Friday, October 24, 2014

எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும் தப்புசெய்திட்டால், மக்களால் மதிக்கப்பட மாட்டார் !! வள்ளுவர் காட்டிய வழி!!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  மானம்.


குறள் என்ன :-  965.



குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 

குன்றி அனைய செயின்... ... ... ... ... ... ... 


விளக்கம்:-  ஒரு குன்றிமணி அளவு தீய 

செயல்களைச் செய்தாலும் குன்றினைப் 

போன்று உயர்ந்த நிலையில் உயர்ந்தோரும்

தமது நிலையில் இருந்து தாழ்ந்த நிலைதனை 

அடைந்திடுவார். இது திருவள்ளுவர் நமக்கு 

அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் 

ஆகும். 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


இந்திரன் :-  என்ன இருந்தாலும் நம்ம அம்மா 

எவ்வளவு உயர்ந்த பதவியில், மாநிலத்தின் 

முதல் குடிநிலையில் இருந்தார். அவருக்குப் 

போய் இவ்வளவு பெரிய தண்டனை தந்து 

இருக்கக் கூடாது. அட என்னப்பா சந்திரன் 

நான் பாட்டுக்குப் பேசிகிட்டே இருக்கேன்.

நீ பாட்டுக்கு பேசாம ஊமை மாதிரி இருக்கே.


சந்திரன் :-  அண்ணே. எவ்வளவு உயர்ந்த 

பதவியில் இருந்தாலும், ஒரு குன்றிமணி 

அளவு தப்பான காரியத்தைச் செய்திருந்தாலும் 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றுதானே 

நீதி மன்றம் தண்டனை வழங்கி உள்ளது.

யாராக இருந்தாலும் தப்பு செய்தால் கீழ்வான 

நிலை அடைவதுஎன்னவோநிச்சயம்அப்படீன்னு 

திருவள்ளுவரே நம்ம பாலு சார் மேலே குறித்த 

குறளில் இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டும்.

அட..என்ன அண்ணே நான் சொல்றது சரிதானே ?


இந்திரன் :- தம்பி. நீ சொன்னா அது தப்பாவாடா 

இருக்கப்போகுது.

************************************************************************************************************


அன்பர்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 

பெறுகின்றது. மீண்டும் அடுத்த குறள் விளக்கம் 

அதில் நாம் அனைவரும் சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.

(மதுரை T.R. பாலு)

No comments:

Post a Comment