Sunday, May 19, 2013

போட்டுக் கொடுப்பது பற்றி வள்ளுவன் கருத்து !!


உடல் மண்ணுக்கு !!                               உயிர்தமிழுக்கு !!



தமிழனாக வாழ்ந்திடுக !                           


தனித்தமிழில்மட்டுமே பேசிடுங்கள்!! 

(ஆங்கிலமொழிகலப்பு ஏதும் இன்றி) 


(தமிழர்களோடு பேசும்போது )          


தினம் ஒரு திருக்குறள்.                              


அதிகாரம்    :-  புறங்கூறாமை.                       


குறள் எண்  :-  181.                                            


"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 

அறங்கூறும் ஆக்கம் தரும்".                                                 



வள்ளுவர் விளக்கம் :-  புறங்கூறி 


(ஒருவரைப் பற்றி வேறொருவரிடம் 


இல்லாததையும் பொல்லாததையும் 


சொல்வது)பொய்யாக உயிர் 


வாழ்வதைவிட அவ்வாறு செயல் 


செய்யாமல் அதனால் வறுமையே 


வந்தாலும் இறந்து விடுதல் அற 


நூல்களில் சொல்லப்படும் 


ஆக்கத்தையும் நன்மையையும் 


தரும். இது வள்ளுவர் நமக்கு 


அளித்த திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                                                 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-                                      


ரெங்கசாமி :-  அண்ணே! ராமசாமி 


அண்ணே !!  உங்களுக்கு விஷயம் 


தெரியுமா?                                             


ராமசாமி :-  என்னடா ! தம்பி !! 


சொன்னா தானேடா அண்ணனுக்கு 


தெரியும். அண்ணன் என்ன 


ஆண்டவனாடா ! எல்லா விசயமும் 


தெரிஞ்சுக்கிறதுக்கு ? சொல்றா 


விசயத்தை ! !       


ரெங்:- இல்ல, உங்ககிட்டேயே உங்க 


தம்பியைப் பத்தி எப்படி 


சொல்றதுன்னு தான் யோசிக்கிறேன் 


ராம:-  என்னடா ?என் தம்பியை 


பத்தியா ?நேத்து முளைச்ச பய 


அவன். என்னடா அவனைப் பத்தி ?


ரெங்:-  இல்ல அண்ணே ! வேணாம். 


தெரியாம அவனைப் பத்தி 


உங்ககிட்டே பேசிட்டேன்.               


ராம :-  டேய் !டேய் !நீ எதையோ 


மறைக்கிறே சொல்றா என்னை பத்தி 


அவன் எதாச்சும் சொன்னானா அந்த 


பொடிப் பய. சொல்றா. நான் உனக்கு 


பணம்  தரேன்.                                                                                             


ரெங் :- நிசமா தருவியா அண்ணே !                                         


ராம :-  என்னடா தம்பி என் மேலேயே 


சந்தேகப் படுறியா? இந்தாட 5௦௦ இப்ப 


சொல்லு.                               


ரெங்:-  இல்ல அண்ணா உங்க 


அப்பாரு சொத்து பிரிச்சதிலே 


உங்கதம்பிஉங்களுக்குவரவேண்டிய 


பங்கில  ஆட்டையைப் 


போட்டானாம்.   என்கிட்டே 


சொன்னான் அதை நான் உங்கட்ட 


சொல்லிட்டேன். நீங்க நான் 


சொன்னேன்னு  அவன் கிட்ட 


கேக்காதீங்க. ஏதோ நீங்க பணம் 


தந்தீங்கன்னு   சொன்னேன். 


என்னையை போட்டு கொடுத்துறாத 


அண்ணே.                                 


 ராம:-  அத்த விடுறா. இப்பயே அந்தப் 


பொடிப் பயல நான் போய் என்ன 


செய்றேன். (ராமசாமின்   தம்பி 


கோபாலன் உண்மையில் ரொம்ப 


நல்லவன். ஆனால் அவனைப் பத்தி 


இல்லாததையும் பொல்லாததையும்  


புறங்கூறி அவன் அண்ணன் 


ராமசாமியிடம் பணம் வாங்கி 


சென்ற ரெங்கசாமி போகும் 


வழியிலேயே பொய் சொல்லி பணம் 


வாங்கினதாலே பேருந்து சக்கரம் 


அவன் மண்டையில் ஏறி அதே 


இடத்துலே ஆள்   செத்தான்.  இனிமே 


அவன்(ரெங்கசாமி) யாரைப்பற்றியும் 


யார்கிட்டேயும் போட்டுக்குடுக்க  


முடியாது இல்லையா. இது      


வள்ளுவன் குறள் நமக்கு தரும் 


பாடம். நாமும் இதை கவனித்து 


யாரையும் யார்கிட்டேயும் போட்டுக் 


குடுக்க கூடாது. என்ன சரியா நான் 



சொல்றது?மீண்டும் நாளை 


சந்திப்போம். 


நன்றி.வணக்கம். அன்புடன்.மதுரை 


T.R.பாலு.


No comments:

Post a Comment