Tuesday, October 7, 2014

கணவனின் ஆசையை நிறைவேற்றாத மனைவியின் செயல் எதற்கு ஒப்பானது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!










தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  புலவி.



குறள் எண் :-   1304.



ஊடி யவரை உணராமை வாடிய 


வள்ளி முதலைரிந் தற்று... ... ... ... 



விளக்கம் :-  தன்னைக் கூடியவரின் ஊடலை


தீர்த்துக்கூடாமல் இருப்பது வாடிய கொடியின் 


வேரினை அறுப்பது போல ஆகும். இது வான் 


புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



நேரம் மாலை மணி 06.00 சென்னையில் 


வாழ்ந்துவருகின்ற ஒரு நடுத்தரக் குடும்பம் 


தலைவன் பெயர் தங்கவேல். தலைவியின் 


பெயரோ தங்கம்மாள். இருவருக்கும் இல்லறம் 


நல்லறமாகிட திருமணம் முடிந்து சுமார் 7 


மாதங்கள் ஆகின்றன. இருவருக்கும் இடையில் 


அடிக்கடி பிணக்குகள் ஏற்படுவதுண்டு. அன்று 


அலுவலகம் சென்று தனது கடமைகளைமுடித்து 


வீட்டிற்கு வரும் தலைவன் தங்கவேல் ஆசை


ஆசையாய் மல்லிகைபூவும் அல்வாவும் வாங்கி 


மனைவியிடம்தருகிறான்.ஆனால்அவளோ 


அதனை அலட்சியமாக வாங்கி   மேசை மீது 


வைத்து விட்டு சமையல் அறைக்குள்ளாகச் 


சென்று விடுகிறாள்.



இனி வருவது நேரலையில் ( LIVE DOCUMENT):-


நேரம் இரவு 11 மணி.                                                           


முன்அறையில் அமர்ந்து தொலைகாட்சி 


பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் கணவன் 


மனைவி இருவரும்.


தங்கவேல்:-  தங்கம்..தங்கம்..என்ன இது நான் 


எவ்வளவு ஆசைஆசையாக இந்த 


அல்வாவையும் மல்லிப்பூவையும் 


வாங்கிட்டு வந்திருக்கேன் நீ என்னடான்னா 


சும்மா மேசை மேல வீசிட்டு போனா என்ன 


அர்த்தம். சொல்லும்மா 


தங்கம்:-  ஆமா. வீசிட்டுத்தான் போனேன். 


ஏன்னா எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை.


தங்க:- அப்ப எதுக்கு கல்யாணம் கட்டிகிட்டே. 


சொல்லு ?.


தங்கம்:- அம்மா அப்பா கட்டாயப்படுத்தி 


கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க. நான் என்ன 


செய்ய முடியும் ?.


தங்க:- இந்த பாரு தங்கம். நீ செய்றது கொஞ்சம் 


கூட நல்லா இல்லே. நல்லதோ கெட்டதோ நம் 


இருவருக்கும் திருமணம் முடிஞ்சு ஏழு மாசம் 


ஆயிருச்சு. யார் என்ன சொன்னாலும், உனக்கு 


என்னைய பிடிச்சாலும் பிடிக்க வில்லை 


என்றாலும் நீதான் என் பொண்டாட்டி.. நான்தான் 


உன் புருஷன். என் ஆசையை  நீ  இப்படி 


நிராசையாக ஆக்கலாமா? சொல்லு தங்கம்.


நீ இப்படி செய்யுறது எப்படி இருக்கு தெரியுமா ? 


நம்ம வான் புகழ் திருவள்ளுவர் சொன்னது 


போலவே இருக்குது.


தங்கம்:- என்ன திருவள்ளுவரா ? அவர் என்ன 


சொன்னார் ?

தங்க:-   ஆசையோடு வரும் கணவனின் 


ஆசையை புறந்தள்ளுவது, எதற்கு ஒப்பானது 


என்று கேட்டால் வளர்ந்து வரும் கொடியின் 


வேரினை அறுப்பதுபோல ஆகும்னு சொல்லி 


இருக்கார். அந்தமாதிரி பாவத்தை நீசெய்யாதே.


நீ அப்படி செய்தால் அது மன்னிக்க முடியாத 


பாவம். உனக்கு நரகம்தான் கிடைக்கும்.


தங்கம் :-  என்னைய மன்னிச்சுடுங்க. நான் இந்த 


விபரம் தெரியாம இத்தனை நாளா உங்களது 


ஆசைகளை மறுத்து வாழ்ந்துட்டேன். இனிமே 


அப்படி இருக்க மாட்டேன் மாமா . செஞ்ச தவறை 


நான் உணர்ந்துட்டேன் மாமா . தயவு செஞ்சு 


என்னைய மன்னிச்சு ஏத்துக்குங்க மாமா.


தங்க:- தவறு செய்வது மனித குணம். அந்த 


தவறை உணர்ந்துட்டா மன்னிச்சு ஏத்துக்கிறது 


தெய்வ குணம்.உன்னை நான் மன்னித்தேன். 


(என்று சொல்லியவாறு அவளை இறுகக் 


கட்டித்தழுவியவண்ணம் தனது படுக்கை 


அறைக்கு கூட்டிச் செல்கின்றான் தங்கவேல்.


கதவு சாத்தப்படுகிறது. கனவுகள் 


மெய்ப்படுகின்றன. இருவரும் அன்றுதான் 


இல்லற சுகத்தை ஆசைதீர நன்றாக 


அனுபவித்து முடிக்கின்றனர்.



கதை இத்துடன் முடிந்தது. 



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment