Monday, March 31, 2014

நினைத்ததை முடிப்பவரே திண்ணியர் அவர் !! வள்ளுவர் காட்டிய வழி இது !!







              தினம் ஒரு திருக்குறள் !!       




அதிகாரம்    :-  வினைத் திட்பம்.           



குறள் எண்  :-  666.                                       


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 


திண்ணிய ராகப் பெறின்... ... ... ... ... ... ...                   



விளக்கம் :-  தான் எதனை 


எண்ணிஇருந்தோமோ அதனை, 


எண்ணியபடியே செயல் 


ஆக்குவதில், எவர் ஒருவர் உறுதி 


உடையவராக இருக்கின்றாறோ, 


அவரே, எண்ணியவற்றை 


எண்ணியவாறே அடைந்திடுவார். 


இது திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.                                                               



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-         


மேலே குறிப்பிட்ட குறளுக்கு 


இன்றையதினம் இந்தத் தமிழ்கூறும் 


நல்லுலகினில் முத்தமிழ் அறிஞர் 


தலைவர் திரு மு.கருணாநிதி 


அவர்களையும் 



தளபதி திரு மு.க.ஸ்டாலின் 


அவர்களையும் தவிர வேறு எவர் 


இருக்கிறார்கள்? இப்போது அவர்கள் 


இருவரின் எண்ணமும் நடைபெற 


இருக்கின்ற பாராளுமன்றதேர்தலில் 


அதிகபட்சமாக நாற்பதுக்கு நாற்பது 


இடங்களைப் பெற்றாக வேண்டும் 


என்ற ஒன்றேஅவர்களது  எண்ணம் 


ஆகும். 


அதனை நிச்சயம் அவர்கள் முடித்தே 


தீர்வார்கள் என்பதில் எனக்கு 


ஊசியின் முனைஅளவு, கடுகளவு 


எள்ளின் முனையளவு கூட 


சந்தேகம் என்பதே இல்லை. 


அப்படி அவர்கள் வெற்றி 


பெற்றால்தான் தமிழகத்தில் 


இனிவரும் காலத்திலாவது தமிழ் 


வாழ்ந்திடும், தமிழகம் வாழ்ந்திடும், 


தமிழ்இனத் துரோகிகள் கூட்டம் 


தூள் தூளாக, தவிடுபொடியாகிடும், 


அப்படி ஆவது ஒன்றே இன்றைய 


தமிழர்களின் தேவை/


வேண்டுகோள்/பிரார்த்தனை. 


இதனை நிச்சயமாக அந்த எல்லாம் 


வல்ல இறைவன்,


 அளவற்ற அருளாளன், நிகரற்ற 


கொடையாளன் "  அல்லாஹ் "


நிறைவேற்றித்  தந்திடுவார் 


தந்திடவேண்டும் என்று வேண்டி 


விரும்பி அழுது  தொழுது 


கேட்டுக்கொண்டு இந்த நல்லதொரு 


வாய்ப்பினை நல்கிய உங்கள் 


அனைவருக்கும் நன்றி பாராட்டி 


விடைபெறுகின்றேன். வணக்கம் !! 


எனது உயிரினும் மேலான அன்பு 


உடன்பிறப்புகளே !! (தலைவர் 


கலைஞர் அவர்களிடம் இருந்து 


இந்தக் கடைசி வாக்கியத்தை நான் 


சற்று கடன் வாங்கிக்கொள்கிறேன்)

2 comments:

  1. குறளும் விளக்கமும் அருமையிலும் அருமை. தங்களது தொண்டு தொடரட்டும். அன்புச் செல்வி.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி செல்வி அன்புச் செல்வி அவர்களே !! தொடர்ந்து எனது அனைத்து படைப்புகளையும் படித்து இன்புறுங்கள் தங்களது பொதுஅறிவினை வளர்த்துக்கொள்ளுங்கள். நன்றி வணக்கம்

      Delete