Tuesday, May 7, 2013

உறவு என்பது சுகமானதா ? சுமையானதா ?




தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

( தமிழர்களிடமாவது )



தினம் ஒரு திருக்குறள்.  

அதிகாரம்  :-  சுற்றந் தழால்.                  

குறள் எண்:-  521.                                              


பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்            

சுற்றத்தார் கண்ணே யுள. .. .. .. .. .. .. .. .. .. .. .. ..                   


விளக்கம் :-  ஒருவன் வறியவனான 

காலத்திலும் அவனுக்கும் தமக்கும் 

இருந்த பழைய காலத்து உறவைப் 

பாராட்டிப் பேசுகின்ற பண்புகள் 

என்பது சுற்றத்தார்கள்/நெருங்கிய 

உறவினர்கள்இவர்களிடத்தே உண்டு 

இது வான்புகழ் திருவள்ளுவர் 

நமக்கு அளித்திட்ட திருக்குறளும் 

அதன் விளக்கமும் ஆகும்.               


நமதுநாட்டுநடப்பு விளக்கம்:- அனை

-வருக்கும் வணக்கம்.இன்று நாம் 

பார்க்க/படிக்க இருக்கும் விஷயம் 

என்ன என்று கேட்டால் சுற்றம் 

அதாவது சொந்தம் பற்றிய ஒரு 

கருத்து விளக்கம். அதனைப் பற்றிய 

ஓர் விரிவான ஆராய்ச்சி. முதலில் 

இந்த சொந்தம்/உறவு பற்றி தமிழ் 

கவிஞர்கள் என்ன சொல்லி இறுக்கி- 

றார்கள்என்றுபார்ப்போம்நேயர்களே 

கவியரசர் கண்ணதாசன் உறவு பற்றி  

அந்தக் கால திரைப்படம் "படித்தால் 

மட்டும் போதுமா " இதில் நடிகர் 

திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 

வாய்அசைக்க மதுரை மண்தந்த T.M. 

சவுந்திரராஜன்அவர்கள்தமது இனிய  

குரலில் பாடல் ஒன்று பாடிடுவார். 

அது என்ன பாடல் என்றால் :-


அண்ணன் காட்டிய வழியம்மா!!    

இது அன்பால்  விளைந்த பழியம்மா!! 

கண்ணை இமையே கெடுத்ததம்மா!! 

என் கையே என்னை அடித்ததம்மா !! 


என்று தம்பியாக நடிக்கும் சிவாஜி 

தனதுஅண்ணனாகநடிக்கும் பாலாஜி 

-யை நினைத்துப் பாடுவதாக வரும் 

அந்தப் பாடலில் மேலும்ஒரு வரி 

வரும்:-         


தெரிந்தே கெடுப்பது பகையாகும் !! 

தெரியாமல் கெடுப்பது உறவாகும் !!

என்று உறவின் சிறப்பினைப்பற்றி 

கண்ணதாசன்எழுதியஅவ்வரிகளில் 

தான்எப்படி உறவின் சிறப்புகள் பற்றி 

மிக நேர்த்தியாக அவர் கூறிய 

சொற்கள் என்றும் காலத்தினால் 

சாகா வரம் பெற்றவை அன்பர்களே ! 

ஆனால் நமது முன்னோர்கள் என்ன 

சொல்லி இருக்கிறார்கள் இந்த உறவு 

பற்றி என்று சொன்னால் :-               


குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.   

தனி மரம் தோப்பு ஆகாது             

என்றெல்லாம் சொல்லிச் சென்று 

உள்ளார்கள் அன்பர்களே!   அதன்படி 

பார்த்தால் நமது கவியரசர் மற்றும் 

ஒரு திரைப்படத்தில் என்ன எழுதி 

இருக்கிறார் என்று பார்த்தால் :-    


சொந்தம்எப்போதும்தொடர்கதை 

தான் முடிவே இல்லாதது. எங்கே 

சென்றாலும் தேடி இணைக்கும் 

இனிய கதை அது... .. 


என்று அந்தப்பாடல் அக்காலத்தில் 

மிகப் பிரபலம் நிறைந்தது. தமிழக 

முன்னாள்முதல்வர்,தமிழ் இனத்தின்

ஒரே ஒரு காவலர் முத்தமிழ் அறிஞர் 

முத்துவேலர் கருணாநிதி அவர்கள் 

பெற்றெடுத்தமூத்த புதல்வர் 

திரு. மு.க.முத்து அவர்கள் 

நடித்துவெளிவந்த "சமையல்காரன்" 

என்னும் படத்தினில் ஒரு பாடல் அது 

என்ன என்று கேட்டால் :-       


"சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப்

                                                           பேருங்க!! நான் சொத்தா நினைக்கிறது-உங்க 

அன்பைத்தானுங்க !!                   

என்றுவரிகள்வரும்.                                

மொத்தத்தில் கூட்டி கழிச்சு பார்த்தா 

பாட்டுக்கு ஒரு கோட்டை நமது 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

பாடல் எழுதிய முதல் படமான 

"பாசவலை" என்னும்   படத்தில் 

என்ன எழுதினாரோ அதுமட்டுமே 

உண்மை அன்பர்களே !!                      குட்டி ஆடு தப்பி வந்தால்                     குள்ள நரிக்கு சொந்தம் !!                   குள்ள நரி மாட்டிகிட்டா                  குறவனுக்கு சொந்தம் !!                 தட்டுக்கெட்ட மனிதன் கண்ணில்     பட்டதெல்லாம் சொந்தம் !!       சட்டப்படி பார்க்கபோனா                   எட்டடிதான் சொந்தம் !!                         சட்டப்படி பார்க்கப்போனா                 எட்டடிதான் சொந்தம் !!                    

என தொகையறாவில் தொடங்கி 

சரணத்தில் என்ன வரி என்றால்:-    

உனக்கெது  சொந்தம் !                        எனக்கெது   சொந்தம் !!                       உலகத்துக்கெதுதான் சொந்தமடா? மனக் கிறுக்கால்  நீ உளறுவதாலே  வந்த லாபம் மதி மந்தமடா !! 

என்று அந்தப் பாடல் செல்லும்.  ஆக 

எனது  இறுதி ஆய்வு அறிக்கை 

நகலில் நான் இந்தப் பாடலின் 

வரிகளை மட்டிலுமே இந்தக் 

கட்டுரைக்கு விடையாகத் தந்து 

உங்கள் எல்லோரிடமும் இருந்து 

நன்றிபாராட்டி விடை பெறுகிறேன் !!       


நன்றி வணக்கம். அன்புடன் மதுரை 

T.R. பாலு.                                                    



No comments:

Post a Comment