Tuesday, August 30, 2016

மனைவி இடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் கணவனிடம் என்னென்ன இருக்காது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  பெண்வழிச் சேறல்.

குறள் எண் :-  909.






அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் 

பெண்ஏவல் செய்வார்கண் இல்... ... ...


பொருள் :-  அறம் செய்தலும், மதிப்புடைய பொருளைத்தேடுதலும், பிற செயல்களில் ஈடுபடும் குணமும் மனைவி இடும் ஏவலைக் கேட்டு செயல்படுபவரிடம் இருக்காது. இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

குப்பு :- வாங்க தம்பி  அப்பு. என்ன முகம் கொஞ்சம் வாட்டமா இருக்கு ? இன்னாடா விசயம். அட..நான்..உன் அண்ணன் கேக்குறேன் இல்ல..சும்மா சொல்றா தம்பி.

அப்பு :- அண்ணே உங்கட்ட  சொல்றதுக்கு என்ன ?
என் வூட்டுக்காரி நேத்து ஒரு வேலை செய்யச் 
சொல்லிட்டு அப்பாலே  வேலைக்கு போய்ட்டா.

குப்பு :- சரி. செஞ்சு முடிச்சு தொலைக்க வேண்டியதுதானே ?அத்த விட உனக்கு என்ன பெரிய கலெட்டர்வேல பாக்கீகளோ ? உம்..சொல்லு..சொல்லு..

அப்பு :-  அட..மறதி அல்லாருக்கும் பொதுதானே.
மறந்துட்டேன். ஆபீஸ்லே இருந்து வந்து திட்டு 
திட்டுனா பாரு. வீடே ரெண்டாயுருச்சுஅண்ணே .
உம்.. அல்லாம் என் தல எழுத்து. அப்பாலே 
நானும் உங்கள  மாதிரி நாலு எழுத்து படிச்சு 
வேலைக்கு போயி நாலு காசு சம்பாரிக்கிற 
புருசனா இருந்திருந்தேன்னா இவட்ட இப்டி 
அல்லாம் திட்டு வாங்கனும்னு என்ன விதியா?
என்ன அண்ணே  நான் சொல்றது ?

குப்பு :-  சரி  வுடுறா தம்பி . இதுதான் உன்னோட 
வாழ்க்கைன்னு ஆயிப்போச்சு. அதுக்கு நீ 
தகுந்தாப்புலே நடந்துக்கிடுறா. ஆனா ஒன்னு.

அப்பு :- என்னண்ணே தப்பு தப்பா நீங்க சொல்லுதீக.ஆனா வந்து ரெண்டாவது தானே அ
தானேடா ஒன்னு.

குப்பு :- இந்த குசும்புக்கு ஒன்னும் குறைச்சல் 
இல்ல உன்ட்டே.  ஆனா நம்ம திருவள்ளுவர் 
இன்னா சொல்லிருக்கார்னா ?

அப்பு :- இன்னா அண்ணே  சொல்லிக்குராறு ?

குப்பு :- அப்பாலே நீ கோச்சுக்க படாது. இத்த நான் 
சொல்லலே. அப்பாலே வள்ளுவர்தான்டா அம்பி 
சொல்லிக்கிறாரு. அது இன்னான்னா வந்து 
வீட்டுக்காரி போடுற கட்டளைகளுக்கு அடிபணிஞ்சுநடக்குற ஆம்புளையாளுகளாலே எந்தவித நல்ல விசயமும் செய் முடியாது. அவங்க சம்பாரிக்க முடியாது. சுதந்திரமா எந்த வேலையுமே செய் முடியாது. அது உன் விசயத்துலே பாத்தா சரிதானே. அட..இன்ன..நான்..சொல்றது ?
ஐயோ...அடிக்க..வராதடா..தம்பி..நான் இப்ப..
கிளம்புறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Thursday, August 25, 2016

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வத்தை அழிக்கும் கருவி எது ? வள்ளுவர் தந்த விளக்கம் இது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-   கொடுங்கோன்மை.

குறள் எண் :-  555.



அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 

செல்வத்தைத் தேய்க்கும் படை... ... ... 


பொருள் :-  நாட்டுமக்கள் துன்பம் தாளாமல் 
விடுகின்ற கண்ணீர்தான் ஆட்சி அதிகாரம் 
செய்பவர்களின் செல்வத்தை அழிக்கும்
போர்க்கருவி ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

இந்தத் திருக்குறளுக்கும் அதன் மேற்சொன்ன 
விளக்கத்திற்கும், தமிழ்நாட்டில் ஆளும் 
அதிகார வர்கத்திற்கு பொருத்தமாக வாசகர்கள் 
இணைவைத்துப் பார்த்தால், அதற்கு கட்டுரை 
ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


Tuesday, August 23, 2016

பெருமை என்றால் என்ன ? சிறுமை என்றால் என்ன ? திருவள்ளுவர் அருளிச்சென்றது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  பெருமை.

குறள் எண் :-  797.



பெருமை பெருமிதம் இன்மை சிறுமை 
பெருமிதம் ஊர்ந்து விடல்... ... ... 

பொருள் :-  செருக்கு (திமிர்,ஆணவம்,அடங்காமை) கொள்ளாமல் இருப்பதே பெருமை ஆகும். காரணம் ஏதுமின்றி செருக்குடன் திரிவதே சிறுமை ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

சுப்பையா :-  வணக்கம் தம்பி கந்தையா.என்ன எப்படி சுகம் எல்லாம்.

கந்தையா :-  அண்ணே !! உங்க அன்பும் ஆதரவும் இருக்குறவரை என் சுகத்துக்கு என்ன குறைச்சல். நல்லா இருக்கேன்.

சுப்ப:-  ஆமா ஏண்டா தம்பி இந்த பொம்பளே நான் யாரைச் சொல்லுதேன்னு உனக்கு புரியுதா ?

கந்த:-  என்னண்ணே !! இது புரியாமலா?

சுப்ப:- அது ஏண்டா தம்பி இம்புட்டு திமிர்,ஆணவம்,அடங்காமையோட அலையுது?

கந்த:-  எல்லாம் பணத்திமிர்தான் வேற என்ன ? கேக்க ஆள் இல்லைங்கற மமதை.பெரும்பான்மை கையிலே இருக்கின்ற அகம்பாவம் இதாண்ணே காரணம்.

சுப்ப:- ஏண்டா தம்பி இதெல்லாம் நிலைக்குமா?

கந்த :-  அண்ணே எல்லாம் கொஞ்சகாலம்தான்.ஆனானப்பட்ட இதுக்குமேலே திமிரோட திரிஞ்சவங்க அம்புட்டுப்பேரும் மண்ணோடு மண்ணாகிப் போனானுவ. இது மட்டும் என்ன சாஸ்வதமாவா இருக்கப்போகுது. எல்லாம் கொஞ்சகாலம்தான். தசா புத்தி நல்லா இருக்கும்வரை நடக்கும்.  

சுப்ப :- அப்புறம் தம்பி ?

கந்த:- அப்புறம் என்ன ? கோவிந்தா கோவிந்தா !!எல்லோரும் போன இடத்துக்கு போக வேண்டியதுதான். கொஞ்சம் எனக்கு வேலை கிடக்கு. அண்ணே நாம சாயந்திரமா பாப்போம்.நான் போயிட்டு  வாரேன் அண்ணே.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Monday, August 22, 2016

முறைதவறி ஆளும் மன்னவன் முடிவில் இழப்பது எது ? வள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.

குறள் எண் :-  554.





கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 

சூழாது செய்யும் அரசு... ... ... 


பொருள்  :-  பின்னால் வருவதை அறியாமல் 
முறை தவறி ஆட்சி செய்திடும் மன்னவன் 
வருவாயையும் குடிமக்களையும் முடிவில் 
இழப்பான்.  இது வள்ளுவர் நமக்கு அருளிய 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-

ஜபாரு :- என்ன மன்னாரு, ஒரே சந்தோசமா 
இருக்காப்புலே. இன்னாடா நயினா விசயம் ?
சும்மா சொல்றா தம்பி.

மன்னாரு :-  அது ஒன்னும் இல்ல அண்ணே 
நேத்து எங்க ஆத்தா, யாரோட எதிர்ப்பும் 
இல்லாங்காட்டி, சோலிய முடிச்சுப்புட்டாங்க 
இல்ல அதான் செம ஜாலியா கீறேன்.

ஜபாரு :- இன்னாடா சொல்றே ? உங்க ஆத்தா 
உங்க நயினாவை போட்டுத் தள்ளிருச்சா ?

மன்னாரு :- அட..உங்க வாயிலே வசம்ப வச்சு 
தேய்க்க. அண்ணே நான் இன்னா சொல்றேன்னு 
உங்களுக்கு புரியலையா ? எங்க ஆத்தான்னு 
சொன்னது ஆளும் எங்க அம்மாவை இப்ப 
புரிஞ்சுதா ?

