Thursday, May 9, 2013

பதவி உயர்வு வேண்டுமா ? அடக்கம் தேவை !!





தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

                ( தமிழர்களிடமாவது )           


தினம் ஒரு திருக்குறள்.                          

அதிகாரம்   :-  அடக்கமுடைமை.         

குறள் எண் :-   121.                                           

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்-                                                             -காமை                                                             ஆரிருள் உய்த்து விடும் ". 


விளக்கம் :-  அடக்கம் என்றொரு நல் 

குணம் ஒருவனை நிலை உயர்த்தி 

தேவருள்சேர்க்கும்.அடக்கம்இல்லா--

-மல்  ஒருவன் இருந்தால் அவனைப் 

பொல்லாதஇருள்போன்றதீயவாழ்

வினில்   எந்த நாளும்அந்தகுணம்  

செலுத்திவிடும். இது வள்ளுவப் 

பெருந்தகை நமக்கு அளித்திட்ட 

திருக்குறளும் அதன் விளக்கமும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-          

(இந்தக் கட்டுரையில் குறிப்பிடும்   அனைத்து   நிகழ்வுகள், சம்பவங்கள், உதாரணங்கள்,இவைஎல்லாம் இதழ் ஆசிரியரின் கற்பனையே தவிரவேறு யாரையும் எவரையும் தனிப்பட்ட  முறையில் குறிப்பிடுவன அல்ல )      


அது ஒரு தேனின் சுவைதனை ஒத்த 

அருஞ்சுவை மொழி பேசிடும் நல்ல 

நாடு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு

வரை அந்த நாட்டினை ஆண்டுவந்த 

மன்னன் அன்புநிதி அவர்கள் தமது 

தவறானகணிப்பினில்முறையில்லா

கட்சிகளுடன்   உடன்பாடு செய்து  

மக்களைச் சந்தித்ததன்  விளைவு 

அவர் பதவி இழந்ததுடன் இவரை 

எதிர்த்து  போட்டியிட்ட மன்னன் 

ஜெயந்தன் தனது சூழ்ச்சி வலையில் 

அந்த நாட்டில் ஆட்சியை நிர்ணயம் 

செய்திடும் அளவு வாக்குவங்கியை 

தனது  கை வசம் வைத்திருக்கும் புது 

கட்சிதொடங்கிய அஜைகாந்த் 

எனும்நபருடன் "துக்ளக் "தர்பார் 

சகாக்களின் துர்போதனையில் 

தேர்தல் உடன்பாடு செய்துகொண்ட 

அந்த சாமர்த்தியம் மட்டுமே 

ஜெயந்தன் வெற்றிக்கு துணை 

புரிந்தது என்பதனை அந்நாட்டு நல் 

எண்ணம் கொண்ட பெரியோர்கள் 

அறிஞர்கள் அரசியல் வித்தகர்கள் 

அறிவார்கள்.  ஆனால் மன்னன் 

ஜெயந்தன்குணாதிசயம்எப்படிஎனில்

அவன்அடங்காமையின்மொத்த உரு. 

எவரையும் மதிக்காத தன்மை தானே 

தான் சகலமும் தன்னைவிட்டால் 

இந்த நாட்டினை ஆட்சி செய்திட 

வேறுஎவரும் கிடையாது என்று 

நினைப்பினைக் கொண்ட கேடு 

கேட்ட குணத்தின் மொத்த உருவம் 

மன்னன் ஜெயந்தன். ஆனால் பதவி 

இழந்த மன்னன் அன்புநிதியோ இந்த 

குணங்களில் இருந்து முற்றிலும் 

வேறு பட்டவர்,மாறு பட்டவர், 

எவரையும் இகழா பெருந்தன்மை 

கொண்டவர்,தமிழ் அருவி,தமிழ் 

இமயம். அடக்கம் என்பதன் மனித 

வடிவம் அவர். அறிஞர்களை 

போற்றும் குணம் கொண்டவர், 

தனது அரசியல் எதிரிகளையும் 

அரவணைத்து நாட்டினை ஆட்சி 

புரியும் வல்லமை பெற்றவர், நாடு 

போற்றும் நல்லாட்சி செய்திடும் 

அறிவு படைத்தவர் அவர். ஆனால் 

அவர்இம்முறைமன்னன்ஜெயந்தனி

டம் தோல்வி கண்டிருக்கலாம். 

ஆனால் காலம் இப்படியே 

போய்விடாது ஜெயந்தனின் 

அடங்காமை ஆட்சிக்கு மக்கள் 

விரைவில் சாவு மணி அடிக்கத்தான் 

போகிறார்கள். அப்போது தர்மம் 

வெல்லத்தான் போகிறது.மன்னன் 

அன்புநிதி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து 

ஆளும் காலம் வரத்தான் போகிறது 

அதற்காக மக்கள் காத்துக்கொண்டு 

இருக்கிறார்கள். அடங்காமை 

மன்னன்ஜெயந்தன்வெகு விரைவில் 

பொல்லாத இருள் போன்ற தீய 

வாழ்க்கையில் வீழ்ந்திடுவது உறுதி 

வான் புகழ் திருவள்ளுவர் கூற்றுப் 

போலவே. மக்களின் எண்ணமும் 

நல்லபடியே அந்த நாட்டினில் 

நிறைவேறும் அன்பர்களே. மீண்டும் 

நாளை சந்திப்போமா ? நன்றி !!

வணக்கம் !! அன்புடன் மதுரை T.R. 

பாலு.                                                            


"அச்சம் என்பது மடமையடா !!       

அஞ்சாமை திராவிடன்உடமையடா!!                                                              

ஆறிலும் சாவு !! நூறிலும் சாவு !!  

தாயகம் காப்பது கடமையடா !! 

தாயகம் காப்பது கடமையடா " !!

No comments:

Post a Comment