Monday, May 27, 2013

நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி!!





உடல் மண்ணுக்கு!!                            உயிர் தமிழுக்கு !!


தமிழனாக வாழ்ந்திடுக !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!


(ஆங்கிலமொழிகலப்புஏதுமின்றி )                                 


தமிழர்களோடு 


உரையாடும்போதாவது.                                    


தினம் ஒரு திருக்குறள்.                                           


அதிகாரம்  :-  நிலையாமை.



குறள் எண்:-  336.


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 

பெருமை   உடைத்து இவ்வுலகு                                          


விளக்கம் :- நேற்றுஉயிருடன் இருந்த                              


ஒருவன் இன்று இல்லாமல் இறந்து 


போனான் என்று சொல்லப்படும்                    


நிலையாமை ஆகிய பெருமைதனை 


உடையது இந்த உலகமாம். இது 


வான் புகழ் வள்ளுவப் பெருமான் 


நமக்கு அளித்திட்ட குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                               



நமது நாட்டு நடப்பு விளக்கம்:- 


எல்லா அய்யாமார்களுக்கும் ஆத்தா 


மார்களுக்கும் இந்த பூலோக சஞ்சீவி  


சாமியோட ஆசீர்வாதம். சுகந்தானா 


எல்லோரும்?என்ன சுகம் வேண்டி 


கிடக்கு இந்த கட்டைக்கு. கடலிடை 


துரும்பம்மா மனித வாழ்வு  என்று  


எந்தக்காலத்தும் நினைவில் நிக்கிற 


மாதிரி ஒரு வசனத்தை தமிழ் இனத் 


தலை திருக்குவளைமுத்து வேலர் 


கருணாநிதி என்னும் தமிழ்த்தாய் 


பெற்றுஎடுத்த தவப்புதல்வன் அவர் 


கதை,வசனம் எழுதிய "மனோகரா" 


என்ற காலத்தினால் அழிந்திடாத 


ஒரு காவியப் புகழ் திரைப்படத்தில் 


வசனம் வரும். அந்த மாதிரி பாருங்க 


திரையுலகில் பின்னணி பாடகரில் 


அரசனாக விளங்கிய  எங்க ஊர் 


மதுரை பெற்று எடுத்த மாணிக்கம்    


T.M.சவுந்திரராஜன் பாருங்க இப்ப 


உயிரோட இல்லை. இதைத்தான் நம் 


முன்னோர்கள் சொன்னார்கள் என்ன 


சொன்னார்கள்:- இப்ப அதை உங்க 


எல்லார்க்கும் இந்த பூலோக சஞ்சீவி 


சாமிஇப்பசொல்லுது. தூங்கும்போது 


வாங்குகிற மூச்சு அது துளி மாறிப் 


போனாலும் போச்சு என்று. அதாலே 


இந்த சாமி உங்க எல்லோருக்கும் 


என்னா சொல்லுதுன்னா யாருக்கும் 


எதுவும் நிரந்தரம் இல்லை. ஆச்சா. 


சும்மா தேவை இல்லாமல் 


அல்லாத்தையும் விரட்டுறது,அதிகா- 


-ரம் கைமேலே இருக்கின்ற தைரியத் 


துலே சும்மா அல்லாரட்டேயும் 


அறட்றது உருட்றது இதெல்லாம் 


நம்ம கைமேலே வேணாம். நானும் 


சாகத்தான் போறேன்.நீயும் 


சாகத்தான் போறே. என்னா யார் எப்ப 


சாவோன்னு நாம யாருக்கும் 


தெரியாது.அப்புறம் நமக்குள் என்ன 


வீராப்பு. இன்னைக்கு உன்ட்ட 


அதிகாரம் இருக்கு நீ விரட்ற.உக்கும் 


நாளை வேற ஒருதர்ட்டே மாறிப் 


போச்சுன்னு வச்சுக்க அந்த ஆளு 


உன்னை விரட்டினா நீ தாங்குவியா 


சொல்லு !! கண்ணு!!சொல்லு!!           


அதாலே இந்த பூலோக சஞ்சீவி சாமி 


கடைசியாஇன்னா சொல்துன்னா 


பொறுமை!பொறுமையா இருந்து 


பழகு ! உனக்கு மேல  ஆட்டம் 


போட்டவன் எல்லாம் செத்து மண் 


துன்ருச்சு. தெரிசுட்டு ஒழுங்கா 


அமுக்கிட்டு வாழ பழகு. யாரையும் 


துன்புறுத்தாதே.துயரப்படுத்தாதே. 


நீயும் வாழு.எல்லாரையும் வாழ 


விடு. அப்பாலே நீயும் நல்ல இருப்ப 


நாங்களும் நல்லா இருப்போம்.    


என்ன ஒழுங்கா சொன்னதை கேட்டு 


நடப்பியா. வரட்டா.இப்படிக்கு 


பூலோக சஞ்சீவி சாமிகள்.                 


நன்றி.வணக்கம்.

No comments:

Post a Comment