Wednesday, May 22, 2013

காலம் வரும் ! காத்திருங்கள் !! தலைவரைப் போல !!!




தமிழனாக வாழ்ந்திடுக !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!

(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)

தமிழர்களுடன் உரையாடும்போது!!


தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  காலம் அறிதல்.

குறள் எண் :-  490.   


 "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 


 குத்தொக்க சீர்த்த இடத்து ".. .. .. .. .. ... .. .. ... .. .. .. .. 


விளக்கம் :-   பொறுத்துக்கொண்டு 


இருக்க வேண்டிய காலம் வரை 


எப்படி கொக்கு  (பெரிய கொழுத்த 


மீனுக்காக) காத்துக் கொண்டு 


இருக்கிறதோஅதுபோலஅமைதி 


காத்துஇருக்க வேண்டும்.  காலம் 


வாய்த்திடும்போது கொக்கு எப்படி 


(மீனை குத்தி) குறிதவறாமல்செய்து 


முடிக்கிறதோ அதுபோல நாமும் 


நமது எண்ணத்தை செயல் படுத்த 


வேண்டும்.இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிய திருக்குறளும் 


அதன் விளக்கமும்.                                       


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-           


(இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள 


விஷயங்கள்,   சம்பவங்கள், 


கருத்துக்கள், இவை அனைத்தும் 


முழுக்க முழுக்க கற்பனையின் 


அடிப்படையில் புனையப்பட்டதே 


அன்றி வேறு எந்த தனிப்பட்ட 


நபரையோ அல்லது அமைப்பையோ 


குறித்து எழுதப்பட்டது அல்ல.இது 


செய்தி ஆசிரியர் தரும் உண்மை 


நிறைந்த வாக்குமூலம்.)  



அது ஒரு தொன்மையான தூய 


மொழி பேசிடும் (ஒருதீபகற்ப 


நாட்டின்) தென்கடைக்கோடியில் 


அமைந்திட்ட ஒரு மாநிலம். அங்கு 


இரண்டு ஆண்டுகட்கு முன் நடந்த 


பொதுமக்கள் வாக்கு தேர்வினில் 


அதுவரை கடந்த 5 ஆண்டுகளாக நல் 


ஆட்சி நடத்திக்கொண்டிருந்த தலை 


திரு மு.அன்புநிதி அவர்கள் வெற்றி 


வாய்ப்பினை மட்டும் இழந்துவிட 


வில்லை.அதோடு கூட எதிர்க்கட்சி 


என்ற பெருமையையும் ஒருசேர 


இழந்து விட்ட காரணத்தால் இன்று 


தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். 


இருந்தாலும் அவரது இயக்கத்தின் 


முன்னோடிகள் மீது ஏகப்பட்ட பொய் 


வழக்குகள் போட்டு இந்த மாபெரும் 


இயக்கத்தை வேரோடும் வேரடி 


மண்ணோடும் அழித்து ஒழிப்பதே 


தனது வாழ்நாள் இலட்சியமாகக் 


கொண்டு செயல்பட்டுவருபவர்தான் 


தற்போது விதிவசத்தால் ஆட்சியைக் 


கைப்பற்றிய முன்னாள் எதிர்க்கட்சி 


தலைவர் திருவாளர்  ஜெயந்தன் 


அவர்கள்.   தலை திரு மு. அன்பு நிதி 


அவர்கள் எத்தனை எத்தனையோ 


சோதனைகள்,வேதனைகள், 


மொழிப் போர்,  சிறைவாழ்வு,  என 


தலைதிருமு.அன்புநிதி அவர்கள் 


பலப்பல போராட்டங்களை அவர்


தமதுவாழ்நாளில்சந்தித்துஅவற்றில் 


வெற்றியும் பெற்று இருக்கிறார். 


அதுபோலவே தற்போது நாட்டினில் 


நடைபெற்றுவரும் இந்த அதிகார 


துஷ்பிரயோக காலங்களையும் 


அவர் கடந்து மேற்சொன்ன குறளில் 


வருவது போல தலை மு.அன்புநிதி 


அவர்களுக்கும் ஒரு காலம் வரும். 


அப்போது கொக்குபோல அவரும் 


தமது  தூய்மை இலட்சியத்தினை 


நிறைவேற்றிடுவார் என்பதில் அவர் 


சார்ந்திருக்கும் கட்சியின் உண்மைத் 


தொண்டர்களுக்கு எந்தவித ஐயப்-      


பாடும் இல்லை.  இது நமது நாட்டு 


நடப்பு விளக்கம். மீண்டும் நாளை 


சந்திப்போமா. நன்றி !!வணக்கம்!!.        


அன்புடன் மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment