Saturday, October 25, 2014

சிறையில்வைத்து பெண்ணை பூட்டிவிட்டால் அவள் காப்பாற்றப்பட்டு விடுவாளா ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வாழ்க்கைத் துணைநலம்.


குறள் எண்:-  57.




சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் 


நிறைகாக்குங் காப்பே தலை... ... ... ... ...



விளக்கம் :-  சிறைக்காவலில் வைத்துவிட்டால் 


அது மகளிரை என்ன செய்துவிட முடியும் ?


அவர்கள் கற்பினால்/ஆத்மா திருப்தியினால் 


தம்மைத் தாமே காத்துக்கொள்ளும் காவலே 


தலைசிறந்த காவலாகும்.  இது வாழ்புகழ்


வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


காத்தவராயன் :-  ஏலே வானவராயா உனக்கு 


செய்தி தெரியுமா ?


வானவராயன் :-  என்ன அண்ணே சேதி.அட அத்த 


சொன்னாத்தானே  நமக்குத் தெரியும்.


காத்த:- நம்ம அக்ராஹாரத்து அம்பி அழுகுணி 

சுப்புணிப்பயலோட பொண்டாட்டி சுலோச்சனா 

இல்ல..சுலோச்சனா.. அவ அவங்கஆத்தைவிட்டு 


ஓடிப்போயிட்டாளாம். அந்தப்பயமைனர் 


மகாதேவன் பயலோட. தெருவே சிரிப்பா இல்ல 


சிரிச்சுக்கிடக்குது.


வானவ:- என்னாண்ணே அக்கிரமமான்னா 


இருக்கு.


காத்த:-  அட மடப்பய மவனே. நம்ம பய சுப்புணி


சரியில்லையில்லே. அதான் குட்டி மைனரோட 


ஓடிப்போய்ட்டா.


வானவ :-   ஏண்ணேநம்மசுப்புணிநல்லாத்தானே 


அண்ணே இருக்கான். கை,கால் சுகத்தோட. 


அப்புறம் எப்படி ?


காத்த :- அட முட்டாப்பய மவனே. உனக்குத் 


தெரியாதுடா. இந்தப்பய இராத்திரி இராத்திரி 


அந்தப்புள்ளையபட்டினி போட்டுட்டு, வீட்டையும் 


பூட்டுப் போட்டுட்டு கோவில்ல  போய் இல்ல, 


நல்லா குறைட்டைவிட்டு படுத்து தூங்கிடறான். 


அந்தப் புள்ளையும் பாவம் எத்தனை 


நாளைக்குத்தான் பசி,பட்டினியாக் கிடக்கும்.


அதான் ஓடிடுத்து.அட...என்ன...நான்...சொல்றது ?


வானவ:- என்ன அண்ணே கொடுமையா இருக்கு.

பொண்டாட்டிவவுத்துக்கு பட்டினிபோடுறபயலுவ


எல்லாரும் நரகத்துக்கும் கீழே ஒருநரகம்ஒன்னு 


இருக்குதாம்.அங்கேஇவனுகளைஎல்லாம் கொதி


-க்கிற எண்ணெய்ச் சட்டியிலே போட்டு நல்லா 


வறுத்தெடுப்பானாம் எமதர்மன்.


காத்த :-  அட..மூனுதலைமுறைக்கு முட்டாப்பய 


மவனே. வவுத்துக்கு பட்டினி போடலைடா. 


அவளோட வாழ்க்கைக்குன்னா பய பட்டினி 


போட்டுட்டன்.பாத்தா பத்தினி. எத்தினி 


நாளைக்குத்தான் பாவம் அவளும் 


பொறுப்பா.வயிறு பசிச்சா வடையும் சோறும்.


வாழ்க்கை பசிச்சா அது என்ன மண்ணையா 


துன்னும்.ஓடிப்போயட்டாட ஓடிப்போயட்டாடா 


அந்த மைனர் பயலோட.


வானவ:- அதாலேதானோ என்னவோ நம்ம 


வள்ளுவரு மேலே சொன்ன குறள்ள அந்தமாதிரி 


சொல்லி இருக்காரு.


காத்த:- என்னாலே சொல்லியிருக்காரு ?


