Sunday, November 29, 2015

மரணம் என்பது எதனைப் போன்றது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !! உங்களுக்காக !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  நிலையாமை.

குறள் எண் :-  339.


உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி 

விழிப்பது போலும் பிறப்பு... ... ... 


பொருள் :-  இறப்பு (மரணம்) என்பது உறங்குவது 
போன்றது.  பிறப்பு என்பது உறக்கத்தில் இருந்து 
விழிப்பதைப் போன்றது.  வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச் சென்ற குறளும் விளக்கமும் 
ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :- வாங்க தம்பி கருணா. ஆமா நேத்து உங்க தெருவிலே யாருடா தம்பிபுட்டுக்கிட்டா. ஏகப்பட்டகூட்டம்,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டமும் அமர்க்களமா இருந்துச்சே. யாருடா தம்பி ?

கருணா :-  நம்ம கந்தசாமி செட்டியார்தான். அண்ணே முந்தாநேத்து ராத்திரித்தான் அவரோட அரைமணிக்கும் மேலா நான் பேசிக்கினு இருந்தேன். காலைலே பாத்தா சங்கு செகண்டி சத்தம் அவரு வீட்டுலே. என்னால நம்பவே முடியல அண்ணே.

கந்தன் :- தம்பி. இதுதான் மனித வாழ்க்கையின் உண்மையான நிலைப்பாடு.நம்ம வள்ளுவர் இன்னாசொல்லிகீறாரு.அட..நம்ம..பாலு..சார்......மேலே எழுதிருக்க குறளைப்படிங்க தம்பி. அர்த்தம் புரியும். இதுதான் உலகம். இது 
மட்டுமே உண்மை. இத்த புரிஞ்சுக்காம நம்ம நாட்டுலே இன்னாடான்னா ஊரை அடிச்சு உலையிலே போட்டு கோடிகோடியா கொள்ளை அடிக்கிராய்ங்க. சினிமா தியேட்டர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குறாய்ங்க.
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் தம்பி நாம 
வாழுற இந்த உலகத்துலே. புரிஞ்சுக்க. வரட்டா.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.

2 comments:

  1. செட்டியார், நாயுடு, ராவ், ரெட்டி, பிள்ளைவாழ்... கடந்த 70 ஆண்டுகளா விளம்பர படுத்துனது போறும்! இனி பறையர் வன்னியர் பள்ளர்-னு விளம்பரப்படுத்தி எல்லா சாதிக்குமான சமத்துவ சமூக நீதியை செய்ங்க!!!

    ReplyDelete
  2. Fungal karuththu varaverppukkum matrum pariseelanaikkum uriyathuthaan. Aanaal
    ithu seithida vendiya porupum kadamaiyum Arasaangaththidam allavaa irukkindrathu ?

    ReplyDelete