ஜபாரு :- பார்ரா. உம்.. என்னமோ உங்கட்டே 
அதிகாரம் கீது அதாலே இந்த ஆட்டம் போட்டு 
அலையுறீங்க. செய்ங்க செய்ங்க ஆனா ஒன்னு 
தம்பி எதுலையும் ஒரு முறை இருக்கணும் 
அப்பாலே அது இல்லன்னு வச்சுக்க,அது யாரா 
இருந்தாலும், மன்னவனா இருந்தாலும் ஆளும் 
அதிகார வர்க்க தலயா இருந்தாலும் கடோசிலே 
அம்புட்டும் காலியாப்போகும் அப்டீன்னு நான் 
சொல்லலே தம்பி நம்ம வள்ளுவர் ஐயாதான் 
சொல்லிகீறாரு. அத்த நம்ம மதுரை பாலு ஐயா 
இன்னக்கி எடுத்து போட்ட்ருக்குற குறள் படிச்சு 
சொல்றேன்.பாத்துக்க.உங்களுக்கும்உங்களோட 
கூட்டத்துக்கும் சீக்கிரமே கருமாதி வரப்போது 
அம்புட்டுத்தான் சொல்வேன். வரட்டா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு. 

Sunday, August 21, 2016

அழிந்து போக நினைப்பவர்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்கள் யாவை ? திருவள்ளுவர் அருளியது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மடியின்மை.

குறள் எண் :-  605.




நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கண்... ... ...

பொருள்  :-  தாமதமாக காரியங்கள் செய்தல்,
மறந்து போகுதல்,சோம்பல் கொள்ளுதல்,
உறங்குதல், இந்த நான்கு பழக்கங்களும்,
அழிந்து போகக்கூடியவர்கள் தாமே 
விரும்பி ஆசையோடு அணிந்துகொள்ளும் 
அணிகலன்கள் ஆகும்.  இது வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.                                               


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன். மதுரை. T.R. பாலு.

Friday, August 19, 2016

தவம் புரிந்து வாழும் முனிவர்களின் வாழ்க்கையை விடவும் மேலானது எது ? வள்ளுவர் தந்த விளக்கம் !!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :- இல்வாழ்க்கை.

குறள் எண் :-  48.



ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து... ... ... 

பொருள்  :-  இல்வாழ்க்கைதனை அதனுடைய 
இயல்புத்தன்மை கெடாதவாறு நடத்திச் 
செல்பவன், ஆசைகளை விட முயலும் 
துறவிகளை விடவும் மேன்மையானவன்.
இது வான்புகழ் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

( இன்று தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 
திருமண தேதி ஆகும்.  அதனை முன்னிட்டு 
இந்தத் திருக்குறள் இங்கே பதிவிடப்பட்டு 
உள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.)

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R. பாலு.

Thursday, August 11, 2016

அறிவற்றவர்கள் நிறைந்த சபையில் அறிஞர்கள் பேசினால், அது எதற்கு ஒப்பாகும் ? திருவள்ளுவர் கூறிய கருத்து !!





தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  அவை அறிதல்.

குறள் எண் :-   720.




அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் 
அல்லாதார்முன் கோட்டி கொளல்... ... ...

பொருள் :-  தம்மைப்போன்று அறிவுடையார் அற்ற சபையில், நல்ல கருத்துக்களைச் சொல்வது,தூய்மை இல்லாத இடத்தில், அமிழ்தத்தை ஊற்றியதைப் போன்றது. இது வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் பொருளுமாகும்.

நாட்டு நடப்பு விளக்கம்:-

சங்கிமங்கி :-  என்னடா மங்கி சங்கி இப்ப 
நடந்துட்டு இருக்கிற சட்டமன்றக் கூட்டத்தில் 
நம்ம தல தளபதி புள்ளி விவரங்களோட எப்டி 
பேசி சும்மா கலக்குறாரு பாத்தியாடா ?

மங்கிசங்கி :-  ஆமா ..நானும் பாத்தேன் அத்த.
ஏண்ணே நான் கேக்கேன், நம்ம தளபதி நல்ல 
அரசியல்லே அனுபவசாலி. அதிலும் பழுத்த 
அரசியல்வாதி. அவர் போயிட்டு இந்த ஒன்னும் 
தெரியாத முட்டாப்பயலுவ நிறைஞ்ச அந்த 
சபையிலே ஏன் பேசணும் ? இப்டி பேசினா 
அது எதுக்கு ஒப்பாகும் அப்டின்னு நம்ம மதுரை 
TR.பாலு அவுக எழுதியிருக்குற தினம் ஒரு 
திருக்குறள் பகுதியிலே படிச்சேன் அதான் 
நான் உங்கட்ட கேக்குதேன்.

சங்கிமங்கி :- தம்பி நீ சொல்லறது என்னவோ 
சரிதான். ஆனா நம்மள தேர்ந்தெடுக்குற அந்த 
பகுதி மக்களுக்காக, நாம எதுனாச்சும் பேசித் 
தானேடா ஆவணும். அதுக்குத் தாண்டா நம்ம 
தளபதி, ரொம்ப பொறுமையோட பேசுறார்.
என்ன புரிஞ்சுதா ? சரி தம்பி நான் கடைக்குப் 
போவனும். வரட்டா ?

மங்கிசங்கி :- அண்ணே பாத்து சூதானமா நீங்க 
போய்ட்டு வாங்கண்ணே. அப்பாலே நாம 
சாயங்காலம் பூங்காலே சந்திச்சு பேசுவோம்.

**********************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.

Sunday, August 7, 2016

மனம்போன போக்கில் செலவு செய்பவன் கதி என்ன ஆகும் ? திருவள்ளுவர் கருத்து இதுதான் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  வலியறிதல்.

குறள் எண் :-  479.




அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்... ... ...

பொருள் :-  வருவாயின் அளவை அறிந்து அதற்கு 
ஏற்றவாறு வாழாதவனுடைய வாழ்க்கை, 
இருப்பது போலத் தோன்றி முடிவில் எதுவும் 
இல்லாமல், அழிந்தே போகும். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

சின்னச்சாமி :-  என்ன தம்பி கண்ணுச்சாமி நம்ம 
பெருமாள்சாமி இன்னடா ஆனான் ? ஒரு மாசமா 
வீடு பூட்டியே இருக்கு. ஆளை கண்ணுலேயே 
பாக்க முடிலே. உனக்குஎதுனாச்சும்தெரியுமாலே.

கண்ணுச்சாமி :-  அண்ணே !! உங்களுக்கு மேட்டரே தெரியாதா ?

சின்ன :- என்னால..மேட்டர்..கீட்டர்..ன்னு பேசிட்டு 
தமிழ்லே பேசுலே.அப்பாலே அறைஞ்சு புடுவேன்.

கண்ணு :-  அண்ணே. அவன் ஒரு ஒட்டைக்கை
அப்டீங்கறது அல்லாருக்குமே தெரியும். சும்மா 
கண்டமேனிக்கு செலவு செஞ்சுட்டு இருந்தான்.
தன்னோட இருப்பு இன்னா, வரவு இன்னா, அத்த 
தெரிஞ்சுகிட்டு, அதுக்குள்ளே அவன் வாழலே 
அண்ணே. அதான் கடோசியிலே கோவிந்தா ஆயிப்போயி, ஓடிப்போயிட்டான் அண்ணே. இந்த விசயத்தை நம்ம திருவள்ளுவர் ஒரு குறள்லே அருமையா எடுத்து எழுதிருக்காரு. அதத்தான் நம்ம மதுரை T.R.பாலு சார் இன்னைக்கு தனது முகநூல் பதிவுலே தினம் ஒரு திருக்குறள்லே பதிவு பண்ணிருக்கார் அண்ணே. இப்ப அத்த படிச்சுட்டுத்தான் வாரேன். அப்பாலே எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு. பொழுது சாஞ்ச பொறவு நான்வந்துஉங்களபாக்குறேன்அண்ணே.
வரட்டா ?

******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Wednesday, August 3, 2016

அடங்காப்பிடாரித்தனத்தைப் பற்றி திருவள்ளுவர் சொல்லும் கருத்து என்ன ?







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  அடக்கம் உடைமை.

குறள் எண் :-  121.



அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 

ஆரிருள் உய்த்து விடும்... ... 


பொருள் :-  அடக்கம் ஒருவரைக் கடவுளைப் 
போல பெருமை அடையச் செய்திடும்.  ஆனால் 
அடங்காமையோ, ஒருவனை/ஒருத்தியை 
அறியாமை என்னும் இருளில் தள்ளி விடும்.         இது தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

சந்திரா :-  ஏண்டி இந்திரா, நேத்து சட்டமன்ற 
நடவடிக்கையை தொலைக்காட்சியில்
செய்தி வாசிக்குறச்சே பாத்தியாடி.

இந்திரா :- ஆமா, அந்தக் கன்றாவிய என் ரெண்டு 
கண்ணாலேயும் பாத்தேன்.

சந்திரா :- ஏண்டி அந்தப் பொம்பளே இம்புட்டு 
திமிர்பிடிச்சதனமா யாரையுமே மதிக்காம 
அடங்காப் பிடாரியா பேசுது ?

இந்திரா :-  அக்கா, அந்த பொம்பள சினிமாலே 
என்ன கதா பாத்திரம் போட்டுக்கிட்டு வந்துச்சோ 
அதே மாதிரிதான் வாழ்கையிலேயும் இருந்துட்டு 
வருது. புரட்டு நடிகரும் அத எம்புட்டோ திருத்த 
பாத்து முடியாம போனதாலே தான் இந்தப் 
பொம்பளே தலையிலே தண்ணிய தெளிச்சுட்டு 
மஞ்சுளா,லதா, சந்திரகலா அப்டீன்னு போயிட்டார்.ஆனா இந்தப் பொம்பளே ராஜீவ் காந்திய "கையிலே"போட்டுக்கிட்டு என்னென்ன ஜில்லாலங்கடி வேல பாத்துச்சுன்னு என் வீட்டுக்காரர் அடிக்கடி என்கிட்டே சொல்வார்டி. இந்த பொம்பளே கூடிய சீக்கிரம் தன்னோட மதிப்பையும் மரியாதையும் இழந்து இருட்டு அறையில் ( காராக்கிரகம்- ஜெயில்) போய்
உக்காரும் நாள் வெகு தொலைவில் இல்ல அக்கா.இதே கருத்தைத்தான் நம்ம மதுரை TR பாலுசார் இன்று எழுதியுள்ள திருவள்ளுவரின் , தினம் ஒரு திருக்குறள் பகுதியில்போட்டுருக்கார் அக்கா படிங்க. நான் போயி காய் வாங்கிட்டு வரேன் என் நாத்தனார் நாகலட்சுமி இன்னைக்கு வந்து எங்க வூட்லே சாப்பிட வருதாம். போயிட்டு வாறன் அக்கா.

******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Monday, August 1, 2016

யாரைக்கண்டு நாம் அஞ்சிட ( பயம்கொள்ள ) வேண்டும் ? திருவள்ளுவர் கருத்து !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  உட்பகை.

குறள் எண் :-  882.


வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக 

கேள்போல் பகைவர் தொடர்பு... ... ...

பொருள் :-  வாள் போல, வெளியில் தெரியும் 
பகைவர்களைக் கண்டு நாம்அஞ்சிடத் தேவையில்லை.உறவினர் போல மறைந்திருக்கும் பகைவர்களைக் 
கண்டு அஞ்ச வேண்டும். இது திருவள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
பொருளுமாகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கவிதா :- என்ன நமீதா அக்கா நம்ம தோழியோட 
நிலைமை கடைசியிலே இப்படி ஆயிருச்சே.
நமீதா :- யாரைடி சொல்லுறே நீ ?
கவி :-  அதான் நம்ம மேட்டுத்தெரு மேனகா 
அவளைப் பத்தித்தான் சொல்றேன்.
நமீ:-  ஒ.  அவ கூடவே ஒண்ணா உரசிட்டே 
ஒட்டிக்கிட்டு இருந்தாளே அந்த ஓடுகாலி 
புவனா, அவளைப்பத்தியா ?
கவி :- ஆமா அக்கா. மேனகா அவள எவ்வளவு 
நம்பி இருந்தா. உசுரையே வச்சிருந்தா. 
கடைசியிலே என்னாடான்னு பாத்தா, ஒருநாள் 
இவ பாடுபட்டு சேத்து வச்சிருந்த அம்புட்டு 
பணம்,நகை, அல்லாத்தையும் சுருட்டிகிட்டு,
திருடிட்டு ஓடிப்போயிட்டாளே அக்கா. உம்..
இது என்ன கொடுமை ?
நமீ :- அடியே கிறுக்குச் செருக்கி. நீ ஒருத்தி 
உலகம் புரியாதவளாவே இருக்கியேடி. நம்ம 
வள்ளுவர் இல்ல திருவள்ளுவர் அவர் இன்னாடி 
சொல்லிருக்கார் ? அதான் நம்ம மதுரை TRபாலு 
சார், தினம் தினம் எழுதிட்டு வர்றாரே தினம் ஒரு 
திருக்குறள் அப்டின்னு முக நூல்லே. அத்தை நீ எங்கே படிக்கப்போறே. படிடி அதை சோம்பல் படாமே. இன்னைக்கு கூட அவரு நீ சொன்ன இத்தப்பத்தித்தான்டி எழுதியிருக்கார் 
யாரைப் பாத்து நாம பயப்படணும்னு சொல்லி.
அதான் நான் யாரையுமே நம்பறதே இல்லை.
சரி..சரி..நீ இடத்தைக் காலி பண்ணு; நான் வெளியே போகப்போறேன். வரட்டா.
***************************************************நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு.