Monday, May 27, 2013

அடுத்தவர் மனைவி மீது மோகம் கொள்ளாதே !!



உடல் மண்ணுக்கு !!                           உயிர் தமிழுக்கு !!



தமிழனாக வாழ்ந்திடுக !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

(ஆங்கிலமொழிகலப்புஏதுமின்றி)

தமிழர்களுடன்உரையாடும்போது!!



தினம் ஒரு திருக்குறள்.                                       


அதிகாரம்  : பிறனில் விழையாமை.   


குறள் எண்:-  146.


"பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 

இகவாம் இல்லிறப்பான் கண்"... ... ... ... ... ...                      


விளக்கம் :- பகை, பாவம், அச்சம்,பழி, 


என்று சொல்லப்படுகிற இவ்வகை 


நான்கு விதமான குற்றங்களும் 


அடுத்தவரது மனைவியின் மீது 


நெறிமுறை தவறி நடப்பவரிடம் 


இருந்து நீங்கவே நீங்காது.  இது 


வான்புகழ் வள்ளுவன் நமக்கு 


அளித்திட்ட குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


பொதுவாக மனிதனின்மனம் எப்படிப் 


பட்ட தன்மைகளோடு உண்மையான 


எண்ணங்களோடு அமையபெற்றது 


என்றால்தன்னிடம்உள்ள பொருளின் 


மதிப்பு அறியாமல் மடத்தனமாக 


பிறர் வசம் உள்ள பொருள்(பெண்) 


மேல்எவ்வளவுஅழகாகஇருக்கிறாள் 


என்றே அவன் அரைவேக்காட்டு 


அறிவோடு வாழ்ந்தே வசப்பட்டவன் 


இது அவன் மீது உள்ள குற்றம் அல்ல 


அவனது பூட்டன்,பாட்டன்,அப்பன் 


ஆகியோரது எண்ணங்களும் 


அத்தகை வடிவம் பெற்றதால் வந்த 


விளைவு இது. இதைத்தான் கவிஞர் 


சொன்னார் "இக்கரைக்கு அக்கறை 


பச்சை "என்றும் "எத்தனை கிண்ண--


த்தில் இட்டாலும் மது அத்தனையும் 


சுவை  ஒன்றாகும்.சித்திரக்கிண்ணம் 


அதில் பேதம் இல்லை-உன் சிந்தை   


யிலேதான் பேதமடா " என்று கமல் 


நடித்த "மன்மத லீலை "படத்தில் 


வரும் பாடல் மூலம் நமக்கு அறிவு 


உரைத்தவரே கவியரசர் அவர்கள். 


சிந்தனையை மாற்றிக்கொள்ள 


மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக 


பழகிக்கொள்ளவேண்டும். ஒரே நாள் 


ஒரே இரவு இதில் நிச்சயம் நாம் 


நம்மை மாற்றிக்கொள்ள இயலவே 


இயலாது. சிறிது சிறிதாக மாற்றம் 


செய்திட முயற்சி செய்து அதன் பின் 


முயற்சியில்வெற்றிபெறுபவனே


ஆறறிவு படைத்த மனிதன். 


ஏனையோர் எல்லாம் 5 அறிவு 


படைத்திட்ட ஜென்மங்களே. 


முயன்றால்முடியாததுஎன்பது 


இவ்வுலகினில் எதுவும் இல்லை 


அன்பர்களே. புரிந்துகொண்டு அது 


போல  நடந்தால் பேரின்பம் உண்டு.           


"முயன்று பாப்போம்"--அதில் "முழு 


வெற்றியும் காண்போம் "


 மீண்டும் 


நாளை சந்திப்போமா 


நேயர்களே !!.



 "ROME CITY WAS NOT BUILT IN A DAY" 



நன்றி !வணக்கம் !!


அன்புடன்,மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment