Wednesday, November 16, 2016

சாமியாராகவும் வேண்டாம் சந்நியாசியாக போகவும் வேண்டாம் !! எப்போது ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!





சாமியாராகவும் வேண்டாம் !!
சந்நியாசியாகபோகவும்வேண்டாம்!!


தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம்   :-  கூடா ஒழுக்கம்.
குறள் எண் :-  280.


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்... ... ...


பொருள்  :-  தவக்கோலத்தைக் வெளிக்காட்ட 
மொட்டை அடிக்கவோ முடி வளர்க்கவோ 
தேவையில்லை. உலகம் பழித்திடும் செயல்களை ஒழித்துவிட்டாலே போதும். இது வான்புகழ்திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :-  என்ன கிந்தன் தம்பி ரொம்ப நாளா 
ஏரியா பக்கமே பாக்க முடிலே. என்ன ஊருக்கு 
போயிருந்தீகளா.
கிந்தன்:-  ஆமா அண்ணே எங்க அக்கா வூடு 
விழுப்புரத்துல இருக்கு. அக்கா பொண்ணு 
பெரிய மனுசி ஆயிருச்சு. அதான் தாய்மாமன் 
நான் முறை செய்ய போனேன். 
கந்தன் :- அப்ப உனக்கு பொண்ணு ரெடி 
ஆயிடுச்சுன்னு சொல்றா தம்பி.
கிந்தன் :- ஐயய்யோ .. அதெல்லாம் இல்ல 
அண்ணே. எனக்கும் அக்கா பொண்ணுக்கும்
10 வருஷம் வயசு வித்தியாசம். நான் மூப்பு.
அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.
கந்தன் :- ஏண்டா தம்பி இன்னைக்கு தமிழ் 
மாசம் கார்த்திகை ஒன்னாம் தேதி. நம்ம 
பேட்டை ரவுடி பெருமாள் பிச்சை என்னடா 
காலைலே சீக்கிரமா எழுந்து கோவிலுக்குப் 
போயி காவிவேட்டி காவி சட்டை கருப்பு 
துண்டு அமர்க்களமா எங்கடா போறான் ?
உனக்கு எதுனாச்சும் தெரியுமாடா ?
கிந்தன் :-  உங்களுக்கு விசயமே தெரியாதா ?
அண்ணே அவன் சபரிமலைக்கு போறான்னே.
அதான் வெள்ளென எழுந்து குளிச்சு சாமி 
கும்பிட்டு மாலை போட்டு விரதம் ஆரம்பிக்க 
கோயிலுக்குப் போயிருப்பான்.
கந்தன் :- கிழிஞ்சுது போ. வருசம் பத்துமாசம் 
டாஸ்மாக் கடையே கதின்னு கிடந்தது குடிக்க 
வேண்டியது. கோனார் கடைலே அல்லா 
மாமிசத்துலே இருந்து கோழி,காடை,கவுதாரி,
மீன் அது இதுன்னு வெட்ட வேண்டியது. இந்த 
ரெண்டு மாசம் மட்டும் என்ன யோக்கியன் 
வேசமாட போடுறான் அந்த பேமானி.
கிந்தன் :- சரி. விடுங்க அண்ணே. ஏதோ இந்த 
ரெண்டு மாசமாச்சும் அந்தக் கசமாலத்தை 
எல்லாம் நினைக்காம, துன்னாம, குடிக்காம 
இருக்கானே அத்த நினைச்சு பெருமைப்படுங்க 
அண்ணே.
கந்தன் :- அடே..தம்பி.. வருஷம் பூராவும் சுத்தமா 
இருக்கனும்டா. அதுலேயும் மனசு..மனசு..அது 
சுத்தமா இருந்தா அது போதும்டா. இந்த வெளி 
வேசம் எல்லாம் எதுக்குடா ? தம்பி. என்ன நான் 
சொல்றது. இத்த நான் மட்டும் சொல்லலடா 
நம்ம அய்யன் திருவள்ளுவர் அவர்கூட இத்த 
பத்தி ஒரு குறள்ளே சொல்லிக்கீறார்டா. இப்ப 
நம்ம மதுரை TR. பாலு, தினம் ஒரு திருக்குறள் 
அப்டின்னு வலைதளத்துலே எழுதுரார்ல.
அத்த படிச்சுட்டுத்தண்டா வாரேன். 
கிந்தன் :- அப்டியாண்ணே. வள்ளுவர் இத்தக்கூடவா எழுதிருக்காரு ?
கந்தன் :-  அட..ஆமாடா..என் அருமைத்தம்பி.
நீ மொட்டை அடிக்கவும் வேணாம் தாடி வளக்கவும் வேணாம். உலகம் பழிக்கும் காரியங்கள் எதையுமே செய்யாம இருந்தா போதும். அப்டின்னு. எப்படி பாத்தியாடா தம்பி. வள்ளுவர் வள்ளுவர்தாண்டா.அதனாலதான் நம்ம தல கலைஞர், அன்னாருக்கு 
கன்னியாகுமரி மூணு கடலும் சேரும் இடத்துல 
அம்புட்டு உயர சிலை வச்சிருக்காருடா. அதக்கூட இந்த சர்க்காரு சரியா பெயின்ட் அடிச்சு காப்பாத்த மாட்டேன்றாங்க. ஏன்னா சில வச்ச பெருமை அவருக்குப் போயிரும் என்ற சின்ன புத்திடா தம்பி. சரி அப்பால நேரம் ஆச்சு. வாரேண்டா தம்பி.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T,R.பாலு.

Friday, November 4, 2016

சில இடங்களில்பொய் சொல்வது கூட வாய்மைக்கு நிகராகும் (?) திருவள்ளுவர் அருளிச்சென்றது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  வாய்மை.

குறள் எண் :-  292



பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்... ... ...

பொருள்  :-  குற்றம் அற்ற நன்மையைத் தரும் 
என்றால், சொல்லுகின்றபொய்கூடவாய்மைக்கு 
நிகராகும். இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 
வழங்கிச் சென்ற திருக்குறளும்அதன்பொருளும் 
ஆகும்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

******************************************************
                        

                              " பொறுப்பு துறப்பு "


( பின் குறிப்பு :-  இந்தக்குறளின் பொருளுடன், நேற்று அப்போலோ மருத்துவமனை இயக்குனர் திருமிகு.C. பிரதாப் ரெட்டி அவர்கள் ஊடகமற்றும் பத்திரிக்கைநண்பர்களுக்கு அளித்த பேட்டியை நேயர்கள் ஒப்பிட்டுப்பார்த்தால், அதற்கு பதிப்பாளராகிய மதுரை T.R. பாலு, எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று அறிவிக்கப்படுகிறது.)

Monday, October 31, 2016

நோயால் உயிருக்கு எந்நாளும் துன்பம் இல்லை !! திருவள்ளுவர் கருத்து இது !!




நோயால் உயிருக்குஎந்நாளும் துன்பம்இல்லை !!



தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மருந்து.

குறள் எண் :-  945.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு ... ... ...

பொருள்  :-  உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவினை மறுத்து,ஒத்துக்கொள்ளும் உணவினையே உண்டு வாழ்ந்தால், உயிருக்கு துன்பம் இல்லை. வான்புகழ்திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

புனிதா :- என்ன லலிதா அக்கா, உங்க அம்மாவை ஆஸ்பத்திரிலே சேத்து இன்னைக்கு கிட்டத்தட்ட நாப்பது நாளைக்கு மேலே இருக்குமுல்ல. இப்ப என்ன சொல்றாங்க ?
லலிதா :- அந்தக் கொடுமைய ஏன் கேக்குற தங்கச்சி
புனிதா :- சொல்லுங்க அக்கா. சொன்னாதானே எங்களுக்கு தெரியும் ?
லலிதா :- உனக்குத்தான் தெரியுமேஎன்னப்பெத்த 
எங்க அம்மா வேதவல்லி, எப்படி பணம் சம்பாதிச்சாங்க, எப்படி எல்லாம் ஆட்டம் போட்டாங்க ? யார் யார் கூட எல்லாம் சேரக்கூடாதோ அவங்களோட சேந்து கிட்டு 
எங்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டி அடிச்ச கதை.
புனிதா :-  ஆமா அக்கா அது நம்ம தெருவே தெரிஞ்ச கதை தானே. இப்ப உங்க அம்மா எப்டி இருக்காங்க ?
லலிதா :- அட..அதைத்தாண்டி சொல்ல வாறன் அறிவு கெட்டவளே. எங்கள யாரையும் உள்ள போய் பாக்க வுட மாட்டேங்குறா அந்தக் கூடவே இருக்குல்ல ஒரு சனியன்.
புனிதா :-யாருஅந்தபுஷ்கலாவைசொல்றீங்களா ?
லலிதா :- அந்தப் பொட்டுக்கெடுத்தவதான் அவ என்னப்பெத்த எங்க ஆத்தா சம்பாரிச்ச அம்புட்டு சொத்தையும் அவ மட்டுமே ஆட்டைய போடப் பாக்குறாடி. ஆட்டைய போடப் பாக்குறா ? இந்த அநியாயத்தை யார்ட்ட போய்சொல்ல ?
புனிதா :- ஏன்க்கா, கேக்குறேன்னு தப்பா எடுக்கலன்னா நான் ஒன்னு கேக்குறேன்.
லலிதா :- சும்மா கேளுரி தங்கச்சி. எனக்கு உன்ன விட்டா வேற யாருடி இருக்கா ? கேளு..கேளு..
புனிதா :-  உங்கள பெத்த அம்மாவுக்கும் அந்த புஷ்கலாவுக்கும் எப்டிக்கா நட்பு வந்துச்சு ?
லலிதா :- அந்தக் கொடுமைய ஏன் கேக்குற. எங்க அப்பா ராமச்சந்திரன் பிள்ளை செத்துப்போன பொறவு இந்த இழவெடுத்தவ ஒரு சேலக்கடை வச்சிருந்தா. அங்க அடிக்கடி எங்க அம்மா போவாங்க.அப்ப இந்த செருக்கி எங்கம்மாட்ட ஏகப்பட்ட பணம் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு எங்கம்மாவ வசப்படுத்திக்கிட்டாடி. அவ எங்க 
அம்மாக்கு என்ன சொக்குப்பொடி போட்டாளோ 
தெரில, எங்கள அல்லாம் சுத்தமா வெறுத்து ஒதுக்கிட்டு வீட்ட விட்டு விரட்டிட்டு, அந்த பாழாப்போறவளோட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எங்க அப்பா ஆச ஆசயா 
கட்டுன தாமஸ் கார்டன் வூட்டுல கொண்டாந்து வச்சுக்கிட்டாங்க. யார் கேக்குறது இந்த அநியாயத்த ?
புனிதா :- சரி.அதல்லாம் விடுங்க அக்கா. இப்ப உங்கம்மா உடம்புக்கு ஏன் இம்புட்டு வியாதி வந்துச்சு ? அத்த கொஞ்சம் சொல்லுங்க.
லலிதா :- எல்லாம் அந்தக் கழுதையோட சேந்துகிட்டு எப்பப்பாத்தாலும் குடிச்சுக்கிட்டு, கண்ட கண்ட கருமாந்திரத்தயும் துன்னுக்கிட்டு இருந்தா ? வியாதி வராதா ? எங்க அம்மாக்கு இல்லாத வியாதியேகிடையாதே.ரத்தக்கொதிப்பு, சக்கரை நோய் இன்னும் உலகத்துல உள்ள அம்புட்டு வியாதியும் இப்ப ஒன்னு சேந்துகிட்டு, எங்க ஆத்தாள படுத்த படுத்த படுக்கையா  
போட்டுருச்சு தங்கச்சி.
புனிதா :-  அக்கா இன்னைக்கு நம்ம மதுரை பாலு சார்எழுதியிருக்குற " தினம் ஒரு திருக்குறள் " வலைத்தளப் பதிவு அத்த படிச்சுட்டுத்தான் வந்தேன்.
லலிதா :- என்னடி சொல்லிருக்காரு அந்த மனுசன் ?
புனிதா :-  அக்கா, நம்ம உடம்பு எந்த உணவ யேத்துக்கிடுதோஅத்த மட்டும்தான் நாம சாப்பிடனுமாம். ஏத்துக்காத உணவ எல்லாம் நாம சாப்பிடாம இருந்தா உயிருக்கு 
எப்பவுமே ஆபத்து இல்லையாம்  அடிப்டின்னு திருவள்ளுவர் சொல்லிருக்காராம்.
லலிதா :- என்னை பெத்த ஆத்தா அப்டி எல்லாம் வாழவே இல்லையேடி தங்கச்சி. அந்த கேடுகேட்டவளோட சேந்து தினமும் குடிச்சு, ஐஸ் கிரீம் சாப்புட்டு சக்கரைவியாதிய வளத்து இன்னைக்கு இந்தக் கதிக்கு ஆளாகி படுத்துக் 
கிடக்காங்க. என்ன செய்ய ?
புனிதா :-  சரிக்கா எனக்கு நேரம் ஆச்சு. என் வூட்டுக்காரர் வேல முடிச்சு வர நேரமாச்சு. பாத்துக்குங்க அம்மாவ.என்ன ஆனாலும் சொல்லி அனுப்புங்க. நான் ஓடோடி 
வந்துறேன். வரட்டா அக்கா .
லலிதா :- சரிடி தங்கச்சி. பாத்து கோளாறா போயிட்டு வா.

***************************************************************

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. TR.பாலு.

Friday, October 7, 2016

இந்த உலகத்தின் பெருமை என்ன ? திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற கருத்து !!





           இந்த உலகத்தின் பெருமை !!




தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  நிலையாமை.

குறள் எண் :-  336.





நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 

பெருமை உடைத்து இவ்வுலகு... ... ...


பொருள் :-  நேற்று உயிருடன் இருந்த ஒருவன் 
இன்று இல்லை என்னும் பெருமையினையே 
இவ்வுலகம் பெற்றிருக்கிறது. இது வான்புகழ் 
திருவள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்
அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

தங்கையா :- என்னடா தம்பி சங்கையா இன்னைக்கோட இருபத்தி அஞ்சு நாளாச்சு உங்க சித்தப்பு சிங்காரத்தை அப்போலோ ஆஸ்பத்திரிலே சேத்து. என்னதாண்டா 
சொல்றாய்ங்க ? 

சங்கையா :- அண்ணே என்னத்த சொல்றாங்க ?
அந்த டெஸ்ட் எடுக்கணும் இந்த டெஸ்ட் எடுக்கணும் அப்டி இப்டின்னு சொல்லி பணந்தான் கரஞ்சுட்டே இருக்கு. ரூமுக்குள்ள கூட வுட மாட்டேங்கிராய்ங்க

தங்க :- சரி விடுறா தம்பி என்ன உங்க சித்தப்பு பாடு பட்டு சம்பாரிச்சாறு ? எல்லாம் ஊர அடிச்சு உலையில போட்டு, பஞ்சாயத்து தலைவரா இருந்துகிட்டு அம்புட்டும் கொள்ளை அடிச்சு சம்பாரிச்சதுதானே என்ன நான் சொல்றது ?

சங்க:- எண்ணே லந்து பண்றதுக்கு உங்களுக்கு 
கால நேரமே கிடையாதா ? அவரே உசுருக்குப் 
போராடிட்டு இப்பயோ புறவோன்னு இருக்காரு.
அவரப்போயி இப்படி பேசலாமா அண்ணே ?

தங்க:- அட..இங்க பாருரா தம்பிக்கு கோவம் 
பொத்துக்கிட்டு வருது.

( அப்போது மருத்துவர் வந்து சங்கையாவ
தனியா கூட்டிப்போயி ஏதோ சொல்ல அவனும் 
அதிர்ச்சி அடைஞ்சு அய்யய்யோ சித்தப்பா 
எங்கள எல்லாம் வுட்டுட்டுப் போயிட்டீங்களா ?
என்று அலறிக்கத்திக்கொண்டு அழுதபடியே 
அண்ணன் தங்கையாவை கட்டிக்கொள்கிறான்.)

தங்கையா :- சரி..சரி..விடுறா..விடுறா தம்பி.
ஏன்னா செய்றது. மனுசனா பொறந்தா அல்லாரும் ஒருநாள் போய்ச்சேர வேண்டியதுதான். இந்தா பாரு நேத்து உசுரோட இருந்தாரு உங்க சித்தப்பு இன்னைக்கி செத்துப்போய்ட்டாறு. இதுதான்டாதம்பி இந்த உலகத்தோட சிறப்பும் பெருமையும் 
அப்டின்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்காரு.
சரி..அடுத்து நடக்க வேண்டிய வேலயப்பாருடா.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு. 

Tuesday, October 4, 2016

நமக்கு கெடுதல் செய்தவர்களை எப்படி தண்டித்திட முடியும் ? திருவள்ளுவர் காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  இன்னா செய்யாமை.

குறள் எண் :-  314.




இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 

நன்னயம் செய்து விடல்... ... ... 

பொருள் :-  தனக்கு துன்பம் செய்தவரை 
தண்டித்தல் என்பது அவருக்கு நன்மைகளைச் 
செய்து அவர் வெட்கப்பட்டு திருந்துமாறு 
செய்தலே ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

ஜமுனா :-  என்ன புவனா அக்கா தீபாவளிக்கு 
ஜவுளி எல்லாம் எடுத்தாச்சா என்ன ? இன்னும் 
25 நாள்தானே இருக்கு.

யமுனா :- அட போடி பைத்தியக்காரி, இங்க
இன்னும் இந்த மாச செலவுக்கே அவன் காசு 
தராம இருக்கான்.

ஜமுனா :- என்னக்கா இருந்தாலும் தொட்டுத் 
தாலி கட்டிய புருசனை இப்படி அவன் இவன் 
அப்டின்னு கொஞ்சம்கூட மருவாதி இல்லாம 
பேசுறது நல்லாவா இருக்கு ?

யமுனா :-  ஏய்..அவன் மேலே இருக்குற 
கடுப்பில உனக்குத்தான் இப்ப உதை விழப் 
போவுது. வூட்டு செலவுக்கு காசுதராம 
இருக்குற பய, ராத்திரி டாஸ்மாக் கடைலே 
மட்டுமே கொண்டு போய் கொட்டுறான். அத்த 
யார்டி கேக்குறது ?

ஜமுனா :- அதுக்கு நீதானே காரணம். நல்லவங்க 
ஆட்சிக்கு வரணும் சாராயக் கடையை இழுத்து 
மூடுவாங்கஅதாலேஅவங்களுக்குபோடுங்க உங்க ஓட்டு என்று  சொன்னேன். நீங்க கேக்கல வெறும் இருநூறுக்கும் முன்னூறுக்கும் ஒரு பிரியாணி போட்டலத்துக்கும் ஆசைப்பட்டு இவளுக்கு போட்டீங்க. இப்ப அனுபவிக்கிறீங்க. சரி. அது கிடக்கட்டும். இப்ப இந்த பொம்பள உடம்புக்கு முடியாம படுத்துக் கிடக்கு.அது நிசமோ இல்லாங்காட்டி பொய்யோ அது வேற விசயம். இருந்தாலும் , நம்ம தல, அவருக்கு எம்புட்டு கெடுதல் இது செஞ்சிருக்கு. அத்த எல்லாம் மனசுல கொஞ்சம் கூட வச்சிக்கிடாம, அது வெட்கப்படுற மாதிரி சீக்கிரம் உடல் நலமாகி வூட்டுக்கு வர வாழ்த்தி ஒரு அறிக்கை விட்டார்பாரு, அங்கதாண்டி தல நிமிந்து நிக்கிறாரு.எப்படிஅந்தபொம்பளைய தண்டிச்சார் பாத்தியாடி. ஏன்னா அவரு வள்ளுவர் காட்டிய வழியில வாழ்றவர்டி. இத்த நம்ம மதுரை பாலு சார் இன்னைக்கு எழுதியிருக்கிற தினம் ஒரு திருக்குறள் பகுதியில போட்டிருக்கிறதை முகநூல் பதிவைப் படிச்சுட்டுத்தான் சொல்றேன். முடிஞ்சா நீயும் படிறி. எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு.உன்ன அப்பால பாக்கிறேன். வரட்டா.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை. TR. பாலு. 

Wednesday, September 28, 2016

நண்பர்களை முறையாகத் தேர்ந்தெடுத்து செயல்படாதவர்களது முடிவு எப்படி இருக்கும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-   நட்பு ஆராய்தல்.

குறள் எண் :-  792.




ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை                                                                                                  கடைமுறை 
தான்சாம் துயரம் தரும்... ... ...

பொருள்  :-  பலமுறை ஆராய்ந்த பின்பே நட்பு 
கொள்ள வேண்டும். அப்படி நட்பு ஏற்படுத்திக் 
கொள்ளாதவர்களது நட்பு, இறுதியில் சாகின்ற 
அளவிற்குத் துன்பத்தையே தரும். வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

லலிதா :-  வாங்க..வாங்க..புனிதா அக்கா.. என்ன 
அத்தி பூத்த மாதிரி இருக்கு ? ஒரு வார்த்தை 
சொல்லி அனுப்பிருந்தா நானே வந்திருப்பேனே 
அக்கா ?
புனிதா :-  அதனால என்ன தங்கச்சி. இப்பத்தான் 
ஆஸ்பத்திரிலே இருந்து வாரேன்.
லலிதா :- ஐயய்யோ ..என்னக்கா ? யாருக்கு என்ன உடம்புக்கு ?
புனிதா :-  சும்மா ஒன்னுமே தெரியாதமாதிரி 
கேக்காதடி. எல்லாம் நம்ம கட்சித் தல கடந்த 
ஒருவாரமா உடம்புக்கு நோவு வந்து படுத்துக் 
கிடக்குறதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே.
லலிதா :- ஏன்.நல்லாத்தானே இருந்துச்சு அந்தப் 
பொம்பள உடம்பு. திடீர்னு என்னக்கா வந்துச்சு
உடம்புக்கு.
புனிதா :- அடியே தங்கச்சி. எல்லாம் சேர்க்கை 
வச்சுக்கிட்டாங்களே நல்ல குடும்பத்தோட.
அவங்க கெடுத்தகேடு இன்னைக்கு இந்தளவு 
சாகுறவரைக்கும் கொண்டாந்து விட்ருச்சு.
லலிதா :-  யாருக்கா அந்த மன்னார்குடி 
கொள்ளைக்கூட்டத்தலைவி மசிகலாவைத் 
தானே சொல்றீங்க.
புனிதா :-  ஆமாடி. அவளுகளோட, தலைவி 
என்னைக்கு ஆராய்ந்துபாக்காம தொடர்பு 
எற்படுத்திக்கிட்டாங்களோ அன்னைக்கு 
புடிச்சது சனி இவங்களுக்கு. இன்னைக்கு 
கடைசியிலே என்ன ஆச்சு. பழகக்கூடாத 
பழக்கங்களை ஏற்படுத்திக்கிட்டு அதனால 
சக்கரை வியாதி உச்சத்தைத் தொட்டு 
இன்னைக்கு இந்த பாரு ஆஸ்பத்திரியில 
படுத்துக்கிடக்காங்க. தேவையா இவங்களுக்கு 
இந்தத் துன்பம் துயரம். இத்தத்தான்அன்னைக்கே 
நம்ம வள்ளுவர் திருக்குறள் ஒன்னுலே 
எழுதியிருக்காரு. ஒருத்தரோட நட்பு நாம 
எற்படுத்திக்கிறதுக்கு முன்னால அவங்க யாரு 
எப்படிப்பட்டவங்க, நல்லவங்களா இல்லஅவங்க கெட்டவங்களா என ஆராய்ந்து பார்த்து அதுக்கு அப்புறம்தான் நட்பு செய்துக்கணும் அப்டின்னு. அதைத்தான் நம்ம மதுரை பாலு சார் இன்னைக்கு அவரோட முக நூல் பதிவுலே எடுத்துப்போட்டிருக்காரு அத்த 
படிச்சுட்டுத்தான் நான் வரேன். முடிஞ்சா நீயும் 
படி தங்கச்சி. நல்லவங்களோட மட்டும் நீ நட்பு 
எற்படுத்திக்கடி. என்ன..சரியா ?
லலிதா :- நீங்க சொல்றது உண்மைதான் அக்கா.
கேக்குறேன்னு நீங்க தப்பா எடுத்துக்கல அப்டின்னா உங்கள ஒன்னு கேக்கவா ?
புனிதா :- கேளும்மா தாராளமா ?
லலிதா :- ஏன்க்கா நீங்க நல்லவங்களா ? இல்ல 
கெட்டவங்களா ?
புனிதா :- ஏண்டி உனக்கு எம்புட்டு கொழுப்பு 
இருந்தா, என்கிட்டேயே..என்கிட்டேயே..இப்டி 
ஒரு கேள்விய கேப்பே. அடி கொன்னே போட்றுவேன் உன்னைய பாத்துக்க.
******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Monday, September 19, 2016

ஊழை ( விதியை) விடவும் வலியது எதுவும் இல்லை !! திருவள்ளுவர் தந்த விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  ஊழ்.

குறள் எண் :-  380.


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும்... ... ...

பொருள் :-  ஊழிலிருந்து(விதியிலிருந்து)விடுபட, 
வேறொரு வழியை எண்ணினாலும் அவ்வூழே 
(அந்த விதியே )முன்வந்து நிற்கும். ஆதலால் 
ஊழை விட வலிமையானது யாது ? இது வான் புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :-  வாங்க கிந்தன். ஏன் முகம் ஒருமாதிரி 
வாட்டமா இருக்கு ? 

கிந்தன் :-  என்னத்த சொல்ல. நடந்து முடிஞ்ச 
சட்டமன்றத் தேர்தல்ல இந்த முடங்கிப்போன 
கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு 
நம்ம தளபதி எவ்வளவோ முயற்சி செஞ்சு நாடு முழுசும்சுற்றுப்பயணம்போனாரு.ஆனாஒன்னும் நடக்கலையே. திருப்பி இதே மக்களுக்கு எந்த 
முன்னேற்றமும் செய்யாத, ஆளத்தெரியாத 
அதே கட்சிக்கு ஆட்சிக்கு வந்துருச்சே. அதான் 
கடந்த நாலு மாசமா நானும் இந்த வருத்தத்த 
எப்டியாவது மறக்கணும்னு பாக்கேன் முடியல.

கந்தன் :-  தம்பி எல்லாம் விதிதாண்டா. நம்ம 
பாலு சார் இன்னைக்கு எடுத்து எழுதியிருக்குற 
" தினம் ஒரு திருக்குறள் " பகுதிய முகநூல்ல 
இருக்கு. அத்த முதல்ல படி. நாம என்னதான் முயற்சி எடுத்தாலும் விதி முந்திக்கிட்டு போயி நின்னு அது நினச்சபடிதான் எல்லாமே நடக்கும் அப்டின்னு திருவள்ளுவர் எழுதிருக்கார். அதான் காரணம். சரி..விடு..விடு..எல்லாம் மாறித்தான் ஆகணும். கூடிய சீக்கிரம் நல்ல சேதி நம்மள தேடி வரும்.அதுவரை கொஞ்சம்பொறுத்துத்தான் இருக்கணும்.  நான் வரட்டா ? கொஞ்சம் ஆபீஸ்ல வேல கிடக்கு. அப்பாலே சாயங்காலம்பாப்போம்.

******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Monday, September 12, 2016

நல்லாட்சி செய்திடாத மன்னவனின் நாடு என்னவாகும் ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  கொடுங்கோன்மை.


குறள் எண் :-  553.




நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 

நாடொறும் நாடு கெடும்... ... ... 

பொருள் :-  நாளுக்குநாள் தீமைகளைக் கண்டு 
அறிந்து, அவற்றை நீக்கி, ஆட்சி செய்யாத 
மன்னனது நாடு, நாளுக்கு நாள் அழிந்துகொண்டே போகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கமலா :- என்ன விமலாக்கா. ராத்திரி பூரா 
வூட்டில ஒரே ரகள போல இருக்கு. சத்தம் 
ஓயவே இல்ல. என்ன ? வழக்கம் போல 
வூட்டுக்காரர் பிரச்சின தானா ?

விமலா :- ஆமாடி கமலா. சம்பாரிக்கிற காசு 
பூராத்தையும் டாஸ்மாக்ல வுட்டுட்டு குடிச்சு 
குடிச்சு வந்தா நான் என்னடி செய்வேன் ? உம்.
புள்ளைகளுக்கு வேற வயசு வந்துட்டு இருக்கு.
என்ன சொன்னாலும் இந்த மனுசன் அப்பாலே 
குடிக்குறதை நிறுத்துற மாதிரி தெரியல்ல.

கமலா :- அக்கா இருநூறுக்கும் முன்னூறுக்கும் 
ஓட்டை வித்துட்டு அந்த கேடுகெட்ட பொம்பள 
கட்சிக்க்குத்தானே அப்பால நீ ஒட்டு போட்ட ?
உக்கும்..இப்ப அல்லாடி இன்னா பிரயோசனம் ?
உனக்கு வேணும்டி இதுவும் இதுக்கு மேலும்.
தல எவ்வளவு சொன்னாரு நான் ஆட்சிக்கு 
வந்தா முத கையெழுத்து இந்த பாழாப்போற 
டாஸ்மாக்கை இழுத்து மூடுறதுதான்னு. நீ 
கேக்கல. இப்ப அழுது இன்னா லாபம்.

விமலா :- ஏண்டி நானே நொந்து நூலா கீறேன்.
ஆறுதலா எதுனாச்சும் சொல்லுடி.

கமலா :- இப்ப நொந்து இன்னா சொல்லு. கண் 
போனாங்காட்டியும் சூரியன ஒருத்தி கும்பிட்ட 
கதையால்ல கீது. ஆனா ஒன்னுக்கா. இந்த 
மாதிரி குடிமக்களை கெடுத்து தீமைகளை 
தர்ற விசயத்தை தடுத்து நிறுத்தாத எந்த 
ஆட்சியும் அழிஞ்சு போகும் அத்த ஆளுற 
ராசாவும் அழிஞ்சே போவானாம். இத்த நான் 
சொல்லலக்கா. நம்ம மதுரை பாலு சார் 
இன்னைக்கு எடுத்து எழுதிருக்க " தினம் ஒரு 
திருக்குறள் " படிச்சுட்டுத்தான் சொல்றேன்.
ஒன்னும் கவலைப்படாத அக்கா. கூடிய 
சீக்கிரம் நல்ல சேதி நமக்கு வந்து சேரும்.
அப்பாலே நான் மார்கெட் வர போனும். பொறவு 
பார்க்கிறேன். வரட்டா ?

***************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Friday, September 9, 2016

நாட்டினை ஆளும் மன்னவன் எப்போது அழிந்து போவான் ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்:-

பெரியாரைப்பிழையாமை.

குறள் எண் :-  899.




ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்... ... ... 

பொருள் :-  உயர்ந்த குறிக்கோளுடைய சான்றோர் சினமடைந்தால், இடையிலேயே வேந்தனும் அழிவான். அவனது ஆட்சியையும் அழிந்து போகும்.இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

சுப்பையா :-  வணக்கம் வேலையா. அப்புறம் 
நாட்டு நடப்பு என்ன சொல்லுது ?

வேலையா :-  என்னத்த சொல்ல. இங்க என்ன 
ஆட்சியா நடக்கு ? எல்லாமே பழிக்குப்பழி
இரத்தத்துக்கு இரத்தம். இதானே நடக்கு ?
அட..என்ன..நான்..சொல்றது ?

சுப்ப:-  அட..என்னல சொல்லுதே. ஒன்னும் 
விளங்கலை. புரியுங்காட்டி சொல்றா தம்பி.

வேலை:-  அதாண்ணே இந்த பொம்பள மேல
அவங்க உச்ச நீதி மன்றத்துலே மேல் முறையீடு 
செஞ்சுட்டாங்கங்ற ஒரே காரணத்தாலே அந்த 
மாநிலத்துலே அமைதிய நிம்மதியகெடுக்கணும் 
என்று திட்டம்போட்டு பழிவாங்க , இரண்டு மாசம் கழிச்சு இப்ப உச்ச நீதி மன்றத்துலே வழக்கு போட்டு தகராறு நடக்குறதுக்கு இந்த பொம்பள மனசுலே உள்ள பழிவாங்குற எண்ணம்தானே காரணம். வயசுல அனுபவத்துலே மூத்தவங்க யாரைத்தான் இந்த பொம்பள மதிச்சு அவங்கட்ட யோசனை கேட்டு செயல் பட்டுருக்கு ? அல்லாமே எடுத்தோம் கவுத்தோம் என்பது தானே? இப்படி அறிவில் சிறந்த மூத்தவர், நம்ம தல, கோபத்துக்கு 
ஆளானா கூடிய விரைவுல இந்த பொம்பள 
அழிஞ்சுபோய் ஆட்சியும் அழிஞ்சு போயிரும்.

சுப்ப :-  என்னடா நீ பாட்டுக்கு எல்லாம் தெரிஞ்ச 
ஜோசியர் மாதிரி சொல்ற ?

வேலை :-  இத்த நான் சொல்லல அண்ணே. இன்னைக்கு நம்ம மதுரை பாலு சார் எடுத்து போட்டிருக்குற தினம் ஒரு திருக்குறள் பகுதியிலே உள்ள விளக்கம் படிச்சுட்டுத்தான் சொல்றேன் அண்ணே.

சுப்ப :-  அப்டியா தம்பி. நீ இதுவரை செஞ்ச காரியம் அனைத்துலேயும் உருப்படியானது எதுன்னு கேட்டா இது ஒன்னு தாண்டா தம்பி. தினம் ஒரு திருக்குறள் தினமும் படிறா தம்பி. உன் அறிவும் வளரும். திருக்குறள் வேற யார் உனக்கு இந்த மாதிரி சொல்லித்தரப் போறா ? சரி தம்பி எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு. அப்பாலே பாப்போம்.வரட்டா !!

*******************************************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Tuesday, August 30, 2016

மனைவி இடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் கணவனிடம் என்னென்ன இருக்காது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  பெண்வழிச் சேறல்.

குறள் எண் :-  909.






அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் 

பெண்ஏவல் செய்வார்கண் இல்... ... ...


பொருள் :-  அறம் செய்தலும், மதிப்புடைய பொருளைத்தேடுதலும், பிற செயல்களில் ஈடுபடும் குணமும் மனைவி இடும் ஏவலைக் கேட்டு செயல்படுபவரிடம் இருக்காது. இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

குப்பு :- வாங்க தம்பி  அப்பு. என்ன முகம் கொஞ்சம் வாட்டமா இருக்கு ? இன்னாடா விசயம். அட..நான்..உன் அண்ணன் கேக்குறேன் இல்ல..சும்மா சொல்றா தம்பி.

அப்பு :- அண்ணே உங்கட்ட  சொல்றதுக்கு என்ன ?
என் வூட்டுக்காரி நேத்து ஒரு வேலை செய்யச் 
சொல்லிட்டு அப்பாலே  வேலைக்கு போய்ட்டா.

குப்பு :- சரி. செஞ்சு முடிச்சு தொலைக்க வேண்டியதுதானே ?அத்த விட உனக்கு என்ன பெரிய கலெட்டர்வேல பாக்கீகளோ ? உம்..சொல்லு..சொல்லு..

அப்பு :-  அட..மறதி அல்லாருக்கும் பொதுதானே.
மறந்துட்டேன். ஆபீஸ்லே இருந்து வந்து திட்டு 
திட்டுனா பாரு. வீடே ரெண்டாயுருச்சுஅண்ணே .
உம்.. அல்லாம் என் தல எழுத்து. அப்பாலே 
நானும் உங்கள  மாதிரி நாலு எழுத்து படிச்சு 
வேலைக்கு போயி நாலு காசு சம்பாரிக்கிற 
புருசனா இருந்திருந்தேன்னா இவட்ட இப்டி 
அல்லாம் திட்டு வாங்கனும்னு என்ன விதியா?
என்ன அண்ணே  நான் சொல்றது ?

குப்பு :-  சரி  வுடுறா தம்பி . இதுதான் உன்னோட 
வாழ்க்கைன்னு ஆயிப்போச்சு. அதுக்கு நீ 
தகுந்தாப்புலே நடந்துக்கிடுறா. ஆனா ஒன்னு.

அப்பு :- என்னண்ணே தப்பு தப்பா நீங்க சொல்லுதீக.ஆனா வந்து ரெண்டாவது தானே அ
தானேடா ஒன்னு.

குப்பு :- இந்த குசும்புக்கு ஒன்னும் குறைச்சல் 
இல்ல உன்ட்டே.  ஆனா நம்ம திருவள்ளுவர் 
இன்னா சொல்லிருக்கார்னா ?

அப்பு :- இன்னா அண்ணே  சொல்லிக்குராறு ?

குப்பு :- அப்பாலே நீ கோச்சுக்க படாது. இத்த நான் 
சொல்லலே. அப்பாலே வள்ளுவர்தான்டா அம்பி 
சொல்லிக்கிறாரு. அது இன்னான்னா வந்து 
வீட்டுக்காரி போடுற கட்டளைகளுக்கு அடிபணிஞ்சுநடக்குற ஆம்புளையாளுகளாலே எந்தவித நல்ல விசயமும் செய் முடியாது. அவங்க சம்பாரிக்க முடியாது. சுதந்திரமா எந்த வேலையுமே செய் முடியாது. அது உன் விசயத்துலே பாத்தா சரிதானே. அட..இன்ன..நான்..சொல்றது ?
ஐயோ...அடிக்க..வராதடா..தம்பி..நான் இப்ப..
கிளம்புறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Thursday, August 25, 2016

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வத்தை அழிக்கும் கருவி எது ? வள்ளுவர் தந்த விளக்கம் இது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-   கொடுங்கோன்மை.

குறள் எண் :-  555.



அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 

செல்வத்தைத் தேய்க்கும் படை... ... ... 


பொருள் :-  நாட்டுமக்கள் துன்பம் தாளாமல் 
விடுகின்ற கண்ணீர்தான் ஆட்சி அதிகாரம் 
செய்பவர்களின் செல்வத்தை அழிக்கும்
போர்க்கருவி ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

இந்தத் திருக்குறளுக்கும் அதன் மேற்சொன்ன 
விளக்கத்திற்கும், தமிழ்நாட்டில் ஆளும் 
அதிகார வர்கத்திற்கு பொருத்தமாக வாசகர்கள் 
இணைவைத்துப் பார்த்தால், அதற்கு கட்டுரை 
ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


Tuesday, August 23, 2016

பெருமை என்றால் என்ன ? சிறுமை என்றால் என்ன ? திருவள்ளுவர் அருளிச்சென்றது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  பெருமை.

குறள் எண் :-  797.



பெருமை பெருமிதம் இன்மை சிறுமை 
பெருமிதம் ஊர்ந்து விடல்... ... ... 

பொருள் :-  செருக்கு (திமிர்,ஆணவம்,அடங்காமை) கொள்ளாமல் இருப்பதே பெருமை ஆகும். காரணம் ஏதுமின்றி செருக்குடன் திரிவதே சிறுமை ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

சுப்பையா :-  வணக்கம் தம்பி கந்தையா.என்ன எப்படி சுகம் எல்லாம்.

கந்தையா :-  அண்ணே !! உங்க அன்பும் ஆதரவும் இருக்குறவரை என் சுகத்துக்கு என்ன குறைச்சல். நல்லா இருக்கேன்.

சுப்ப:-  ஆமா ஏண்டா தம்பி இந்த பொம்பளே நான் யாரைச் சொல்லுதேன்னு உனக்கு புரியுதா ?

கந்த:-  என்னண்ணே !! இது புரியாமலா?

சுப்ப:- அது ஏண்டா தம்பி இம்புட்டு திமிர்,ஆணவம்,அடங்காமையோட அலையுது?

கந்த:-  எல்லாம் பணத்திமிர்தான் வேற என்ன ? கேக்க ஆள் இல்லைங்கற மமதை.பெரும்பான்மை கையிலே இருக்கின்ற அகம்பாவம் இதாண்ணே காரணம்.

சுப்ப:- ஏண்டா தம்பி இதெல்லாம் நிலைக்குமா?

கந்த :-  அண்ணே எல்லாம் கொஞ்சகாலம்தான்.ஆனானப்பட்ட இதுக்குமேலே திமிரோட திரிஞ்சவங்க அம்புட்டுப்பேரும் மண்ணோடு மண்ணாகிப் போனானுவ. இது மட்டும் என்ன சாஸ்வதமாவா இருக்கப்போகுது. எல்லாம் கொஞ்சகாலம்தான். தசா புத்தி நல்லா இருக்கும்வரை நடக்கும்.  

சுப்ப :- அப்புறம் தம்பி ?

கந்த:- அப்புறம் என்ன ? கோவிந்தா கோவிந்தா !!எல்லோரும் போன இடத்துக்கு போக வேண்டியதுதான். கொஞ்சம் எனக்கு வேலை கிடக்கு. அண்ணே நாம சாயந்திரமா பாப்போம்.நான் போயிட்டு  வாரேன் அண்ணே.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Monday, August 22, 2016

முறைதவறி ஆளும் மன்னவன் முடிவில் இழப்பது எது ? வள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.

குறள் எண் :-  554.





கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 

சூழாது செய்யும் அரசு... ... ... 


பொருள்  :-  பின்னால் வருவதை அறியாமல் 
முறை தவறி ஆட்சி செய்திடும் மன்னவன் 
வருவாயையும் குடிமக்களையும் முடிவில் 
இழப்பான்.  இது வள்ளுவர் நமக்கு அருளிய 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-

ஜபாரு :- என்ன மன்னாரு, ஒரே சந்தோசமா 
இருக்காப்புலே. இன்னாடா நயினா விசயம் ?
சும்மா சொல்றா தம்பி.

மன்னாரு :-  அது ஒன்னும் இல்ல அண்ணே 
நேத்து எங்க ஆத்தா, யாரோட எதிர்ப்பும் 
இல்லாங்காட்டி, சோலிய முடிச்சுப்புட்டாங்க 
இல்ல அதான் செம ஜாலியா கீறேன்.

ஜபாரு :- இன்னாடா சொல்றே ? உங்க ஆத்தா 
உங்க நயினாவை போட்டுத் தள்ளிருச்சா ?

மன்னாரு :- அட..உங்க வாயிலே வசம்ப வச்சு 
தேய்க்க. அண்ணே நான் இன்னா சொல்றேன்னு 
உங்களுக்கு புரியலையா ? எங்க ஆத்தான்னு 
சொன்னது ஆளும் எங்க அம்மாவை இப்ப 
புரிஞ்சுதா ?

ஜபாரு :- பார்ரா. உம்.. என்னமோ உங்கட்டே 
அதிகாரம் கீது அதாலே இந்த ஆட்டம் போட்டு 
அலையுறீங்க. செய்ங்க செய்ங்க ஆனா ஒன்னு 
தம்பி எதுலையும் ஒரு முறை இருக்கணும் 
அப்பாலே அது இல்லன்னு வச்சுக்க,அது யாரா 
இருந்தாலும், மன்னவனா இருந்தாலும் ஆளும் 
அதிகார வர்க்க தலயா இருந்தாலும் கடோசிலே 
அம்புட்டும் காலியாப்போகும் அப்டீன்னு நான் 
சொல்லலே தம்பி நம்ம வள்ளுவர் ஐயாதான் 
சொல்லிகீறாரு. அத்த நம்ம மதுரை பாலு ஐயா 
இன்னக்கி எடுத்து போட்ட்ருக்குற குறள் படிச்சு 
சொல்றேன்.பாத்துக்க.உங்களுக்கும்உங்களோட 
கூட்டத்துக்கும் சீக்கிரமே கருமாதி வரப்போது 
அம்புட்டுத்தான் சொல்வேன். வரட்டா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு. 

Sunday, August 21, 2016

அழிந்து போக நினைப்பவர்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்கள் யாவை ? திருவள்ளுவர் அருளியது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மடியின்மை.

குறள் எண் :-  605.




நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கண்... ... ...

பொருள்  :-  தாமதமாக காரியங்கள் செய்தல்,
மறந்து போகுதல்,சோம்பல் கொள்ளுதல்,
உறங்குதல், இந்த நான்கு பழக்கங்களும்,
அழிந்து போகக்கூடியவர்கள் தாமே 
விரும்பி ஆசையோடு அணிந்துகொள்ளும் 
அணிகலன்கள் ஆகும்.  இது வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.                                               


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன். மதுரை. T.R. பாலு.

Friday, August 19, 2016

தவம் புரிந்து வாழும் முனிவர்களின் வாழ்க்கையை விடவும் மேலானது எது ? வள்ளுவர் தந்த விளக்கம் !!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :- இல்வாழ்க்கை.

குறள் எண் :-  48.



ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து... ... ... 

பொருள்  :-  இல்வாழ்க்கைதனை அதனுடைய 
இயல்புத்தன்மை கெடாதவாறு நடத்திச் 
செல்பவன், ஆசைகளை விட முயலும் 
துறவிகளை விடவும் மேன்மையானவன்.
இது வான்புகழ் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.

( இன்று தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 
திருமண தேதி ஆகும்.  அதனை முன்னிட்டு 
இந்தத் திருக்குறள் இங்கே பதிவிடப்பட்டு 
உள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே.)

நன்றி !!  வணக்கம் !!

அன்புடன். மதுரை T.R. பாலு.

Thursday, August 11, 2016

அறிவற்றவர்கள் நிறைந்த சபையில் அறிஞர்கள் பேசினால், அது எதற்கு ஒப்பாகும் ? திருவள்ளுவர் கூறிய கருத்து !!





தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  அவை அறிதல்.

குறள் எண் :-   720.




அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் 
அல்லாதார்முன் கோட்டி கொளல்... ... ...

பொருள் :-  தம்மைப்போன்று அறிவுடையார் அற்ற சபையில், நல்ல கருத்துக்களைச் சொல்வது,தூய்மை இல்லாத இடத்தில், அமிழ்தத்தை ஊற்றியதைப் போன்றது. இது வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் பொருளுமாகும்.

நாட்டு நடப்பு விளக்கம்:-

சங்கிமங்கி :-  என்னடா மங்கி சங்கி இப்ப 
நடந்துட்டு இருக்கிற சட்டமன்றக் கூட்டத்தில் 
நம்ம தல தளபதி புள்ளி விவரங்களோட எப்டி 
பேசி சும்மா கலக்குறாரு பாத்தியாடா ?

மங்கிசங்கி :-  ஆமா ..நானும் பாத்தேன் அத்த.
ஏண்ணே நான் கேக்கேன், நம்ம தளபதி நல்ல 
அரசியல்லே அனுபவசாலி. அதிலும் பழுத்த 
அரசியல்வாதி. அவர் போயிட்டு இந்த ஒன்னும் 
தெரியாத முட்டாப்பயலுவ நிறைஞ்ச அந்த 
சபையிலே ஏன் பேசணும் ? இப்டி பேசினா 
அது எதுக்கு ஒப்பாகும் அப்டின்னு நம்ம மதுரை 
TR.பாலு அவுக எழுதியிருக்குற தினம் ஒரு 
திருக்குறள் பகுதியிலே படிச்சேன் அதான் 
நான் உங்கட்ட கேக்குதேன்.

சங்கிமங்கி :- தம்பி நீ சொல்லறது என்னவோ 
சரிதான். ஆனா நம்மள தேர்ந்தெடுக்குற அந்த 
பகுதி மக்களுக்காக, நாம எதுனாச்சும் பேசித் 
தானேடா ஆவணும். அதுக்குத் தாண்டா நம்ம 
தளபதி, ரொம்ப பொறுமையோட பேசுறார்.
என்ன புரிஞ்சுதா ? சரி தம்பி நான் கடைக்குப் 
போவனும். வரட்டா ?

மங்கிசங்கி :- அண்ணே பாத்து சூதானமா நீங்க 
போய்ட்டு வாங்கண்ணே. அப்பாலே நாம 
சாயங்காலம் பூங்காலே சந்திச்சு பேசுவோம்.

**********************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.

Sunday, August 7, 2016

மனம்போன போக்கில் செலவு செய்பவன் கதி என்ன ஆகும் ? திருவள்ளுவர் கருத்து இதுதான் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  வலியறிதல்.

குறள் எண் :-  479.




அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்... ... ...

பொருள் :-  வருவாயின் அளவை அறிந்து அதற்கு 
ஏற்றவாறு வாழாதவனுடைய வாழ்க்கை, 
இருப்பது போலத் தோன்றி முடிவில் எதுவும் 
இல்லாமல், அழிந்தே போகும். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

சின்னச்சாமி :-  என்ன தம்பி கண்ணுச்சாமி நம்ம 
பெருமாள்சாமி இன்னடா ஆனான் ? ஒரு மாசமா 
வீடு பூட்டியே இருக்கு. ஆளை கண்ணுலேயே 
பாக்க முடிலே. உனக்குஎதுனாச்சும்தெரியுமாலே.

கண்ணுச்சாமி :-  அண்ணே !! உங்களுக்கு மேட்டரே தெரியாதா ?

சின்ன :- என்னால..மேட்டர்..கீட்டர்..ன்னு பேசிட்டு 
தமிழ்லே பேசுலே.அப்பாலே அறைஞ்சு புடுவேன்.

கண்ணு :-  அண்ணே. அவன் ஒரு ஒட்டைக்கை
அப்டீங்கறது அல்லாருக்குமே தெரியும். சும்மா 
கண்டமேனிக்கு செலவு செஞ்சுட்டு இருந்தான்.
தன்னோட இருப்பு இன்னா, வரவு இன்னா, அத்த 
தெரிஞ்சுகிட்டு, அதுக்குள்ளே அவன் வாழலே 
அண்ணே. அதான் கடோசியிலே கோவிந்தா ஆயிப்போயி, ஓடிப்போயிட்டான் அண்ணே. இந்த விசயத்தை நம்ம திருவள்ளுவர் ஒரு குறள்லே அருமையா எடுத்து எழுதிருக்காரு. அதத்தான் நம்ம மதுரை T.R.பாலு சார் இன்னைக்கு தனது முகநூல் பதிவுலே தினம் ஒரு திருக்குறள்லே பதிவு பண்ணிருக்கார் அண்ணே. இப்ப அத்த படிச்சுட்டுத்தான் வாரேன். அப்பாலே எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு. பொழுது சாஞ்ச பொறவு நான்வந்துஉங்களபாக்குறேன்அண்ணே.
வரட்டா ?

******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.