வானவ :-  மேலே இருக்குல்லே, நீனே படிச்சுத் 


தெரிஞ்சுக்க அண்ணே. எனக்கு கொஞ்சம் 


வேலை இருக்கு. நான் போயிட்டு அப்பாலே 


வாறன்.                                                                                       


காத்த :-  சரிடா தம்பி.. நானும் குறளை படிச்சுட்டு 



போயிட்டு வாறன்.                                                                 


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது.மீண்டும் அடுத்து சந்திப்போம்.   


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை. இரா. பாலு.                                    


( மதுரை T.R. பாலு )

( முறைதவறி ) பொருள்சேர்க்கும் மன்னனின் நாடு எவ்வாறாக இருக்கும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள். 



அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.



குறள் எண் :-   559.



முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி 


ஒல்லாது வானம் பெயல்... ... ... ... ... ... ...



விளக்கம்:-  அரசன்/அரசி முறைதவறி நாட்டை/


மாநிலத்தை ஆட்சி செய்திடுவாறேயானால் 


அந்த நாட்டினில் பருவ மழை தவறி, மேகம் 


மழை பெய்யாமல் போய்விடும். இது வள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.

Friday, October 24, 2014

எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும் தப்புசெய்திட்டால், மக்களால் மதிக்கப்பட மாட்டார் !! வள்ளுவர் காட்டிய வழி!!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  மானம்.


குறள் என்ன :-  965.



குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 

குன்றி அனைய செயின்... ... ... ... ... ... ... 


விளக்கம்:-  ஒரு குன்றிமணி அளவு தீய 

செயல்களைச் செய்தாலும் குன்றினைப் 

போன்று உயர்ந்த நிலையில் உயர்ந்தோரும்

தமது நிலையில் இருந்து தாழ்ந்த நிலைதனை 

அடைந்திடுவார். இது திருவள்ளுவர் நமக்கு 

அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் 

ஆகும். 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


இந்திரன் :-  என்ன இருந்தாலும் நம்ம அம்மா 

எவ்வளவு உயர்ந்த பதவியில், மாநிலத்தின் 

முதல் குடிநிலையில் இருந்தார். அவருக்குப் 

போய் இவ்வளவு பெரிய தண்டனை தந்து 

இருக்கக் கூடாது. அட என்னப்பா சந்திரன் 

நான் பாட்டுக்குப் பேசிகிட்டே இருக்கேன்.

நீ பாட்டுக்கு பேசாம ஊமை மாதிரி இருக்கே.


சந்திரன் :-  அண்ணே. எவ்வளவு உயர்ந்த 

பதவியில் இருந்தாலும், ஒரு குன்றிமணி 

அளவு தப்பான காரியத்தைச் செய்திருந்தாலும் 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றுதானே 

நீதி மன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

யாராக இருந்தாலும் தப்பு செய்தால் கீழ்வான 

நிலை அடைவதுஎன்னவோநிச்சயம்அப்படீன்னு 

திருவள்ளுவரே நம்ம பாலு சார் மேலே குறித்த 

குறளில் இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டும்.

அட..என்ன அண்ணே நான் சொல்றது சரிதானே ?


இந்திரன் :- தம்பி. நீ சொன்னா அது தப்பாவாடா 

இருக்கப்போகுது.

************************************************************************************************************


அன்பர்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 

பெறுகின்றது. மீண்டும் அடுத்த குறள் விளக்கம் 

அதில் நாம் அனைவரும் சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.

(மதுரை T.R. பாலு)

Wednesday, October 22, 2014

அடக்கம் இல்லாமல் ஆடியவர்களது நிலைமை என்றைக்குமே இப்படித்தான் !! வள்ளுவர் காட்டிய வழி !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  அடக்கமுடைமை.

குறள் எண் :-  121.


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்... ... ...


விளக்கம் :-   அடக்கம் என்கின்ற ஒரு குணம்

மனிதனை கடவுள் இருக்கும் இடத்திற்கே

கொண்டுசென்று அவனை வைத்துவிடும்.

அடங்காமை (யாரையும், எவரையும் மதிக்காது

யதேச்சிகாரமாக வாழ்தல்) அவனை அறியாமை

என்னும் கொடுஞ்சிறையில் கொண்டுபோய்த்

தள்ளி விடும். (இந்த நீதி மன்றத்தில் ஜாமீன்

கீமீன் எதுவுமே கிடைக்காது)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா. பாலு.

(மதுரை T.R. பாலு)

Sunday, October 19, 2014

காதலியின் வேதனைக் கூக்குரல் !! இரண்டையும் என்னால் எப்படி தாங்க முடியும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-   நெஞ்சோடு கிளத்தல்.


குறள் எண் :-   1247.



காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே 


யானோ பொறேன்இவ் விரண்டு... ... ... ...



விளக்கம் :-   என்னுடைய நெஞ்சமே !! ஒன்று, 


உனக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் காமத்தை 


விட்டு விடு. இல்லை என்றால், என்னுடன் 


பின்னிப்பிணைந்து கொண்டிருக்கும் நாணத்தை 


விட்டு விடு. இவ்விரண்டினையும் என்னால் 


தாங்கிக்கொள்ள இயலாது.  இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



திருநெல்வேலிக்குப்போகும் வழியில் உள்ள 


ஒரு நகரம்தான் கங்கைகொண்டான். (இதன் 


உண்மைப்பெயர் கண்கைகொண்டான்) 


அந்த ஊர் பண்ணையாரின் பெயர்தான் 


பண்டரிநாதன்.  அவரது ஒரே மகள் அவள் பெயர் 


பங்கஜவல்லி. பேரழகி.சமீபத்தில் திருமணம் 


செய்து கொண்ட அவள், கணவன் கந்தனுடன் 


ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக,சென்னை


நகரிலிருந்து சொந்த ஊருக்த் திரும்பி உள்ளாள்.


ஏன் கணவருடன் சண்டைபோட்டாய் ஊருக்கு 


வந்துள்ளாய் என அவளது தாயார் தங்கம்மா 


கேட்கிறாள். இனி வருவது நேரலையில் (LIVE):-



தங்கம்மா :-  என்னடி...உன் காது என்ன செவிடா ?


உம்...காலையிலே இருந்து நான் கேட்டுக்கிட்டே 


இருக்கேன். எதுக்குடி எதுமே பேசாம இருக்க ?



பங்கஜவல்லி :-  என்னைய என்ன செய்யச் 


சொல்றே. அவனுக்கு எதுக்குமே நேரம் காலம் 


தெரிய மாட்டேங்குது. காலையிலே 7 மணிக்கு 


குளிச்சுட்டு சாமி கும்பிடபப்போற நேரம்பாத்து 


என்னைய கட்டிப்புடிச்சு " அந்த விஷயத்துக்கு " 


வலுக்கட்டாயப் படுத்திக் கூப்பிடுறார்.

தங்க:-  கூப்பிட்டா போக வேண்டியதுதானேடி.


அத்தவிட ஒரு பொண்டாட்டிக்கு என்னடி 


வேணும்.


பங்கஜ:-  இல்லம்மா எனக்கு ஒரே வெட்கமா 


இருக்குது. ஆனா அவர் மீது ஆசையும் இருக்குது.


இந்த ரெண்டும் என்ட்ட இருக்கிறதாலே நான் 


ஒண்ணுமே செய்ய முடியலம்மா. ஒன்னு 


என்கிட்டே இந்த நாணம் இருக்கணும் 


இல்லைன்னு சொன்னா அந்த காமம் 


இருக்கணும். இந்த இரண்டையும் என்னாலே 


எப்படி அம்மா தாங்கிக்கொண்டு அவரோட வாழ 


முடியும் ?அதனாலேதான் நான் அவரை மட்டும் 


சென்னையிலே விட்டுபுட்டு சொந்த ஊர் 


வந்துட்டேன் அம்மா.


தங்க :-  அடியே பைத்தியாரி உன் வயசுலே 


நானும் உன்னைய மாதிரிதான். உன் அப்பா


என்கிட்டே ஆசைஆசையா வருவார். நான் 


வெட்கத்தினாலே அவர விட்டு விலகி விலகி 


போயிருவேன். அப்ப ஒருநாள் உன் பாட்டிதான் 


எனக்கு புத்திமதி சொல்லி உன் அப்பாவோட 


என்னைய செத்து வச்சாங்க. அதற்கு அப்புறம் 


பத்து மாசம் கழிச்சுத்தான் நீ பொறந்தே. 


என்கிட்டே இருந்த நாணத்தை நான் கைவிட்டு 


உங்க அப்பா கூட பஜனை பண்ணி வலியோடு நீ 


பொறந்ததாலேதான் உனக்கு பங்கஜவல்லி 


அப்படீன்னு பேரே வச்சோம். ( அப்போது வீட்டின் 


வாசல் முன்பாக ஒரு டாக்சி வந்து நிற்கிறது. 


அதிலிருந்து பங்கஜ வல்லியின் கணவன் கந்தன் 


பெட்டியோடு உள்ளே வருகிறார்)


தங்க:-  வாங்க..வாங்க..மாப்பிள்ளை.


கந்தன் :-  ஆமா அத்தை. உங்க பொண்ணு....


தங்க :-  மாப்பிள்ளை இனிமே நீங்க எதுக்கும் 


கவலைப்பட வேண்டாம். பொண்ணுகிட்டே 


நல்லா புத்தி சொல்லியிருக்கேன். இனிமே 


அவ முன்பு மாதிரி இருக்கவே மாட்டாள்.


நீங்க போயி குளிச்சிட்டு மாடிக்குப் போங்க 


மாப்பிள்ளை. அங்க உங்க வருகைக்காக 


பங்கஜவல்லி காத்துக்கிட்டு இருக்கா.


போங்க மாப்பிள்ளை.


கந்தன் :-  அத்தை நான் போயி பங்கஜத்தை 


பாத்துட்டு ஒரேயடியா அப்புறமே குளிக்கிறேனே.  

தங்க :- உங்க இஷ்டம் மாப்பிளை. நல்லா 


நீங்க அனுபவிங்க. நான் வாரேன்.


நன்றி !! வணக்கம் !!


இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் நாளை சிந்திப்போம்.


அன்புடன். திருமலை.இராம.பாலு.


(மதுரை T.R. பாலு) 


Thursday, October 16, 2014

மதிநுட்பம் நிறைந்தோர் மற்றும் ஆன்றோர்கள் எதை விரும்ப மாட்டார்கள் !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண் :- 915.



பொதுநலத்தார் புன்னலம் தோயார் 

                                                                              மதிநலத்தின் 


மாண்ட அறிவி னவர்... ... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  மதிநுட்பம் கொண்டுள்ள சான்றோர், 


மற்றும் அறிஞர் பெருமக்கள், விலைமாதர்கள் 


தருகின்ற இழிவான இன்பத்தினை ஒருபோதும் 


விரும்பிடவே மாட்டார்கள்.  இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும்  ஆகும். 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



வானவராயன் :-  என்னடா தம்பி வல்லவராயா 


எப்படிடா இருக்கே. சுகமா. கையிலே காசு 


எதுனாச்சும் வச்சுருக்கியா ?                                         


வல்லவராயன்:-  என்னது காசா ? அத நான் 


கண்ணாலே பாத்து பல மாசம் ஆச்சு அண்ணே !! 


வானவ:- என்னடா தம்பி படக்குன்னு இப்படி 


சொல்லிபுட்டே. தென்காசியிலே புதுசா 


கேரளாவிலே இருந்து ஐட்டாங்கள் பத்து 


பதினஞ்சுகளை நம்ம புரோக்கர் பொன்னுசாமி 


இறக்கி இருக்கானாம். நம்ம பாண்டிப்பய போய் 


பாத்துட்டு நல்ல அனுபவிச்சுட்டு வந்து 


சொன்னான். உடனே எனக்கு ஜிவ்வுன்னு 


உடம்புலே ரத்தம் சூடாயிருச்சுடா. அதான் 


உன்ட்ட காசு இருக்கான்னு கேட்டேன்.                     


வல்ல:-  விளைத்தாரனை எல்லாம்எவ்வளவாம் 


அண்ணே ?                                                                               


வான :- ஒரு புல்நைட்டுக்கு ரூபாய்ரெண்டாயிரம் 


தாண்டா.                                                     


வல்ல :- எவ்வளவு ?....எவ்வளவு ?.... 


ரெண்டாயிரமா ? ஆத்தாடி இத்த வச்சு இருபது 


நாளை குடும்பத்துக்கு செலவு செய்யலாமே ?     


வான :-  டேய். உன்கிட்ட நான் ஒன்னும் பட்ஜெட் 


கேக்கல. காசு இருக்கா இல்லையா ?                         


வல்ல :-  அண்ணே திருவள்ளுவர் என்ன 


சொல்லியிருக்கார் தெரியுமா. மதி நுட்பம் 


நிறைந்தவர்களும், அறிஞர் பெருமக்களும், 


பொருளுக்காக இன்பம் தரும் விலைமாதரின் 


இழிவான இன்பத்தை ஒருபோதும் விரும்பவே 


மாட்டார்களாம். அதனாலே நீ திருந்திரு 


அண்ணே.                                                                                 


வான :-  டேய் தம்பி எனக்கு இப்ப வயசு நாற்பத்தி 


ஐந்து. இன்னும் ஒரு 15 வருஷம் கழிச்சு எனக்கு 


சொல்லவேண்டியதை இப்ப சொன்னா எப்படிடா.


சரி நான் நம்ம சேட் செங்கல்வராயன்கிட்டே 


போயி நகையை அடகு வச்சு அனுபவிச்சுட்டு 


வாரேண்டா. நீ வீட்டுக்குப் போயி ஒழுங்கா 


சாப்பிட்டு தூங்கு. காலையிலேநாமசந்திப்போம். 


வல்ல :-  என்ன துவைச்சாலும் நீ வெளுக்கவே 


மாட்டியா அண்ணே. சரி விதி யாரை விட்டது. 


நாளைக்குப் பார்ப்போம்.  


நன்றி !! வணக்கம் !!  



அன்புடன். மதுரை T.R. பாலு.

Wednesday, October 15, 2014

இல்வாழ்க்கை என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-   இல்வாழ்க்கை.



குறள் எண்:-  49.




அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்


பிறன்பழிப்பது இல்லாதாயின் நன்று... ... ... ... 



விளக்கம் :-   அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்


பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் 


மற்றவர் பளிக்கும் குற்றம் இல்லாமல் 


விளங்கினால் மேலும் நன்மையாகும். இது 


வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும். 

Tuesday, October 14, 2014

பெண்களின் மார்பினை மறைத்திடும் மேலாடைக்கு திருவள்ளுவர் தரும் உதாரணம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  தலையணங்கு உறுத்தல்.



குறள்  :-  1087.



கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் 


படாஅ முலைமேல் துகில்... ... ... ... ...



விளக்கம் :-  இந்தப் பெண்ணின் சாயாத 


முலைகளைப் போர்த்தி உள்ள மேலாடை 


கொள்ளும் யானையின் முகத்தினை மறைக்க 


போடப்பட்டுள்ள முகபடாம் போன்று உள்ளது.


இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :- ( சொர்க்கத்தில் 


இந்த உரையாடல் நடைபெறுவதாக 


கற்பனையில் எழுதப்பட்டு உள்ளது)



சுவாமி பாகவதர் :-  என்ன மணி பாகவதரே ஒரே 


மயக்கத்தில் புலம்பியவண்ணம் நீர் இருந்து 


கொண்டு பக்கத்தில் படுத்திருந்த என்னை இரவு 


முழுவதும் தூங்கவிடாது சீண்டிக்கொண்டே 


இருந்தீர்களே !! என்ன விஷயம் என்று நான் 


அறிந்து கொள்ளலாமா ?


மணி பாகவதர் :- உம்...உம்மிடம் 


சொல்வதற்கென்ன ?நேற்று எனது கனவில் 


முன்னாள் நடிகை மார்பழகி T.R.  இராஜகுமாரி 


வந்து என்னைப் படாதபாடு படுத்தி விட்டாள். 


எனைஇறுகஅவளதுபெருத்த மார்பகங்களோடு 


சேர்த்து அணைத்து கட்டிக்கொண்டு எனது 


கன்னங்களில் முத்தம் இட்டு, அப்பப்ப்பா முடித்து 


விட்டு வெளியில் வருவதற்குள் எனக்கு 


போதும்போதும் என்றாகிவிட்டது.


சுவாமி :-   யோவ்...உண்மையிலேயே நீர் 


ரொம்பவும் கொடுத்து வைத்தவர்தான்போங்கள். 


எனக்கும்தான் கனவு வந்தது. கனவினில் 


வந்தவர் யார் என்று நீவிர் கேட்டால் ஆச்சரியப் 


பட்டுப் போவீர். ஆமா....



மணி :-  அப்படியாருங்கானும் உமது கனவினில் 


வந்து உம்மை உசுப்பேத்தினது.


சுவாமி :- எல்லாம் தெய்வப்பாடல்கள் பாடும் 


KB. சுந்தராம்பாள்தான். வந்து ஒரே பக்திமணம் 


கமழ்ந்திடும் பாடல்களைப் பாடிசொர்கலோகமே 


அல்லோல கல்லோலப் பட்டுவிட்டது போங்கள்.


மணி :- யோவ்... உம்ம தலையிலே இடி விழ.


நீர் என்ன பேச்சு பேசுகிறீர். நான் என்ன 


சொல்றேன். நீர் என்ன சொல்றீர். உமக்கே 


இது நியாயமாகுமோ ?


சுவாமி :- அதுசரி...உமக்கு இந்த விஷயம்


தெரியுமோ?


மணி :- பெண்கள் எதற்காக தங்களது மார்பினை 


மறைத்திடும் வண்ணம் மேலாடை 


போர்த்திக்கொண்டு நகரினில் வலம் 


வருகிறார்கள் ?


சுவாமி :-  அது தெரிந்தால் ஏங்காணும் 


என்னோட கனவில் KB சுந்தராம்பாள் 


வருகிறார்கள் ?உமக்குத் தெரிந்தால் நீர் 


சொல்லும்.பார்ப்போம்.


மணி :-  களிறு அதான் ஒய் யானை. அதுக்கு கண் 


பூதாகாரமான கண் அமைப்பு. சாதரணமான 


மனிசன் கூட அதோட கண்ணுக்குகுண்டோதரன் 


மாதிரி தெரிவதால்தான் அவனுக்கு கட்டுப்பட்டு 


யானைநடந்துக்கிறது.அதைஅந்தயானையை 


சாமி நகர்வலம் வரும்போது ஊர்வலத்தில் 


கூட்டி வரும்போது கூட்டமான மனுசங்களைப்


பார்த்து அது பயந்துபோய் மதம்பிடித்துவிடக் 


கூடாது என்றுதான் அதற்கு நெற்றியில் இருந்து 


தும்பிக்கை வரையில் தங்கமுலாம் பூசிய 


முகபடாம் போட்டு அழைத்து வருவது வழக்கம். 


அதேபோலத்தான் அழகிய சாயாத முலைகளை 


உடைய இந்தப்பெண்ணைப்பார்த்து 


பார்ப்பவர்கள் வெறி கொண்டுவிடக்கூடாது 


என்று நினைத்துத்தானோ இவள் தனது 


மார்பகங்களைமறைக்க இந்த மேலாடைதனை 


அணிந்து கொள்கிறாளோ 


என்று திருவள்ளுவர் ஒரு குறளில் 


குறிப்பிட்டிருப்பது உமக்குத் தெரியாதோ. 


தெரியலை என்றால் தெரிந்து கொள்ளும். 


நேக்கு நாழி ஆச்சு. நான் வரேன்.


அன்பர்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


அடைகிறது.


மீண்டும் நாளை சந்திப்போம். 



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R. பாலு.

Monday, October 13, 2014

பெண் என்பவள் மூன்று தன்மைகளையும் தன்னகத்தே கொண்டவள்தான் !! வள்ளுவரின் விளக்கம்!!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  தலையணங்கு உறுத்தல்.


குறள் எண் :-  1085.



கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 


நோக்கம்இம் மூன்றும் உடைத்து... ... ... ... ... 



விளக்கம் :-  எமனோ ? கண்களோ ? 


பெண் மானோ ?இளமையான இவளது கண்கள் 


இம்மூன்று தன்மைகளையும் உடையதாக 


இருக்கிறதே !!


இது திருவள்ளுவர் தந்த விளக்கம்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


பிரகாஷ்:-    என்னடா நம்ம பிரபாகரனை பாத்து 


ஒரு வாரம் ஆயிருச்சே. எங்க போயி 


தொலைஞ்சான் ?ஏண்டா கதிரவா நீ பாத்தே 


அவனை.


கதிரவன் :-  ஏன் அண்ணே பிரகாஷ் அண்ணே 


உங்களுக்கு விஷயமே தெரியாதா . அவன் 


காதல் வசப்பட்டு பத்து நாளாச்சு. அவன் 


வீட்டுக்கு பக்கத்து வீட்டு அம்புஜம் மாமியோட 


பொண்ணு ஐஸ்வர்யாவை அவன் காதலிக்கிற 


விஷயமே உங்களுக்குத் தெரியாதா ? இல்ல 


தெரியாத மாதிரி எங்ககிட்டேயே 


நடிக்கிறீங்களா ? உம்...ஒன்னும் புரியலையே...


பிரகாஷ் :- டேய்...சத்தியமா தெரியாதுடா. 


ஏண்டா இவன் கடைசியிலே அய்யர்வீட்டுலேயே 


கை வச்சுட்டானா. படவா !!ஆனாலும்ஐஸ்வர்யா 


உண்மையிலேயே ரொம்பவும் பிரமாதமான 


அழகிதாண்டா. அவளோட கண்ணழகில் நான் 


என்னையே முன்பு  பறிகொடுத்தவன் 


தாண்டா. அவள் தெருவில் நடந்து வரச்சே 


உண்மையிலேயே சொல்றேன் ஒரு பெண் மான் 


நடந்துவரமாதிரி வருவாடா.உண்மையிலேயே 


அவஆண்இனத்தைகொள்ளவரும்எமன்தாண்டா.

அந்தப்பொண்ணும்இவனைக்காதலிக்கிறாளா?


இவன் பிற்படுத்தப்பட்ட இனமாச்சே.


கதிரவன் :- என்ன அண்ணே நீங்களே இப்படி 


பேசிக்கிட்டு.காதலுக்கு ஏதுண்ணே 


முற்படுத்தப்பட்டது, மற்றும் 


பிற்படுத்தப்படதுன்னு இருக்கா என்ன. இருவரும் 


காதல் வயப்பட்டுன்னு வேணா சொல்லுங்க. 


நாங்க ஒத்துக்கிறோம். அட என்னங்கடா 


நண்பர்களா நான் சொல்றது.


நண்பர்கள் கூட்டம் :-ஆமா..நீங்கசொன்னதுதான் 


சரி...அதோ பிரபாகரனே வாராண்டா. நாம 


அவன்கிட்டேயேகேட்போம். ஏண்டா தம்பி 


பிரபாகரா ? நீ அய்யர் ஆத்துப் பொண்ணு 


ஐஸ்வர்யாவை மனசாரக் காதலிக்கிறாயா?


பிரபாகரன் :- ஆமாடா உயிருக்கு உயிரா 


காதலிக்கிறேன்.அவ இல்லை நானும் இல்ல. 


அந்த அளவுக்கு நாங்க 


ரெண்டு பெரும் உண்மையா காதலிக்கிறோம். 


எங்க கல்யாணத்தை நீங்கதாண்டா நடத்தி 


வைக்கணும்.


பிரகாஷ் :- அதுக்கு என்னடா வர்ற ஐப்பசி மாசம் 


ஜாம் ஜாம்னு நடத்தி வச்சு உன்னையஜெயில்லே 


போடுறோம்.


பிரபா:- என்ன ஜெயில்லிலேயா ?


பிரகாஷ் :- ஆமாண்டா. இல்லறம் என்று 


சொல்வது ஒரு இன்பமான ஜெயில்தானே.


நண்பர்கள் :-" கொல் " என்று சிரிக்கின்றனர்.



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் 


நிறைவடைகிறது.



மீண்டும் நாளை சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.


Thursday, October 9, 2014

எப்போது நாம் செயல்படவேண்டும் ? வள்ளுவர் காட்டும் வழி இதோ !! உங்களுக்காக !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  காலம் அறிதல்.



குறள் எண்:-  490.



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 


குத்தொக்க சீற்ற இடத்து... ... ... ... ... 



விளக்கம் :-  காலம் கனியாது இருக்கும்போது 


காத்திருந்து, காலம் வாய்த்திடும்போது தனது 


இரையினை கொக்கு எப்படி கொத்துகின்றதோ 


அதுபோலவே உனது செயலாற்றலும் இருப்பின் 


அது மிக நல்லது. இது திருவள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நட்டு நடப்பு விளக்கம் :-


ஆளவந்தார் :- என்ன தம்பி வாழவந்தாரு எப்படி 


இருக்கே ?


வாழவந்தார்:- ஏதோ உங்க புண்ணியத்துலே 


ரொம்பவே நல்ல இருக்கேன் அண்ணே.


ஆள:-  அதென்னடா தம்பி அப்படி சொல்லிட்டே.


எங்களுக்கெல்லாம் பாவமும் கிடையாது.


எங்க அகராதியிலே புண்ணியமும் கிடையாது.


முடிஞ்சா நாலு பேருக்கு நல்லது செய்வோம்.


அம்புட்டுத்தான். உம் அப்புறம். நாட்டு நடப்பு


என்ன தம்பி சொல்லுது.


வாழ:- என்னத்த அண்ணே சொல்ல. நாட்டு 


நடப்பை. இது நாடாய்யா.  துரோகம். எங்கே 


பாத்தாலும் துரோகம்,களவு,கற்பழிப்பு. இதுல 


போய் என்னத்த அண்ணே நாட்டு நடப்ப பத்தி 


சொல்லச் சொல்றீங்க.


ஆள :-  சரிடா தம்பி. இப்ப அந்த அம்மாளைப் 


புடிச்சு கம்பிக்கு பின்னாலே தள்ளியாச்சு. 


அடுத்து நம்ம தல என்ன செய்யப்போறாரு. அத்த 


பத்தி கொஞ்சம் சொல்றா தம்பி வாழவந்தாரு.


வாழ :- அண்ணே நம்ம தல இருக்கே அது இந்த 


மாதிரி விஷயத்துல எல்லாம் கல்லைக் கரைச்சு 


தண்ணியக் குடிச்சவரு. நேரத்தை எதிர்பாத்து 


காத்துக்கிட்டு இருக்காரு அண்ணே. நல்ல 


நேரத்துக்காக காத்திட்டு இருக்காருய்யா 


ஆள :- என்னடா நேரம். பொல்லாத நேரம் இப்ப 


விட்டுப்புட்டு.


வாழ :-  அண்ணே அவரு எத்த செஞ்சாலும் 


ரொம்ப பொறுமையோட ரொம்பவே கரீட்டா 


செய்வாரு அண்ணே. இந்த கொக்கு மாதிரி.


ஆள:-  அது என்னடா கொக்கு.


வாழ :- அண்ணேஆத்தாங்கரையிலேகொக்கைப் 


பாத்தீங்கன்னாஉங்களுக்குபுரியும்.சின்னச்சின்ன 

மீன்களை எல்லாம் தனது காலுக்கு கீழே போக 


விட்டுபுட்டு  பெருசா விலாங்கு வரும்பாருங்க 


அந்த நேரம் சும்மா " லபக் " ன்னு கவ்விக்கிட்டு 


தின்னுபுடும்னே அந்த மாதிரித்தான் நம்ம தல 


நேரம் வர வரைக்கும் காத்திருக்கார்னுதான் 


எனக்குத் தோணுது. 



ஆள:-  அப்ப்டீங்குறே. டே தம்பி நீ சொல்றது 


சரிதான். அந்தக் காலத்துபாட்டுலே கூட ஒன்னு 


சொல்வாங்கடா. என்ன அப்படீன்னுகேட்டீன்னா:-


ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 


வாடியிருக்குமாம் கொக்கு 


அப்படீன்னு.


வாழ :-  அதால நம்ம தல ரொம்பவே சீக்கிரமா 


இதுலே ஒரு நிலைப்பாட்டை எடுத்து 


ஜெயிச்சுருவாருண்ணே.அதுல எனக்கு 


கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை.


ஆள:- சரிடா தம்பி அப்படியாச்சும் நடக்கட்டும். 


நல்ல திறமையான நம்ம தல தலைமையிலே 


நல்லாட்சி வரட்டும் கூடிய சீக்கிரமே அப்டீன்னு 


நாம் கடவுள் கிட்டே வேண்டிப்போம்.  சரி நான் 


வரட்டா.


வாழ :-  ஆட்டும் அண்ணே நாளைக்கு இதே 


இடத்துலே இதே நேரத்துலே நாம் சிந்திப்போம். 


 பை..பை...


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது.


மீண்டும் நாளை சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன்  மதுரை T.R. பாலு.