Friday, May 17, 2013

பொறுமை காத்தவரின் பெருமையே பெருமை !!







தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

( ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி ) 

தமிழர்களுடன் உரையாடிடும்போது 


தினம் ஒரு திருக்குறள்                          

அதிகாரம்   :- பொறையுடைமை        

குறள் எண் :- 16௦.                                         


" உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்  

இன்னாச்சொல் நோற்பாரின் பின் ".                            


விளக்கம் :-  உணவு உண்ணாமல் 


நோன்பு இருப்பவர், பிறர் தம்மீது 


சொல்லும் கடும்சொற்களை 


பொருத்துகொண்டு வாழ்பவர்க்கு 


அடுத்த இடத்தில்தான் பெரியவர் 


ஆவார். இது வள்ளுவப் பெருந்தகை 


நமக்கு அளித்திட்ட திருக்குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.                                 


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-          


(இந்த பகுதியில் வெளிவரும்கருத்து, சிந்தனை,சொல்அலங்காரம்,மற்றும்பல்வேறு சீர்திருத்த எண்ணங்கள் இவை யாவும் " கற்பனை " மட்டுமே  அன்றி வேறு தனிப்பட்ட வகையில் எந்த தனி நபரையோ அல்லது அமைப்புகளையோ குறிப்பிடுவன அல்ல --இது செய்தி ஆசிரியர் தரும் உண்மை உறுதி மொழி.)                    


நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த 


அதே தொன்மைமிக்க மொழி பேசும் 


மாநிலம். அங்கே தி.மு.க. என்னும் 


பெயரில் (திருக்குறள் முன்னணி 


கழகம்) ஒரு மாபெரும் அமைப்பு. 


அதன் தலைவர் அறிஞர் கலைஞர் 


திரு மு.அன்புநிதி அவர்கள்.  வயது 


கிட்டத்தட்ட 9௦ஐநெருங்கிக்கொண்டு 


இருக்கும் முதுபெரும்மொழி அறிஞர் 


அவர் அந்த நாட்டினில்  மக்களால் 


தேர்வு செய்யப்படும் ஒரு அமைப்பு 


ஒன்று உண்டு. அதன் ஆயுட்காலம் 


ஐந்து ஆண்டுகள். அந்த நாட்டினில் 


இவரை எதிர்கட்சியாக எண்ணாமல் 


"எதிரி"கட்சிஎன்னும் கண் கொண்டு 


பார்பதையே தனது வழக்கமாகக் 


கொண்டுள்ள இவருக்கு அடுத்த 


இடத்தில்உள்ளஒரு அமைப்பின் 


தலைவர்திரு.ஸ்ரீரெங்கம் ஜெயந்தன் 


எனும் மகாதலைக்கனம்  பிடித்தவர். 


அன்புநிதியை ஒழித்துக் கட்டுவது 


ஒன்றே தனது வாழ்வின் 


இலட்சியமாககொண்டுசெயல்பட்டு 


வருபவர்.  இவ்விருவருமே  மாறி 


மாறிஅந்தநாட்டுஅமைப்பு ஒன்றிற்கு 


தலைமை பொறுப்பு ஏற்று செயல் 


படுபவர்கள்.அப்படிவரும்வேளை 


யில்  தி.மு.க. (திருக்குறள் முன்னணி 


கழகம்) தலைவர் திரு அன்புநிதி 


அவர்கள் ஆளும்கட்சியாக அந்த 


இடத்தில அமரும்போதெல்லாம் 


தாம் உண்டு தமது மக்கள் பணி 


உண்டு என ஒதுங்கி அமைதியாக  


வாழ்ந்து வருபவர்.  ஆனால் இந்த 


குணத்திற்கு நேர் எதிர்மறையான 


குணம் கொண்டவர் ஸ்ரீரெங்கம் 


ஜெயந்தன் அவர்கள். மக்கள் நலப் 


பணி எல்லாம் அவருக்கு இரண்டாம் 


வேலைதான். அன்புநிதியை பழிப்பது  


அவரைஅவரது குடும்ப உறுபினர்கள் 


அனைவரையும் தூஷிப்பது கேலி 


செய்வது,கிண்டல் அடிப்பது,வஞ்சம் 


தீர்ப்பது,சேற்றை வாரி அடிப்பது இது 


போலஇன்னும்எத்தனைஎத்தனயோ 


கடும் சொற்களைஅள்ளி வீசினாலும் 


அதை எல்லாம் பொருட்படுத்தாமல் 


அமைதிகாத்து பொறுமையுடன் 


இருப்பவரே தி.மு.க.(திருக்குறள்முன் 


-னணி  கழகம்)  தலைவர்  கலைஞர்  


திருஅன்புநிதிஅவர்கள்.நான்நினைக்


கிறேன்  இரண்டாயிரம் ஆண்டுகள் 


கழிந்தபின் குறளுக்கு பாடுபடும் ஒரு 


ஒப்பற்ற தலைவன் தமது நூலின் 


பெயரில் ஒரு அமைப்பினை ஒருவர் 


உருவாக்கி(திருக்குறள்முன்னணிக் 


கழகம்)அதன் மூலம் மொழிப்பணி 


செய்து பின் மக்கள்பணியும் செய்திட 


திரு அன்புநிதி என்று ஒருவர் 


வருவார் அவர் ஸ்ரீரங்கம்ஜெயந்தன்  


என்பவரால் மேற்சொன்னபடி கடும் 


சொற்கள் திரு அன்புநிதிமேல் வீசி 


கோபமுறச் செய்திடுவார் என்பதை 


முன்கூட்டியேஅறிந்திட்டகாரணமா 


என்னவோயான்அறியேன்இதுபோல


ஒரு திருக்குறள் திருவள்ளுவரால் 


நமக்கு அருளப்பட்டு உள்ளது. யார் 


அறிவார் இந்த அர்த்தம்? நன்றி !!  


வணக்கம் !!

No comments:

Post a Comment