டு 234 தொகுதியிலே ஒரு 


190 தொகுதிய கைப்பத்தி ஜெவிச்சுரனும் 


அப்படீன்னு கங்கணம் கட்டிக்கினு 


இருக்கார்னு நினைக்கேன். சரி. நான் வாறன்.


நேரமாச்சு.



அன்பர்களே !!



இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா. பாலு.



( மதுரை TR. பாலு.)

Friday, November 28, 2014

ஊக்கம் உள்ளவன் யாரைப்போல இருப்பான் ? இது வள்ளுவர் காட்டிய வழி!!











தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  காலம் அறிதல்.



குறள் எண் :-  486.



ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
 

தாக்கற்குப் பேருந் தகைத்து... ... ... 




விளக்கம்  :-   எதிர்த்துப் போர்புரியும்ஆட்டுக்கிடா 


பின் வாங்கிப் பிறகு தாக்குவதுபோல ஊக்கம் 


உள்ள ஒருவன் காலம் அமையும் வரையிலும் 


அமைதியாகக் காத்திருந்து, பின்னர் முழு 


பலத்தையும் கொண்டு தனது எதிரியைத் தாக்கி 


அழிப்பான்.  இது வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



நல்லசாமி :-  என்னடா !! தம்பி !!கண்ணுச்சாமி. 


நாட்டு நடப்பு,  அரசியல் நிலைமை 


என்ன சொல்லுது ?


கண்ணுச்சாமி:-  என்னத்தைச் சொல்ல. அந்த 


அம்மா அது பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் 


வரைக்கும் போயி ஜாமீன் வாங்கிக்கிட்டு வந்து 


தோட்டத்துலே ஜம்னு குந்திகிட்டு, நம்மதண்ணீர் 


செல்வத்தை முதல் அமைச்சராக ஆக்கிக்கிட்டு 


பின்னாலே இருந்துகிட்டு பினாமி ஆட்சியை 


நடந்திட்டு இருக்கு. பாவம் நம்ம தண்ணீர் 


செல்வம். பொட்டிப்பாம்பா அடங்கி இருக்காரு.


நல்ல :- அது சரி தம்பி. நம்ம பெருசு அன்புநிதி 


அவர் ஏன்னா செஞ்சுக்கினு இருக்காரு ? அத்த 


பத்தி விளக்கமா சொல்றா தம்பி. உக்கும்....


கண்ணு:- அவர் என்ன செய்வாரு பாவம். மகன் 


இளைய தளபதி ஆஸ்டினை விட்டு தமிழ்நாடு 


பூராவும் கூட்டம் நடத்திக்கினு கட்சியைக் 


காப்பாத்திக்கினு இருக்காரு.


எப்படா 2016 வரும், ஆட்சியைப் புடிச்சு 


அரியணைமேலே குந்தலாம்னு குறள் மேலே 


சொன்னதுபோல அந்த போராடும் ஆட்டுக்கிடா 


போல அமைதியா குந்திக்கினு இருக்காருப்பா.



நல்ல :- சரியாச் சொன்னடா தம்பி. நிச்சயம் அவர் 


நம்ம தலைவர் அன்புநிதி வெற்றிபெற்று இந்த 


நாட்டுக்கு அவர் மீண்டும், மீண்ட முதல்வரா 


வரோணும்னு சொல்லி அம்புட்டு ஜனங்களும் 


காத்துக்கினு கீறாங்க என்ன நான் சொல்றது ? .


கண்ணு :-  சரிங்க அண்ணே . நேரமாச்சு. எனக்கு 


அப்பாலே நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. 


நாம கொஞ்சம் விளக்கமா, விலாவரியா 



பேசுவோம் அண்ணே . 



 அட..என்ன..நான்..சொல்றது ? 



நல்ல :- OK. நாளைக்கு பார்ப்போம்தம்பி.




நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

Saturday, November 22, 2014

மது அருந்துதலைப்பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் ?






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  கள் உண்ணாமை.


குறள் எண் :-  926.


துஞ்சிவார் செத்தாரின் வேறல்லர் எங்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்... ... ...



விளக்கம்:-  உறக்கத்தில் இருக்கும் ஒருவர் 


அந்த நேரத்தில் செத்தவரே ஆவர்.அதேபோல 


கள் உண்டவனும் அந்த நேரத்தில் நஞ்சை 


உண்டவனே ஆவான்.  இது வான்புகழ்


வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற நல்லதோர் 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


சுந்தரலிங்கம்:-  ஏண்ணே, ராமலிங்க அண்ணே 


நம்ம ஆதிலிங்கம் என்ன, எப்ப பாத்தாலும் 


டாஸ்மாக் கடையே கதின்னு கிடக்கான்.


அவனை திருத்த அவங்க அப்பா எம்புட்டோ 


படாத பாடு பட்டாரு. அவனை ஒன்னும் 


திருத்தவே முடியலையே.


ராமலிங்கம் :-  ஆமாங்க தம்பி. ஆதிலிங்கம் 


இருக்கானே அவன் மதுவுக்கு வாழ்நாள் 


அடிமையாக ஆகிவிட்டான். அவனை எப்படி 


திருத்த ? ரெண்டு மாசம் ஆயிருச்சு. நான் 


அவன்கிட்டே பேசி. என்னத்தைச் சொல்ல 


இந்தக் கொடுமையை. நாள் முழுசும் தண்ணி 


எழுப்புனா எந்திரிக்கவே மாட்டேங்குதான்.


செத்த பிணம்போல கிடக்கான் பயபுள்ள.


சுந்தரலிங்கம்:-  அண்ணே இது ஒன்னும் 


புதுசு இல்ல. தண்ணியைப் போட்டவன் 


எல்லோரும் செத்தவனுகதான் அப்படீன்னு 


வள்ளுவரே சொல்லியிருக்காரு இல்ல.


அதால நாம் இனிமே அந்த ஆதிலிங்கத்தோட


பழக்க வழக்கம் இல்லாம இருக்க 


வேண்டியதுதான்.அட... என்ன நான் சொல்றது.


ராமலிங்கம் :-  நீ சொல்றதுதான் சரி தம்பி.



அன்பர்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. 



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன் திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

Tuesday, November 18, 2014

சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான ஒன்று !! அவ்வாறு செய்வது என்பது மிகவும் அரிதானது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  வினைத்திட்பம்.


குறள் எண் :-  664.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 


சொல்லிய வண்ணம் செயல்... ... ... 



விளக்கம் :-  இந்த விஷயத்தை நான் இவ்வாறு 


செய்து முடித்திடுவேன் என்று வாயால் 


சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான 


செயல் ஆனால் அப்படி சொல்லியபடி அந்தச் 


செயலை செய்து முடிப்பது என்பது மிகவும் 


அரிதான ஒன்று.  இது திருவள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



பூங்காவனம் :-  ஏண்டா தம்பி புஷ்பவனம் என்ன 


உன்னைய இரண்டு நாளே ஆளையே காணோம்.


எங்க தம்பி போயி இருந்தீங்க ? சொல்லுங்க 


தம்பி சொல்லுங்க ?


புஷ்பவனம் :-  இல்ல அண்ணே நம்ம ஊரிலே 


ரெண்டு நாளா கரண்ட்டே கிடையாது. போயி 


கரண்ட்டு ஆபீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கப் 


போயிருந்தேன். 


பூங்கா :-  அவங்க என்ன சொன்னாங்க ?


புஷ்ப:-   என்னத்தை சொல்வாங்க. கரண்ட் 


வந்தாத்தானே தம்பி நாங்க தர முடியும். நாங்க 


என்ன எங்க வீட்டுக்கா கொண்டு போயிட்டோம் 


அப்படீங்கிறாங்க.


பூங்கா :-  அவங்க மேலேயும் குத்தம் சொல்ல 


முடியாது. மேலே சர்க்காரு சரி இல்லையே தம்பி.


பூராவும் பினாமி அரசாங்கம் இல்ல இப்ப நம்ம 


தமிழ்நாட்டை ஆண்டுக்கிட்டு இருக்கு. தேர்தல் 


நேரத்துலே 2011 என்ன சொன்னாங்க இந்த 


அண்ணா தி.மு.க. காரங்கன்னா நாங்க ஆட்சிக்கு 


வந்தா 3 மாசத்துலே மின்பற்றாக்குறைய அறவே 


நீக்கிடுவோம்.


அது மட்டும் இல்ல, மின் பற்றாக்குறை இல்லாத 


மாநிலமாக ஆக்குவதோடு, மின்மிகுமாநிலமாக 


தமிழகத்தை மாற்றுவோம்என்றுசொல்லித்தான் 


ஒட்டு வாங்கி செவிச்சாங்க. ஆனா நடப்பு அப்படி 


இல்லையே.எல்லாம் நம்ம தலை விதி. 


யாரையும் குத்தம் குறை சொல்லி பயன்இல்லை.


சரி தம்பி. எனக்கு நேரம் ஆச்சு. நாளைக்கு 


மீதியை பேசுவோம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா. பாலு 


( மதுரை T.R. பாலு )


Monday, November 17, 2014

பண்பற்றவர்களின் நட்பு ஒருவருக்கு எத்தகைய பலனைத்தரும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  தீ நட்பு.


குறள் எண் :-  810.                                            



பழகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 


பெருகவிர் குன்றும் இனிது ... ... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  பழகுவார் போன்ற ஆர்வத்தைக் 


கொண்டிருந்தாலும், பன்பற்றவர்களிடம் நாம் 


கொள்ளும் நட்பானது, வளர்வதை விடவும் நாம் 


அழிவதே இனிமையானது. இது வான்புகழ் 


வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                                                 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-                                       


வீரப்பா :- என்னடா தம்பி பாலப்பா, நம்ம அக்கா 


விஜயலட்சுமியை இரண்டு மாசத்துக்கும் மேலா 


காணவே காணோம். எங்க போச்சு அக்கா ? உம்.. 


ஒன்னும் புரியலையே.


பாலப்பா :- அண்ணே உங்களுக்கு விசயமே 


தெரியாது போல இருக்கு. நீங்க என்ன 


செய்தித்தாளேபடிக்கிறது இல்லையா அண்ணே? 


அக்கா விஜயலட்சுமி தனது உண்மையான 


உண்மை வருமானத்தை மறைத்து, உண்மை 


வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த 


வழக்கில், மங்களூரு சிறப்பு நீதி மன்ற நீதிபதி 


சைக்கோ சி.பன்கா அவர்களால் தகுந்த 


ஆதாரங்களால் நாலு வருஷம் சிறைத் 


தண்டனையும் 200 கோடி அமெரிக்க டாலர் 


அபராதத்தொகையும் இந்த அபராதத்


தொகையைக் கட்டத்தவறினால், மேலும் 


ஓராண்டு சிறைத்தண்டனையும் என்ற தீர்ப்பின் 


அடிப்படையில் 21 நாள் சிறைவாசம் அனுபவிச்சு 


அதன் பிறகு, உயர்நீதி மன்றம் போயி, அங்கே 


ஜாமீன் தள்ளுபடி ஆகி, அதுக்கப்புறம், உச்ச நீதி 


மன்றம் போயி அங்கன ஜாமீன் வாங்கிட்டு வந்து 


இப்ப தோட்டத்திலே படுகடுப்பாக ஓய்வு 


எடுத்துக்கிட்டு இருக்காக எனும் செய்தி 


உங்களுக்குத் தெரியாதா ?                                           


வீரப்பா :- தெரியாதுடா தம்பி. தெரிஞ்சா உன்ட்ட 


நான் இதைப்பத்தி கேப்பேனா. எல்லாத்துக்கும் 


காரணம் அவங்க உயிர்த்தோழி புஷ்கலாதான். 


பெரியவங்க, அக்காவுக்கு வேண்டியவங்கஎன்று 


எத்தனையோ பேர் படிச்சுப் படிச்சு சொல்லியும் 


கேக்காம அந்த புஷ்கலாவோட வச்சுக்கிட்டு 


இருந்த நட்பு எங்க கொண்டு போயி நம்ம 


அக்காவை தள்ளியிருக்கு பாத்தியாடா தம்பி !!   


பாலப்பா :-  ஆம் ரொம்ப கரீட்டா சொன்ன 


அண்ணே. நம்ம திருவள்ளுவர்கூட 


அதையேதானே சொல்லியிருக்காரு, நம்ம 


மதுரை TR பாலு ஐயா மேலே குறிப்பிட்டு 


இருக்குற திருக்குறள் மூலமா. கேக்கலையே 


நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் 


உரிய அன்பு அக்கா ஜெயலக்ஷ்மி. கேட்டிருந்தா 


இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா. இப்பப் 


பாரு சட்டமன்ற உறுப்பினர் பதவியும் போயி, 


முதலமைச்சர் அப்படீங்கிற அந்தஸ்தும் போயி 


சாதாரண ஆளா உக்காந்திருக்காங்க.   எல்லாம் 


செய்த பாவமும், வினையும்தான் காரணம். 


ஆண்டவன் விருப்பப்படிதான் இங்கே எல்லாம் 


நடக்குது அப்ப்படீங்கிறதுக்கு இத்த விடவும் 


வேற எதுனாச்சும் உதாரணம் வேணுமா என்ன ?



இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது அன்பர்களே !! மீண்டும் அடுத்த 


பதிவினில் நாம் அனைவரும் சந்திப்போம். 


அதன்பிறகு சிந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!                                                         



அன்புடன் திருமலை. இரா. பாலு.                                  



( மதுரை T.R. பாலு )