Monday, March 31, 2014

நினைத்ததை முடிப்பவரே திண்ணியர் அவர் !! வள்ளுவர் காட்டிய வழி இது !!







              தினம் ஒரு திருக்குறள் !!       




அதிகாரம்    :-  வினைத் திட்பம்.           



குறள் எண்  :-  666.                                       


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 


திண்ணிய ராகப் பெறின்... ... ... ... ... ... ...                   



விளக்கம் :-  தான் எதனை 


எண்ணிஇருந்தோமோ அதனை, 


எண்ணியபடியே செயல் 


ஆக்குவதில், எவர் ஒருவர் உறுதி 


உடையவராக இருக்கின்றாறோ, 


அவரே, எண்ணியவற்றை 


எண்ணியவாறே அடைந்திடுவார். 


இது திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                               



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-         


மேலே குறிப்பிட்ட குறளுக்கு 


இன்றையதினம் இந்தத் தமிழ்கூறும் 


நல்லுலகினில் முத்தமிழ் அறிஞர் 


தலைவர் திரு மு.கருணாநிதி 


அவர்களையும் 



தளபதி திரு மு.க.ஸ்டாலின் 


அவர்களையும் தவிர வேறு எவர் 


இருக்கிறார்கள்? இப்போது அவர்கள் 


இருவரின் எண்ணமும் நடைபெற 


இருக்கின்ற பாராளுமன்றதேர்தலில் 


அதிகபட்சமாக நாற்பதுக்கு நாற்பது 


இடங்களைப் பெற்றாக வேண்டும் 


என்ற ஒன்றேஅவர்களது  எண்ணம் 


ஆகும். 


அதனை நிச்சயம் அவர்கள் முடித்தே 


தீர்வார்கள் என்பதில் எனக்கு 


ஊசியின் முனைஅளவு, கடுகளவு 


எள்ளின் முனையளவு கூட 


சந்தேகம் என்பதே இல்லை. 


அப்படி அவர்கள் வெற்றி 


பெற்றால்தான் தமிழகத்தில் 


இனிவரும் காலத்திலாவது தமிழ் 


வாழ்ந்திடும், தமிழகம் வாழ்ந்திடும், 


தமிழ்இனத் துரோகிகள் கூட்டம் 


தூள் தூளாக, தவிடுபொடியாகிடும், 


அப்படி ஆவது ஒன்றே இன்றைய 


தமிழர்களின் தேவை/


வேண்டுகோள்/பிரார்த்தனை. 


இதனை நிச்சயமாக அந்த எல்லாம் 


வல்ல இறைவன்,


 அளவற்ற அருளாளன், நிகரற்ற 


கொடையாளன் "  அல்லாஹ் "


நிறைவேற்றித்  தந்திடுவார் 


தந்திடவேண்டும் என்று வேண்டி 


விரும்பி அழுது  தொழுது 


கேட்டுக்கொண்டு இந்த நல்லதொரு 


வாய்ப்பினை நல்கிய உங்கள் 


அனைவருக்கும் நன்றி பாராட்டி 


விடைபெறுகின்றேன். வணக்கம் !! 


எனது உயிரினும் மேலான அன்பு 


உடன்பிறப்புகளே !! (தலைவர் 


கலைஞர் அவர்களிடம் இருந்து 


இந்தக் கடைசி வாக்கியத்தை நான் 


சற்று கடன் வாங்கிக்கொள்கிறேன்)

தாலி பெண்ணுக்கு வேலியா ? இல்லை கேலியா ? திருவள்ளுவர் தரும் விளக்கம்.









              தினம் ஒரு திருக்குறள் !!             


அதிகாரம்:வாழ்க்கைத்துணைநலம். 


குறள் எண் :- 57.                                         


சிறைகாக்குங்காப்பு எவன் செய்யும் மகளிர்   


நிறைகாக்குங் காப்பே தலை... ... ...                              



விளக்கம் :-  சிறையில் வைத்து பெண்களை/


மனைவியை காப்பாற்றிட இயலுமா ? பெண்கள் 


தங்களைத் தாங்களே தமது தூய்மையான (?) 


கற்பினால் காப்பாற்றிக் கொள்ளும் காவலே 


தலைசிறந்த காவல் ஆகும்.                                         



நமது நாட்டு விளக்கம் :-  பொதுவாகவே இந்த 


உலகம் ஆண் ஆதிக்க சமுதாய அமைப்பில்       


உள்ளதாகவே உலகம் தோன்றிய நாள் முதல் 


இன்றையதினம் வரை சுழன்று கொண்டு 


இருக்கின்றது என்பதுதான் உண்மை. ஆண்கள் 


ஆயிரமாயிரம் பெண்களைப் பார்க்கலாம், 


பேசலாம்,பழகலாம்,சிரிக்கலாம்,அவ்வளவு ஏன்? 


அதனையும் தாண்டி உடலுறவு கூட வைத்துக் 


கொள்ளலாம். ஆண்களைப் பொறுத்த வரையில் 


அது ஒரு தவறாகவே அவர்களுக்குத் தெரியாது. 


ஆனால் இதற்கு சற்று மாறுதலாக ஒரு பெண் 


வேறு ஒரு ஆடவருடன் நேருக்கு 


நேர் பார்த்தாலே எல்லாம் போச்சு. இவளோட 


புருஷனே கேட்பான் ஏண்டி அவனுக்கும் 


உனக்கும் எத்தனை வருஷமா பழக்கம்டி, 


எனக்குத் தெரியும்டி. நீ அவனோட சிரிச்சு சிரிச்சு 


பேசும் போதே. உள்ளதைச் சொல்லுடி. அவன் 


என்ன உனக்கு மாமனா இல்ல மச்சானா. என்று 


சொல்லிக்கொண்டே இந்தப் பெண்குலம் 


வாங்குகிற அடியும் ஏச்சும் பேச்சும் அப்பப்பா 


சொல்ல வார்த்தை இல்லை இங்கே. எல்லாம் 


இந்தக் கலிகாலத்தின் கொடுமை இது. தாலி 


என்று ஒன்றினைக்கட்டி அதில் மூன்று முடிச்சு 


போட்டுவிட்டால் போதும் அவள் தமக்கு அடிமை 


இதுதான் ஆண்கள் உலகினில் என்றென்றும் 


சட்டம். இந்தத் தாலி உண்மையில் பெண்களுக்கு 


வேலியா ? இதற்கு மனைவி மதிப்புத் தரும் 


வரையில் மட்டுமே அது தாலி. சரிதான் போடா 


என்று புருஷனைப் பார்த்து, வெறுத்து அவள் ஒரு 


முடிவுக்குள் வந்துவிட்டாள் என்று 


வைத்துக்கொண்டால் அந்த மஞ்சள்கயிறு ஒரு 


கேலிதான். கற்பு என்பது பெண் ஆண் 


இருவருக்கும் பொதுவான ஒன்று. அதிலும் 


சென்னை போன்ற பெருநகரங்களில் குறிப்பாக 


வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் 


இன்றைக்கும்கூட தாலிக்கயிறை தங்களது 


மேல் சட்டைக்குள்ளாக மறைத்துக்கொண்டு 


செல்வதை நான் சர்வ சாதாரணமாக இங்கே 


பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். 


இதுவும்கூட கலி காலத்தின் பலகொடுமைகளில் 


இதுவும் ஒன்றுதான். புருஷன் அவனது 


அலுவலகத்தில் வேலை செய்யும் 


மனைவியைவிடவும் அழகான பெண்களோடு 


பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அதுஉடலுறவு 


வரையிலும் கூட செல்வதை ( சம்பந்தப்பட்ட 


பெண்ணும் ஏற்கனவே இன்னொருவருக்கு 


மனைவியாகஇருப்பதுதான்இங்கே வேதனைக்கு 

உரிய விஷயம்) நாம் பார்க்கிறோம். இந்த 


விஷயம் தெரிந்த மனைவி, அவள் என்ன 


செய்வாள் ? அவள் என்ன மரத்தால் செய்த 


பதுமையா என்ன ? அவளும் திசை மாறிய 


பறவையாக மாறி கண்டதே காட்சி, கொண்டதே 


கோலம்என்றுவாழ்வதுதான் இந்ததலைநகரில் 


மிகப் பெரும்பான்மையான இடங்களில் 


அன்றாடம் நடந்துவரும் சம்பவம் இது உண்மை.


இதுதவிர்க்கவேமுடியாதசம்பவமாகஆகிவிட்டது 


என்பதுதான் கண்ணீர் கசிந்திடும் நிகழ்வுகளாக 


உள்ளது என்று சொன்னால் அதில் இரண்டாவது 


கருத்துக்கு இடமில்லை. நடப்பது எல்லாம் அந்த 


நாராயணன் செயலே. அதனால்தான் நான் எந்த 


ஆண்களைச்சந்திக்கின்றபோதும் (அவர்களுக்கு 


எத்தனைகுழந்தைகள் என்று கேட்கும்நேரத்தில்) 


உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று 


கேட்கவே மாட்டேன் அன்பர்களே !!  உங்கள் 


மனைவிக்கு எத்தனை குழந்தைகள் ?என்றுதான் 


கேட்பேன். (அந்தக் குழந்தைகள் யாருக்குப் 


பிறந்திருந்தாலும் கூட ) இறைவன் தவறு 


செய்பவர்களையும், தவறு செய்திடத் 


தூண்டுபவர்களையும் நரகத்தில் 


தள்ளுவானாக.தண்டிப்பானாக.                                 


அன்பே சிவம். அறிவே கடவுள். 


நன்றி வணக்கம் 


 அன்புடன். மதுரை T.R. பாலு.

Sunday, March 30, 2014

மனைவியவள் மெலிந்ததற்கு கணவன்தான் காரணமா ? வள்ளுவர் தரும் விளக்கம் !!










தினம் ஒரு திருக்குறள் !!                         



அதிகாரம்   :-  உறுப்புநலன் அழிதல். 



குறள் எண் :-  1236.                                          


தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் 


கொடியார் எனக்கூறல் நொந்து ... ... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  வளையல்கள் கழன்று, தோள்களும் 


மெலிந்து போனதால், ( இதனைக் காண்போர்) 


எனது காதலரைக்/(கணவரைக்) கொடியவர் 


என்று கூறுவதைக்கேட்டு, மனம் நொந்து 


போகின்றேன்.  இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய திருக்குறளும் அதன்விளக்கமும் ஆகும்.

Saturday, March 29, 2014

நாணமோ இன்னும் நாணமோ ? திருவள்ளுவரின் பார்வையில் !!







தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்  :-  நாண் உடைமை

குறள் எண் :-  1௦18.


பிறர்நாணத் தக்கது தான்நாணா 

                                                             -னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து... ... ... 


விளக்கம் :- பிறர் வெட்கப்படும் 


செயல்களைத் தான் சிதிடும்போது 


யார் ஒருவர் 


வெட்கப்படவில்லையோ 


அவர்களை விட்டு விட்டு நல்ல,நீதி, 


நேர்மை,உண்மை,நியாயம்,சத்தியம் 


இதுபோன்ற அறங்களைச் 


செய்கின்ற குணங்கள் 


நாணப்பட்டு எங்கோ சென்று விடும். 


இது திருவள்ளுவர் அருளிய 


குறளும் விளக்கமும் ஆகும்.



Wednesday, March 26, 2014

பொறுமைசாலிகள் எப்படி இருக்க வேண்டும் ? திருவள்ளுவர் காட்டிய வழி இது !!








தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்      :-  காலம் அறிதல்.


குறள் எண்    :-   485.




காலம் கருதி இருப்பர் கலங்காது 


ஞாலம் கருது பவர்... ... ... ... ... ... 



விளக்கம் :-   உலகத்தையே வெல்ல 

வேண்டும் என்று கருதுபவர் அதற்கு 

உரியநேரம் வரும்வரையில் மிகவும்

பொறுமையுடன் காத்து இருப்பர்.

இது வள்ளுவர் நமக்கு அருளிய 

குறளும் அதற்கு உண்டான விளக்கமும் 

ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


மேலேசொன்ன விளக்கத்திற்கு இன்று

நமது தாழ்ந்த தமிழகத்தில் சிறந்த 

உதாரணத்திற்கு என்று ஒரே ஒருவர் 

மட்டிலுமே இங்கே உலவிக்கொண்டு 

இருக்கிறார். அவர்தான் முத்தமிழ் 

அறிஞர், தி.மு.க. வின் தலைவர்,

அகவை 91 லும் தளராமல். சரியாமல் 

சாய்வுநாற்காலியில் அமர்ந்து கொண்டு 

இந்தத் தமிழகத்திற்கு நல்லதோர் விடிவு 

காலம் கிடைத்திடாமல் எனது உயிர் பிரிய

நான் சம்மதம் தரமாட்டேன் என சூளுரைத்து 

இன்றையதினம், தமிழகம் முழுவதும் 

தனது சூறாவளி சுற்றுப்பயணத்தினைத் 

தொடங்கிய கலைஞர் திரு. மு.கருணாநிதி 

அவர்களைத் தவிர வேறு யார் இருக்க இயலும்?

2௦11 ல் திமுகஆட்சிமாறியபின்னும், அதன் முன்பு 

2௦௦1ல் கழக ஆட்சி மாறி அ.தி.மு.க. ஆட்சியில் 

அமர்ந்தவுடன், கலைஞர் மீதும், அவரது கழக

முன்னணி செயல்வீரர்கள் மீதும், எவ்வளவோ 

அடக்குமுறைகள், கைது நடவடிக்கைகள்,

பொய் வழக்குகள், சிறைவைத்தல், சீரழித்தல் 

என்று மாண்புமிகு (?) முதல்வர் ஜெயலலிதா 

அம்மையார் தொடுத்திருந்தாலும்கூட அவை 

அத்தனையையும் புன்முறுவலுடன் ஏற்றுக் 

கொண்டு, பொறுமையுடன் இருக்கிறாரே 

எதற்காக ? என்று உங்களுக்குத் தெரியுமா ?

அன்பர்களே !!  அங்குதான் அவரது பொறுமைக்கு 

மறைந்த அவரது அரசியல் ஆசான் பேரறிஞர் 

அண்ணா இவருக்கும் இவர் சார்ந்திருக்கும் 

இயக்கத்திற்கும் சொல்லிச் சென்றுள்ள வேத 

வாக்கின் இரகசியம் புலப்படும் அன்பர்களே !!


இந்த இரண்டு வேதவாக்குகள்தான் அவைகள் :- 


1) தம்பி !! கோபத்தை மறந்து விடு !!


2) தம்பி !!எதையும் தாங்கும் இதயம் வேண்டும் !!


அந்தவகையில் எதிர்வரும்பாராளுமன்றத்திற்கு 

நடைபெறக்கூடிய தேர்தலில் தமிழ்நாட்டினில் 

நாற்பதுக்கு 35 தொகுதிகளுக்கு குறையாமல் 

வெற்றி இலக்கு வைத்து செயல்படும் தலைவர் 

கலைஞர் அவர்களின் கரங்களை வலுசேர்ப்பது 

ஒன்றுதான் இங்குள்ள தமிழர்களின் கொள்கை 

இலட்சியம் !! அதுதான் வெல்லும் !! நாளை இந்த 

தமிழகத்திலும் கலைஞர் ஆட்சி மலர்வதற்கு 

இந்த வெற்றி நல்லதொரு வழி வகுக்கும் என்று 

சூளுரைத்து இந்தக் குறள் விளக்கம்கட்டுரையை 

நான் நிறைவு செய்கிறேன் எனது அன்புத்தமிழ் 

உடன்பிறப்புகளே !!                                                                 


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன் மதுரை T.R. பாலு.

Monday, March 24, 2014

நமது வருமானத்தை எப்படி செலவழிக்கவேண்டும் ? வள்ளுவர் தரும் அறிவுரை !!







தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்    :-   வலியறிதல்.


குறள் எண் :-   479.



அளவறிந்து வாழாதான் வாழ்க்கை 

                                                         உளபோல 

இல்லாகித் தோன்றாக் கெடும்... ... ... 


விளக்கம் :-  தனது வருமானத்தின் 


அளவு அறிந்து வாழாதவனுடைய 


வாழ்க்கை எல்லா வளமும் 


இருப்பது போல தோன்றி முடிவில் 


இல்லாமல் கெட்டு அழிந்துபோகும். 


இது வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன்விளக்கமும் 


ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


ராமன் :-  டேய் தம்பி லெட்சுமணா 


உனக்கு சேதி தெரியுமாடா ?


லெட்சு:-  என்னடா இன்னைக்கு புது 


விஷயம் ?சொல்லு. 


சொன்னாத்தானே தெரியும் 


ராமன் :- சொல்றேன். நம்ம தீபக் 


சுந்தரம் இல்ல அவன் இப்ப ரொம்ப 


பணத்துக்குக் கஷ்டப்பட்டு


சிரமப்பட்டு முழிக்கிறானாம்டா.                          

லெட்சு :- என்னடா சொல்றே ? 


ஏண்டா மாசம் 1.5 லட்சம் ரூபாய் 


சம்பளம் வாங்குறானே அவன். 


எப்படிடா அவனுக்கு கஷ்டம் வரும் ?      

ராமன் :-  அதோ தீபக் வர்றான். 


அவனையே நாம கேப்போம். 


என்னடா உன்னைபத்தி ஊர்லே பல 


பேர் பல விதமா பேசுறாங்க ? என்ன 


ஆச்சுடாஉனக்கு. சொல்லுறா.


தீபக்:-  ஆமா நீங்க கேள்விப்பட்டது 


உண்மை.மாசம் சம்பளம் என்னமோ 


ரூபாய் ஒன்னரை லட்சம்.


ஆனா நான் வாங்கியிருக்கிற கடன். 


அதுக்கு நான் ரொம்பவே 


சிரமப்படுகிறேன்டா  


வீட்டுக்கடன் 3௦,௦௦௦ கார் கடன்2௦,௦௦௦ 


இன்சூரன்ஸ் 1௦,௦௦௦கிரெடிட் 


கார்டுக்கு 5௦,௦௦௦ பெர்சனல் லோன் 


2௦,௦௦௦ ஆக மொத்தம் 1,3௦,௦௦௦ 


போச்சுன்னு சொன்னா மீதி 2௦,௦௦௦ ஐ 


வச்சு குடும்பம் நடத்தரொம்ப 


சிரமப்படுகிறேண்டா. என்ன 


செய்யிறதுன்னு ஒண்ணுமே 


புரியலைடா.


ராமன் :- தம்பி பட்டுக்கோட்டை 


கல்யாண சுந்தரம் என்ன 


சொல்லியிருக்கார்னா கடனை 

வாங்கி மாடி வீடு 


கட்டக்கூடாதுன்னு. பேசாம 


வீட்டை, காரை வித்துட்டு மத்த 


கடனை அடை.கிரெடிட்கார்டு அதை 


பாங்க்லே திருப்பி கொடு.


கடனைப்பூராவும் 


அடைச்சாத்தாண்டா மனிசன் 


நிம்மதியா வாழ முடியும். கடனை 


அடிச்சுட்டு ஒரு 1௦,௦௦௦ க்கு வீட்டை 


வாடகைக்கு பிடி.  

நிம்மதியா வாழுடா . உடனே அந்த 


வழியைப் பார். இதுதான் நாங்கள் 


தரும் அறிவுரை.


தீபக்:- ரொம்ப சந்தோஷம்டா. 


இன்னைக்கே அதற்கான முயற்சி 


எடுக்கிறேன். 


ரொம்ப ரொம்ப நன்றி.


****************************************


அன்பர்களே !! குறள் விளக்கம் 


இத்துடன் நிறைவு 


அடைகின்றது.


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு. 

Thursday, March 20, 2014

பெண்ணின் கற்பு நெறியை சிறைவைத்துக் காப்பதால் கெடாது காப்பாற்றிட இயலுமோ ? வள்ளுவர் தரும் விளக்கம் !!




     பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்    



                           ரஹீம் !!






தினம் ஒரு திருக்குறள் !!                         



அதிகாரம்:வாழ்க்கைத்துணைநலம். 


குறள் எண்:-  57.                                               



சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் 

                                                               மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை... ... ... ... 



விளக்கம் :-  மகளிரை (பெண்களை) 


சிறைவைத்துக் காக்கும் வழிமுறை 


என்ன பலனை தந்து விடும் ? 


அவர்கள் நிறை என்னும் பண்பால் 


தங்களைத் தாங்களே காப்பாற்றிக் 


கொள்ளும்  முறையே சிறந்தது 


ஆகும். இது வள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.

Monday, March 10, 2014

திருட்டுத்தனம் மூலமாக சம்பாதித்த பணம் முடிவில் அழிந்தே போகும் !! வள்ளுவர் வாக்கு இது !!










    பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் 



                       ரஹீம் !! 




அஸ்ஸலாமு அலேக்கும் !!



*********************************

தினம் ஒரு திருக்குறள்.

*********************************



அதிகாரம்   :-  கள்ளாமை.


குறள் எண் :-  283.


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 


ஆவது போலக் கெடும்... ... ... ... ... ... ... ... ...




விளக்கம் :-  களவு செய்து 


(திருட்டுத்தனம் மூலமாக--ஊழல் 


செய்து அதன் மூலம்) ஈட்டிய 


பொருள் பெருகுவது போலத் 


தோன்றி, நம்மிடம் இருப்பது போல 


இருந்து, இறுதியில், அந்த செல்வம் 


இயல்பாக இருக்கவேண்டிய கால 


அளவையும் கடந்து இல்லாமல் 


போய் கெட்டுவிடும் காணாமல் 


போய்விடும் தன்மையைப் 


படைத்தது. இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிய குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                   



நமது நாட்டுநடப்பு விளக்கம் :-             



அந்தப் பெண்மணி அந்த 


மாநிலத்தின் தலைமைப் 


பொறுப்பில் ஆளும் முதல் 


அமைச்சர். தனது பதவியைப் 


பயன்படுத்தி இவர் நேர்மைக்கு 


மாறான வழிகளில் பல்லாயிரம் 


கோடிகள் பணத்தைச் சம்பாதித்து 


பதுக்கி வைத்து உள்ளார். ஆனால் 


மனதில் எள்ளின் முனையளவுகூட 


நிம்மதி என்பது கிடையவே 


கிடையாது. உடலில் ஏகப்பட்டநோய் 


அதன் தாக்குதல்கள். இவருக்கு 


உயிர்த்தோழி ஒருவர் உண்டு. 


அவருக்கு இவர்தான் அரசியல் 


ஆலோசகர். இந்தத் தோழிதான் 


இவரைக் கெடுத்து குட்டிச்சுவர் 


ஆக்கிய பெருமை தோழியையே 


சாரும். இவர்கள் நேர்மைக்கு 


புறம்பாக இலஞ்சம், மற்றும் ஊழல் 


செய்து சம்பாதித்த பணத்தின் 


மூலமாக சேர்த்த சொத்துக்களும் 


பல்லாயிரம் கோடிக்கணக்கான 


பணமூட்டைகளும் வள்ளுவர் 


சொன்னது போல காணாது 


போய்விடக் கூடிய அந்த நல்ல 


நாளைத்தான் மாநிலத்தில் வாழ்ந்து 


வரும் மக்கள் எதிர்பார்த்துக் 


காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். 


காலம் தரும் பதிலை யாராலும் 


தடுத்து நிறுத்திட முடியாது. இது 


பேரறிஞர் அண்ணாவின் வாக்கு.

Friday, March 7, 2014

விலைமாதர்கள் உறவு என்பது எப்படிப்பட்ட தன்மையானது. வள்ளுவர்தரும் விளக்கம்.







     பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்


                                                       ரஹீம் !!    








தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்   :-   வரைவின் மகளிர்.


குறள் எண்  :-   923.


பொருட்பெண்டிர் பொய்மைமுயக்கம் 

                                                                       இருட்டறையில் 

ஏதில் பிணந்தழீஇ யற்று... ... ... ... ... ... 



விளக்கம் :-  பொருள் ஒன்றையே விரும்பும் 



விலைமாதுவின் பொய்யான தழுவுதல் எனும் 



உறவு என்பது எப்படிப்பட்டது என்றால் நமக்கு 



முன்பின் கொஞ்சம்கூட அறிமுகம்இல்லாதொரு 



நபர் அவரது பிணத்தை இருட்டறையில் கட்டித் 



தழுவினாற்போன்றது.



இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 



குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

Tuesday, March 4, 2014

குறிப்பு அறிதல் !! காமத்தில் இது மிகமிக அவசியமானது !! வள்ளுவர் வாக்கு இது !!







பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம் 



அஸ்ஸலாமு அலைக்கும் !!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய அல்லாஹ்வின்


திருப்பெயரால் நான் இந்த திருக்குறள் 


விளக்கத்தை நான் இங்கே பதிவு 



செய்கிறேன்.



தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-  குறிப்பறிதல்.


குறள் எண் :-  1௦91.



இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 


நோய்நோக்கொன்  றன்நோய் மருந்து... ... ... ... ...



விளக்கம் :-  இவளுடைய மை தீட்டிய கண்களில் 


உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும். 


அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் 


நோக்கம். மற்றொன்று அந்நோய் தீர்க்கும் 


மருந்தாகும்.                                                             


மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் நாம் 


அனைவரும் சந்திப்போம்.                                      


நன்றி !!  வணக்கம் !!                                                           



அன்புடன் மதுரை T.R.பாலு.

Saturday, March 1, 2014

கயவர்கள் மக்களைப்போலவே இருக்கிறார்கள் !! கவனம்..கவனம்...வள்ளுவர் தரும் எச்சரிக்கை !!










   பிஸ்மில்லாஹ் ஹிர் ரெஹ்மானிர் 


                                ரஹீம் !!




தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  கயமை.



குறள் எண் :-    1௦71.                                     



மக்களே போல்வர் கயவர் அவரன்ன 


ஒப்பாரி யாங்கண்டது இல்... ... ... ...     



விளக்கம் :-  கயவர்கள் என்போர் 



மக்களைப்போலவே இருப்பார். 



அவரைப்போல் உருவில் ஒத்த 



நபர்களை வேறு எவ்விதத்திலும் 



யாம் கண்டதே இல்லை. இது 



வான்புகழ் வள்ளுவர் நமக்கு 



அருளிய குறளும் அதன்விளக்கமும் 



ஆகும்.