Wednesday, October 8, 2014

ஆளுகைத்தன்மை உள்ளவர் என்பவர் யார் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  குடிசெயல்வகை.


குறள் எண் :-  1026.



நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 


இல்லாண்மை ஆக்கிக் கொளல்... ... ... ... ... ... ... ... 



பொருள் :-  ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது 


எதுவெனில் தான் பிறந்த குடியினை (மக்களை)


ஆளும்தன்மையினைதனதாக்கிக்கொள்ளுவதே 


ஆகும். இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



இராமையா :-  என்னடா தம்பி தங்கையா 


சுகமாடா ?


தங்கையா :- எங்கேசுகம்.பத்துநாளாவியாவாரம் 


பண்ண வா விட்டானுக இந்த ஆளும் கட்சிக் 


காரங்க. என்னமோ அவங்க கட்சித் தலைமை 


உத்தம குல திலகம் மாதிரியும், அந்தம்மாமேலே 


பொய் வழக்கு போட்டு அவகளை ஜெயில்லே 


போட்ட மாதிரியுமில்லபோராட்டம் 


பண்ணிக்கினு இருக்கானுவ.



இராம:-  தம்பி ஆட்சி நடத்துறதுன்னு சொன்னா 


என்ன சும்மாவா. தடி எடுத்தவன் எல்லாம் 


தண்டல்காரன் ஆயிர முடியாது தம்பி. 


பொதுவாழ்க்கைக்கு வந்தா காசை ஆட்டையை 


போடாம இருக்கமுடியாதுதான் நான் 


ஒத்துக்குறேன். ஆனா அதுலே மாட்டிக்காம 


மூட்டையைப் போடுறவந்தாண்டா 


புத்திசாலியான அரசியல்வாதி. அதுலே சும்மா 


சொல்லக் கூடாது நம்ம தலை சிங்கம்தாண்டா 


தம்பி. அட...என்ன...நான்..சொல்றது.


தங்க:- அண்ணே ரொம்ப கரீட்டா சொன்ன 


அண்ணே.அவரு மந்திரிகுமாரி படத்துலே ஒரு 


வசனம் ஒன்னு எழுதி இருப்பாரு அண்ணே.


இராம :- என்னாடா தம்பி வசனம் ?


தங்க :-  கொள்ளையடிப்பது ஒரு கலையப்பா 


அப்படீன்னு.எப்படி சொன்னமாதிரியே செஞ்சாரு.


இராம:- அவங்க கட்சியோட கொள்கையே 


அதுதாண்டா தம்பி. சொல்வதை செய்வோம். 


செய்வதை சொல்வோம்.


தங்க :- அண்ணே அதே மாதிரி சிவாஜி 


கணேசனை வச்சு தல எடுத்த முதல் படமான 


பராசக்தியிலே ஒரு வசனம் :-


ஆகாரத்திற்காக தடாகத்துலே இருக்குற 


அழுக்கையெல்லாம் சாப்பிடுகிறதே மீன், 


அதோட பொதுநலத்திலும் சுயநலம் 


கலந்திருக்கிறது. இதே போல வாழ்ந்த 


சிறந்த,மிகச்சிறந்தஅரசியல்வாதின்னு 


சொன்னா அது நம்ம தல தான். இந்த 



கருத்திலே எனக்கு சந்தேகமே இல்லை 


அண்ணே.


இராம :- டேய். தம்பி சூப்பரா பேசுற. பேசாம நீ 


கூட ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் போல 


இருக்கே.


தங்க:- அண்ணே அதெல்லாம் நமக்கு ஒத்து 


வரவே வராது. இருக்குற வேலையவே பாக்க 


முடியலை.இதுலே அரசியல் வேறயா எனக்கு. 


விளக்குமாத்துக்கு எல்லாம் பட்டுக் குஞ்சலம் 


எதுக்குன்னேன்.  அதால தான் நம்ம கர்மவீரர் 


காமராஜர் என்னா சொன்னார்னு சொன்னா 


ரெண்டும் ஒரே குட்டையிலே ஊருன மட்டை 


அப்டீன்னு.


இராம :- நீ இன்னா சொன்னாலும் ஆளும் 


திறமை உள்ள தலைவர்னு சொன்னா அது 


முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் தான்டா. 


நான் வரட்டுமா தம்பி.


தங்க :- சரிங்க அண்ணே நாளைக்கு சந்திப்போம்.



அன்புத் தமிழ்  நெஞ்சங்களே !!


நமது நாட்டு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது.மீண்டும் நாளை இதே இடத்துலே 


சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.. பாலு.


No comments:

Post a Comment