Tuesday, May 28, 2013

மழையே வா !! மனமே வா!! மழையே வா!! மாநிலங்காக்க வா !! மழையே வா !!மனம்போல் வா!!




உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                                                    


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!                           


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!                               


தமிழர்களுடன் உரையாடும்போது !!


தினம் ஒரு திருக்குறள்.                                        


அதிகாரம்  :-  வான் சிறப்பு.                               


குறள் எண்:-  15.                                               


கெடுப்பதூஉங்   கெட்டார்க்குச்   சார்வாய்மற் 


                                                                                   -றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை... ... ... ... ... ... ... ... ...    



விளக்கம் :- பெய்யாமல் உலகோர் 


வாழ்வை கெடுக்கக் கூடியதும்மழை 


இயற்கைவளம்கெட்டுநொந்துபோன


மக்களுக்குத்துணையாய் அவ்வாறே 


காக்கக் கூடியதும் இவை எல்லாமே 


மழையினால் மட்டுமே விளையும் 


பலன்களாகும். இது வான் புகழ் 


திருவள்ளுவர் நமக்கு அளித்திட்ட 


குறளும் அதன் விளக்கமும் ஆகும். 


நமது  நாட்டு நடப்பு விளக்கம் :-    


அன்புத் தாய்மார்களே !!


அருமைப் பெரியோர்களே !! 


என் இனிய குழந்தைகளே !! 


உங்கள் அனைவருக்கும் என் இனிய 


காலை வணக்கம்.


(டேய். மச்சி. என்னாடா இது 


அதிசியமா கீது. இங்கே எங்கேடா 


வந்து சேந்தாரு நம்ம ஐயா 


பெருமதிப்புக்கு உரிய "தமிழன் " 


திரு.சாலமன் பாப்பையா 


அவர்கள்.எல்லாம் நம்ம மதுரை 


T.R.பாலு ஐயாவோட திடீர் 


நாடகம்தாண்டா மச்சி. சரி அத்த வுடு 


இப்ப கதையைக் கேட்டுக்கினு வா) 


பொதுவாக தமிழ்க் கிழவி என்ன 


சொல்லிருக்கா என்றால், ஒருவர் 


கேட்கிறார் கேள்வி அவ்வையிடம் 


என்ன கேள்வி என்றால் இந்த 


நாட்டை ஆளும் அரசனின் மதிப்பு,      


புகழ்,செல்வாக்கு,நாட்டு மக்களின் 


செல்வச்செழுமைஇவைஅனைத்து


விஷயங்களும் எப்போது முழுமை 


நிறைந்த உயர்வினைப் பெரும் என 


ஒரே ஒரு கேள்வி கேட்டார்.அதற்கு 


தமிழ்க்கிழவிஒரேஒர்வார்த்தையில் 


பதிலும் உரைத்தாள்.அது என்ன  


பதில் என்று கேட்டால் அந்த பதில் 


தான் இந்த பதில் :-                                                                     


"வரப்புயர "                                


என்ன  ஐயா  ஒரே  புதிரா  இருக்கு


ஒன்னும் விளங்கலையே!! என 


நீங்கள் தவிப்பது எனக்கு புரிகிறது.

அந்தக் கிழவிதான் எவ்வளவு நுட்பம் 


நிறைந்த மதி கொண்டவள். அவள் 


சொன்ன அந்த ஒரு வார்த்தைக்குள் 


எத்தனை அர்த்தங்கள்,ஆழமான 


சிந்தனை,அப்பப்பா நினைத்தாலே 


எனது உள்ளமெல்லாம் குளிர்கிறது 


அடுத்த பிறவி ஒன்று உண்டு என்று 


சொன்னால் எனைப் படைத்த என் 


ஆண்டவனே!! மீண்டும் பிறந்தால் 


இந்தத் தமிழ்நாட்டில் ஒரு பச்சைத் 


தமிழனாகப் பிறக்க ஆணையிட 


வேண்டும் அதுதான் நான் உன்னிடம் 


வேண்டுவது. கிழவி சொன்ன அந்த 


வார்த்தைக்குள் பொதிந்துள்ள 


பொருள் தனைப் பாருங்கள் கீழே 


குறிப்பிட்டுள்ள பாடல் மூலமாக:-        


வரப்புயர நீர் உயரும்  !!                                 


நீர் உயர நெல் உயரும் !!                                        


நெல் உயர குடி உயரும்  !!                                 


குடி உயரக் கோன் உயர்வான்  !!            


பாடலின் பொருள் :- நெல் விளையும் 


பூமியை  பகுதி பகுதியாகப் பிரிப்பது 


வரப்பு ஆகும். அந்த வரப்பை உழவன் 


உயரமாக கட்டினால் அதில் நீரும் 


நிறைவாக சேரும். அப்படி நீர் 


நிறைவாக சேர்ந்தால் விளைச்சல் 


நிறைவாக இருக்கும். அப்படி மகசூல் 


என்னும் விளைச்சல் உயர்வாக 


இருந்தால் அதை விளைத்திட்ட 


உழவர் பெருமக்களும் செல்வத்தில் 


உயர்ந்த நிலையில் இருப்பார்கள். 


அவ்வாறே குடிமக்கள் யாவரும் 


செல்வச் செழுமையில் உயர்ந்த 


நிலைதனில் இருப்பார்களேயானால் 


அந்த நாட்டினை கட்டி ஆளும் 


தலைவனும் உயர்ந்த நிலைதனில் 


இருப்பான் என்று தமிழ்க் கிழவி 


எவ்வளவு நாசூக்காக ஒரே 


வார்த்தையில் பதில் கூறியுள்ளதை 


நினைத்திடும்போது நம் தமிழ் இனம் 


எவ்வளவு நுண்ணறிவு பெற்றது 


என்ற கருத்தினையும் என்னால் 


எண்ணாமல் இருக்க இயலவில்லை 


என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே. 


கடந்த 5 ஆண்டுகளாக அதாவது 2௦௦6 


ஆண்டு முதல் 2௦11 முடிய இந்தத் 


தமிழ் நாட்டில் வான் மழைபொய்க்க 


வில்லை.காரணம் என்ன ? சற்றே 


சிந்தித்துப்பாருங்கள். காரணம்  


அப்போது இந்தத் தாய்த் தமிழ் 


நாட்டினை ஆண்ட தலைவன் திரு 


முத்துவேலர் கருணாநிதி அவர்கள் 


அவரது தூய உள்ளம், உண்மையான  


மக்கள் தொண்டு செய்திடும் பண்பு, 


எதிர் கட்சியை எதிரிக் கட்சியாக 


பாவித்திடத் தெரியாத தன்மை,


வஞ்சிக்க தெரியாத கருணை மனம், 


இவை எல்லாம் ஒன்று சேர்ந்து 


நமக்கு எந்தவிதமான மழைக்கான  


பஞ்சத்தையும் அளித்திட வில்லை. 


அதுதான் உண்மை. ஆனால் இன்று 


இங்கே என்ன நடைபெறுகிறது. 


புதிய ஆட்சி பொறுப்பேற்றது முதல் 


மக்கள் பணி எங்கே நடைபெற்றுக் 


கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்      


தாலும் ஒரே பழிவாங்கும் படலம் 


இப்படிப்பட்ட மனம் கொண்ட ஒரு 


தலைமையிடம் இந்தத் தமிழ்நாடு 


சிக்கிக் கொண்டால் வருண பகவான் 


எப்படி ஐயா மழை தந்து மக்களை 


மகிழ்விப்பான். சிந்தித்து பாருங்கள் 


அன்பர்களே. தலைமையை தேர்வு 


செய்வதில் நாட்டு மக்கள் தவறு 


இழைத்துவிட்டார்கள். உப்பு 


தின்றால் தண்ணீர் குடித்துத் தானே 


ஆக வேண்டும் அதுபோல் தப்பு 


செய்தால் தண்டனை அனுபவித்துத் 


தானே ஆக வேண்டும். அதைத்தான்  


மக்கள் இன்று இங்கே அனுபவித்துக் 


கொண்டு இருக்கிறார்கள் என்று 


மக்களாகிய நீங்கள் கூறுகிற 


கருத்தினை என்னால் முற்றிலும் 


புறந்தள்ள இயலவில்லை 


அன்பர்களே. கவியரசரின் பாடல் 


வரிகள்தான் என் நினைவின்பால் 


இப்போது வருகிறது அன்பர்களே!!

          

          " சிந்தித்துப் பார்த்து "                            

               

           செய்கையை மாத்து                    

             

          சிறுசா இருக்கையில் 

         

      திருத்திக்கோ-- தவறு சிறுசா 

          

       இருக்கையில் திருத்திக்கோ 

           

              தெரிஞ்சும் தெரியாமல்                        

 

நடந்திருந்தா அது  


 "" திரும்பவும் வராம பாத்துக்கோ "" 


என்ற கவியரசரின் பாடலில் உள்ள 


"உள்கருத்தை" பொதுமக்களாகிய 


நீங்கள் அனைவரும் மனதின் உள் 


வாங்கி "எதிர்வரும் காலங்களில்" 


நடப்பீர்களே ஆனால் நம் தமிழ் 


நாட்டில்என்றுமேவான் பொய்க்காது 


என்று கூறி இதுவரை இந்த குறள் 


விளக்கத்தினை இவ்வளவு 


பொறுமையோடு படித்து,இரசித்த 


என் அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு 


நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். 


நன்றி!! வணக்கம் !!                                         


அன்புடன் மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment