Tuesday, May 14, 2013

வென்றவர் யார் ? தோற்றவர் யார் ? வள்ளுவர் விளக்கம் !!




தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)

                 (தமிழர்களிடம்)


தினம் ஒரு திருக்குறள்.                           

அதிகாரம்   :-  ஊடலுவகை.                     
குறள் எண் :-  1327.                                                    
                                                                                                                                    

 "ஊடலில் தோற்றவர்வென்றார்அது 
                                                          மன்னும்
கூடலில் காணப்படும்". .. .. .. ..  


விளக்கம்:-கணவன்மனைவிஇருவர் 

இடையில் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளில் (இதுவே ஊடல்என்பது)எவர்தமதுதோல்வியைஅப்போதைக்கு ஒப்புக்கொள்- கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.   

இந்த உண்மை ஊடல் முடிந்த பின் இருவரும் கூடிமகிழும்நிலைதனில் உணரப்படும். இது திருவள்ளுவர்   நமக்கு அளித்த குறளும் அதன் நல் விளக்கமும் ஆகும்.                       நமது நாட்டு நடப்பு விளக்கம்:-            கந்தன் :- எங்கேயாவது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கி றீர்களா? இல்லை யாராச்சும் சொல்லித்தான் இருக்காங்களாகடம்பன் :-என்னாத்தை?கந்தன்:-அட !! அதாங்க நம்ம வான் புகழ் வள்ளுவர் மேலேசொன்ன குறளில் சொன்னதுபோல தோத்தவங்களை ஜெயித்தவங்க என்று. அட ஆமாங்க!கணவன் மனைவி இவங்க இருவருக்குள் வரும்விவாதங்களில் சச்சரவுகளில் (இதற்கு பெயர் ஊடல்”) கணவன் மனைவியுடனோ அல்லது மனைவி கணவனிடமோ  மோதவிரும்பாமல் சரி சரிநீ//நீங்க  சொல்ற மாதிரியே நான் நடந்துக்கிறேன் என தோல்வியை ஒத்துக்கொள்கிறார்கள்  என வைத்துகொள்வோம்.அவன்//அவள் ஜெயித்துவிடுகிறான்// ஜெயித்து விடுகிறாள். அட ஆமாங்க  அதன் பிறகு இரவில் இருவருக்கும் இடையில் ஏற்படும் கூடலில் உறவின் பிணைப்பில் கணவன்//அல்லது மனைவி முதலில் இன்பத்தை அடைகிறார்கள்  அல்லவா? ஆகவே யார் தனது தோல்வியை ஒப்புக் கொள்கிறார்     --களோ  அவர்களே இரவில் வெற்றி பெறுகிறார்கள்(பகலில் தோல்வியைஒப்புகொண்டாலும்

கூட) என்பதனை 

வள்ளுவப்பெருந்தகை எவ்வளவு நேர்த்தியாக, நாசூக்காக, நமக்குச் சொல்லி உள்ளார்என்பதனை  படித்துப் பார்த்து இரசியுங்கள் எனது அன்பு நேயர்களே !! நன்றி!! வணக்கம் !!                                 அன்புடன் மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment