Thursday, October 9, 2014

எப்போது நாம் செயல்படவேண்டும் ? வள்ளுவர் காட்டும் வழி இதோ !! உங்களுக்காக !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம் :-  காலம் அறிதல்.



குறள் எண்:-  490.



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 


குத்தொக்க சீற்ற இடத்து... ... ... ... ... 



விளக்கம் :-  காலம் கனியாது இருக்கும்போது 


காத்திருந்து, காலம் வாய்த்திடும்போது தனது 


இரையினை கொக்கு எப்படி கொத்துகின்றதோ 


அதுபோலவே உனது செயலாற்றலும் இருப்பின் 


அது மிக நல்லது. இது திருவள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நட்டு நடப்பு விளக்கம் :-


ஆளவந்தார் :- என்ன தம்பி வாழவந்தாரு எப்படி 


இருக்கே ?


வாழவந்தார்:- ஏதோ உங்க புண்ணியத்துலே 


ரொம்பவே நல்ல இருக்கேன் அண்ணே.


ஆள:-  அதென்னடா தம்பி அப்படி சொல்லிட்டே.


எங்களுக்கெல்லாம் பாவமும் கிடையாது.


எங்க அகராதியிலே புண்ணியமும் கிடையாது.


முடிஞ்சா நாலு பேருக்கு நல்லது செய்வோம்.


அம்புட்டுத்தான். உம் அப்புறம். நாட்டு நடப்பு


என்ன தம்பி சொல்லுது.


வாழ:- என்னத்த அண்ணே சொல்ல. நாட்டு 


நடப்பை. இது நாடாய்யா.  துரோகம். எங்கே 


பாத்தாலும் துரோகம்,களவு,கற்பழிப்பு. இதுல 


போய் என்னத்த அண்ணே நாட்டு நடப்ப பத்தி 


சொல்லச் சொல்றீங்க.


ஆள :-  சரிடா தம்பி. இப்ப அந்த அம்மாளைப் 


புடிச்சு கம்பிக்கு பின்னாலே தள்ளியாச்சு. 


அடுத்து நம்ம தல என்ன செய்யப்போறாரு. அத்த 


பத்தி கொஞ்சம் சொல்றா தம்பி வாழவந்தாரு.


வாழ :- அண்ணே நம்ம தல இருக்கே அது இந்த 


மாதிரி விஷயத்துல எல்லாம் கல்லைக் கரைச்சு 


தண்ணியக் குடிச்சவரு. நேரத்தை எதிர்பாத்து 


காத்துக்கிட்டு இருக்காரு அண்ணே. நல்ல 


நேரத்துக்காக காத்திட்டு இருக்காருய்யா 


ஆள :- என்னடா நேரம். பொல்லாத நேரம் இப்ப 


விட்டுப்புட்டு.


வாழ :-  அண்ணே அவரு எத்த செஞ்சாலும் 


ரொம்ப பொறுமையோட ரொம்பவே கரீட்டா 


செய்வாரு அண்ணே. இந்த கொக்கு மாதிரி.


ஆள:-  அது என்னடா கொக்கு.


வாழ :- அண்ணேஆத்தாங்கரையிலேகொக்கைப் 


பாத்தீங்கன்னாஉங்களுக்குபுரியும்.சின்னச்சின்ன 

மீன்களை எல்லாம் தனது காலுக்கு கீழே போக 


விட்டுபுட்டு  பெருசா விலாங்கு வரும்பாருங்க 


அந்த நேரம் சும்மா " லபக் " ன்னு கவ்விக்கிட்டு 


தின்னுபுடும்னே அந்த மாதிரித்தான் நம்ம தல 


நேரம் வர வரைக்கும் காத்திருக்கார்னுதான் 


எனக்குத் தோணுது. 



ஆள:-  அப்ப்டீங்குறே. டே தம்பி நீ சொல்றது 


சரிதான். அந்தக் காலத்துபாட்டுலே கூட ஒன்னு 


சொல்வாங்கடா. என்ன அப்படீன்னுகேட்டீன்னா:-


ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 


வாடியிருக்குமாம் கொக்கு 


அப்படீன்னு.


வாழ :-  அதால நம்ம தல ரொம்பவே சீக்கிரமா 


இதுலே ஒரு நிலைப்பாட்டை எடுத்து 


ஜெயிச்சுருவாருண்ணே.அதுல எனக்கு 


கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை.


ஆள:- சரிடா தம்பி அப்படியாச்சும் நடக்கட்டும். 


நல்ல திறமையான நம்ம தல தலைமையிலே 


நல்லாட்சி வரட்டும் கூடிய சீக்கிரமே அப்டீன்னு 


நாம் கடவுள் கிட்டே வேண்டிப்போம்.  சரி நான் 


வரட்டா.


வாழ :-  ஆட்டும் அண்ணே நாளைக்கு இதே 


இடத்துலே இதே நேரத்துலே நாம் சிந்திப்போம். 


 பை..பை...


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது.


மீண்டும் நாளை சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன்  மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment