Wednesday, March 26, 2014

பொறுமைசாலிகள் எப்படி இருக்க வேண்டும் ? திருவள்ளுவர் காட்டிய வழி இது !!








தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்      :-  காலம் அறிதல்.


குறள் எண்    :-   485.




காலம் கருதி இருப்பர் கலங்காது 


ஞாலம் கருது பவர்... ... ... ... ... ... 



விளக்கம் :-   உலகத்தையே வெல்ல 

வேண்டும் என்று கருதுபவர் அதற்கு 

உரியநேரம் வரும்வரையில் மிகவும்

பொறுமையுடன் காத்து இருப்பர்.

இது வள்ளுவர் நமக்கு அருளிய 

குறளும் அதற்கு உண்டான விளக்கமும் 

ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


மேலேசொன்ன விளக்கத்திற்கு இன்று

நமது தாழ்ந்த தமிழகத்தில் சிறந்த 

உதாரணத்திற்கு என்று ஒரே ஒருவர் 

மட்டிலுமே இங்கே உலவிக்கொண்டு 

இருக்கிறார். அவர்தான் முத்தமிழ் 

அறிஞர், தி.மு.க. வின் தலைவர்,

அகவை 91 லும் தளராமல். சரியாமல் 

சாய்வுநாற்காலியில் அமர்ந்து கொண்டு 

இந்தத் தமிழகத்திற்கு நல்லதோர் விடிவு 

காலம் கிடைத்திடாமல் எனது உயிர் பிரிய

நான் சம்மதம் தரமாட்டேன் என சூளுரைத்து 

இன்றையதினம், தமிழகம் முழுவதும் 

தனது சூறாவளி சுற்றுப்பயணத்தினைத் 

தொடங்கிய கலைஞர் திரு. மு.கருணாநிதி 

அவர்களைத் தவிர வேறு யார் இருக்க இயலும்?

2௦11 ல் திமுகஆட்சிமாறியபின்னும், அதன் முன்பு 

2௦௦1ல் கழக ஆட்சி மாறி அ.தி.மு.க. ஆட்சியில் 

அமர்ந்தவுடன், கலைஞர் மீதும், அவரது கழக

முன்னணி செயல்வீரர்கள் மீதும், எவ்வளவோ 

அடக்குமுறைகள், கைது நடவடிக்கைகள்,

பொய் வழக்குகள், சிறைவைத்தல், சீரழித்தல் 

என்று மாண்புமிகு (?) முதல்வர் ஜெயலலிதா 

அம்மையார் தொடுத்திருந்தாலும்கூட அவை 

அத்தனையையும் புன்முறுவலுடன் ஏற்றுக் 

கொண்டு, பொறுமையுடன் இருக்கிறாரே 

எதற்காக ? என்று உங்களுக்குத் தெரியுமா ?

அன்பர்களே !!  அங்குதான் அவரது பொறுமைக்கு 

மறைந்த அவரது அரசியல் ஆசான் பேரறிஞர் 

அண்ணா இவருக்கும் இவர் சார்ந்திருக்கும் 

இயக்கத்திற்கும் சொல்லிச் சென்றுள்ள வேத 

வாக்கின் இரகசியம் புலப்படும் அன்பர்களே !!


இந்த இரண்டு வேதவாக்குகள்தான் அவைகள் :- 


1) தம்பி !! கோபத்தை மறந்து விடு !!


2) தம்பி !!எதையும் தாங்கும் இதயம் வேண்டும் !!


அந்தவகையில் எதிர்வரும்பாராளுமன்றத்திற்கு 

நடைபெறக்கூடிய தேர்தலில் தமிழ்நாட்டினில் 

நாற்பதுக்கு 35 தொகுதிகளுக்கு குறையாமல் 

வெற்றி இலக்கு வைத்து செயல்படும் தலைவர் 

கலைஞர் அவர்களின் கரங்களை வலுசேர்ப்பது 

ஒன்றுதான் இங்குள்ள தமிழர்களின் கொள்கை 

இலட்சியம் !! அதுதான் வெல்லும் !! நாளை இந்த 

தமிழகத்திலும் கலைஞர் ஆட்சி மலர்வதற்கு 

இந்த வெற்றி நல்லதொரு வழி வகுக்கும் என்று 

சூளுரைத்து இந்தக் குறள் விளக்கம்கட்டுரையை 

நான் நிறைவு செய்கிறேன் எனது அன்புத்தமிழ் 

உடன்பிறப்புகளே !!                                                                 


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment