Sunday, May 26, 2013

கெட்ட சகவாசம் உள்ளவர்களது குணம் எது ?

உடல் மண்ணுக்கு!                             உயிர் தமிழுக்கு !!    



தமிழனாக வாழ்ந்திடுக !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)

தமிழர்களோடு உரையாடிடும்போது 


தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-   சிற்றினம் சேராமை.

குறள் எண் :-  451.



" சிற்றினம்  அஞ்சும் பெருமை சிறுமைதான் 

சுற்றமாச் சூழ்ந்து விடும் "



விளக்கம் :-  இயல்பான குணத்தால், 


பாரம்பரிய வளர்ப்பால், வளர்ந்த 


பெரியோர்களின் உண்மையான  


குணம் யாதெனின் தமக்கு சமமான 


அறிவு,ஆற்றல்,செயல் இவை 


எதுவும் இல்லாத சிறுமைத்தனம் 


ஒன்றே தனது வாழ்நாள் இலட்சியம் 


என நினைத்து வாழ்ந்து வரும் 


இந்த சிற்றினம் என்று சொல்லப் 


படும் சல்லித்தனமானபுத்திக்கு 


சொந்தக்காரர்களை கண்டாலே 


அஞ்சி அவர்களை தம்மிடம் சேர 


விடாமல் ஒதுங்கிப்போகும் குணம் 


உடையவர்களே பெரியோர்கள்.


ஆனால் இதற்கு எதிர்மறையான 


குணம் கொண்ட சிறியோர்களின் 


இயல்பான குணம் என்னவென்றால் 


அந்த சல்லிபுத்திக்காரர்களை 



கண்டவுடன் அவர்களையே 



தங்களது சுற்றமாக எண்ணி அந்த 



சின்னபுத்திக்காரர்களை இவர்கள் 



தங்களின் சுற்றத்தார்கள்/சொந்தக்-



காரர்கள் என எண்ணி அவர்களை 



தமது இனமாகவேகருதிஅவர்களை  



தழுவிக்கொள்வார்கள். 



இது திருவள்ளுவர் நமக்கு அருளிய 




திருக்குறளும் அதன் விளக்கமும் 



ஆகும். 



நன்றி!! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment