Wednesday, December 30, 2015

திருட்டுச் செயல் செய்பவர்கள், எப்படி அழிந்து போவார்கள் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  கள்ளாமை.


குறள் எண் :-  289.


அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 

மற்றைய தேற்றா தவர்... ... ... 

பொருள் :-  களவாடுவதைத் தவிர ( திருட்டு,
லஞ்சம்,ஊழல்,பிறர் பொருள் அபகரித்தல் )
வேறொன்றும் செய்வது அறியாதவர்கள், 
அளவற்ற தீமைகளைச் செய்தே அழிந்து 
போய்விடுவார்கள். இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 
விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

கன்னையா :-  வணக்கம் பொன்னையா அண்ணே அவர்களே.
பொன்னையா :- வணக்கம்.வணக்கம்.வாங்க தம்பி என்ன உலக நிலைமை எப்படி இருக்கு ?. நம்ம தமிழ்நாட்டு நிலவரம் கவலை தரும்படி இருக்குதே தம்பி. உம்என்ன செய்ய. எல்லாம் நம்ம தலை எழுத்து.
கன்னையா:அண்ணே.சும்மாஎதுக்கெடுத்தாலும் 
தலைஎழுத்து, விதி, அப்டி இப்டின்னு சொல்லி 
ஏண்ணே உங்களை நீங்களே ஏமாத்திகிட்டு 
இருக்கீங்க. இலவசத்துக்கு ஆசைப்பட்டு கண்டகண்ட பொறுப்பில்லாத,அரசியல்செய்திடதெரியாதபொம்பள வசம் ஆட்சியை ஒப்படைச்ச நம்ம நாட்டுமக்கள் செஞ்ச அறியாமைதான் அண்ணே முக்கிய காரணம். அட..என்ன..நான்..சொல்றது ? உக்கும்..
பொன்னையா :- தம்பி. நீ சொல்றது நூத்துக்கு நூறும் சரிதான்.  ஆனா ஆளத்தெரியாத அவங்களுக்கு எப்டி திருட மட்டும் தெரியுது ? இல்ல நான் கேக்கிறேன் ?
கன் :-  அண்ணே. அந்த பொம்பளைக்கும் அவுக 
கூட்டாளிக்கும் தெரிஞ்சதே அது ஒண்ணுதானே.
ஏற்கனவே பத்து வருசத்துக்கும் மேலாக அந்தக் 
கும்பல்அதைசெஞ்சுதானேபலகோடிகோடிகள் 
திருட்டு மூலமாக சம்பாதிச்சு இருக்காங்க. அத்த 
தெரிஞ்சும் மீண்டும் ஆள்வதற்குத் தேர்ந்தெடுத்த 
மக்களை நான் என்னன்னு சொல்றது ?
பொன் :- ஆனா ஒன்னு தம்பி. இப்படி திருடித்திருடியே சம்பாதிச்சு வாழறவங்க, ஏகப்பட்ட தீமைகளை நமது மக்களுக்கு செஞ்சு செஞ்சே அழிஞ்சு போயிருவாங்க.
இது நமது திருவள்ளுவர் சொன்ன கருத்து. நீயே 
மேலே குறிப்பிட்ட திருக்குறளைப் படிச்சா உனக்கே உண்மை தெரியும். அது மட்டும் அல்ல. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், நல்லவங்களுக்கும், நல்ல முறையில் ஆட்சி செய்திடத் தெரிஞ்சவங்களுக்கும்
வாக்கு அளித்திட வேண்டும் என்று மக்களிடம் நாம தீவிர பிரச்சாரம் செஞ்சா மட்டுமே நம்ம நாட்டை நாம காப்பாத்திட முடியும். வரட்டுமா. தம்பி.
கன்னையா :-  சரிங்க அண்ணே. நீங்க சொன்னபடியே செய்யறேன். 


நன்றி !!.வணக்கம் !!.

அன்புடன்.திருமலை.இரா.பாலு.



Monday, December 21, 2015

சோம்பலுடன் வாழ்பவர்கள் எதனைக் கேட்க நேரிடும் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  மடியின்மை.


குறள் எண் :- 607.


இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து 

மாண்ட உஞற்றி லவர்... ... ... 


பொருள் :-  சோம்பலை விரும்பி ஏற்று 

செயலற்று இருப்பவர்கள் தங்களை பிறர் 

கண்டித்து பேசுவதையும் இகழ்ந்து சிரிப்பதையும் 

கேட்க நேரிடும். இது வான்புகழ் திருவள்ளுவர் 

நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 

விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

இந்தக் குறளுக்கு எற்பவே நமது தமிழ்நாடு 

அரசும்அதன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 

அதிகாரிகள் மற்றும் ஒட்டு மொத்த ஆள்கின்ற 

அதிகாரவர்க்கம் செயல்படுவதால், நாட்டு நடப்பு 

விளக்கம் தேவையே இல்லை என்பது கட்டுரை

ஆசிரியரின்கருத்து.


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன். திருமலை.இரா.பாலு.

Sunday, December 13, 2015

அழிந்துபோக முடிவெடுத்த அரசாங்கம்,அதிகாரிகள்,ஆசையுடன் அணிந்துகொள்ளும் அணிகலன்கள் எவை ? வள்ளுவர் தருகின்ற விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  மடியின்மை.

குறள் எண்:-  605.


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 

நெடுநீறார் காமக் கலன்... ... ... 

பொருள் :-  தாமதித்துச் செயல்கள் செய்தல்,
மறத்தல்,சோம்பல் கொள்ளுதல், உறங்குதல்,
ஆகிய இவை நான்கும், அழிந்துபோகக்கூடிய 
அனைவரும் ஆசையோடு அணிந்துகொள்ளும் 
அணிகலன்கள் ஆகும்.  இது திருவள்ளுவர் 
நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 
விளக்கமும் ஆகும்.

( இந்த திருக்குறளுக்கு நாட்டு நடப்பு விளக்கம் 
தேவையே இல்லை, ஏன் என்றால் இங்கே நடப்பதே அதுதான் அதுமட்டும்தான்  என்பதால், அதுசம்பந்தமாகஎந்தப்பதிவும்இங்கேஇடம் பெறவில்லை, என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்)

வாசகர்கள் மன்னிக்கவும். 

அன்புடன். திருமலை.இரா.பாலு.

Thursday, December 10, 2015

நம்மைத் தாக்கிப் பேசுவார்கள் முன் நாம் எப்படி இருக்க வேண்டும் ?





தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  பொறை உடைமை.

குறள் எண் :-  151.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 

இகழ்வார் பொறுத்தல் தலை... ... ... 

பொருள் :-  தன்னைத் தோண்டுபவர்களையும்
தாங்கிக் கொள்கிற நிலம்போலத் தம்மை 
இகழ்பவர்களையும் பொறுத்துக்கொள்வதே  
தலையாய பண்பு ஆகும். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்
அதன் விளக்கமும் ஆகும் 

Tuesday, December 8, 2015

கெட்டஎண்ணம் கொண்டவன் நல்லாயிருப்பதும் நல்லவன் வறுமை நிலையில் வாடுவதற்கும் காரணம் என்ன ? திருவள்ளுவர் தருகின்ற விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  அழுக்காறாமை.


குறள் எண் :-  169.



அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 

கேடும் நினைக்கப் படும்... ... ...


பொருள் :-  பொறாமை மனம் கொண்டவன்/

கெட்டவன் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும் 

அப்படிப்பட்ட பொறாமை அற்றவன்/நல்லவன் 

வறுமையில் வாடி வதங்கி அழிவதற்கும் என்ன 

காரணம்*என்பதைஆராய்ந்துபார்க்கவேண்டும்.

(முற்பிறவியில்கெட்டவன்செய்தநற்பலன்களும் 

நல்லவன் செய்த தீயபலன்களுமே காரணம்*)

இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 

அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும் 

ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

மன்னாரு :  வாங்க அண்ணே ஜப்பாரு அண்ணே 

என்ன ஒரு வழியா மழைக்கு விடைகொடுத்து 

அனுப்பி வச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன். 

என்ன சொல்றீங்க?


ஜப்பாரு :- அட தம்பி மன்னாரு.நீ ஒன்னு. மழை 

இன்னா எங்க வூட்டுக்கு வந்த விருந்தாளியா 

என்ன விடையைக் கொடுத்து அனுப்பறதுக்கு. 

உக்கும்..இன்னும்கூட அது பெஞ்சாலும் 

பெயும்னுதானே சொல்லிகிறாங்க. சரி...

அத்த விடுறா தம்பி. எனக்கு ரொம்ப நாளா ஒரு 

சந்தேகம்.

அது இன்னான்னு கேட்டுக்கினின்னா அல்லார் 

குடியையும்கெடுக்குறவன், ஊரை அடிச்சு 

உலையில போடறவன்,லஞ்ச லாவண்யத்தாலே 

கோடிகோடியாக் கொள்ளையடிக்கிறவன்,

நல்ல வருமானத்தைக் கொடுக்கிற அல்லா 

சொத்தையும் தியேட்டர்கள், நஞ்சை நிலம், 

நீலகிரி மலையில் உள்ள எஸ்டேட்டுகள், 

டவுண்ல இருக்குற பெரிய பெரிய மனைகள் 

இந்த மாதிரி ஆட்டையப் போடுறதே தொழிலா 

செஞ்சுகிட்டு அரசியலிலும் ஈடுபட்டு அதிகார 

பதவியை நீதிமன்றத்தாலே இழந்தாலும் 

மேல்நீதி மன்றத்திலே கொடுக்க வேண்டியதைக் 

கொடுத்து மீண்டும் அதிகார வெறியோடு 

திரியுறவங்க இவங்க எல்லாரும் நல்லாத்தானே 

இருக்காங்க. ஆனா அதேநேரம் தினசரி 

உழைப்பாலே வருமானம் பாத்து, பொண்டாட்டி,

புள்ளைங்க, இவங்களை எல்லாம் கஷ்டப்பட்டு 

காப்பாத்துறவன் நல்ல நெஞ்சம் உள்ளவன், 

வறுமையிலே வாடுறானே. இதுக்கு எல்லாம் 

இன்னா காரணம் ?சொல்றா தம்பி.

மன்னாரு :-  அண்ணே. இதுக்குத்தான் நம்ம 

திருவள்ளுவர் மேலே குறிப்பிட்டிருக்குற 

பாட்டுலே விளக்கம் கொடுத்துருக்காறே

இப்ப கெட்டவன் போன ஜென்மத்துலே 

நன்மையா சென்ஜ்ருக்கான்.

ஆனா அதே சமயம் இந்த ஜென்மத்துலே 

நல்லவனா இருக்கவன் போன பிறவியிலே 

அநியாயம், அக்கிரமம் பண்ணி வாழ்ந்ததால் 

இப்ப கஷ்டப்படுரான்னு சொல்லிகீறாரு அத்த 

படிங்க அண்ணே.

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் 

வரட்டா.


நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.


Sunday, December 6, 2015

எத்தனை கோடிப்பணம் இருந்தாலும் ஊழின் முன் (விதியின் முன்பாக )அது செல்லுபடியாகாது !! திருவள்ளுவர் தரும் விளக்கம்.








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  ஊழ்.


குறள் எண் :- 377.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது... ... ...


பொருள் :-  கோடி கோடியாய்ச் செல்வம் 

இருந்தாலும் ஊழ் வகுத்திருக்கும் வகையால் 

அன்றித் தாம் விரும்பியவாறு அனுபவிக்க 

இயலாது.  இது வள்ளுவர் நமக்கு அருளிச் 

சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 

ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம்:-


பீட்டர் :-  வாங்க ஜேம்ஸ். ஸ்தோத்திரம். என்ன 
உங்க பகுதியிலே மழை மற்றும் வெள்ளத்தின் 
பாதிப்புக்கள் எப்படி இருக்கு ?

ஜேம்ஸ் :- ஸ்தோத்திரம். அதை ஏன் கேக்கறீங்க ?
வெள்ளம்னா வெள்ளம் அப்படி ஒரு வெள்ளம்.
கடந்த ஒரு முப்பது ஆண்டுகளில் இதுபோல 
ஒரு இயற்கையின் கோர தாண்டவத்தை நான் 
பாக்கவே இல்லங்க. எங்க பாத்தாலும் மக்களின் 
அழுகையும் கண்ணீரும்தான்.

பீட்டர்:-  ஆமா ஏன் ஜேம்ஸ் நம்ம கோடீஸ்வரர் 
கடற்கரை உங்க ஏரியா தானே. எப்படி இருக்கார்.

ஜேம்ஸ் :-  ஐயோ அந்தக் கூத்தை கேக்காதீங்க. அவருட்ட இருக்குற பணத்துக்கு, நல்ல மேடான இடத்துலே அழகா பங்களா கட்டி குடியிருந்திருக்கலாம். ஆனா பாருங்க 
அவரோட கிரகம், பழைய வீடு, ராசியான வீடுன்னு சொல்லி எங்க பேட்டையிலேயே இருந்தாருல்ல.என்ன ஆச்சு கடைசியிலே, வீட்டுலே வச்சிருந்த நகை, ரொக்கம் எத்தனையோ கோடிகள், வாங்கி 
வச்சிருந்த சொத்துப்பத்திரங்கள், வெள்ளிப்பாத்திரங்கள் எல்லாமே வெள்ளத்துலே அடிச்சுக்கிட்டுப் போயி 
இப்ப கட்டுன துணியோடத்தான் நம்மகூட இருக்காரு.எல்லாம் நம்ம பாலு ஐயா மேலே எழுதியிருக்குற திருக்குறள் விளக்கத்துலே சொல்லியிருக்குற மாதிரியில்லே அவரு கதையும் ஆயிருச்சு. இதுல இருந்து நாம கத்துக்க வேண்டிய பாடம் என்னான்னா இந்த உலகத்துலே யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்ல.
இதை மறந்துவிட்டு, ஊரை அடிச்சு உலையிலே போட்டு,ஆட்சி,அதிகாரத்தை பயன்படுத்தி, பல ஆயிரம்கோடிகள்சம்பாதிச்சு, எல்லா திரை அரங்குகளையும் அடிமாட்டு விலைக்கு, கட்டுனவன் வயிறு எரிய வாங்குறாங்களே 
இவங்க இத்த பாத்து திருந்தனும். சரி. எனக்கு நேரம் ஆச்சு. வரட்டுமா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.


Monday, November 30, 2015

நாணம் என்னும் பெண், யாரை விட்டு விலகிச் செல்வாள் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  கள் உண்ணாமை.


குறள் எண் :- 924.


நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்                                                                                             கள்ளென்னும் 

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு... ... ... 


பொருள் :-  கள் குடித்தல் என்னும் விரும்பத்
தகாத பெரிய குற்றத்தினைச் செய்பவர்களிடம் 
இருந்து, நாணம் என்னும் நல்ல பெண் விலகிச் 
செல்வாள். இது திருவள்ளுவர் நமக்கு அருளிச் 
சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

மஸ்தான் :-  வாங்க சுல்தான். அஸ்ஸலாமு 
அலேக்கும்.
சுல்தான் :- வ அலேக்கும் சலாம் வ ரஹமத்து
ல்லையோ பரக்காத்து ஹூ என்ன பாவா நீங்க 
எப்படி இருக்கீங்க ?
மஸ்தான் :-  அல்லாஹ்வின் கிருபையாலே 
சுகத்தோடும் சவுக்கியத்தோடும் இருக்கேன்.
ஆமா நம்ம பய இப்ராஹீம் இப்ப எப்படி 
இருக்கான் ? மது என்னும் அந்தக் கொடிய 
பழக்கத்தில் இருந்து இன்னும் அவன் விடுபட்டதா தெரியல்லையே.
சுல்தான் :-  பாவா. அந்தக் கொடுமைய ஏன் 
கேக்கிறீங்க ? நேத்து நம்ம தெருவில் நம்ம 
அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் பாரில் பய 
எக்கச்சக்கமா குடிச்சிருப்பான் போலிருக்கு.
நிதானம் இல்லாம வீதியிலே உடை எல்லாம் 
அலங்கோலம் ஆனதொரு நிலையிலே 
அந்தப் போகும் பெண்களில் இவன 
திட்டித் தீர்க்காதவர் யாருமே இல்லை.

மஸ்தான் :- நம்ம பெரியவர் திருவள்ளுவர் 
மேலே குறிப்பிட்டுள்ள திருக்குறளில் கூட 
இதைத்தானே வலியுறுத்தி சொல்லியிருக்கார்.
யார் கேக்கிறா. இன்ஷா அல்லாஹ். கூடிய 
விரைவில் அவன் திருந்தி நம்மை போல 
மனுஷனா மாறி குரான் வழி நடந்து ஐந்து 
வேளையும் தொழுகை நடத்துபவனாக 
ஆக்கிட வேண்டும் என்று அல்லாஹ்விடம் 
நாம் அனைவரும் தூஆ  செய்திடுவோம்.
சுல்தான் :-  ஆமீன். 

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

Sunday, November 29, 2015

மரணம் என்பது எதனைப் போன்றது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !! உங்களுக்காக !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  நிலையாமை.

குறள் எண் :-  339.


உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி 

விழிப்பது போலும் பிறப்பு... ... ... 


பொருள் :-  இறப்பு (மரணம்) என்பது உறங்குவது 
போன்றது.  பிறப்பு என்பது உறக்கத்தில் இருந்து 
விழிப்பதைப் போன்றது.  வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச் சென்ற குறளும் விளக்கமும் 
ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :- வாங்க தம்பி கருணா. ஆமா நேத்து உங்க தெருவிலே யாருடா தம்பிபுட்டுக்கிட்டா. ஏகப்பட்டகூட்டம்,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டமும் அமர்க்களமா இருந்துச்சே. யாருடா தம்பி ?

கருணா :-  நம்ம கந்தசாமி செட்டியார்தான். அண்ணே முந்தாநேத்து ராத்திரித்தான் அவரோட அரைமணிக்கும் மேலா நான் பேசிக்கினு இருந்தேன். காலைலே பாத்தா சங்கு செகண்டி சத்தம் அவரு வீட்டுலே. என்னால நம்பவே முடியல அண்ணே.

கந்தன் :- தம்பி. இதுதான் மனித வாழ்க்கையின் உண்மையான நிலைப்பாடு.நம்ம வள்ளுவர் இன்னாசொல்லிகீறாரு.அட..நம்ம..பாலு..சார்......மேலே எழுதிருக்க குறளைப்படிங்க தம்பி. அர்த்தம் புரியும். இதுதான் உலகம். இது 
மட்டுமே உண்மை. இத்த புரிஞ்சுக்காம நம்ம நாட்டுலே இன்னாடான்னா ஊரை அடிச்சு உலையிலே போட்டு கோடிகோடியா கொள்ளை அடிக்கிராய்ங்க. சினிமா தியேட்டர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குறாய்ங்க.
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் தம்பி நாம 
வாழுற இந்த உலகத்துலே. புரிஞ்சுக்க. வரட்டா.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.

Sunday, November 22, 2015

ஒரு அரசாங்கம் எப்போது சீர்கெட்டுப் போகிறது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  தெரிந்து செயல்வகை.

குறள் எண்:-  456.



செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானும் கெடும்... ... ... 

பொருள்  :-  செய்யக்கூடாத செயல்களைச் 
செய்தாலும் அழிவினைத்தரும்.  செய்திட
வேண்டிய செயல்களைச் செய்யாமல் 
இருந்தாலும் அது அழிவினைத் தரும்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 
சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 
ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம்:-

மாணிக்கம் :-  வாடா மன்னாரு உங்களோட
ஏரியாவுல மழை,வெள்ள பாதிப்பு எப்படி 
இருக்குது. இதுக்கு என்ன மூலகாரணம் 
உனக்குத் தெரியுமா ?

மன்னாரு :-  என்ன அண்ணே !! காலையிலே இப்புடி ஒரு கேள்வியைக் கேக்குறீங்க. கைப்புண்ணுக்கு கண்ணாடியா தேவை. அண்ணே இதுக்கு எல்லாம் முக்கிய 
காரணம் நம்ம தமிழக அரசாங்கத்தோட 
கையாலாகத்தனமும், நிர்வாகச் சீர்கேடும் 
என்பதுலே எனக்கு சந்தேகம் இல்லை. இதுபோல எதிர்காலத்துலே நடக்கும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்பே அய்யன்வள்ளுவர்எச்சரிக்கைசெய்திருந்தும் 
அம்மையாரோட ஆணவ,அராஜகப்போக்கு 
மட்டுமே கொண்ட இந்த ராசாங்கம் செய்ய 
வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை 
எதுவும் செய்யாததாலும், ஆறு,குளம்,கால்வாய்,
கண்மாய் இந்த இடங்களில் எல்லாம் வீட்டு மனை போட்டு அழிச்சதாலும் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கு. டாஸ்மாக் கடையத் திறப்பதிலே காட்டுற அக்கறையையும் ஆர்வத்தையும் ஒரு சதவீதம் இந்த கால்வாய் சீரமைப்பு, ஏறி,குளம் இவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி இருந்தா அது ஒன்னு போதும். இந்த பேரழிவிற்கு முக்கியகாரணம் நிர்வாகம் என்றால்என்னஎன்றேதெரியாத அ.இ.அ.தி.மு.க. அரசேதான் அந்த அரசாங்கம் மட்டும்தான். அதை வழிநடத்திச் செல்லும் அம்மையார்தான்.இந்தப் பழியும் பாவமும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதைத் தீர்க்க இந்த ஜோடிகளால் முடியவே முடியாது.


நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.திருமலை.இரா.பாலு.

Saturday, November 21, 2015

திருடர்களும் மக்களைப்போலத்தானே இருக்கிறார்கள் !! வள்ளுவர் ஆராய்ச்சி !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம் :-  கயமை.

குறள் என்ன :-  1071.



மக்களே போல்வர் கயவர் அவரன்ன 

ஒப்பாரி யாங்கண்டது இல்... ... ...


பொருள் :-  கயவர்கள் ( திருடர்கள்) மக்களைப் 

போலவே இருப்பார்கள். அவரைப்போல 

உருவத்தில் ஒத்தவர்களை, வேறு எந்த ஒரு 

இனத்திலும் யாம் கண்டது இல்லை. 

இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

பெரியசாமி :-  வாடா கந்தசாமி மவனேகுப்புசாமி.

என்னடா எம்புட்டு நாளாச்சு உன்னையப் பாத்து.

நல்லாக்கீறியா. உம்...உங்க ஏரியாலே வெள்ளம் 

அல்லாம்வடிஞ்சிருச்சா.இல்லாங்காட்டிஅப்டியே

தான் கீதா ? சொல்றா தம்பி.

குப்புசாமி :- அட.. போண்ணே..உன்க்கு என்னப் 

பாத்தா என்ன லந்தாக்கீதா ?  ஒரு மண்ணும் 

தண்ணி வடிந்சாப் பாடில்ல. 

எந்தஒரு அதிகாரியும் நேர்ல வந்து பாக்கலே. 

எந்த ஒரு தம்படி உதவியும் செயலே. இங்க 

என்ன சர்க்காரா நடக்கிது. அம்புட்டும் திருட்டுப் 

பசங்க. எவன்டா அசந்துருக்க்கான். எவன் வூட்டு 

பொருளை அமுக்கி ஆட்டையப் போடலாம். 

இப்டிதானே அல்லாப் பசங்களும் கீறாங்க.

ஆனா நேர்ல பாத்தா  அப்படியே சுத்தமான 

புத்தன்போல இருப்பானுக. இவன்கூடத் 

திருடனா ?அப்டீங்கற மாதிரி !!  

இவனுக செய்றதுபூராமே திருட்டுப் பொழைப்பு. 

உக்கும்...இதுலே இவனுகளுக்கு சாமியாடின்னு 

பட்டம் வேற. என்னைக்குத்தான் இவனுக 

திருந்தப் போறாங்களோ தெரிலே அண்ணே.

பெரிய :- உம்...சரி..வுடுறா..வுடுறா..அத்தாண்டா 

தம்பிஉல்கம்.வள்ளுவர்இன்னாசொல்லிக்கீறாரு

மேலே எழுதிக்கிற திருக்குறளைப் படிறா தம்பி.

அல்லாமே புரியும் உன்க்கு. வரட்டாடா தம்பி.


நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.

Wednesday, November 18, 2015

நேர்மை நிலை இன்றி பிறர் சொத்துக்க்களை அபகரிப்போர்கள் இறுதியில் என்ன நிலையை அடைவார்கள் ? வள்ளுவர்தரும் விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வெஃகாமை.


குறள் எண் :-  171. 


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்... ... ...


பொருள் :-  ஒருவன் நடுநிலை தவறி பிறரது 
பொருளை/சொத்துக்களை கவர/ஆக்கிரமிக்க 
எண்ணினால், அவனது குடும்பமும் அழியும்.
அவனுக்கு பற்பல கேடுகளும் குற்றங்களும் 
வந்து சேர்ந்திடும். இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் விளக்கமும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

கண்ணாயிரம் :-  வாடா !! மன்னாரு. என்னடா 
உங்க பகுதியிலே மழை,வெள்ளம் பாதிப்பு 
ஏதாவது உண்டா ? விவரமாச் சொல்லுடா தம்பி.

மன்னாரு :- என்னாது...எதாச்சும் பாதிப்பா ?
அண்ணே !! குடிமுழுசும் மூழ்கிப்போச்சு அண்ணே. குடி முழுசும் மூல்கிப்போச்சு 
குடிசை கொசஸ்தலம் ஆத்து வெள்ளத்துலே 
அடிச்சுட்டு போயிருச்சு. நானும்பொண்டாட்டியும் 
புள்ளை குட்டிகள் மட்டும்தான் மிச்சம்.  கட்டிக்க மாத்துத் துணி கூட கிடையாது. அதான் அண்ணனைப் பார்த்து உங்க கிட்டே எதாச்சும் வாங்கிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.

கண்ணா;-  என்னடா தம்பி. இப்படி கேக்குறே.
நீ வருவேன்னு தெரியும். அதான் உனக்கும் உன் 
பொஞ்சாதிக்கும் புள்ளைகளுக்கும் துணி,மணி,பணம் எல்லாமே எடுத்து வச்சிருக்கேன்டா. போறப்போ வாங்கிட்டு 
போடா தம்பி. 

மன்னாரு :- அண்ணே !! ரொம்ப நன்றி அண்ணே!!
நீங்க செஞ்ச இந்த உதவியை சாகுறந்தட்டிக்கும் நான்,உன் தம்பி, மறக்கவே மாட்டேன்.

கண்ணா :- விடுறா..விடுறா..அழுகப்படாது. அது 
சரி. வான்புகழ் வள்ளுவர் ஒரு குறள்லே என்ன 
சொல்ல்லியிருக்கார்னாநீதி,நேர்மைஇல்லாமல் 
அடுத்தவன் சொத்துக்களை அபகரிப்பவன், அவன் குடும்பத்தோடு அழிஞ்சு போவான். அவனுக்கு கேடும் பலவகை நீங்கிடாத குற்றமும் வந்து சேரும் அப்படீன்னு. நம்ம பாலு சார் தினம் ஒரு திருக்குறள்பதிவிலே எழுதியிருக்காரு. இது எனக்கு என்னமோ சரியில்லைன்னு நினைக்கிறேன்.அடுத்தவன் சொத்துக்களை ஆட்டையப் போட்டவங்கதான் இப்ப ஆளும் பொறுப்புலே இருக்காங்க. இவங்க எங்க குடி முளுகிப்போயிட்டாங்க. எதுக்குமே ஆசைப்படாத நீதாண்டா தம்பி இப்ப எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்து நிக்கிறேன்னு நான் நினைக்கிறேன். நீ என்ன சொல்றே ?

மன்னாரு :-  அண்ணே !! நீ யாரை மனசுலே வைச்சு இத்த சொல்றேன்னு எனக்கு தெரியுது. நம்ம நாட்டை பிடிச்ச 5 ஆண்டு சனியன்கள், அந்த ரெண்டு பொம்பளைகளை நினைச்சுத்தானே சொல்லுறே.

கண்ணா :- டேய்..தம்பி..கரெட்ரா தம்பி. அவளுக 
ஆட்டையப்போடாத சொத்தா. நல்லாத்தானே 
இருக்காளுக. அய்யன் சொன்ன மாதிரி ஒன்னும் 
கேடு வரலையே தம்பி. அதான் கேட்டேன்.

மன்னாரு :- அட..என்னாண்ணே..நீ புரியாமப் 
பேசிகிட்டு. அந்த ரெண்டு பொம்பளைகளுக்கும் 
முதல்ல கொள்ளிவைக்க புள்ளை,குட்டி, எதாச்சும் இருக்கா முதல்லே. அண்ணே !! அழியாத செல்வம் என்னைக்குமே குழந்தைகள்தான். ரெண்டாவது 
அவளுக ரெண்டு பேருக்கும் உடம்புலே எம்புட்டு
வியாதிகளை ஆண்டவன் தந்திருக்கான். நோயற்ற வாழ்வே குறைவில்லாத செல்வம் அண்ணே. எத்தன கோடிகள், கோடானு கோடிகள் இவங்க கொள்ளையடிச்சு சேத்து வச்சாலும், ஒரு பைசாவைக் கூட சாவுறப்போ கொண்டுப்போக முடியாதுன்னே.இந்தம்மாவோட தலைவர் ஒரு படத்துலே என்ன பாடியிருக்கார் தெரியுமா ?


பட்டணத்தில் பாதி இவர் வாங்கி முடித்தார்.

அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி 

எடுத்தார்.

அங்கு எட்டடுக்கு மாளிகையை கட்டிவைத்து வந்து இந்த எட்டடியில் வந்து படுத்தார்....


அப்படீன்னுதானே. அதாலே இதெல்லாம் கொஞ்ச காலம் அனுபவிச்சுக்கலாம். அம்புட்டுத்தான். மத்தபடி நாறவாயன் சம்பாதித்ததை நாறவாயன் செலவளிப்பான். அடுத்த வருஷம் பிப்ரவரி மாச கடைசிலே இந்த அம்மா உள்ளே போவது உறுதி.பிறகு என்ன அண்ணே. 

நான் வரட்டா. நன்றி அண்ணே.

**********************************************************நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.  

Tuesday, November 17, 2015

இருவருக்கும் விதி என்பது வெவ்வேறு ஆகும் !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  ஊழ்.


குறள் எண் :- 374.


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு... ... ..


பொருள் :-   செல்வம் உடையவராக இருத்தலும்

தெளிந்த அறிவு உடையவர் ஆவதும், வெவ்வேறு

விதிகளின்செயலால்நடைபெறும்.திருவள்ளுவர்

நமக்கு அருளிச் சென்ற குறளும் விளக்கமும் 

ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ரங்கம்மா :-  ஏண்டி மங்கம்மா  நம்ம தங்கம்மா 

எப்டி இவ்வளவு குறுகிய காலத்துலே இம்புட்டுப்

பெரியபணக்காரி ஆனாடி.  உனக்கு எதுனாச்சும் 

தெரியுமா ?


மங்கம்மா :-  யக்கா ரங்கம்மக்கா உனக்கு 

விசயமே தெரியாதா ஏன்னா . அவ இப்ப 

சினிமாலே துணை நடிகையாஇருக்கா. 

அப்டி இப்டி எப்டி பாத்தாலும் எட்டு மணி

நேரத்துலே சுளையா எட்டுநூறு ரூபா 

கிடைச்சுப்போவுது.

போதாக்குறைக்கு அவ வூட்டுக்காரர் 

ஆட்டோ விருமாண்டி அண்ணே கீறாரே  

இப்ப முப்பது நாப்பது வட்டிக்கு பைனான்ஸ் 

வேற செய்யுறாரு. அப்புறம் என்னாடி திடீர்னு 

பணக்காரி அவுரதுக்கு ? இல்ல கேக்குறேன்.

ரங்கம்மா :- சரிடி. அத்தவுடு..நம்ம கங்கையம்மா 

அதாண்டி தங்கம்மாவோட தங்காச்சி 

 அவளைத்தான் சொல்றேன். அவ இருந்த 

இருப்புக்கு இப்ப என்னடி  ரொம்பவே 

படிச்சாமாதிரி உபன்யாசம் எல்லாம் 

போராளாமே. அவ எங்க போய் பேசினாலும் 

கூட்டம் சும்மா கட்டி ஏறி காதைப் 

பிக்குதாமே.எப்டிறி? ஒண்ணுமே புரிலடி.

அக்கா இன்னாடான்னா பணக்காரியாக்கீரா. 

அப்பாலே அவதங்காச்சி இன்னாடான்னா பெரிய 

அறிவுக்கொழுந்தா விளங்குறா ?.  ஒண்ணுமே 

விளங்கலடி !!

மங்கம்ம்மா :-  ஐயோ அக்கா. இத்தப் பத்தித்தான் 

நம்ம திருமலை.இரா. பாலு சார் இன்னைக்கு 

விதியைப்பத்தி வள்ளுவர் ஏன்னா 

சொல்லிகீறாருன்னு தினம் ஒரு திருக்குறள் 

பகுதிலே எழுதிக்கீறாறு. அத்தப்போயி 

நீயே உன்னோட கைப்பொட்டிலே ( LAPTOP) 

படிச்சு த்தெரிஞ்சுக்க அக்கா.


ரங்கம்மா :-  அடே எம்மவனே மகாலிங்கம் 

அம்மாவோட லாப்-டாப்பை சித்த கொண்டாடா. 

அப்டி இன்னாதான் தாத்தா வள்ளுவர் 

எழுதிக்கீராருன்னு பாப்போம்.


நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.





Friday, November 13, 2015

அமைச்சராக இருக்கத் தகுதி படைத்தவர் யார் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!






          தினம் ஒரு திருக்குறள்.


           அதிகாரம்  :-  அமைச்சு. 


          குறள் எண் :-  631.





கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 

அருவினையும் மாண்டது அமைச்சு... ... ...


பொருள் :-  செயலுக்கு உரிய கருவி, அந்தச் 

செயலை செய்திட ஏற்ற  காலம், செய்திடும் 

முறை, செய்கின்ற செயல், ஆகிய இவை 

அத்தனையையும் ஆராய்ந்து அரசரிடம் 

கூறிட வல்லமை படைத்தவனே அமைச்சன் 

ஆவான். இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

தங்கச்சாமி :- என்னடா தம்பி பொன்னுச்சாமி,

நாட்டுலே பத்து நாளைக்கும் மேலாக மழை

இப்படி கொட்டு கொட்டுன்னு ஊத்தித் தள்ளுது.

நம்ம சென்னையே சும்மா நாறி நாசக்காடா 

கிடக்குது. இங்க என்ன அரசாங்கம்னு எதாச்சும் 

நடக்குதா ? அமைச்சர்ன்னு எவனாவது இங்கே 

அரசாங்கத்திலே வேலை செய்யுறாய்ங்களா ?

எனக்கு ஒண்ணுமே புடிபடலே. உனக்கு ஏதாவது 

புரியுதாடா தம்பி.


பொன்னுச்சாமி :-  என்ன அண்ணே இப்படி ஒரு 

கேள்விய படக்குன்னு கேட்டுப்புட்டீங்க. நம்ம 

அரசுலேதான் முப்பதுக்கு மேலே தலையாட்டி 

பொம்மைங்க, அமைச்சர் எனும் பெயரில் சட்ட 

மன்றத்துலே மேஜையைத் தட்டிக்கிட்டும்,

ஆத்தாளைப் பார்த்தவுடன்,நெடுஞ்சாண்கிடையா

கீழே விழுந்து கும்பிடுறதுக்கும் ஆகாயத்துலே

போனாலும் ஆத்தாளை கீழே பூமியிலே இருந்து-

-கிட்டே வனத்தை நோக்கி கும்புடு போடுகிற 

அடிமைங்க இருக்கானுக அமைச்சர்ங்கிறபேரில.

ஆனா ஒருத்தனுக்கும் சொல் புத்தியும் இல்ல.

சுயபுத்தியும்கிடையாது.அவங்கஅத்தனைபேரும் 

அடிமைங்க. செய்யச்சொன்னா செய்வானுக.

சொந்த அறிவு இருந்திருந்தா, நம்ம ஊரு இப்படி 

நாறி நாசக்காடா ஆகியிருக்குமா  ? 

இல்ல இம்புட்டு தண்ணிலே நாம எல்லோரும் 

இடுப்பளவுக்கு நீந்திக்கிட்டு பொழைப்பு 

நடத்திக்கிட்டுத்தான்  இருப்போமா. 

இன்னும் ஆறு மாசம் நாம எல்லோரும் இந்தக் 

கொடுமைய தாங்கித்தான் ஆகணும். 2016 ல 

நடைபெற இருக்குற சட்ட மன்றத் தேர்தல் வர்ற 

வரைக்கும். அப்பவாவது திறமையான, 

சொந்தமா சிந்திக்கிற அறிவு உள்ள 

அமைச்சர்களை வைத்து திறமையா ஆட்சி 

புரிகின்ற ஒரு அறிஞர், கலைஞர் 

தலைமையிலே இந்த தமிழ்நாட்டைக் 

காப்பாத்துகிற ஆட்சி வரும் வரைக்கும் பேசாம 

நாம அனுபவிச்சுத்தான் ஆகணும்.வேற 

வழிஇல்லை. ஒரு அமைச்சர் என்று 

சொன்னால், எப்படி இருக்கவேண்டும் என்று 

நம்ம திருவள்ளுவர், மேலே குறிப்பிட்டு 

இருக்கிற திருக்குறளில் அய்யன் திருவள்ளுவர் 

எம்புட்டு அழகா சொல்லியிருக்காரு. 

அத்த படிச்சாலாவது இந்த அடிமைங்க பெயரில் 

வாழ்கின்ற மந்திரிங்க திருந்துவாங்கன்னு 

நினைக்கிறீங்க. கிடையவே கிடையாது. 

இத்த படிக்குறதுக்குக் கூட இவனுக 

ஆத்தா கிட்டே அனுமதி வாங்கணும். நல்ல 

வேளை,  ஒன்னுக்கு, வெளியே போறதுக்காவது 

சொந்தமா முடிவெடுத்து செயல்படுறானுகளே 

அந்த அளவுக்கு மகிழ்ச்சி. இல்லன்னு சொன்னா 

இருக்குறஇடம்நாறிடும்இல்ல...அதனாலதானோ 

என்னவோ. சரிங்க தங்கச்சாமி அண்ணே நான் 

வாறன். என் பொண்டாட்டி, புள்ளைகளை நான் 

ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும். வரட்டா.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.

Wednesday, November 11, 2015

செல்வந்தர் எனும் பதவி நிலையானதா ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  நிலையாமை.


குறள் எண் :-  332.



கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே                                                                                                          பெருஞ்செல்வம் 

போக்கும் அதுவிளிந் தற்று... ... ... 



விளக்கம் :-  மனிதனிடம் செல்வம் வந்து 

சேர்வதும் பின்பு அவனை விடுத்து போவதும் 

கூத்தாட்டு அரங்கத்திற்குள் மக்களின் கூட்டம் 

கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்வதும் 

கூத்து முடிந்து பின்னர் அரங்கம் முழுவதும் 

உடனடியாக காலியாகிப்போவதையும் 

போன்றது. இது திருவள்ளுவர் நமக்கு 

அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 

விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


கந்தன் :- ஏண்டா..தம்பி..கடம்பா. நம்ம ஊரு 

பண்ணையார் பரமசிவம், முன்பு ஒரு 

காலத்திலேபெரிய பணக்காரராக இருந்தாரு. 

அம்பது அறுபது ஏக்கருக்கும் மேலாக  நஞ்சை 

நிலம் மூணு போகம் விளையக்கூடியது அவரு 

கிட்டே இருந்துச்சு.பிறவு அவரு சம்சாரம் 

சரோஜா அக்கா கழுத்துலே போட்டுக்கினு 

இருந்ததே சுமார் ஐம்பது பவுன் இருக்கும். 

ரெண்டு கையிலேயும் வளவிக சுமாரா ஒரு 

முப்பது பவுன் இருக்கும். இதுக்கு மேலே 

வூட்டுலே எப்படிப் பார்த்தாலும் ஒரு நானூறு 

பவுனுக்கு மேலே தேறும். இதையெல்லாம் 

தாண்டி ரொக்கப்பணம் பீரோவுலே ஒரு பத்து 

பதினைஞ்சு லட்சம் இருக்கும்.

இது தவிர பாங்க்ல சுமார் ரெண்டு கோடிக்கு 

மேலே டெபாசிட் பண்ணியிருந்தாரு. சொந்த 

வீடுதான் , காருமேலே அம்பாரி சவாரிதான் ,

இம்புட்டும் வச்சுக்கிட்டு அனுபவிச்ச மனுஷன் 

இன்னைக்கு இன்னாடான்னா, கிழிஞ்சதை தச்சு 

ஒட்டுப்போட்ட நாலு முழ வேட்டி, பழைய ஜிப்பா, 

போட்டுக்கினு எங்கயோ கணக்குப்பிள்ளை 

வேலைக்கு இல்லை போறாராம். அவரு 

சம்சாரம் சரோஜா அக்கா ஏதோ ஒரு வீட்டுலே 

பத்து பாத்திரம் தேச்சுக் கழுவி, வீட்டு வேலை 

செஞ்சுக்கிட்டு வயுத்த கழுவுதாமுல்லே. 

என்னடா கொடுமை இது. என்னடா இது உலகம். 

எப்படி வாழ்ந்த மனுஷன் இன்னைக்கு 

இப்படி ஆயிட்டாரு. எப்படிடா போச்சு அவரோட 

அம்புட்டு சொத்து, சுகம், நகை, ரொக்கம் ? இல்ல 

தெரியாமத்தான் நான் கேக்குறேன்.

கடம்பன்:-அண்ணேஉனக்குவிசயமேதெரியாதா ?

அந்தப் பண்ணையாரு பரமசிவம், சம்சாரம் 

சரோஜா அக்கா எம்புட்டு அழகானவங்க. 

நல்லவங்க.. அவுகளை வுட்டுப்புட்டு 

கேரளாவுலே இருந்து ஒரு பொண்ணு, 

சும்மா சினிமா நடிகை ராஜகுமாரி போல 

இருக்கும் .அதோட அழகுலே மயங்கி அம்புட்டு 

காசு, பணம்,நகை, நிலபுலம் அம்புட்டையும் 

தொலைச்சு சின்னாபின்னமாக்கி 

இன்னைக்கு தெருவுந்தண்ணியுமா இல்லை 

திரியுறாரு.

போதாக்குறைக்கு அப்பயே  குதிரை ரேஸ், 

லாட்டரி அப்படி இப்படின்னு வேற காசு கற்பூரம் 

மாதிரி கரைஞ்சு போச்சு. 

இதுக்கு மேலே சாராயம் அதுலேயும் சீமைச் 

சாராயம்தான் மனுஷன் குடிப்பாரு. இப்படியே 

அம்புட்டும் போயிருச்சு அண்ணே.

இப்ப அன்னாடம் கணக்கு எழுதுற வேலைக்கு 

போனாத்தான் காசு பாக்க முடியும். 

பாவம் அந்த சரோஜா அக்கா வூட்டு வேலை 

செஞ்சு காலத்தை ஓட்டுறாங்க. என்னகொடுமை 

அண்ணே இதெல்லாம்.

கந்தன் :-  தம்பி. மனுஷனுக்கு அதுலேயும் 

குறிப்பாச் சொல்லனும்னா பணக்கார 

மனுஷனுக்கு இப்படிஎல்லாம் ஒரு நிலைமை 

வரும்னு ரெண்டாயிரம் வருசத்துக்கு 

முன்னாடியே நம்ம அய்யன் திருவள்ளுவர் 

அழகா பல குறள்களில் மிகத் தெளிவாச் 

சொல்லி இருக்காரு.

நம்ம பாலு ஐயா மேலே எழுதி வச்சுருக்குற 

திருக்குறளை படிச்சா நீயே தெரிஞ்சுக்குவ. 

இதுதான் தம்பி உலகம்.

சரி...அப்பாலே...எனக்கு...டவுன்லே கொஞ்சம் 

வேலை கிடக்கு. போயிட்டு வாரேண்டா தம்பி.

************************************************************************************************************

நன்றி !!   வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.


Tuesday, November 10, 2015

மழையின் சிறப்பு !! வான்புகழ் திருவள்ளுவர் தரும் விளக்கம் !!





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!

அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!


அளவற்ற அருளாளனும் நிகரற்ற

கொடையாளனுமாகிய எல்லாம் வல்ல

அல்லாஹ் வின் திருப்பெயரால் இங்கே

எழுதிடத் துவங்குகின்றேன்.


மழைக்காக உலகிலே எந்தக் கவிஞனும்

செய்திடாத ஒரு மாபெரும் சிறப்பினை அந்த

மழைக்கு அளித்து அதற்காக

வான் சிறப்பு !!

என்று பெயரில் தனி ஒரு அதிகாரத்தை எடுத்து

அதில் பத்து குறளை எழுதிமழைக்குப்பெருமை

சேர்த்திட்ட புலவன் இப்பூவுலகினில்

திருவள்ளுவரைத்தவிர வேறு யார் இருந்திட

முடியும் ?

திரை உலகினைப் பொறுத்தவரை இந்த மழை

என்பது அங்கே காதலனும், காதலியும்

நனைந்துகொண்டே ஆடியும் பின்னர்

பாடியும் அந்தக் காம உணர்வினை

வெளிப்படுத்திக்கொள்வதற்காகவே

அமைந்திட்டாலும் கூட, அந்த சூழ்நிலையை

பாட்டுக்கோர் தலைவன் பட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம், ஏழை அழுகின்ற

கண்ணீருக்கு இணைசெய்து எழுதிய பெருமை

அவரைத்தவிர வேறு எந்தக் கவிஞனுக்கும்

இல்லை என்பதனை நான் இங்கே

மெத்த பணிவன்புடன் கோடிட்டுக்காட்டிட

பதிவு செய்திடக் கடமைபட்டுள்ளேன்.


சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே !!
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு
அங்கே !!
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றிவியர்வை
போலே !!
அவன்கஞ்சிகாககலங்கிவிடும்கண்ணீர்த்துளி
போலே !!

என்று பாடி மழைத்துளியை ஏழை விடுகின்ற

கண்ணீர்த்துளிக்கு இணைவைத்துப் பாடிய 


ஒரேஒப்பற்றகவிஞன்நமதுபட்டுக்கோட்டை


தான்.திருவள்ளுவர் மழைக்காக எழுதிய பத்து


குறள்களில் எனக்கு மிகவும் பிடித்த குறள்

இதுதான்.

அதிகாரம் :- வான் சிறப்பு.

குறள் எண் :- 15.

கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச்சார்வாய்

                                                                              மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை... ... ...

விளக்கம் :- மழை பெய்யாமல் உழவர்களை

அழிப்பதும்பின்னர் நின்று பெய்து உழவர்களை

வாழ வைப்பதும் அந்த மழையே ஆகும்.

இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்

சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 

ஆகும்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.